சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek government, European officials plan billions in new social cuts

பில்லியன் கணக்கில் புதிய சமூகநலச் செலவுக் குறைப்புக்களை செய்வதற்கு கிரேக்க அரசாங்கமும், ஐரோப்பிய அதிகாரிகளும் திட்டமிடுகின்றனர்

By Alex Lantier and John Vassilopoulos
27 July 2012

use this version to print | Send feedback

கிரேக்க அதிகாரிகள் ஐரோப்பிய ஆணையத்தின் (EC) தலைவர் ஜோஸே மானுவல் பாரோசோவையும் சர்வதேச நிதிய அதிகாரிகளையும் நேற்று சந்தித்து, 2013-14இல் 11.5 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க $14.4 பில்லியன்) புதிய சுற்று வரவுசெலவுத்திட்ட குறைப்புக்களை கொண்டு வருவதற்கு விவாதித்தனர்.

கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%க்கும் மேலான இந்த வெட்டுக்கள் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படும் அலையென வந்த சமூகநலச் செலவுக் குறைப்புக்களால் சீரழிக்கப்பட்டுவிட்ட கிரேக்கப் பொருளாதாரத்தை இன்னும் பேரழிவிற்கு உட்படுத்தும். தொழிலாளர் துறை அமைச்சரகத்தின் வரவுசெலவுத்திட்டம் 5 பில்லியன் யூரோக்கள் சுருங்கும். இது ஓய்வூதியத் தொகைகள் வெட்டினால் ஏற்படும்.

கிரேக்கத்தின் பேரழிவிற்கு உட்பட்டுள்ள பொது மருத்துவமனை வசதிகள் வெட்டுக்களில் மற்றும் ஒரு 300 மில்லியன் யூரோக்களை எதிர்கொள்கிறது. சுகாதார மந்திரி ஆண்ட்ரியஸ் லைகோரென்ட்ஜோஸ் ஏதென்ஸ் இடம் கிரேக்கத்தில் ஒரு நோயாளிக்கு சுகாதார பாதுகாப்பு செலவு 1.500 யூரோக்கள் தான் உச்சவரம்பாக இருக்கும் என சுமத்தும் திட்டம் உள்ளது என்பதை மறுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

கிரேக்கப் பொருளாதாரத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் இந்த வெட்டுக்கள் பாரியளவிலானவை. இதற்கு ஒத்த நிதி அமெரிக்காவில் 802 பில்லியன் டாலர்கள் என்றும் பிரித்தானியாவில் 82 பில்லியன் பவுண்டுகள், ஜேர்மனியில் 136 பில்லியன் யூரோக்கள் என்றும் இருக்கும். இவை அந்நாட்டை நாஜிக்கள் ஆக்கிரமித்தபோது இருந்து ஆழ்ந்த பொருளாதாரச் சுருக்கத்தை விட அதிகமாக வந்துள்ளது. ஏற்கனவே தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ஊதியங்களிலும் நலன்களிலும் 50%க்கும் மேலாக இழந்துள்ளனர். இந்த ஆண்டு முன்னதாக வந்த தகவல்கள் கிட்டத்தட்ட 30% கிரேக்க மக்கள் சுகாதாரத்தேவைகளுக்கு தெரு மருத்துவமனைகளை நம்பியுள்ள நிலை வந்துவிட்டது எனத் தெரிவிக்கின்றன.

ஐரோபிய ஒன்றியத்தின் (EU), கடன்களைக் குறைக்கும் இலக்குகளைச் சந்திக்கும் மோசமான முயற்சியில் ஏதென்ஸ் இப்போதைய வரவுசெலவுத்திட்ட வெட்டுக்களை செய்கிறது. ஆனால் சிக்கனக் கொள்கைகள் கிரேக்கத்தின் பொருளாதாரத்தை கடன்களை கொடுக்க முடியாத அளவிற்கு விரைவில் சுருக்கம் அடைய வைத்துள்ளதான இத்திட்டம் வெற்றியளிக்கவில்லை. பொருளாதாரம் 2012ல் 7% சுருங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்புக்களான 4.5% விட அதிகம் ஆகும். ஆகஸ்ட் 20ல் கட்ட வேண்டிய கடன் தவணைக்காக கிரேக்கம் இன்னும் 3.26 பில்லியன் யூரோக்கள் நிதியுதவியைப் பெற வேண்டும்.

கிரேக்கக் கூட்டணி அரசாங்கத்தின் தலைவர்கள் நேற்று வரவுசெலவுத்திட்ட வெட்டுக்களை பற்றி முடிவைடுக்க கூடினர். ND எனப்படும் புதிய ஜனநாயகக் கட்சியின் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸ், PASOK  தலைவர் எவாஞ்சலோஸ் வெனிஜெலோஸ் மற்றும் ஜனநாயக இடதின் (DIMAR) தலைவர் போடிஸ் கௌவேலிஸ் ஆகியோர் கிட்டத்தட்ட 10 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களுக்கு ஒப்புதல் கொடுத்தனர். அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் சைமோஸ் கெடிகொக்லூ இக்கூட்டம் ஆக்கபூர்வமாக இருந்தது என்றார். மேலும் அனைவரும் நிதிய இலக்குகளை அடைவதற்கு பங்களிக்க  விரும்புகின்றனர் என்றார்.

சமரஸ், வெனிஜெலோஸ் மற்றும் கௌவேலிஸ் ஆகியோர் கடைசி 1.5 பில்லியன் வெட்டுக்களை எப்பிரிவில் செய்வது என்பது குறித்து வேறுபாடுகள் கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. சமரஸ் பொதுத்துறை சிறப்பு ஊதியங்களில் வெட்டுக்களை எதிர்த்தார். இது பெரும்பாலும் பாதுகாப்புப் பணிகள் பிரிவினருக்கு வழங்கப்படுகிறது. வெனிஜெலோஸ் ஓய்வூதியங்கள் இன்னும் குறைக்கப்படுவதை எதிர்த்தார். கூட்டணியின் பேச்சுக்கள், வெட்டுக்களைக் குறைப்பதற்கு, மீண்டும், திங்களன்று தொடரும்.

ஐரோப்பிய ஆணையம், சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்தியவங்கி (EC, IMF, ECB) எனப்படும் முக்கூட்டின் அதிகாரிகளை இன்று மேலும் பேச்சுக்களுக்காக சமரஸ் சந்திக்க உள்ளார்.

சரசஸுடன் இரண்டு மணி நேரம் பேசியபின், பரோசோ ஐரோப்பிய ஒன்றியத்தின் வெட்டுக்களுக்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார். ஐரோப்பிய, சர்வதேச பங்காளிகளின் நம்பிக்கையை தக்க வைக்க காலதாமதங்களுக்கு முடிவு காணப்பட வேணடும். வெறும் சொற்கள் போதாது. சொற்களைவிட செயல்கள் மிகவும் முக்கியம் என்றார் அவர்.

இந்நிகழ்வுகள் ஐரோப்பிய ஒன்றியம் கோரும் எத்தகைய வெட்டுக்களையும் சுமத்தும் தற்போதைய அரசாங்கமானாலும் மற்றும் ஜூன் தேர்தல்களில் ND   உடைய முக்கிய எதிர்க்கட்சியாக வெளிப்பட்டுள்ள போலி இடது சிரிசாவானாலும் சரி கிரேக்க அரசியல் ஆளும்தட்டின் திவால் தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனத்தை வலுவற்றுக் குறைகூறிய சிரிசா வங்கிகளுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதுடன், இராணுவம், பொலிசிற்கு பொதுப் பிரச்சாரத்தில் சைகை காட்டிய அளவில், தேர்தலைத் திறைமையுடன் ND சாதகமாக கொடுத்தது. இப்பொழுது  ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக உறுதியளித்துள்ளது. வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தருவதாகவும் உறுதியளித்துள்ளது. (See, “SYRIZA backs Greek government’s capitulation to the EU”).

சமூக மற்றும் அரசியல் அழுத்தங்கள் கிரேக்கத்தில் பெருகிக் கொண்டிருக்கின்றன; இது சமீபத்தில் தளபதி கான்ஸ்டான்டிநோஸ் ஜியாஜியாஸ் தலைமை இராணுவப் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளதில் பிரதிபலிப்பு ஆகிறது.  புதன் காலை அவர் தன் பதவியை இராஜினாமா செய்தார். காலை 2 மணிக்கு அழைக்கப்பட்டு, பதவி உயர்வு கொடுத்தல், நீக்கப்படுதல் ஆகியவற்றிற்கான அதிகாரிகள் பெயர்களைக் கொண்ட பட்டியல் என்னிடம் கொடுக்கப்பட்டது; என்னுடைய கடமைகளில் இத்தகைய குறுக்கீட்டை நான் ஏற்பதற்கில்லை என்று அவர் விளக்கினார்.

இது கடந்த கோடையில் இராணுவத்திற்குள் வெடித்த உள்மோதலின்  தொடர்ச்சி என்பது வெளிப்படை. அப்பொழுது பிரதம மந்திரி ஜியோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூவின் PASOK அரசாங்கம் முழு உயர்மட்ட இராணுவ அதிகாரிகளையும் பதவியில் இருந்து நீக்கம் செய்தது. ஒருவேளை இன்னும் செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டால் இராணுவ ஆட்சி மாற்றம் வந்துவிடக்கூடும் என்ற வதந்திகளுக்கு இடையே அது நடைபெற்றது. இது ND யில் இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இடையே (பாதுகாப்புக் குழு எனப் பெயர் பெற்றவர்களிடையே) எதிர்ப்பைத் தூண்டியது. அதில் தற்போதைய துணைப் பாதுகாப்பு மந்திரி பனயியோடிஸ் கரபேலாஸும் இருந்தார். இச்சக்திகள் இப்பொழுது அங்கு அனைவரும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அதிருப்தியில் மூழ்கியிருக்கையில் இராணுவத்திற்குள் செல்வாக்கை மறுபகிர்வு செய்ய அழுத்தம் கொடுக்கின்றன.

Onalert.gr என்னும் கிரேக்கச் செய்தி வலைத்தளம் பின்வருமாறு கூறுகிறது: சந்தேகத்திற்கு இடமின்றி, இராணுவத்தினர் அவநம்பிக்கையுடன் உள்ளனர்.... ஏற்கனவே அவர்கள் ஊதியத்தில் பெற்ற வெட்டுக்கள், வரவிருக்கும் வெட்டுக்களுக்கும் ஒரு புறமும் இருக்க, வேறு பதவிக்கு அனுப்பப்படுவோமோ என்ற கவலை மறுபுறம் வந்துவிட்டது. வேறு எந்த நாகரிகம் அடைந்த ஐரோப்பிய நாட்டிலும் இராணுவ அதிகாரிகளுக்குப் பதிவு உயர்வு, வேலைநீக்கம் என்பது அரசியல் கட்சிகளின் அப்பட்டமான நயமற்ற முறையுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் கிரேக்கப் பொருளாதாரம் மீதும் செய்யப்பட்டுள்ள பெரும் தாக்குதல்கள் மூலம் யூரோவைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்கிறனர். அதே நேரத்தில், ஐரோப்பிய முதலாளித்துவத்திடையை கிரேக்கத்தையும் மற்ற கடனில் அவதியுறும் நாடுகளை மீட்பதா வேண்டாமா என்னும்  கடுமையான விவாதங்களும் நடைபெறுகின்றன. சில பிரிவுகள் கிரேக்கத்திற்குக் கடன் கொடுப்பதை நிறுத்துமாறு கேட்கின்றன. அதனால் அது யூரோப்பகுதியை விட்டு நீங்கி மீண்டும் அதன் தேசிய நாணயத்தையை அச்சிட்டு அதன் வங்கிமுறை வீழ்ச்சியை தவிர்த்துக்கொள்ளலாம்.

ஜேர்மனியின் பவேரிய மாநில நிதி மந்திரியான மார்க்கூஸ் சோடர் கிரேக்கம் யூரோப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனக் கூறுபவர்களுடன் சமீபத்தில் இணைந்துள்ளார். நேற்று அவர் கிரேக்கத்தை ஒரு நிதியக் குப்பை என்றார். சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற முறையில் எதுவும் செய்யப்படுவதற்கு இல்லை. எனவே கிரேக்கத்திற்கு இன்னும் நிதியளிப்பதில் தீர்வு இல்லை என நான் நினைக்கிறேன். கிரேக்கம் யூரோப்பகுதியை விட்டு அகல வேணடும்.என்று சேர்த்துக் கொண்டார்.

ஆனால் நேற்று முக்கூட்டு அதிகாரிகள் கிரேக்க நாளேடான Kathimerini  இடம் இப்பொழுது ஒப்புக் கொள்ளப்பட்ட வெட்டுக்களை கிரேக்கம் செய்தால், தாங்கள் கிரேக்கத்தை யூரோப்பகுதிக்குள் வைத்திருக்க ஆதரவு கொடுப்போம் என்றனர். தன்னுடைய பங்கிற்கு பரோசோ கிரேக்கம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வரை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அனைவரும் யூரோப்பகுதிக்குள் கிரேக்கத்தை வைத்திருப்பது குறித்து உறுதியாக உள்ளனர் என்றார்.

நேற்று ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகியும் ஐரோப்பிய மத்திய வங்கி யூரோவைக்காக்க தேவையானதை செய்யும் என்று உறுதியளித்தார். அவர் மேலும் கூறியது: என்னை நம்புக்கள், இது போதுமானது. நிதிய விமர்சகர்கள் இதை யூரோப்பகுதி நாடுகளின் கடன்களுக்கு நிதியளிக்கத் தேவையான பணம் அச்சிடப்படும் என்று உறுதி என்று விளக்கம் கொடுக்கின்றனர். இதில் கிரேக்கம் மட்டும் இல்லாமல், இத்தாலி, ஸ்பெயின் போன்ற பெரிய நாடுகளும் உள்ளன.

வங்கிகளுக்கு கொடுப்பதற்கு பணத்தை வழங்குகையில், ஐரோப்பிய முதலாளித்துவம் இரண்டு ஒரேவித திவால் கொள்கைகளுக்கு இடையே ஒன்றை தேர்ந்தெடுக்கின்றன. அவை கடன்பட்டுள்ள நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களை பேரழிவுதரும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் பாதிக்க வைத்தல் அல்லது ஏராளமாக நாணயத்தை அச்சிடுதல் என்பதாகும். இக்கொள்கையை பேர்லின் எதிர்க்கிறது. ஐரோப்பிய மத்திய வங்கியின் கடன் நிதியம் பற்றிய தடையை மேற்கோளிடுகிறது. அரசாங்கச் செலவிற்கு நிதிவழங்குதல் பணவீக்கம் தரும் நாணய அச்சிடுதல் மூலம் கூடாது என்பதையும் மேற்கோளிடுகிறது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் இந்து ஆண்டு ஐரோப்பிய வங்கிகளுக்குக் கொடுத்த 1 டிரில்லியன் யூரோக் கடனைப் பற்றிக் கூறிப்பிட்ட வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பின்வருமாறு எழுதியது: சிலகாலம் வங்கிகள் மத்திய வங்கி விரும்பியதைச் செய்தன; தங்கள் நாட்டு அரசாங்கக் கடன் பத்திரங்களை வாங்கினர், அதில் இருந்து பெறப்படும் இலாபங்களைக் குறைத்தனர். ஆனால் 1 டிரில்லியன் யூரோக்கள் என்பது இதற்குப் போதவில்லை. இலாபங்கள்  தற்காலிகமாகத்தான் குறைந்தன. இப்பொழுது திரு.டிராகி கடன்களை பணமாக்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை புறக்கணிக்கத் தயாராக உள்ளார். ... கோட்பாட்டளவில் ஐரோப்பிய மத்திய வங்கி அதன் அச்சகத்தை எவ்வளவு விரைவில் செயல்படுத்தலாம் என்பதைப் பொறுத்து உள்ளது. ஆனால் இலத்திரனியல் நிதியக் காலத்தில், இது ஒளியின் வேகம் போன்றது ஆகும்.

வங்கிகளுக்கு இத்தகைய பாரிய நிதி கடனாக வழங்கப்படுவது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திவிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மத்திய வங்கியில் இருந்து புதிய நிதிகள் வரும் என்ற எதிர்பார்ப்பில் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் முடிந்த நிலையில், சமீபத்திய ஐரோப்பிய புள்ளிவிவரங்கள், மற்றும் சர்வதேச அளவில் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்கள் ஐரோப்பாவில் பொருளாதார சுருக்கம் தொடர்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன. பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக 0.7 சதவிகிதம் இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் சுருங்கியது. ஜேர்மனி நலிவுற்றிருக்கும் ஸ்பெயினின் வங்கித் துறைக்கு பிணையெடுப்பு கொடுப்பதற்கு நிதி கொடுக்கவேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சரியும் வணிக நம்பிக்கைக்கு முகங்கொடுக்கிறது.