World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Global elite descend on East London for Olympics

உலகளாவிய உயரடுக்கினர் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காக கிழக்கு இலண்டன் வருகின்றனர்

By Paul Stuart
27 July 2012
Back to screen version

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதை அடுத்து Canary Wharf இல் இருக்கும் இலண்டனின் நிதி மாவட்டத்தை அடுத்த ராயல் துறைமுக வளாகம் நூறு சொகுசுப் படகுகளை இயக்குகிறது. உலகின் படோடாபம் மிக்க 20 படகுகளும் இதில் அடங்கும்.

பெரும் பணக்காரர்களுக்கான மொனாக்கோ பாணி மரினா மைதானம் போல் அது ஆகியிருப்பது என்பதுமக்களின் விளையாட்டுப் போட்டிகள் என்பதான உத்தியோகப்பூர்வ வாய்வீச்சை திட்டவட்டமாய் மறுப்பதைப் போன்றதாக உள்ளது.

கிழக்கு இலண்டனின் ராயல் துறைமுகம் என்பது (இதில் ராயல் ஆல்பர்ட் துறைமுகம், ராயல் விக்டோரியா துறைமுகம், மற்றும் மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் துறைமுகம் ஆகியவையும் அடங்கும்)ஒருகாலத்தில் தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறையின் மையமாக நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகின்ற இடமாக இருந்தது

பொதுவாக இந்த விளையாட்டுப் போட்டிகள் பரந்த உலகளாவிய சமூகப் பிளவினால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. திங்களன்று பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு ஒலிம்பிக் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் இராணி எலிசபெத்தும் மற்றவர்களும் ஒலிம்பிக் கமிட்டியை வரவேற்றனர். உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் மட்டுமே 100 மில்லியன் பவுண்டுகள் செலவு வைக்க இருக்கின்றன, இது தவிர ஏராளமான உத்தியோகபூர்வமற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கின்றன என்று மதிப்பிடப்படுகிறது.

ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டது போல, ஹோட்டலில் தங்குவதையெல்லாம் கடந்தகாலப் பாணி என்றோசீனப் பாணி என்றோ உலகளாவிய உயரடுக்கினர் கருதுகின்றனர்.

அதனால், பலரும் தங்களது சொகுசுப் படகுகளை வாங்கியிருக்கின்றனர், இவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாகவோ அல்லது விண்ட்சர் கேஸில் மற்றும் ஹேம்டன் கோர்ட், பேங்க் ஆஃப் இங்கிலாந்து, நாடாளுமன்ற அவைகள், டவர் பிரிட்ஜ் மற்றும் பல இடங்களை இணைக்கின்ற தேம்ஸ் வழியே அதிவேகப் படகுகள் மூலமாகவோ வந்து சேருவார்கள். தேசிய கடல்வழி அருங்காட்சியகத்தின் பராமரிப்பாளரான ராபர்ட் பிளித் ஒரு அருமையான உதாரணம் கூறினார். “வரலாற்றில் மன்னர்களும் இராணிகளும் ஆற்றின் வழியே தான் பயணம் செய்வர், ஏனென்றால் சாலைவழிகள் ஒப்பீட்டளவில் வசதி குறைந்ததாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும்.”

30 மைல் தூரத்துக்கான நிழற்சாலைகள் முழுமையாக ஒலிம்பிக் விஐபிக்களுக்காகவும் மற்றும் போட்டியாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் பொதுமக்கள் யாரேனும் சுற்றக் கண்டால் அபராதம் 130 பவுண்டு. இதுதவிர, ஒலிம்பிக் டிராபிக்கை மனதில் கொண்டு 1,300 டிராபிக் விளக்குகள் மாற்றப்படவிருக்கின்றன.

இலண்டனின் சமூகரீதியாக வறுமைப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே ஒரு சீரழிந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருக்கக் கூடிய சாதாரண மக்களைத் தவிர்க்க விரும்பும் நிதி உயரடுக்கின் விருப்பத்தை தான் உணர்ந்து கொண்டிருப்பதை விளக்கப்படுத்துவதற்கு ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களும் அரசாங்கமும் பெரும் பிரயத்தனம் செய்துள்ளனர்.

ஒலிம்பிக் விருந்தின் ஒழுங்கமைப்பின் ஒரு நிர்வாகியான கமில்லா ஸ்டோரி கூறியதைப் போல, “ஒட்டுமொத்த நிதித் துறையைச் சேர்ந்தவர்களும், வணிகத் துறை, விளையாட்டுத் துறை மற்றும் பொழுதுபோக்குத் துறை உலகங்களில் இருந்தான ஒவ்வொருவரும் ஒன்றுகூடுகிறார்கள். இது ஒரு தனித்துவமான வாய்ப்பு. இவர்கள் சந்தடிக்குள் தொலைந்து போக, சுற்றுலாப் பயணிக் கூட்டங்களுக்குள் அமிழ்ந்து போக விரும்புகின்றனரா, அல்லது உலகின் மிக அற்புதமான படகு ஒன்றின் உச்சியில் இருந்து காத்திருந்து சுடச்சுட அதனைக் காண விரும்புகின்றனரா?”

பில்லியனர்கள், நிதிச் சிலவர் மற்றும் முதனிலைப் பட்டியல் பிரபலங்களின் விளையாட்டு மைதானமான ரோமான் அப்ரமோவிச்சின் செல்வச்செழிப்பு மிக்க 1 பில்லியன் டாலர் படகு இலண்டனில் செவ்வாயன்று வந்து சேரும் என்று எகானாமிக் டைம்ஸ் எழுதியது. ”557 அடி உயரத்தில், ரஷ்ய வணிக அதிபரின் எக்லிப்ஸ் தான் உலகின் மிகப்பெரும் தனியார் படகு ஆகும். இதில் இரண்டு நீச்சல் குளங்கள், இரண்டு ஹெலிபேடுகள், ஒரு தனி டிஸ்கோ அரங்கு, 30 கேபின்கள், ஒரு சினிமா, ஒரு மினி சப்-மரைன், மற்றும் அதன் சொந்த ஏவுகணை தடுப்பு அமைப்புமுறையும் கூட உண்டு.”

ராயல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இன்னொரு சொகுசுப் படகு இலோனா. இது ஆஸ்திரேலிய-இஸ்ரேலி பில்லியனரான பிராங்க் லோவிக்குச் சொந்தமானதாகும். லோவி  வெஸ்ட்ஃபீல்டு என்னும் பேரங்காடிக் குழுமத்தின் இணை நிறுவனர். ஒலிம்பிக் பார்க்கை அடுத்து இருக்கும் ஸ்ட்ராட்ஃபோர்டு ஷாப்பிங் பகுதியில் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான புதிய £1.45 பில்லியன் சில்லரை விற்பனை வளாகம் இருக்கிறது. இதற்கு கொஞ்ச தூரத்தில் இந்தப் படகு நிறுத்தப்பட்டிருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் இணைநிறுவனரான பால் ஆலனுக்குச் சொந்தமான ஆக்டோபஸ் வருகை குறித்து டெய்லி மிரர் செய்தி வெளியிட்டது. அதில்இரண்டு ஹெலிபேடுகள், ஒரு நீச்சல் குளம், நைட் கிளப், ஒரு கூடைப்பந்து மைதானம், ஒரு திரையரங்கு மற்றும் இரண்டு நீர்மூழ்கிப் படகுகள் இருக்கின்றன....இதில் இருக்கும் ஒரு நீர்மூழ்கிப் படகில் பத்துப் பேர் இரண்டு வார காலம் கடலுக்கடியிலான பயணத்தை மேற்கொள்ள முடியும்....அத்துடன் ஒரு சிறிய ரிமோட் இயக்கத்தினால் செயல்படுத்தப்படும் நீர்மூழ்கியும் உள்ளது...கப்பலின் வால் பகுதியில் சிறகுகள் விரிந்தால் ஒரு முழுமையான ஸ்பா, ஒரு பார் பகுதி மற்றும் கடலில் நீந்தி விளையாடுவதற்கு அல்லது படகின் ஜெட்ஸ்கைஸ்கள் கொண்டு விளையாடுவதற்கு கடலுடனுன் இணைத்த பகுதி கிடைக்கும்.”

ஆலனின் பார்ட்னரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் (56) தனது Gogypus சொகுசுப் படகில் விரைவில் வந்து சேருவார் என்பதையும் The Mirror தெரிவித்தது. ”கிரீஸின் கோடீஸ்வரியான எலினா அம்ப்ரோஸியாடோ (42)வுக்குச் சொந்தமான The Maltese Falcon அடுத்த சில நாட்களில் வரும்

இந்த சொகுசுக் கப்பல்களையெல்லாம் விஞ்சும் ஒன்றைப் பற்றி டைம் இதழ் கூறுகிறது: “சிலவர்களுக்கும் வரித் தொல்லைக்கு அஞ்சி பிற நாடுகளில் பணம் காப்பவர்களுக்கும் உதவும் விதமாக 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து செயல்படுகின்ற Yacht Island Design என்கின்ற நிறுவனம் ‘Streets of Monaco, என்கிற கனவுப் படகினை வடிவமைத்திருக்கிறது. இது Monte Carlo மாதிரியில் 1.1 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாகும்....500 அடிக்கும் உயரமாய் இருக்கும் இந்த நான்கு மாடி கப்பலில் ஒரு கேஸினோ, பந்தய மைதானம், கோ-கார்ட் சுற்று, பல டென்னிஸ் மைதானங்கள், மற்றும் Jacuzzi பார்களுடன் கூடிய நீச்சல் குளங்கள் ஆகியவை உள்ளன. கப்பலில் அடுக்குகளைக் காட்டிலும் கட்டிடங்கள் தான் இருக்கும். இதில் மொனாக்கோவின் புகழ்பெற்ற Hotel de Paris மாதிரியிலமைந்த ஒரு கட்டிடமும் அடங்கும். அதிர்ஷ்டசாலி உரிமையாளர்கள் ஹெலிபேடில் சாம்பெயின் முத்தங்கள் மற்றும் caviar கனவுகளுடனும், அதுதவிர ஒரு நீர்வீழ்ச்சி மற்றும் தண்ணீருக்கடியில் காட்சிகள் கொண்ட ஒரு உணவகம் என அனுபவித்துக் கொண்டாட முடியும்.”     

ஒலிம்பிக்ஸின் உண்மையான வர்த்தகம் குறித்த ஒரு கட்டுரையும் டைம்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது. இந்த பெரும் பணக்காரர்கள் எல்லாம்வெறுமனே ஒலிம்பிக் பூங்காவைப் பார்க்க மட்டும் வரவில்லை. கூகுள் நிறுவனத்தின் எரிக் ஸ்கிமிட் மற்றும் சோனி நிறுவனத்தின் ஹோவார்டு ஸ்ட்ரிங்கர் போன்ற வணிகப் பெரும் புள்ளிகள் விளையாட்டுப் போட்டிகளின் இடையில் UK Trade and Investment குழுமத்தால் நடத்தப்படும் தொடர்ச்சியான மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அதாவது இந்த பெரும் செல்வந்தர்கள் இந்த மாநாடுகளில் கலந்து கொள்வோரை தங்களது படகுகளுக்கு அழைக்க முடியும், அவர்களுக்கு ஒலிம்பிக்கிற்குப் பிந்தைய விருந்துகளுக்கு அழைப்பதற்கும் முடியும். அரசாங்கம் நடத்தும் நிகழ்வுகள் என்பதால் இந்த சாம்பெயின் நெட்வேர்க்கிங்கிற்கு ஒரு மரியாதை கிட்டுகிறது என்பது தான் சிறந்த அம்சமாகும்.”

முன்னதாக பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தார்: “ஒலிம்பிக்ஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களையும் ஆயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்களையும் மட்டுமே நம் நாட்டிற்குள் கொண்டு வரவில்லை, பெரும் வணிகப் புள்ளிகளையும் கொண்டு வருகிறது. இந்த அபூர்வ சந்தர்ப்பம் ஐக்கிய இராச்சியத்தின் நிறுவனங்களுக்கு ஒரு பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வணிக வாய்ப்பினை வழங்கும்.”

அரசாங்கம் இலண்டனில் இருக்கும் லங்காஸ்டர் ஹவுஸில் ஒரு பிரிட்டிஷ் வர்த்தக தூதரகத்தை உருவாக்கியிருக்கிறது. டெய்லி டெலிகிராஃப் கூறியது: “உலகெங்கும் இருந்தான நிறுவனத் தலைவர்கள் தலைநகரில் UK Trade & Investment இன் பிரிட்டிஷ் வர்த்தக தூதரகத்தில் வந்து சேருவார்கள். விளையாட்டுகளின் அதே நாட்களில் தொடர்ச்சியான உச்சிமாநாடுகள் நடக்கவிருக்கின்றன.”

”1851 இல் கிறிஸ்டல் பேலஸில் நடந்த மகா கண்காட்சிக்குப் பின் பிரிட்டிஷ் வர்த்தகத்திற்கான மிகப்பெரும் ஊக்குவிப்பாக இதைச் சொல்ல இயலும் என்று டெய்லி டெலிகிராப் இதனை வருணித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான கிறிஸ்டின் லகார்ட் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவரான மரியோ டிராகி போன்ற முக்கிய உரையாளர்களும் பங்கேற்கும் 17 வர்த்தக உச்சி மாநாடுகளை லங்காஸ்டர் ஹவுஸ் நடத்த இருக்கிறது.

கேமரூன் மற்றும் சான்சலர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் உடன், பத்துப் பன்னிரண்டு கேபினட் அமைச்சர்களும் பங்கேற்பார்கள். ஜூலை இறுதியில் உலக முதலீட்டு மாநாடு என்னும் முக்கிய பெரும் நிகழ்வைத் தொடர்ந்து வேல்ஸ் இளவரசர் ஒரு விருந்து கொடுக்க இருக்கிறார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் கணிசமான போட்டியையும் எதிர்கொள்கிறது. “மற்ற நாடுகளும் கூட முதலீட்டுக்கான இலக்கிடங்களாக தங்களை விளம்பரம் செய்வதற்கு முக்கியமான இடங்களை முன்பதிவு செய்து வைத்திருக்கின்றன என்று டெலிகிராஃப் குறிப்பிடுகிறது. ”உதாரணமாக, சோமர்செட் ஹவுஸ் காஸா பிரேசில் ஆகவிருக்கிறது. ரஷ்யா கென்ஸிங்டன் கார்டன்ஸின் பகுதிகளை எடுக்கவிருக்கிறது. அலெக்சாண்ட்ரா பேலஸ் ஹாலண்ட் ஹெனிஜன் ஹவுஸ் (Holland Heinejen House)ஆக மாறும்.”

டிக்கெட்டுகளின் மிக அதிக விலையானது இந்த விளையாட்டுப் போட்டிகள் அடிப்படையாக பணக்காரர்களுக்கானது என்கிற யதார்த்தத்தை உணர்த்தியிருக்கிறது. இன்றைய துவக்க விழாவுக்கான ஒரு டிக்கெட்டின் அதிகப்பட்ச விலை 2,012 பவுண்டுகள்.

அதிகமான விலையின் காரணத்தால் ஒலிம்பிக் நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகள் நூறாயிரக்கணக்கில் விற்காமல் தேங்கியிருக்கின்றன. ஒலிம்பிக் கால்பந்துக்கான டிக்கெட்டுகளும் கூட இதில் அடங்கும். விலையைக் குறைப்பதற்கோ அல்லது டிக்கெட்டுகளை விளையாட்டு கிளப்புகள் அல்லது விருப்பமான மற்ற தரப்புகளுக்கு கொடுப்பதற்கோ பதிலாக, கால்பந்து மைதானங்களின் பார்வையாளர் கொள்திறன் 500,000 வரை குறைக்கப்பட்டிருக்கிறது.

உத்தியோகப்பூர்வ விலைகளின் மற்ற உதாரணங்கள்: ”ஆகஸ்டு 3 அன்று நடக்கவிருக்கும் ஒரு தடகள இறுதிச் சுற்றைக் காண்பதற்கான விலை 300 பவுண்டு. ஆடவர் 100 மீட்டர் இறுதிப் போட்டியைக் காண்பதற்கு 725 பவுண்டு.” வெளிச் சந்தையில் 40 சதவீதம் விலையேற்றி விற்கப்படுவதைக் காண்பது சாதாரணம். இன்னும் பல டிக்கெட்டுகளின் விலை சாம்பெயின் வரவேற்புகள் மற்றும் பிற பெருநிறுவன விருந்துகளையும் அடக்கி மிக அதிகமாய் விலையேற்றப்பட்டதாய் இருக்கின்றது.

சமூக உணர்திறனுக்கென அதிகம் அறியப்படாததான டெலிகிராப், “ஒலிம்பிக்ஸானது மந்தநிலையின் பூதங்களால் - அதாவது யாரின் சொந்தங்கள் பொருளாதாரத்தை நாசமாக்கிதோ அந்த நிதிப் பிரபுக்கள் மற்றும் அவர்களை அதைச் செய்ய அனுமதித்த அரசியல்வாதிகள் - கைப்பற்றப்படுமானால் பெரும் விலையைக் கொடுத்திருக்கும் தொழிலாளர்களை அது கோபமூட்டும் என்று எச்சரித்ததில் அதிக ஆச்சரியமில்லை