சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US, UK and France threaten military intervention against Syria

அமெரிக்க ,பிரிட்டன், பிரான்ஸ், சிரியா மீது இராணுவத் தலையீட்டு அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன

Chris Marsden
29 August 2012

use this version to print | Send feedback

சிரியா மீது போர் தொடுப்பதற்கு போலிக்காரணமாக பேரழிவுதரும் ஆயுதங்கள் என்பதை மேற்கோளிட்டு, ஒபாமா நிர்வாகம் நன்கு பழக்கப்பட்டுவிட்ட பாதையில் செல்ல முற்படுகிறது.

ஜனாதிபதி பாரக் ஒபாமா, சிரியாவிற்குள் இராசயன ஆயுதங்களின் நடமாட்டம் என்பது அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தூண்டும் ஒரு சிவப்புக் கோடு என்று ஆகஸ்ட் 21ல் அச்சுறுத்தியபோது, அவர் 2003ல் ஈராக்கிற்கு எதிரான போரில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் முன்னோடியாக செய்யாத எதையும் செய்துவிடவில்லை. ஒபாமாவிற்கு இப்பொழுது பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோனுடைய ஆதரவு உள்ளது; மற்றும் இந்த வாரம் பிரான்ஸின் பிரான்சுவா ஹாலண்டின் ஆதரவும் கிடைத்துள்ளது. தன்னுடைய அரசாங்கம் ஏற்கனவே துருக்கியுடன் இணைந்து நமக்கு நெருக்கமான பங்காளிகளுடைய ஒருங்கிணைப்புடன் பறக்கக் கூடாத பகுதிகளை நிறுவ உழைப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள தொடர்பு வாஷிங்டன் இருப்பதாகக் கூறும் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அச்சுறுத்தல் மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றை உயர்த்தும் போலித்தனங்கள் மீண்டும் வருவதையும்விட அதிகமாகும்.

துனிசியாவிலும் எகிப்திலும் இன்னும் பரந்த அளவில் பிராந்தியம் முழுவதும் 2011ல் அதன் வாடிக்கையாளர்கள் ஆட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வெடிப்பை எதிர்கொண்ட வாஷிங்டன் பிற்போக்குத்தன சக்திகளை திரட்டி தொழிலாள வர்க்கத்தை நசுக்க முயல்கிறது; அதே நேரத்தில் ஈராக்கின்மீது 2003 படையெடுப்பிற்குப் பின் கருதப்பட்டிருந்த பிராந்திய மேலாதிக்கத் திட்டங்களைச் செயல்படுத்தவும் முயற்சிக்கிறது. அந்த படையெடுப்பு, ஈரானின் முக்கிய பிராந்திய போட்டி நாட்டை நீக்கியதன் மூலம் அதன் நிலையை வலுப்படுத்தவும் முடிந்தது. இதை எதிர்கொள்ளும் வகையில் வாஷிங்டன் தீவிரவாதத்தின் ஷியா வளைவுஎன்று அது குறித்துள்ளதை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதுஇதி அல்வைட் ஆதிக்கம் கொண்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் பாத்திஸ்ட் ஆட்சி, லெபனானில் ஹெஸ்போல்லா மற்றும் ஈரான் ஆகியவையும் அடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு பேர்சிய வளைகுடா முடியரசுகளுடன் பிணைந்துள்ள சுன்னி இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுடன் தன் நம்பிக்கையை ஆழ்மைப்படுத்தும் வகையில் வாஷிங்டன் இதை எதிர்கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு போராடுவதை எதிர்க்கும் குட்டி முதலாளித்துவ இடது சக்திகளின் அரசியல் திவால்தன்மையைப் பயன்படுத்தி, இஸ்லாமியக் கட்சிகள் துனிசியா மற்றும் எகிப்தில் பதவிக்கு வந்துள்ளன.

துனிசியாவில், கட்டார் மற்றும் சௌதி அரேபியா இரண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை அக்டோபர் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்ற இஸ்லாமிய எட்டஹ்டா (மறுமலர்ச்சி) இயக்கத்தை ஆதரிக்க கொடுத்துள்ளது. எகிப்தில் வாஷிங்டன், அமெரிக்கப் பயிற்சிபெற்ற உயர்கல்விக்கூட முகம்மத் முர்சியின் முஸ்லிம் பிரதர்ஹுட் இன் நட்பை நாடுகிறது; அவர் இராணுவத்தின் சிவிலிய அரசியல் பங்காளி ஆவார்.

அல் குவேடா உட்பட இச்சக்திகள், வாஷிங்டனின் அதிர்ச்சித் துருப்புக்கள் போல் செயல்பட்டு, தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குதல் மற்றும் அமெரிக்க நலன்களுக்கு விரோதம் எனக் கருதப்படும் மத்திய கிழக்கு ஆட்சிகளை வீழ்த்துதல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றன.

அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் கேர்னல் முயம்மர் கடாபியின் லிபிய ஆட்சிக்கு எதிரான வலதுசாரி எழுச்சிக்கு ஊக்கம் கொடுத்து ஆயுதங்களையும் அளித்து இஸ்லாமிய சக்திகளை பரந்த அளவில் நம்பின. இதுதான் மார்ச் 17, 2011ல் தொடங்கிய நேட்டோ தலைமையிலான  ஆட்சிமாற்றத்திற்கான உத்தியோகபூர்வ பிரச்சாரத்திற்கு தளமாகும்; இது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாக்கும் பொறுப்பு”  முன்முயற்சி என்று 2005ல் முதலில் இயற்றப்பட்ட போலிக்காரணத்தின்கீழ் நடத்தப்பட்டது.

சிரியாவிற்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள் இப்பிரச்சாரத்தின் வியத்தகு விரிவாக்கத்தை பிரதிபலிக்கின்றன; இவை இப் பிராந்தியத்தில் இருக்கும் மக்கள் மற்றும் உலகம் முழுவதற்கும் பேரழிவு விளைவுகளைத் தரும் திறனைக் கொண்டவை. சிரியாவில் துருக்கிய இராணுவத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கை, பிராந்திய நட்பு நாடுகள் மற்றும் அமெரிக்கா, பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய வான்சக்தி ஆகியவற்றின் ஆதரவைக் கொண்டவை, லிபியாவில் ஏற்பட்டதை மிகச் சிறியதாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

சிரியாதான் இப்பொழுது மத்திய கிழக்கில் இருக்கும் சுன்னி இஸ்லாமியவாதப் போராளிகளுக்கு இறுதி இடம் ஆகும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவிற்கு எதிராக இராணுவத் தலையீட்டை அச்சுறுத்துகையில், இனவழி மற்றும் குறுங்குழுவாத மோதல்கள் அப்பிராந்தியத்தில் வன்முறையை எரிய விடுகின்றன. சுன்னி-ஷியா வன்முறைகள் இப்பொழுது லெபனான், ஈராக், பாக்கிஸ்தான் இன்னும் அப்பாலும் படர்ந்துவிட்டன.

குறிப்பாக குர்துகள் மீது கவனம் செலுத்தும் பிற இன-மத வழி அழுத்தங்கள், சிரியா, ஈராக் ஆகியவற்றில் படர்ந்து உள்நாட்டுப் போரை ஏற்படுத்தி ஈரானுக்குள்ளும் நுழையும் சாத்தியத்தை கொண்டுள்ளன.

மத்திய கிழக்கில் ஒரு புதிய ஏகாதிபத்திய வகைப் பிரிவினைக்கான திட்டங்களை மறைக்கும் இம்முயற்சிகள் அனைத்தையும் தொழிலாளர்களும் இளைஞர்களும் நிராகிரக்க வேண்டும்; இவற்றுள் குறிப்பிட்ட வகையிலான அசாத் ஆட்சியின் குற்றங்கள் பற்றிய சீற்றமும் உள்ளன. இத்தகைய விமர்சகர்கள் தாராளவாதிகளாயினும், பல போலி இடது குழுக்களின் பிரதிநிதிகளாயினும், அவர்கள் சிரிய தேசியக் காங்கிரஸ் மற்றும் சுதந்திர சிரிய இராணுவத்தின்பின் ஆதரவாக உள்ளனர்; அவையோ வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிசின் பணியில் ஒரு அரசியல் மோசடியை நடத்திக் கொண்டிருக்கின்றன.

அசாத் மட்டுமின்றி, பிராந்தியத்தின் அனைத்து பிற்போக்குத்தன, சர்வாதகார ஆட்சிகளும் சரியும் தகுதியைத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால் இது தொழிலாள வர்க்கம், கிராமப்புற வறியவர்களையும் சமூகத் தட்டுக்களில் அடக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகளையும் தனக்குப் பின்னே அணிதிரட்டி செய்து முடிக்க வேண்டிய பணியாகும். அமெரிக்க இராணுவத்தால் இருத்தப்படும் எந்த மத்தியக் கிழக்கு ஆட்சியும் பெருநிறுவன மற்றும் மூலோபாய நலன்களின் கருவியாகத்தான் இருக்கும்; அவற்றைத்தான் வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிஸ் கூறுகின்றன; அவை பொதுமக்களின் ஜனநாயக மற்றும் சமூக விழைவுகளை உலக ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக அடக்குவதில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றன.

குறுகிய குழுவாத சுன்னி இயக்கங்களை புரட்சிகர, ஜனநாயக இயக்கங்கள் என்று கூறும் குட்டி முதலாளித்துவ இடது கட்சிகளின் முயற்சிகள், பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் எதிரான ஒரு குற்றம் ஆகும்; இதையொட்டி நீண்டகால குருதி கொட்டும் விளைவுகள் ஏற்படும்.

மத மற்றும் இனவழியில் பிளவுகளை விதைக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை நிலைநிறுத்த முற்படுகிறது; ஏகாதிபத்திய ஆதிக்கம் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, மத்திய கிழக்கு முழுவதும் தொழிலாளர் அரசாங்கங்களை ஸ்தாபிக்க போராடுகிறது.