WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
கிரேக்கத்
தேர்தல்கள்: தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை
Christoph
Dreier
28 April 2012
use
this version to print | Send
feedback
மே 6ம்
திகதி நடக்க இருக்கும் கிரேக்க தேர்தல்களில் 1974 இராணுவச் சர்வாதிகார முடிவிற்குப்
பின் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு மிகதிக அரசியல் கட்சிகள்
போட்டியிடுகின்றன. கடந்த வாரம், தலைமை நீதிமன்றம் 36 பதிவு செய்யப்பட்டுள்ள
அமைப்புக்களில் 32 பங்கு பெறலாம் எனத் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் வாக்குச்
சீட்டில் பல கட்சிகள் இருந்தபோதிலும்கூட, தொழிலாளர்களுக்கு தேர்தலில் எந்த
உரிமையும் இல்லை.
கடந்த வாரம்
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் பரோசோ ஒரு திட்டத்தை அறிவித்தார். இதன்படி
ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த கிரேக்க அரசாங்கத்தின் மீது கூடுதலான சிக்கன
நடவடிக்கைகளைச் சுமத்தும்.
“வளர்ச்சி
மற்றும் வேலைகளுக்கான ஐரோப்பிய முன்னெடுப்பு”
என அழைக்கப்படும்
இத்திட்டத்தில் கூடுதல் வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்கள் இருக்கும் என்பதுடன், மிகப்பரந்த தனியார்மயமாக்கலும் இருக்கும்.
இவை மின்விசை நிறுவனம் போன்ற துறைகளைப் பாதிப்பதுடன், சந்தைகள்
தாராளமயமாக்குதலையும் கொண்டுள்ளன. மேலும் பரோசோ 2014 ஐ ஒட்டி தனியார் துறையில்
குறைந்தப்பட்சம் 15%ஆவது ஊதிய வெட்டுக்கள் அரசாங்கத்தால் சுமத்தப்படும் என்றும்
அறிவித்தார்.
65%
உண்மையான ஊதியங்களைக் குறைக்க வழி செய்த முந்தைய தொழிலாள வர்க்கத்தின் மீதான
தாக்குதல்கள், இளைஞர்களிடையே 50%க்கும் மேலான வேலையின்மையை ஏற்படுத்தியதுடன், இலவச
உணவு வழங்கும் இடங்களில் நீண்ட வரிசைகளையும் கொண்டு வந்துள்ளன. இத்தகைய
நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய வங்கி
என்னும் முக்கூட்டினால் நேரடியாக உத்தரவிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஜோர்ஜ்
பாப்பாண்ட்ரூவின் தலைமையின்கீழ் இருந்த சமூக ஜனநாயக
PASOK
அரசாங்கம்
இத்தாக்குதல்களைச் சுமத்துவதில் பெருகிய சிக்கல்களை முகங்கொடுத்தபோது, அது இழிவுடன்
அகற்றப்பட்டு, ஒரு
“தொழில்நுட்பவாத”
அரசாங்கம், முன்னாள்
ஐரோப்பிய மத்திய வங்கி
–ECB-
தலைவர் லூகாஸ் பாப்படெமோஸின் கீழ் பதவியில் இருத்தப்பட்டது. தற்போதைய தேர்தல் தேதி
கூட முக்கூட்டின் நேரடி உத்தரவுகளின் பேரில்தான் நிர்ணயிக்கப்பட்டது.
இச்சூழலில்,
தொழிலாளர்களின் சமூக உரிமைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புக்கள் மற்றும்
கிரேக்கத்தின் ஆளும் உயரடுக்கு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தின் மூலம்தான்
பாதுகாக்கப்படமுடியும். ஆனால் தேர்தல்களில் நிற்கும் ஒரு கட்சி கூட தொழிலாள
வர்க்கத்திற்கு அத்தகைய சுயாதீன முன்னோக்கிற்காக போராடவில்லை. இவை அனைத்துமே
கிரேக்க முதலாளித்துவத்தின் ஏதேனும் ஒரு பிரிவிற்கு ஆதரவாகத்தான் பேசுகின்றன.
அநேகமாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் எப்படிச் சிறந்த முறையில்
செயல்படுத்தப்பட முடியும் என்பது குறித்துத்தான் வாதிடுகின்றன.
தற்போதைய
அரசாங்கத்தை அமைத்துள்ள
PASOK மற்றும்
பழமைவாத புதிய ஜனநாயகக் கட்சியை தவிர தேர்தல்களில்
SYRIZA
எனப்படும் தீவிர இடதுக்
கூட்டணியினாலும் போட்டியிடகின்றது.
“ஐக்கிய
சமூக முன்னணி”-
United Social
Front -என்னும்
பதாகையின்கீழ் இது இவ்வாறு செய்கிறது; இதில் முன்னாள்
PASOK
உடைய பிரதிநிதிகள் கூட்டுச் சேர்ந்துள்ளனர். நீண்டகாலமாகவே சிக்கன நடவடிக்கைகளுக்கு
ஆதரவு கொடுத்த அவர்கள் சமீபத்தில்தான் அவற்றிற்கு எதிராகப் பேசுகின்றனர். அதுவும்
அவர்களுடைய வாக்குகளினால் பயனில்லை எனத் தெரிந்தவுடன்.
அதன்
தேர்தல் அறிக்கையில், இக்கூட்டு சமூகநலச் செலவுகளில் இன்னும் வெட்டுக்கள்
அதிகரிப்பை எதிர்க்கிறது. இதுவரை செய்யப்பட்டுள்ள வெட்டுக்களை அகற்றுவதாகவும்
உறுதியளிக்கிறது. ஆனால், அதே நேரத்தில் அது ஐரோப்பிய ஒன்றியம், யூரோப்பகுதி
ஆகியவற்றில் கிரேக்கம் அங்கத்துவ நாடாகத் தொடர வேண்டும் என்னும் கருத்தையும்
ஆதரிக்கிறது. இதையொட்டி அந்த அமைப்புக்களின் ஆணைகளுக்கு அது உட்படுகிறது. கிரேக்கக்
கடன் சுமை தள்ளுபடி செய்யப்பட வேண்டியதில்லை, மறு பேச்சுவார்த்தைகளுக்கு
உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இச்சூழலில் சமூகத்
தாக்குதல்கள் திரும்பப் பெறப்படும் என்று கூறுவது வெற்றுத்தனமாகும்.
SYRIZA,
கடந்த தேர்தல்களில்
PASOK
கொண்டிருந்த பங்கைத்தான்
இப்பொழுது மேற்கொள்ள விரும்புகிறது என்பது தெளிவாகி வருகிறது. அந்த நேரத்தில்
PASOK
சமூகநலச் செலவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் பிரச்சாரத்தை
நடத்தியது. ஆனால் தேர்தல் முடிந்தபின், தொழிற்சங்கங்களுடன் கொண்டிருந்த நெருக்கமான
பிணைப்புக்களைப் பயன்படுத்தி வரலாற்றில் முன்னோடியில்லாத சமூகநல வெட்டுக்களைச்
சுமத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாக கிரேக்கம் அதன் விளைவுகளை அனுபவித்துக்
கொண்டிருக்கிறது.
PASOK
பிரதிநிதிகளுடன் கூட்டு
என்பதின் மூலம் மட்டுமல்லாது, அனைத்து
“இடதுகளும்”
ஒன்றாக ஒரு கூட்டில்
இருக்க வேண்டும் என அழைப்புவிடப்பட்டு
DIMAR
எனப்படும் ஜனநாயக
இடதினையும் கூட்டில் சேர்வதற்கான பலமுறைவிடப்பட்ட அழைப்பினாலும் இது
எடுத்துக்காட்டப்படுகின்றது.
SYRIZA
வில் இருந்து இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு
DIMAR
விலகியதிலிருந்து
PASOK உடன்
ஒரு கூட்டணியைத் தோன்றுவிக்க முயல்கிறது. இக்கட்சியின் நோக்கம் கிரேக்கத்தின்
யூரோப்பகுதி அங்கத்துவ தகுதியை எப்படியும் பாதுகாக்க வேண்டும் என்பதாகும்.
வேறுவிதமாகக் கூறினால், சமூக எதிர்ப்புரட்சியைத் தொடர்தல் என்பதாகும்.
SYRIZA
இன் தலைவரான அலெக்சிஸ்
திசிப்ரஸ் சமீபத்தில் தன்னுடைய கட்சி வலதுசாரி தேசியவாத
“சுதந்திர
கிரேக்கர்களின்”
பிரிவுகளுடனும் கூட்டு வைத்துக் கொள்ளும் என்று கூறினார். இது
ஆளுவதற்குப் போதுமான பெரும்பான்மையைக் கொடுக்கும்.
கிரேக்க
கம்யூனிஸ்ட் கட்சி
(KKE)
இதில் சிறப்புப் பங்கைக் கொண்டுள்ளது. பிரச்சாரத்தில் கிரேக்கக்
கம்யூனிஸ்ட் கட்சி பலமுறையும் தான் எந்தக் கூட்டணி அரசாங்கத்திலும் சேராது என்று
கூறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுதல், அரசாங்கக் கடன்களை
நிராகரித்தல் மற்றும் வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றைத் தேசியமயமாக்குதல் என
மிகவும் தீவிரவாத கோரிக்கைகளுடன் அது பிரச்சாரத்தை நடத்துகிறது.
உண்மையில்
இக்கூற்றுக்கள் தொழிலாளர்களின் சீற்றத்தைப் பாதுகாப்பான வழிவகைகளில்
திசைதிருப்புவதற்கான அழைப்புகள்தான். கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்
அலேகா பாபாரிகாவின் கருத்துப்படி, கிரேக்கத்தில் ஒரு சமூகப் புரட்சி என்பது
நிகழ்ச்சிநிரலில் இல்லை. இச்சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுதல்
என்னும் சரியான அழைப்பு ஒரு தேசிவாத, பிற்போக்குத்தன முன்னோக்கான முதலாளித்துவ
அடிப்படையில் முன்னாள் நாணயமான ட்ராச்மாவை மீண்டும் அறிமுகப்படுத்துதல் என்பதாக
மாற்றப்படுகின்றது.
கிரேக்கக்
கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களையும் அவற்றின்
அரசாங்கத்துடனான ஒத்துழைப்பிற்காக தாக்கினாலும் கூட, அது தொழிலாளர்கள் இந்த
தொழிற்சங்கவாத தளையில் இருந்து முறித்துகொண்டு வெளியேறுவதைத் தடுக்கத்தான்
முற்படுகிறது.
சமீபத்திய
ஆண்டுகளில் இது தொழிற்சங்கங்கள் பயனற்ற 24 மணிநேர பொது வேலைநிறுத்தங்களை ஏற்பாடு
செய்த வகையில் இது வெளிப்பாட்டை கண்டுள்ளது. கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி பல
தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் விரிவாக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை
பொருட்படுத்தவில்லை. மாறாக அது தனித்தனி, தற்காலிக வேலைநிறுத்தங்களுக்குத்தான்
அழைப்பு விடுத்தது. அவர்களுடைய கண்காணிப்பாளர்கள் ஏதென்ஸ் தெருக்களில்
ஆர்ப்பாட்டங்கள் நடத்துதவதற்கு உதவினர். மத்திய சின்டகமா சதுக்கத்தில்
கண்காணிப்பாளர்கள் பின் கூடி பாராளுமன்றத்தை சுற்றி ஒரு தடையை அமைத்து சீற்றம்
அடைந்த தொழிலாளர்கள் அதைத் தாக்காமல் பாதுகாக்க முற்பட்டனர்.
DIMAR,
KKE, SYRIZA
இவற்றைத் தவிர, மற்ற சில சிறுகுழுக்களும் வாக்குச்சீட்டில் உள்ளன. இவை பல
தசாப்தங்களாக இக்கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும்தான் சுற்றி வருபவை ஆகும்.
இவற்றில் மிகப் பெரியது
Antarsya
ஆகும்; இதில் பப்லோவாதிகள்,
அரச முதலாளித்துவத்தினர், மாவோயிஸ்ட்டுக்கள் மற்றும்
KKE
இடம் இருந்து பிரிந்து
வந்தவர்கள் என உள்ளனர். அவற்றின் தீவிரவாத வார்த்தைஜாலமான
“புரட்சி”,
“முதலாளித்துவத்தில்
இருந்து முறிவு”
என்பவற்றின் மூலம்
அவை ஒருவேளை
SYRIZA அரசாங்கம்
ஏற்பட்டால் அதற்கு ஒரு இடது மறைப்பினை கொடுக்கத்தான் முயலும். அவர்களுடைய தேர்தல்
பிரகடனத்தில் அவர்களுடைய முக்கிய கோரிக்கைகளில் ஒன்று
SYRIZA, KKE
இரண்டும்
“கூட்டு
நடவடிக்கை”
எடுக்க வேண்டும் என்ற அழைப்பு அடங்கியுள்ளது.
போலி இடது
அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் முழுத் திவால் தன்மை தொடர்கையில், தீவிர
முன்னேற்ற மாற்றீட்டு இல்லாத நிலையில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் இன்னும்
வெளிப்படையாகச் செயல்படுகின்றன.
Independent Greeks
மற்றும் தீவிர வலது
LAOS
கட்சி ஆகியவற்றைத் தவிர,
வெளிப்படையான பாசிச
“Golden Dawn”
உம்
பாராளுமன்றத்தில் நுழையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய
ஆளும் கட்சிகளான
PASOK, New Democracy
(ND) இரண்டும்
கருத்துக் கணிப்புக்களில் 77.4 சதவிகிதத்தில் இருந்து 40%க்கும் குறைவான
ஆதரவைத்தான் கொண்டுள்ளன. அரசாங்கத்தில் அனைத்து வலதுசாரிக் கட்சிகளும் சேரவேண்டும்
என்ற அழைப்பைப் பரிசீலிப்பதாக அவை கூறியுள்ளன. சில காலத்திற்கு
LAOS
தற்போதைய கூட்டணி
அரசாங்கத்தில்கூட அங்கத்துவ அமைப்பாக இருந்தது. இதேபோன்ற வலதுசாரி
வார்த்தைப்பிரயோகங்களையும், சட்டவிரோத புலம் பெயர்ந்தவர்களை தாக்குதலையும்
PASOK, ND
இரண்டுமே பயன்படுத்துகின்றன. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம்
கோரும் கூடுதல் வெட்டுக்களை மிருகத்தனமாக அவை சுமத்தும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
இத்தகைய
சர்வாதிகார நடவடிக்கைகளை எதிர்க்கவும், தங்கள் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும்
கிரேக்கத் தொழிலாளர்கள்
“இடது”
எனப்படும் கட்சிகள், மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றை நிராகரிக்க
வேண்டும். அவர்களுக்கு கிரேக்கத்தில் ஆளும் உயரடுக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய
நிறுவனங்களை எதிர்த்து, ஐரோப்பாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஓர் ஐக்கிய
சோசலிச ஐரோப்பிய அரசுகள் என்னும் முன்னோக்கில் ஐக்கியப்படுத்தும் ஒரு புரட்சிகர,
சர்வதேசக் கட்சி தேவை. |