WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி நவ பாசிச வாக்குகளுக்கு விண்ணப்பம் செய்கிறார்
By Antoine Lerougetel
27 April 2012
use
this version to print | Send
feedback
பிரெஞ்சு
ஜனாதிபதித் தேர்தலில் ஞாயிறன்று நடந்த முதல் சுற்றில் சோசலிஸ்ட் கட்சியின்
பிரான்சுவா ஹாலண்டினால் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசி,
மூன்றாம் இடத்தைப்
பிடித்திருந்த நவ பாசிச வேட்பாளர் மரின் லு பென்னுக்கு வாக்களித்திருந்த
6.5 மில்லியன்
மக்களின் வாக்குகளைக் கவர பிரயத்தனம் செய்து வருகிறார்.
மே
6 அன்று
நடைபெறவிருக்கும் தேர்தலின் அடுத்த சுற்றில் வெற்றி பெற இந்த வாக்குகள் அவருக்கு
அவசியமாய் உள்ளது.
ஹாலண்ட்
56 சதவீத
வாக்குகளைப் பெற்று இலகுவாய் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள்
கணித்திருக்கின்றன.
இப்போதைய நிலவரப்படி
லு பென்னுக்கு வாக்களித்தவர்களில் சுமார்
60 சதவீதம் பேர்
தங்கள் வாக்குகளை சார்க்கோசிக்கு அளிப்பார்கள் என்றே கருத்துக்கணிப்புகள்
கூறுகின்றன,
ஆயினும்
சார்க்கோசிக்கு வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் அதில்
70 சதவீதம்
வாக்குகளாவது அவசியமாய் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
சார்க்கோசியின் தேர்தல் பிரச்சாரம் முழுமையிலுமே அவர் தனது அவப்பெயர் பெற்ற சிக்கன
நடவடிக்கை விடயங்களில் இருந்து கவனத்தைத் திருப்பவும்,
புலம் பெயர்ந்தவர்-
விரோத,
முஸ்லீம்-விரோத
மற்றும் சட்டம் ஒழுங்கு மனோநிலைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் லு பென்னது
வாக்காளர்களைக் கவர்வதற்கும் அவர் முனைந்து வந்திருக்கிறார்.
மரின் லு
பென்
“குடியரசுடன்
இணக்கமான வகையில் செயல்படத்தக்கவர்”
என்று சார்க்கோசி
செவ்வாயன்று கூறினார்.
இப்படி ஒன்றை அவர்
கூறவேயில்லை என்று மறுப்பதற்கு
UMP
நிர்வாகிகளான ஜோன்
பிரான்சுவா குப்பேயும் சேவியர் பேர்திராண்டும் ஆரம்பத்தில் முயற்சி செய்தனர்.
இத்தகையதொரு
கருத்து தீவிரமான அரசியல் அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
பிரெஞ்சு
முதலாளித்துவ ஆட்சியின் சட்ட அமைப்பு நவ பாசிசத்துடனும்,
யூதப் படுகொலை
என்பது வரலாற்றின் ஒரு
“புள்ளிவிவரம்”
மட்டுமே என்று
நிராகரித்த ஜோன்-மரி
லு பென்னை நெடுங்காலம் கட்சித் தலைவராகக் கொண்டிருந்த ஒரு கட்சி உறுப்பினருடனும்
இணங்கியதாக இருக்கிறது என்று பிரெஞ்சு அரசின் ஒரு தலைவர் உத்தியோகபூர்வமாய்
தெரிவித்திருக்கிறார்.
இது பிரான்சிலும்
மற்றும் ஐரோப்பாவெங்கிலும் முதலாளித்துவ ஆட்சியின் ஒரு ஆழமான நெருக்கடியைப்
பிரதிபலிக்கிறது.
Nouvel
Observateur
கருத்துக் கூறியது:
“அதுவரையில்,
வெகுஜன வலதின்
[ஆளும் மக்கள்
இயக்கத்திற்கான ஒன்றியத்தின்
(UMP)உள்ளிருக்கக்
கூடிய ஒரு அதி வலது குழுவாக்கம்]
பொறுப்புகளில்
உள்ளவர்கள் தவிர வலதின் பக்கத்தில் உள்ளவர்களாய்,
அவர்கள்
FN ஒரு
சட்டப்பூர்வமான கட்சி தானே என்று வலியுறுத்துகின்ற அளவுடன் தங்களை மட்டுப்படுத்திக்
கொண்டிருந்தனர்.
இங்கே சார்க்கோசி லு-பென்னிசக்
கட்சி ஒரு குடியரசுக் கட்சி,
அது குடியரசின்
விழுமியங்களைப் பாதுகாக்கும் என்று கூறுகிறார்.”
ஆளும்
UMP(மக்கள்
இயக்கத்திற்கான ஒன்றியம்)
க்குள்ளாக,
முன்னாள் ஜனாதிபதி
ஜாக் சிராக்குக்கு நெருக்கமான வட்டாரங்களில் ஒரு அமைதியின்மை இருக்கிறது.
கோலிச இயக்கம்
பாசிசத்துடன் அடையாளம் காணப்படக் கூடிய அச்சத்தை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
ஆயினும்
சார்க்கோசியின் அரசாங்கத்தில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சராய் இருந்த
சந்தால் ஜோவானோ,
அடுத்த ஜூன்
மாதத்தில் FNக்கும்
PSக்கும் இடையில்
போட்டி ஏற்படும் இடங்களில்,
தான்
PSக்கு வாக்களிக்க
இருப்பதாகத் தெரிவித்ததற்கு அதை பிரதமர் பிரான்சுவா ஃபிய்யோன் விமர்சனம் செய்தார்.
சார்க்கோசியின்
பிரச்சாரச் செய்தித் தொடர்பாளரான நத்தலி கோசியுஸ்கோ-மோரிசே
கூறுகையில் அவரும் ஜோவானோ போலவே
PSக்கு
வாக்களிப்பார் என்பதைத் தெரிவித்தார்.
சார்க்கோசி,
தனது பிரச்சாரம்
அதன் நவபாசிச விண்ணப்பத்தைப் பின் தொடர்வதற்கே நோக்கம் கொண்டுள்ளது என்பதைத்
தெளிவாக்கி இருக்கிறார்.
இஸ்லாமிய அச்சத்தை
வெளிப்படுத்தும் பர்தா தடைச் சட்டம் மற்றும் ரோமாக்கள் மற்றும் ஆவணங்களற்ற
புலம்பெயர்ந்தவர்களை பெருமளவில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள்
ஆகியவற்றின் வரிசையில் சார்க்கோசி,
பாரிஸ் பகுதியில்
கிடைக்கும் அநேக இறைச்சி ஹலால் செய்யப்பட்டது என்றும்,
அத்துடன்
700 மசூதிகள்
ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்திருப்பதாகவும் எல்லாம் போலியான கூற்றுகளைக்
கூறுவதைத் தொடங்கியிருக்கிறார்.
சட்டபூர்வமாய்
பிரான்சில் வந்து குடியேறுவோர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கவும் தேசிய எல்லைக்
கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் அவர் உறுதி பூண்டிருக்கிறார்.
எப்படியிருந்த போதிலும்,
லு பென்
“குடியரசுக்கு
இணக்கமானவர் அல்ல”
என்று
திட்டவட்டமாகத் தெரிவிப்பதன் மூலம் சார்க்கோசியை விமர்சனம் செய்ய முனைந்திருக்கும்
அர்னோ மொந்தபேர்க் போன்ற
PS தலைவர்களின்
கூற்றுகளும் முழுமையான இரட்டைவேடமே.
லு பென்னை
சார்க்கோசி பொது அரங்கில் அங்கீகரிப்பதென்பது சார்க்கோசி ஒரு வேட்பாளராக இருப்பதால்
மட்டுமல்லாமல் மாறாக ஐந்து வருடங்கள் பிரான்சில் அரசின் தலைவராக இருந்தவர் என்கிற
வகையிலும் அவரது கருத்துகளை பிரதிபலிக்கிறது.
லு பென்னை
அங்கீகரிப்பதற்கும் அவரது தேசிய முன்னணி
(FN)அரசியல்
ஸ்தாபகத்தின் ஒரு ஏற்றுக்கொள்ளப்படும் பகுதியாக ஆகின்ற ஒரு சூழலை உருவாக்குவதற்கும்
அவசியமாக்கி இருக்கிற தொடர்ச்சியான கொள்கைகளை அவர் அமல்படுத்தியிருக்கிறார்,
குறிப்பாக ஜனநாயக
உரிமைகள் மீதான தாக்குதல் தொடர்பான மற்றும் ஏகாதிபத்தியப் போர்கள் தொடர்பான
விடயங்களில்.
இந்த
பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு
PS இன் முழுமையான
ஆதரவு இருந்து வந்திருக்கிறது.
பர்தாவைத் தடை
செய்யும் சார்க்கோசியின் சட்டத்தையும்,
அதற்கு முன்னதாய்
பள்ளிகளில் இஸ்லாமிய முக்காடு அணிவதைத் தடை செய்வதையும்
PS முழுமையாக
ஆதரித்தது. PSம்
பிரெஞ்சு முதலாளி வர்க்கமும் பொதுவாக ஆப்கானிஸ்தான்,
லிபியா மற்றும்
இப்போது சிரியாவில் சார்க்கோசியின் நவ காலனித்துவப் போர்களை ஆதரித்து நிற்கின்றன;
இந்தப் போர்களுக்கான
வெகுஜன எதிர்ப்பினை இஸ்லாமிய அச்சத்தை ஊக்குவிப்பதன் மூலமாய் தடுப்பதற்கு அவை
முயலுகின்றன.
இந்த ஆதரவை
வழங்குவது PS
மட்டுமல்ல,
அதன்
துணைக்கோள்களாய் செயல்படும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி,
பிரெஞ்சுக்
கம்யூனிஸ்ட் கட்சி
(PCF) மற்றும் இடது
கட்சி ஆகியவையும் தான்.
இது
UMP அல்லது
PS வேட்பாளரின்
கொள்கைகளுக்கு அப்பால் பரந்த முக்கியத்துவம் கொண்டதாகும்.
உலக நிதி நெருக்கடி
தொடங்கி நான்கு வருடங்களுக்குப் பின்னர்,
பிரெஞ்சு
முதலாளித்துவம்,
1930களின்
- அந்த தசாப்தம்
1940-1944
ஆக்கிரமிப்பின் போது மார்ஷல் பிலிப் பெத்தானின் விஷ்ஷி அரசாங்கம் நாஜிக்களுடன்
ஒத்துழைப்பதில் முடிந்த ஒரு தசாப்தமாகும்
- பெருமந்த நிலை
காலத்திற்குப் பின்னர் அது கையிலெடுத்திருக்காத அரசியல் கருத்தாக்கங்களை மறுபடியும்
ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
(காணவும்:
விஷி காலத்திற்கு மீண்டும் திரும்பல்)
ஹாலண்ட்
பிரச்சாரம் நடக்கும் விதத்திலேயே இது நன்கு பிரதிபலிக்கிறது.
UMP மற்றும்
FN ஊக்குவிக்கின்ற
இனவாத மனோநிலைக்கு ஹாலண்ட்டும் இப்போது அடிபணிந்து,
பிரான்சில்
வசிக்கும் வெளிநாட்டினர் உள்ளூர் தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமையை இந்த
இலையுதிர் காலத்தில் சட்டமாக்க இருப்பதாக தான் அளித்த வாக்குறுதியில் வேகத்தைத்
தணித்துக் கொண்டிருக்கிறார்.
30
வருடங்களாய் PS
இன் தேர்தல்
வாக்குறுதியாய் இருந்தாலும்,
ஒவ்வொரு முறையும்
அதிகாரத்தில் இருக்கும்போது கண்டுகொள்ளப்படாமல் விடுகின்ற இந்த வாக்குறுதியான
பிரான்சில் வசிக்கும் அயல்நாட்டினருக்கு உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை
என்பது அநேக ஐரோப்பிய நாடுகளில் பொதுவாகக் காணக் கூடிய ஒன்று தான்.
2007 ஜனாதிபதித்
தேர்தலில் தோல்வியைச் சந்தித்த
PS வேட்பாளரான
Ségolène Royal
திங்களன்று
திட்டவட்டமாய்க் கூறினார்:
“அது எங்களது
முன்னுரிமை விஷயமாக ஒருபோதும் இருந்ததில்லை.”
அவர் மேலும்
கூறினார்: “சட்டவிரோதமாகக்
குடியேறுபவர்கள் குறித்துக் கவலை கொள்பவர்கள் எல்லோருமே இனவாதிகள் அல்ல.”
எப்போது
1983 இல் ஜனாதிபதி
பிரான்சுவா மித்திரோனின் கீழான
PS அரசாங்கம் சிக்கன
நடவடிக்கைகளை திணித்ததோ,
அப்போதிருந்தே
PS மற்றும் அதன்
கூட்டாளியான PCFக்கு
தொழிலாள வர்கக்த்தின் பாதுகாவலர்களாய் கூறிக் கொள்ளும் எந்த அருகதையும் இல்லாமல்
போய் விட்டது.
தொழிற்துறைத்
தொழிலாளர்களில்
30 சதவீதத்துக்கும்
அதிகமானோர் லு பென்னுக்காக வாக்களித்தனர் என்பதைக் கருத்துக் கணிப்புகள்
கண்டறிந்துள்ளன.
புதனன்று
பிரான்ஸ்
2 தொலைக்காட்சியில்
ஹாலண்ட் திட்டவட்டமாய் சொல்கிறார்:
“இடம் மாறுவது
குறுத்து யோசிக்கின்ற,
தங்களது கோபத்தை லு
பென்னுக்கு வாக்களிப்பதன் மூலம் வெளிப்படுத்துகின்ற தொழிலாளர்களின் குரல் எனக்குக்
கேட்கிறது.”
ஐரோப்பாவை மற்றும்
தொழிற்துறைக் கொள்கையை நோக்குநிலை மாற்றியமைக்க உழைப்பதன் மூலமாக அவர்களது தேவைகளை
நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாக ஹிர்சானில் அவர் தெரிவித்தார்.
“கோபக் குரல்களை
கேட்டேன்.
நம்பிக்கைச் செய்தியைக்
கொண்டு அதற்கு பதிலளித்திருக்கிறேன்.”
Neo
Sécurité
இல்
5,000 வேலைகள்
பறிபோக இருப்பதாக வெளியான செய்தியை ஒட்டி ஹாலண்ட் அளித்த வெற்று வாக்குறுதியில்,
தேர்தலுக்குப்
பின்னர் ஆட்குறைப்புத் திட்டங்கள் தொடர்கதையாக நிகழ்வதை தான் அனுமதிக்கப் போவதில்லை
என்று கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல்
பிரச்சார சமயத்தில் பெரிய ஆட்குறைப்பு செய்திகளை அறிவிக்க வேண்டாம் என்று
சார்க்கோசி தொழிற்சாலை நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாய் கூறப்படுகிறது,
அதனால் தேர்தல்
முடிந்ததும் அச்செய்திகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |