WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France’s New Anti-capitalist Party backs Socialist Party candidate in May 6
run-off
பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மே 6 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றுக்கு சோசலிஸ்ட் கட்சி
வேட்பாளரை ஆதரிக்கிறது
By Kumaran Ira
28 April 2012
Back to screen version
பிரெஞ்சு
ஜனாதிபதித் தேர்தலில் ஞாயிறன்று நடந்த முதல் சுற்றுக்குப் பின்னர் புதிய
முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி
(NPA) மே
6 அன்று
நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்கு நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசிக்கு எதிராக சிக்கன-நடவடிக்கை
ஆதரவு சோசலிஸ்ட் கட்சி
(PS) வேட்பாளர்
பிரான்சுவா ஹாலண்டை ஆதரித்து நிற்கிறது.
முதல்
சுற்றில்
1.2 சதவீத
வாக்குகளைப் பெற்ற
NPA இன் ஜனாதிபதி
வேட்பாளரான பிலிப் புட்டு இரண்டாம் சுற்றில் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைத்து
அறிவித்தார்: “மே
6 அன்று,
நிக்கோலோ சார்க்கோசி
இரண்டாம் முறையாக பதவிக்கு வருவதைத் தடுக்க விரும்புபவர்களுக்கு நாங்கள்
துணைநிற்போம்.
நாங்கள் தெளிவுபடச்
சொல்கிறோம்,
சார்க்கோசிக்கு
எதிராக வாக்களிப்பதன் மூலம் அவரையும் அவருடைய ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் நாம்
தூக்கியெறிய வேண்டும்.”
ஹாலண்டுக்கு
வாக்களிக்கச் சொல்வதை சார்க்கோசிக்கான எதிர்ப்பு என்பதைக் கொண்டு அலங்கரிக்க
NPA முயலுவது போலி
நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு அரசியல் நடவடிக்கை ஆகும்.
சமூக
வேலைத்திட்டங்களில் நூறு பில்லியன்கணக்கிலான யூரோக்களை வெட்டுவது,
நேட்டோவில்
பிரான்சின் பங்கேற்பைத் தொடர்வது,
அத்துடன் லிபியாவில்
சென்ற ஆண்டு நடந்த போர்கள் மற்றும் இப்போது சிரியாவில் என மத்தியகிழக்கிலான
பிரான்சின் போர் முயற்சிகளை தீவிரப்படுத்துவது இவை தான்
PS இன் அடிப்படையான
வேலைத்திட்டம் என்பது
NPAக்கு நன்கு
தெரியும்.
ஒரு பிற்போக்குத்தனமான
PS
அரசாங்கத்திற்காகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் நோக்குநிலையை
தடம்புரளச் செய்வதற்கு அது நோக்கம் கொண்டிருக்கிறது.
ஹாலண்டுக்கு
வாக்களிக்கச் சொன்னால்
”அவரது
கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதாய் அர்த்தமல்ல”
என்று புட்டு
கடுகடுப்புடன் கூறிக் கொண்டார்.
“தீவிர வலதுக்கு
எதிராக PS
அல்லது அதன் வேட்பாளரிடம்
எந்த பதிலும் கிடையாது.
ஐரோப்பிய ஒன்றியம்
மற்றும் ஐரோப்பாவின் சமூக ஜனநாயகக் கட்சியினரின் நோக்குநிலையின் பிரதான வரிசைகளில்
PS இன் திட்டம்
பொதிக்கப்பட்டிருக்கிறது.
அவர் ஏற்கனவே
’இடது சிக்கன
நடவடிக்கை’க்கான
கொள்கைகளை அறிவித்த வண்ணம் இருக்கிறார்.”
பின் ஏன்
தொழிலாளர்கள் தங்கள் வாக்குகளை ஹாலண்டுக்கு அளித்து அவரை ஆதரிக்க வேண்டும்?
என்கிற அடிப்படையான
கேள்வியை இது எழுப்புகிறது.
சார்க்கோசிக்கான ஒரு
அரசியல் மாற்றினை ஹாலண்ட் பிரதிநிதித்துவப்படுத்துவது போன்று
NPA மறைமுகமாய்
கூறுவதென்பது,
அவர்களது சொந்த
கருத்துகளே தெளிவாக்குவது போன்று,
ஒரு அரசியல் மோசடியே.
NPA
இன்
முதலாளித்துவ-எதிர்ப்பு
இடது (GA)
கன்னையும் கூட ஹாலண்டுக்கு
வாக்களிக்கவே அழைப்பு விடுகிறது,
அதையும் இன்னும்
வெளிப்படையாகச் செய்கிறது:
“நடப்பு ஜனாதிபதியை
அகற்றுவது தான் பிரதான பணி.
வலதை தோற்கடிப்பது
தான் அடிப்படையான முன்னுரிமை.
வலதினைத்
திட்டவட்டமாக அதிகாரத்தில் இருந்து துரத்துவதற்கு இரண்டாம் சுற்றில் ஹாலண்டுக்கு
வாக்களிக்கும்படி புதிய முதலாளித்துவ இடது எந்தத் தயக்கமும் இன்றி வாக்காளர்களைக்
கேட்டுக் கொள்கிறது.”
சென்ற
ஆண்டில்
NPA
இன் கோடைப் பள்ளிக்குப்
பின்னர் உருவானதான
GA, புட்டு
போட்டியிடுவதை எதிர்த்தது.
இடது கூட்டணியுடன்
(ஸ்ராலினிச
பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி
(PCF), இடது கட்சி
(PG), கிறிஸ்டியான்
பிக்கே தலைமையிலான
NPA இன் ஒரு கன்னை
ஆகியவை கொண்ட கூட்டணி)
கூட்டணிக்கு
முனைந்தது.
இடது முன்னணியின்
வேட்பாளரான ஜோன் லூக் மெலன்சோனை இது ஆதரித்தது.
முன்னாளில்
PS அரசாங்கத்தில்
அமைச்சராய் இருந்த இவர்
2008 இல் அதில்
இருந்து வெளியேறி
PG ஐ ஸ்தாபித்தவர்.
மார்ச்
18 அன்று
GA
இன் தேசியக் கூட்டத்தில்
ஒருமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அறிக்கை இடது முன்னணியுடனான கூட்டணியை
வழிமொழிந்தது.
அது அறிவித்தது:
“ஜோன் லூக்
மெலன்சோனின் பிரச்சாரம் ஒட்டுமொத்த தீவிர இடதுக்கும் பொதுவான அரசியல்
முன்மொழிவுகளின் ஒரு விரிவான தோற்றத்தை வெளிவரை செய்து காட்டுகிறது:
வேலைகளை
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு உள்நாட்டில் ஆட்குறைப்பு செய்யும்
நிறுவனங்களை நிதி மூலதனத்திற்கு வாயைக் கட்டும் நடவடிக்கைகளை எடுக்கக் கோருவது,
நெருக்கடிக்கான
விலையை பெருவாரியான மக்கள் செலுத்தும்படி செய்வதை மறுப்பது ஆகியவை.”
இடது
முன்னணிக்குப் பின்னால் அணிதிரண்ட
NPA
பெரும்பான்மையும்,
GAவும்
NPA இன்
2007 ஜனாதிபதித்
தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசால் கொடுக்கப்பட்ட
2 மில்லியன்
யூரோக்களை NPA
பெரும்பான்மைக்கும்,
GAவுக்கும்,
மற்றும்
பிக்கேவுக்கும் இடையில் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்பதில் மல்லுக்கட்டின.
ஆயினும்,
பணப் பிரச்சினையைத்
தவிர்த்து விட்டுப் பார்த்தால்,
இரண்டு
போக்குகளுக்கும் இடையிலான வித்தியாசமென்பது அரசியல் தந்திரோபாய விடயத்தில் மட்டும்
தான்.
இரண்டுமே இறுதியில்,
PS இன்
“இடது”
துணைக்கோள்களாகச்
செயல்பட்டு,
தொழிலாள வர்க்கத்தை
பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் இக்கட்சியுடன் கட்டிப் போடும் வேலையைச் செய்யவே
முனைகின்றன.
மெலன்சோனும்
தன் பங்கிற்கு ஹாலண்டை வழிமொழிந்திருக்கிறார்.
ஏனென்றால் ஹாலண்டின்
வலது சாரிக் கொள்கைகளுக்கு ஒரு
”இடது”
முகத்திரையை
வழங்குவதற்கு இடது முன்னணியின் ஆதரவு ஹாலண்டுக்கு அவசியமாயிருக்கிறது.
ஹாலண்டுக்கு ஆதரவாய்
பாரிஸில் மே 4
அன்று தேர்தல்
கூட்டம் நடத்துவதற்கு மெலன்சோன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
GA இன்னும்
மெலன்சோன் மீதான பிரமையை ஊக்குவித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அது எழுதுகிறது:
“இடதின் பக்கத்தில்
மெலன்சோன் பெற்றுள்ள வாக்குகள் சமீபத்தில் இடது முன்னணிக்கு ஊக்கமளித்திருக்கக்
கூடிய அரசியல்,
சமூக,
தொழிற்சங்க,
மற்றும் அரசு சாரா
அமைப்புகளது முன்முயற்சிகளுக்கு உறுதி சேர்த்திருக்கிறது.”
NPA
மற்றும் GA
இரண்டுமே நவ பாசிச தேசிய
முன்னணி (FN)
வேட்பாளர் மரின் லு
பென் 18
சதவீத வாக்குகளைப் பெற்று
மூன்றாம் இடத்தைப் பிடித்து விட்டதைக் கூறி
PS க்கு வாக்கு
சேகரிக்க முனைகின்றன.
சார்க்கோசி
“ஒரு முரட்டுத்தனமான
சட்டம் ஒழுங்கிற்காக வாதாடக் கூடியவர்,
இனவெறி கொண்டவர்,
வெளிநாட்டினர் மீது
குரோதம் பாவிப்பவர்,
சமூகத்திற்கு
விரோதமான தீவிர வலது மனிதர்.
FN வாக்குகளைப் பெற
விரும்பும் இந்த மனிதர் தான் மரின் லு பென்னின் வாக்குகளை ஊக்குவித்தவர்.”
என்று அவர் மீது
தாக்கின. “அதி
வலதின் வாக்குகள் மிகவும் அபாயகரமான நிலையை உஷார்படுத்துகின்றன.
ஆழமடையும் பொருளாதார
நெருக்கடியின் ஒரு நச்சுத்தனமான அரசியல் பிரதிபலிப்பு இதில் அடங்கியிருக்கிறது.”
FN
இடம்
இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க
PS ஐச்
சார்ந்திருப்பது என்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பிற்போக்குத்தனமான முட்டுச்
சந்தே ஆகும்.
உண்மையில்,
FN இன் எழுச்சி
என்பதே NPA
போன்ற குட்டி
முதலாளித்துவ ”இடது”கட்சிகளின்
துரோகத்தின் விளைபொருளே ஆகும்.
இவை தான் சமூக
வெட்டுகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்ததோடு சமீப
வருடங்களில் சார்க்கோசியால் ஊக்குவிக்கப்பட்ட ஜனநாயக-விரோத
நடவடிக்கைகளின் பின்னால் தங்களை நிறுத்திக் கொண்டன.
2002
ஜனாதிபதித் தேர்தலில்,
LCRம்
(NPAவின் முன்னோடி)
பிற குட்டி
முதலாளித்துவக் கட்சிகளும்
PS உடன் கைகோர்த்து
இறுதிச் சுற்றில்
FN தலைவர் ஜோன் மரி
லு பென்னுக்கு எதிராக அப்போது ஜனாதிபதியாக இருந்த வலது சாரி ஜாக் சிராக்குக்கு
வாக்களிக்க அழைப்பு விடுத்தன.
முதல் சுற்றில் லு
பென் PS
வேட்பாளரான லியோனல்
ஜோஸ்பனைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு வந்திருந்தார்.
அந்த
சமயத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விடுத்த ஒரு அழைப்பில்,
பிரெஞ்சு
முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக
அணிதிரட்டுவதற்கு தயாரிப்பு செய்யும் முகமாக தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்க
வேண்டும் என்று கூறியது.
ஆயினும்
LCR
இந்த அழைப்பைப்
புறக்கணித்து பிரெஞ்சு முதலாளித்துவக் குடியரசைப் பாதுகாப்பதற்கும் சிராக்குக்கு
வாக்களிப்பதற்கும் பிரச்சாரம் செய்தது.
அரசியல்
ஸ்தாபகமானது
2002
இல் தொழிற்சங்க
அதிகாரத்துவத்துடன் கூடிப் பேசி சமூக வெட்டுகளைத் திணித்த அதே சமயத்தில்,
அதுமுதலாக,
சிராக்கின் கீழ்
பள்ளிகளில் பர்தாவைத் தடை செய்தது,
பின் சார்க்கோசியின்
கீழ் பொது இடங்களில் பர்தா அணிவதைத் தடை செய்வது போன்ற ஜனநாயக விரோத
நடவடிக்கைகளையும்,
அத்துடன்
புலம்பெயர்ந்த மக்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களையும் கையிலெடுத்தது.
இவை அனைத்துமே
குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகளின் ஆதரவுடன்
தான் செய்யப்பட்டன.
சமூக வெட்டுகளுக்கான
தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டிலான
மழுங்கிப் போன ஆர்ப்பாட்டங்களுடன் கட்டிப் போட்ட அதே சமயத்தில்,
இவை வெளியுறவு
விடயத்தில் லிபியாவில் போன்ற பிரான்சின் ஏகாதிபத்தியப் போர்களை ஆதரித்தன.
பிரெஞ்சு
முதலாளித்துவத்தின் கொள்கைகளுக்கு இடதின் பக்கத்தில் இருந்து எழுகின்ற எந்த
திறம்பட்ட எதிர்ப்பையும் ஒடுக்குவதில் இவற்றின் பாத்திரம் தான்
FN மற்றும் அதன் அதி
வலது மேலாதிக்கம் எழுவதற்கான மேடையை அமைத்துத் தந்திருக்கிறது.
பிற்போக்குத்தனமான
புலம்பெயர்ந்தோர்-விரோத
மற்றும் முஸ்லீம் விரோத மனோநிலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டே அதே சமயத்தில்
நெருக்கும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பிரெஞ்சு இராணுவத் தலையீடுகளை
எதிர்ப்பதற்கும் அர்ப்பணித்துக் கொண்டதொரு கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்வதற்கு
இடதின் பக்கத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை
FN சுரண்டிக்
கொண்டிருக்கிறது.
GAவும்
NPAவும் ஹாலண்டை
ஆதரித்துக் கொண்டே அதே சமயத்தில் ஒரு நெருக்கடி-தடுப்பு
இடது தொகுப்பினைக் கட்டியெழுப்ப தாங்கள் விரும்புவதாக கடுகடுப்பான முகத்துடன்
இப்போது அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
வரவிருக்கும்
அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு இடது முன்னணி மற்றும் பல்வேறு
குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகளை
இத்தொகுப்பு கொண்டிருக்குமாம்.
“உலகின்
உழைப்பாளிகளுக்கு வேண்டிய ஒரு பதில் தாக்குதலை உடனடியாகத் தயாரிப்பு செய்வதற்கு”
இடது முன்னணி
மற்றும் தொழிற்சங்கங்களுடனான ஒரு கூட்டணிக்கு புட்டு அழைப்பு விடுத்துள்ளார்.
GA தன் பங்கிற்கு,
“எப்போதையும் விட
இப்போது தான் நெருக்கடி தடுப்பு தொகுப்பைக் கட்டியெழுப்புவது ரொம்பவும் அவசியமாய்
உள்ளது”
என்றும் அதற்கு தான்
“தயாராய்”
இருப்பதாகவும்
அறிவித்துள்ளது.
PS
மற்றும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்துடன் அரசியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டு,
தொழிலாளர்களின்
பரந்த எண்ணிக்கையிடம் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும்
இத்தகைய சக்திகளின் ஒரு கூட்டணி என்பது தொழிலாள வர்க்கத்துக்கு இன்னும் அதிகமான
தோல்விகளையும் FNக்கு
இன்னும் அதிகமான வெற்றிகளையுமே தயாரிப்பு செய்வதற்குத் திறம்படைத்ததாக இருக்கும்.
|