சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China and Russia hold joint naval exercises in North East Asia

சீனாவும் ரஷ்யாவும் வட கிழக்கு ஆசியாவில் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்துகின்றன

By John Chan
27 April 2012

use this version to print | Send feedback

ஏப்ரல் 22ல் இருந்து 27 வரை சீனாவும் ரஷ்யாவும் ஒரு பெரிய கூட்டுக் கடற்படைப் பயிற்சியை மஞ்சள் கடலில் மேற்கொள்கின்றன. ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான ஆசிய இயக்கமுனை குறித்த பெருகிய கவலைகளை ஒட்டி இரு நாடுகளும் இம்முறையில் அதை எதிர்கொள்கின்றன. ஒபாமா நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் இராணுவத்தை கட்டியெழுப்புவதும் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க உடன்படிக்கைகளை வலுப்படுத்துவதும் அடங்கியுள்ளன.

பசிபிக் கடற்படையின் முக்கிய போர்க்கப்பலான ஏவுகணைகளை வழிநடத்தும் Varyag தலைமையில் ஏழு ரஷ்ய போர்க் கப்பல்கள் ஷான்டோங் தீபகற்பத்தில் உள்ள சீன கடற்படைத் தளமான குயிங்டாவோவிற்கு வந்தன. இவற்றுடன் 16 சீனக் கப்பல்களும் இரு நீர்மூழ்கிக் கப்பல்களும் சேர்ந்து கொண்டன. கிட்டத்தட்ட 20 போர்விமானங்களும், சிறப்புப் படைப் பிரிவுகளும் உண்மையான சூட்டுப்பயிற்சிகளில் கலந்து கொள்கின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவும் சீனாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஷாங்காய் கூட்டுழைப்பு அமைப்பின்(SCO) கீழ், பயங்கரவாதத்தை எதிர்த்தல் என்ற பெயரில் நடத்தியுள்ளன.   ஆனால் சமீபத்திய போர் விளையாட்டுக்களின் முக்கிய நோக்கம், கடல்பாதைகளைக் கூட்டாகப் பாதுகாத்தல் ஆகும். இதில் கடற்படை வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்க்கும் தந்திரோபாயங்கள் மற்றும் மின்னியல் எதிர்நடவடிக்கைகள் ஆகியவை அடங்கியுள்ளன.

ரஷ்ய, சீன அதிகாரிகள் இப்பயிற்சி கடந்த ஆண்டே திட்டமிடப்பட்டது, எந்த மூன்றாம் சக்தியையும் இலக்கு கொள்ளவில்லை என்றாலும்கூட, கற்பனை விரோதிகள் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாகவும்தான் இருக்க முடியும். அமெரிக்க இராணுவக் கட்டமைப்பின் முக்கிய கவனம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து கப்பல் பாதைகளிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது ஆகும்.

கடற்படைப் பிரிவின் இடமும், நேரமும் மிக அதிக கூருணர்வு மிக்கவையாகும். ரஷ்ய போர்க்கப்பல்கள் கடந்த வார இறுதியில் ஜப்பானுக்கும் கொரியாவிற்கும் இடையே உள்ள துசிஷிமா ஜலசந்தியைக் கடந்தபோது, ஜப்பானியச் செய்தி ஊடகம் இது டோக்கியோவிற்கு ஒரு தகவல் என்ற ஊகத்தைக் கொடுத்தது. 1905ம் ஆண்டு ரஷ்யா -ஜப்பானியப் போரில் கொரியா, மஞ்சூரியா ஆகியவற்றின் மீதான ஆதிக்கத்திற்கு முக்கிய கடற்படைப் போர் நடந்த இடமாக இந்த ஜலசந்திகள் இருந்தன.

இந்த வாரப் பயிற்சிகள் 2010ல் வடகொரியா ஒரு தென்கொரியக் கப்பலை மூழ்கடித்தது எனக் கூறப்பட்டதை அடுத்து நிகழ்ந்த அமெரிக்க-தென்கொரிய கடற்படைப் பயிற்சிகள் நடந்த இடத்திற்கு அருகே நடைபெற்றன. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க-தென்கொரிய கடற்பயிற்சி ஷான்டோங் தீபகற்பத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில்தான் உள்ளது.

ரஷ்ய-சீனப் பயிற்சிகள் தென் சீனக் கடலுக்கு அருகே அமெரிக்க-பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் விளையாட்டுக்கள் நடைபெற்ற நேரத்திலேயே நடந்தன. அதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவும் ஈடுபட்டிருந்தன. சீனாவினதும் பிலிப்பைன்ஸினதும் கப்பல்களுக்கிடையிலான தொடர்ச்சியான மோதல்களுக்கு உட்பட்ட ஸ்கார்பரோ நீரடித்திடலுக்கு அருகே  இப்பயிற்சி நடைபெற்றது. பிலிப்பைன்ஸ் இன்னும் பிற நாடுகளை தென் சீனக் கடலின் மோதலுக்குரிய பகுதிகளில் இன்னும் ஆக்கிரோஷமாக நடந்து கொள்ளுமாறு அமெரிக்கா ஊக்கம் அளித்து வருகிறது.

சீன ஆட்சியில் கவலைகளை எழுப்பியுள்ளதுடன், அமெரிக்க இராணுவ நிலைப்பாடும் ஆசியாவில் அதன் பிணைப்புக்களும் மாஸ்கோவிலும் கவலையைத் தோற்றுவித்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் மொஸ்கோ அதன் இராணுவப் பயிற்சிகளை ரஷ்யாவின் தூர கிழக்குப் பிராந்தியங்களில் விரிவாக்கியுள்ளது.

இம்மாதம் தோல்வியில் முடிந்த வட கொரியாவின் ராக்கெட் அனுப்பும் முயற்சியை ஒபாமா நிர்வாகம் பயன்படுத்தி, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் கூட்டு ஏவுகணைக் பாதுகாப்புப் பயிற்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. இத்திட்டம் சீனாவின் அணுச்சக்தி ஏவுகணைக் கிடங்குகளுக்கு ஆபத்தைக் கொடுப்பது என்று மட்டும் இல்லாமல், ரஷ்யாவின் தூரக்கிழக்கில் உள்ள சாலை, இரயில்வழி ஏவுகணைகளுக்கு மட்டுமல்லாது அதன் பசிபிக்கை தளமாககொண்ட அணுச்சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் ஆபத்தானது ஆகும்.

தென் கொரியா மற்றும் ஜப்பானில் ராடர் மற்றும் தடுப்பு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதன் மூலம், சீனா அல்லது ரஷ்யா  ஏவுகணைகளை அனுப்புவதைக் அமெரிக்கா கண்டுபிடிக்கும் கால அவகாசத்தைக் குறைக்க முடியும் என்பதுடன், ஏவுகணைகளை வீழ்த்தும் தன் திறனையும் அதிகரித்துக் கொள்ள முடியும். ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், ஏவுகணைக் கேடயம் என்பது அமெரிக்கா சீனா அல்லது ரஷ்யா  மீது பேரழிவு தரும் முதல் தாக்குதலைத் தொடங்குவதற்கு வகை செய்யும். அதன் பின் தப்பி வரும் எந்த ஏவுகணைகளையும் செயலற்றுச் செய்துவிட முடியும்.

அமெரிக்க இராணுவவாதத்தின் அச்சுறுத்தல் குறித்த சீனா, ரஷ்யா ஆகியவை பகிர்ந்துகொள்ளும் கவலைகள் கடந்த தசாப்தத்தில் தங்கள் மூலோபாயப் பங்காளித்தனத்தை அவை வலுப்படுத்த வகை செய்துள்ளது. ஷாங்காய் கூட்டுழைப்பு அமைப்பு-SCO- என்பது 2001ல் காஜகஸ்தான், டாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானுடன் அமைக்கப்பட்டது. இது மத்திய ஆசியாவில், குறிப்பாக ஆப்கானிஸ்தானத்தின்மீது அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து பெருகும் அமெரிக்கச் செல்வாக்கை எதிர்த்து நிற்கும் செயல் ஆகும்.

2005ம் ஆண்டு ரஷ்யாவும் சீனாவும் அவற்றின் முதல் முக்கிய கூட்டு இராணுவப் பயிற்சியான 2005ம் ஆண்டு சமாதானப் பணிஎன்பதை நடத்தின. அதன்பின், பயங்கரவாதத்திற்கு எதிரான போர்என்ற போலிக்காரணத்தை ஒட்டி, ஷாங்காய் கூட்டுழைப்பு அமைப்பு நான்கு கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தியது. இப்பிராந்தியத்திலுள்ள பயங்கரவாதிகளை நசுக்கும் எழுச்சி எதிர்ப்புப் பயிற்சிகள் என்பதற்கு முற்றிலும் மாறாக, இப்பயிற்சிகள் பெரிய அளவிலான மத்திய ஆசியாவிலுள்ள எரிசக்தி செழிப்பு உடைய பகுதிகளில் வரும் மோதல்கள் குறித்த ஒத்திகையான வகையில்தான் இருந்தன.

சீன ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் சமீபத்திய ஆண்டுகளில் சீனா ரஷ்யாவுடன் ஒரு இராணுவக் கூட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளன. சமீபத்தில் தேசியப்பாதுகாப்புக் கொள்கைக் குழு அரங்கு ஒன்று கிழக்கில் அமெரிக்க இயக்கமுனையின் தாக்கம் என்பது குறித்து நடத்தப்பட்டது; இதில் பல மூத்த சீன பகுப்பாய்வாளர்கள் சீனாவின் மூலோபாயக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று வாதிட்டனர்.

Institute of World Issues ல் பணிபுரியும் Quian Wenrong அறிவித்தார்: உடன்பாடு கூடாது என்னும் கொள்கையை நாம் மாற்ற வேண்டும், இதை வெளிப்படையாக அறிவிக்கத் தேவையில்லை. கூட்டுச் சேரும் பிரச்சினையை நாம் பரிசீலிக்க வேண்டும். இல்லாவிடின், எதிர்காலப் போர்களில் அரசியல், மற்றும் இராணுவ மோதல்கள் வரும்போது, அமெரிக்கா கட்டமைத்துள்ள உலகளாவிய கூட்டு வலைப்பின்னலை மீறிக்கடப்பதில் சிறிதும் வாய்ப்பு இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.

அதே நேரத்தில், அரசாங்கம் நடத்தும் சீனச் செய்தி ஊடகம் பொதுவாக ரஷ்யாவுடன் முறையான உடன்பாடு பற்றிய திட்டத்தைப் பற்றி அதிகம் கூறுவதில்லை. இரு நாடுகளுமே அத்தகைய கூட்டு அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளை விரோதத்திற்கு உட்படுத்தும் என்று அஞ்சுகின்றன. இரண்டுமே பொருளாதார வகையில் அமெரிக்காவை நம்பியுள்ளன. ஐரோப்பாவிற்கு எரிசக்தியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா  உள்ளது; சீனாவோ முக்கிய உலகப் பெருநிறுவனங்களுக்குக் குறைவூதியத் தொழிலாளர் அரங்காக உள்ளது.

மேலும் சீனாவும் ரஷ்யாவும் ஒன்றையொன்று சந்தேகத்துடன்தான் பார்க்கின்றன. முன்னாள் சோவியத் மத்திய ஆசியப்பகுதியில் பெய்ஜிங்கின் பெருகிய நிலைப்பாடு குறித்து மாஸ்கோ கவலைப்படுகிறது; அப்பிராந்தியத்தின் பரந்த எரிசக்தி இருப்புக்களை சீனா கைப்பற்ற முயல்கிறது. ரஷ்ய தொழில்நுட்பத்தை உள்வாங்கிய முறையில், சீனா தன் இராணுவ வலிமையை உயர்த்தியுள்ளது; இது மாஸ்கோவை எரிசக்தி செழிப்பு உடைய, ஆனால் மக்கள்தொகை குறைவாக உடைய ரஷ்யாவின் தூரகிழக்கில் ஆதிக்கத்தை செலுத்தமுயலும் சனத்தொகைகூடிய சீனாவுடன் மோதும் சாத்தியத்தை ஏற்படுத்தும் என்ற கவலைகளைக் கொள்ள வைத்துள்ளது.

ரஷ்யா  அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், டாங்குகள், விமானத் தளமுடைய போர்க்கப்பல்கள் ஆகியவற்றை, அதன் பிராந்தியப் போட்டி நாடான இந்தியாவிற்கு நவீன இராணுவத் தளவாடங்கள் என்ற முறையில் வழங்குவது குறித்தும் சீன ஆட்சி கவலை கொண்டுள்ளது. இது சீனாவில் ஆசியச் செல்வாக்கிற்கு எதிர்கனம் கொடுக்கும் முயற்சி எனக் கருதப்படுகிறது. ரஷ்யா வியட்நாமிற்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் தாக்கும் விமானங்கள் ஆகியவற்றை விற்கிறது. இதனால் வியட்நாம் இந்தியாவையும் ரஷ்யாவையும் கூட்டாக தென் சீனக் கடலில் மோதலுக்கு உட்பட்ட பகுதிகளில் எரிசக்தி இருப்புக்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த முரண்பாடுகள் எல்லாவற்றையும் மீறி சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமான இராணுவ உறவுகளை கொள்வதற்கு பரிசீலிக்கின்றன என்பது ஒபாமா நிர்வாகத்தின் மோதல் தன்மை நிறைந்த ஆசியாவின் இயக்கமுனை என்னும் நிலைப்பாட்டால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆபத்தான அழுத்தங்களைத்தான் எடுத்துக்காட்டுகிறது.