WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
வாசிகள் பிரெஞ்சுத் தேர்தல் குறித்தும் சமூக நிலைமைகள் குறித்தும் பேசுகின்றனர்
By Alex Lantier in Paris
27 April 2012
use
this version to print | Send
feedback
பாரிஸின் வடகிழக்கு புறநகர்ப் பகுதியில் இருக்கும்
Clichy-sous-Bois
க்கு பயணம் செய்த
WSWS
செய்தியாளர்கள் அங்கு வசிக்கும் மக்களிடம் பிரெஞ்சுத் தேர்தல்
குறித்தும் பாரிஸ் பகுதியில் நிலவும் சமூக நிலைமைகள் குறித்தும் நேர்காணல் செய்தனர்.
Clichy-sous-Bois
பகுதி,
2005
ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர்
மாதங்களில்,
அங்கிருந்த ஒரு மின் ஆலையில் போலிசுக்குத் தப்பி ஓட முயன்ற இரண்டு
இளைஞர்கள் மின்சாரம் தாக்கி இறந்ததை அடுத்து,
போலிசுக்கு எதிரான கலகக் காட்சிகளின் பகுதியாய் அப்போது இருந்தது.
அதன்பின் ஜனாதிபதி ஜாக் சிராக் மூன்று மாத கால அவசரநிலையைப்
பிரகடனப்படுத்தி அதற்கு பதிலிறுப்பு செய்தார்.
அருகிலிருக்கும் புறநகர்ப் பகுதி ஒன்றில் வசிக்கும் டனே
என்றழைக்கப்படும் ஒரு உயர் நிலைப் பள்ளி மாணவியிடம்
WSWS
பேசியது.
அப்பெண் விளக்கினார்:
“இங்கே
வாழ்வதே கஷ்டமான விடயம்.
கட்டிடங்கள் படுமோசமாய் கட்டப்பட்டுள்ளன,
வீட்டுவசதி விடயங்கள் மொத்தமாய் மோசம்.
வீட்டுவசதிப் பிரச்சினை,
வேலை கிடைப்பது,
பின் மாதக் கடைசி வரை அவ்வருமானத்தை வைத்து சமாளிப்பது ஆகியவை தான்
பிரதானப் பிரச்சினைகளாய் இருக்கின்றன.
மின்சாரக் கட்டணமும் தண்ணீர்க் கட்டணமும் செலுத்தி விட்டுப்
பார்த்தால்,
கையில் எந்தப் பணமும் மிச்சமில்லாத நிலையை நாங்கள் காண்கிறோம்.”
டனே இன் தந்தை இறந்து விட்டார்,
தாய் உதவிச் செயலராய் ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறார்.
டனே கூறினார்:
“நானும்
என் தாயும் ஒரு வீட்டில் வசிக்கிறோம்.
400
யூரோ வாடகை,
மொத்தமாய் வீட்டில் ஆறு பேர் இருக்கிறோம்.”
இதற்கு முன் நிலைமை இன்னும் மோசமாய் இருந்தது,
அப்போது எட்டு பேர் வசித்தோம் என்றார் அவர்.
படித்து முடித்து விட்டு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார் என்று
அவரிடம் கேட்டபோது அவர் கூறினார்:
“ஒரு
புகைப்படக்காரராய் ஆக வேண்டும்.
வேலைசெய்தால் தான் என் தாய்க்கு நான் உதவி செய்ய முடியும்.”
அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்:
“ஒவ்வொருவருக்கு
இடையிலும் ஏராளமாய் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
மின்சாரம் தாக்கி இறந்த அந்த இரண்டு இளைஞர்களைக் குறித்து நேற்று
நான் என் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அந்த அளவுக்கு விடயங்கள் போவதென்பது கொஞ்சம் சிக்கலான அம்சம் தான்.”
சோசலிஸ்ட் கட்சி
(PS)
வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்டுக்கும் நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசிக்கும் இடையில் நடக்கவிருக்கும் தேர்தல் பற்றிக் கேட்டபோது அவர் கூறினார்:
“எல்லாப்
பேரும் ஒரே வகை தான்.
செய்வதாகச் சொல்லும் அநேக விடயங்களைச் செய்ய மாட்டார்கள்.
அவர்கள் சொல்லும் எதுவாயிருந்தாலும் இந்நிலை தான்.”
இடது முன்னணியின் வேட்பாளரான ஜோன்-லூக்
மெலன்சோன் குறித்து கருத்துக் கூறிய அவர் கூறினார்:
“என்
குடும்பத்தில் யாரோ கூட அவருக்காக வாக்களித்தார்கள்,
ஆனால் நான் அதைக் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் நான் சார்க்கோசிக்கோ அல்லது ஹாலண்டுக்கோ வாக்களிக்கப்
போவதில்லை.
அது முட்டாள்தனம்.”
மரவேலைகள் மற்றும் பூட்டு வேலைகள் செய்து வருகின்ற அண்டோனியோவிடம்
WSWS
செய்தியாளர்கள் பேசினர்.
இவர்
29
வருடங்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து சமீபத்தில் தனது வேலையை
இழந்திருக்கிறார்.
பள்ளியில் படிக்கும்போதான ஒரு தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலமாய்
தனது
13
வது வயதில் அந்நிறுவனத்தில் இவர் தனது வேலையைத் தொடக்கியிருந்தார்.
இவர் ஜனாதிபதித் தேர்தலையே ஒட்டுமொத்தமாய் நிராகரித்தார்:
“சார்க்கோசியோ
ஹாலண்டோ,
எதையும் மாற்றி விடப் போவதில்லை.
இன்னும் சொன்னால் ஜோன் லூக் மெலன்சோனும் தான்.
அவர் வெறுமனே பேசுகிறார்,
அவ்வளவே.”
”மொரோக்கோவிலான
அதிவேக இரயில் திட்டத்தை”க்
குறிப்பிட்ட அண்டோனியோ பிரெஞ்சு அரசியல் மிகவும் ஊழலடைந்து விட்டதாகக் கூறினார்.
“1
பில்லியன் யூரோ
[1.32
பில்லியன் அமெரிக்க டாலர்]
திட்டத்தில்,
500
மில்லியன் யூரோக்களை விளையாடி விட்டார்கள்.”
1981
இல் ஜனாதிபதித் தேர்தல் களத்தில்
PS
இன் பிரான்சுவோ மித்திரோனுக்கு எதிராக கொஞ்சக் காலம் இருந்த
நகைச்சுவை நடிகரான கொலூஷ்
(Coluche)1986
இல் மரணமடைந்ததை அவர் குறிப்பிட்டார்.
“அவர்
வாயை மூடச் செய்வதற்கு ஆளையே இல்லாமல் பண்ணி விட்டார்கள்.”
போர்ச்சுகலுக்கு தான் இடம்பெயரக் கூடும் என்பதை அவர் தெரிவித்தார்.
அங்கே அவருக்குக் குடும்பம் இருக்கிறது.
போர்ச்சுகலில் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும் கூட பிரான்சில்
இருப்பதை விட அங்கு நல்ல வேலையும் நல்ல நிலைமைகளும் கிடைக்கும் என்று தான்
நம்புவதாய் அவர் குறிப்பிட்டார்.
அருகிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களைக் கையைக்
காட்டி அவர் கூறினார்:
“ஒரு
தீப்பெட்டியில் வாழ்வது போலத் தான் இருக்கிறது.”
அண்டோனியோ மேலும் கூறினார்:
“அமெரிக்காவோ,
பிரான்சோ,
விடயம் ஒன்று தான்.
விடயங்களை எப்படி மாற்றுவதென்பது மக்களுக்குத் தெரியாது;
இன்னொரு ஜனாதிபதி வருவார்,
ஆனால் அந்த வழியில் ஒருவர் எதையும் மாற்றி விடுவதில்லை.”
உலகம்
“முதலாளித்துவத்தில்
இருந்தும் சந்தைகளில் இருந்தும் வெளியில் வர வேண்டும்”
என்று அவர் கருதினார்.
2005
இல் போலிசுடனான முதல் மோதல்கள் நடைபெற்ற வளாகத்துக்குச் சொந்தமான
Chêne Pointu
குழுமம் நடத்துகிற இன்னொரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு
வளாகத்தில் இருந்த இளைஞர் கூட்டம் ஒன்றிடமும்
WSWS
பேசியது.
படிப்புகளை முடித்து விட்ட அந்த இளைஞர்கள் கட்டுமான வேலைகள் அல்லது
பிற உதிரி வேலைகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த இளைஞர்கள் போலிசார் குறித்துக் கடுமையான விமர்சனத்தை வைத்தனர்:
“சில
நாட்களுக்கு முன் போலிசார் வந்து எங்களைத் தேடிச் சென்றனர்.
Clichy-sous-Boisக்கு
அவர்கள் மோசமான போலிசாரையே அனுப்புகின்றனர்.
வெளியிலிருந்து இங்கு வருவது போலிசார் மட்டும் தான்.”
ஒரு இளைஞர் சேர்த்துக் கொண்டார்:
“மனிதர்களின்
அந்தரங்க பாகங்களைத் தொடுவதற்கான அவசியம் அவர்களுக்கு இல்லையே.”
தேர்தல் வேட்பாளர்கள் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும்
இருக்கவில்லை.
ஒரு இளைஞர் சொன்னார்:
“தேர்தல்
முடிவு எப்படியிருந்தாலும் எங்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.”
’இந்த
வளாகத்தில் ஒரு இரண்டு படுக்கையறை குடியிருப்பு வீட்டிற்கான வாடகை
700
யூரோக்கள்;
தண்ணீர் கட்டணம்,
மின்சாரக் கட்டணம் மற்ற செலவுகளை எல்லாம் சேர்த்தால் குறைந்தபட்சம்
900
யூரோவைத் தொடும்’
என்று அவர்கள் கூறினர்.
வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாயும் அவர்கள்
புகார் கூறினர்.
அதிகமான செலவில் பழுதுபார்ப்புகளுக்கு அல்லது வேலை செய்யாத
உபகரணங்களுக்கு என அடிக்கடி வசூல் செய்து விடுகின்றனர் என்றனர்.
ஒரு இளைஞர் விளக்கினார்:
“அவர்கள்
எப்போதும் செலவுகளை அதிகப்படுத்திக் காட்டுகிறார்கள் அதனால் தான் இங்கு கலகங்கள்
வெடிக்கின்றன.
அதுவும் போலிசாரும் இல்லையென்றால் கலகங்களே இருக்காது.
இந்த மேலதிக கட்டணங்களை இனியும் எங்களால் செலுத்த முடியாது.”
இன்னொருவர் சேர்த்துக் கொண்டார்:
“எங்களுக்குத்
தேவை ரொட்டியே தவிர,
வன்முறை அல்ல.
ஆனால் நடந்து கொண்டிருப்பவை சாதாரண விஷயங்கள் அல்ல.
வீடில்லாத மக்கள் ஏன் இருக்கிறார்கள்?
நான் ஒரு பயங்கரவாதியோ சட்டவிரோதியோ கிடையாது,
என் மேல் போலிஸ் வழக்கு கிடையாது.
தேர்தலில் நான் வாக்களித்திருக்கிறேன்.
ஆனாலும் நான் வாக்களித்தாலும் இல்லையென்றாலும்,
அதனால் எந்த வித்தியாசமும் விழையப் போவதில்லை.”
அதில் ஒரு இளைஞர்
WSWS
செய்தியாளர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அவருடைய அப்பா கூறினார்:
“எல்லாம்
திருட்டுப் பயல்கள்.
வேலை செய்யும் எங்களுக்கு ஒன்றும் கிடையாது.
பொதுப் போக்குவரத்து அட்டைக்கு
38
யூரோ போய் விடுகிறது,
வாடகையும் கொடுத்தான பின் கையில்
400
யூரோ கூட மிஞ்சாது.”
அடுக்கடுக்கான ரசீதுகளை அவர்
WSWS
செய்தியாளர்களிடம் காட்டினார்.
”நீங்கள்
செலுத்துவீர்கள்,
அதைப் பணமாக்கிக் கொள்ளும் அவர்கள் மேலும் இரசீதுகளைக் கொண்டு வந்து
அடுக்குவார்கள்.
இந்த இரசீதுகள் எல்லாமே அபத்தமானவை.
அதற்கு நாம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
சுத்த அபத்தம்.”
அவரது குடியிருப்புக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த ஒரு லைட்
பல்பிற்கு
7
யூரோ கட்டணம் செலுத்தக் கூறியிருந்த இரசீதை
WSWS
செய்தியாளர்களிடம் அவர் காட்டினார்.
தான் வெளியே போய் ஒரு கடையில் வாங்கி வந்திருந்தால் அந்த பல்பு
பாதிக்கும் குறைவான விலையே ஆகியிருக்கும் என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
இன்னும் திறக்கப்படாத ஒரு கராஜுக்கு ஒரு பெரும் மாதாந்திரத் தொகை
ரசீதாக வந்திருந்தது,
இன்னொரு ரசீது எலிவேட்டர் பழுதுகளுக்குக் கட்டணத்தைக் கோரியது.
அவரது பையன்
WSWS
செய்தியாளர்களிடம் அங்குள்ள லிப்டை காட்டினார்.
வேலை செய்யாமல் இருந்த அந்த லிப்டின் கதவு மூடி வெல்டு
செய்யப்பட்டிருந்தது.
மங்கலான வெளிச்சத்தில் இருக்கும் இந்த பத்து மாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டுகள் வயதான குடியிருப்புவாசிகளுக்கும் விருந்தினர்களுக்கும் பெரும்
சிரமங்களைக் கொடுக்கின்றன.
|