சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

US makes a pact with its Afghan puppet

அமெரிக்கா அதன் ஆப்கான் கைப்பாவை அரசாங்கத்துடன் ஓர் உடன்பாடு செய்துள்ளது

By Patrick Martin
24 April 2012

use this version to print | Send feedback

ஞாயிறன்று அமெரிக்க, ஆப்கானிய அதிகாரிகள், 2014 முடிவில் அமெரிக்க தரைத் துருப்புக்களில் பெரும்பாலானவை திட்டமிட்டபடி திரும்பிச் சென்ற பின்னரும், காபூலில் உள்ள கைப்பாவை அரசாங்கத்திற்கு தொடர்ந்து இராணுவ, நிதி ஆதரவைக் கொடுப்பதை உறுதி செய்யும் வரைவிற்கான உடன்பாட்டை அடைந்துவிட்டதாக அறிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் நீண்டகால தலையீட்டிற்கு உறுதிமொழி என்பது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான மக்களுடைய உணர்விற்கு எதிரானது. இவற்றில் பதினொரு ஆண்டுகளாக நீடிக்கும் போருக்கும், ஆப்கானிய ஆக்கிரமிப்பிற்கும் எதிரான மிகப் பெரும் எதிர்ப்பு தொடர்கிறது.

உடன்பாட்டிற்குப் பேச்சுக்கள் நடத்திய தூதர்களில் எவரும், அமெரிக்கத் தூதர் ரையன் சி. கிரோக்கரோ, ஆப்கானியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரன்ஜின் ஸ்பான்டாவோ அதன் உள்ளடக்கத்தை வெளியிடாததுடன் அதன் முக்கிய கூறுபாடுகளையும் கோடிட்டுக் காட்டவில்லை. இது அவர்களுடைய அரசாங்கங்களுக்கு உடன்பாட்டைப் பரிசீலித்து அதற்கு ஒப்புதல் கொடுக்கும் வரை நேரத்தை பெற்றுக்கொள்வதற்குத்தான் என எடுத்துக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாய் இருவரும் கையெழுத்திட்டப்பின் இந்த உடன்பாடு உறுதியாகும். இது செனட்டின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட மாட்டாது. இதனால் உடன்பாட்டின் நீண்டகால விளைவு என்பது நவம்பர் மாதம் ஒபாமா மறு தேர்தலில் வெற்றி பெறுவதைப் பொறுத்து இருக்கும். இதன் விளைவு ஒபாமாவிடம் இருந்து கர்சாய்க்கு ஒரு கடன் பத்திரம் அளிப்பது போல் ஆகும். அதன்படி காபுல் ஆட்சிக்கு நிதி அளிக்கப்படும் வெள்ளை மாளிகையில் ஒபாமா தொடர்வார், பெரும்பாலான அமெரிக்க, நேட்டோத் துருப்புக்கள் திரும்பிய பின்னரும் கர்சாய் பதவியில் தப்பித்து நீடிப்பார் என்பதைப் பொறுத்து இருக்கும்.

பெயரிடப்படாத காபூலில் உள்ள மேற்கத்தையநாட்டு தூதர்களை மேற்கோளிட்டு நியூ யோர்க் டைம்ஸ் இந்த உடன்பாடு மிகவும் முக்கியம், ஏனெனில் இது மேலை நாடுகள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவைக் கொடுக்க வலியுறுத்துவதற்கு உதவும் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது. இப்பேச்சுக்கள் மே 20-21ல் சிக்காகோவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்கீழ் நடத்தப்பட்டன. மத்திய ஆசிய நாட்டில் அவர்களுடைய இராணுவ சக்திகள் குறைவதை ஈடுகட்டும் வகையில் ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கான அழுத்தங்களை ஒபாமா கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

2014ல் இருந்து உயரடுக்கு சிறப்புப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கான உறுதிகளுக்கும் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது. இது ஆப்கானிஸ்தானில் நேட்டோ அல்லாத மிகப் பெரிய நட்பு நாடான ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட், அத்தகைய பணிக்கு ஆஸ்திரேலிய சிறப்புத் துருப்புக்களைக் கொடுக்க முன்வந்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ளது. மற்ற நேட்டோ நாடுகளிடம் இருந்தும் சிறப்புச் செயற்பாட்டுத் துருப்புக்களை நிலைப்பாடு செய்து கொள்வதற்கு, மற்றும் ஆப்கானிய துருப்புக்களின் அளவைக் குறைத்து அதையொட்டி பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளுக்காக நிதியை அளிப்பதற்காக அமெரிக்கா விவாதங்களை மேற்கொண்டுள்ளது என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18 பிரஸ்ஸல்ஸில் நேட்டோ  வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் கூட்டம் ஒன்றிற்குப் பின் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா ஆஸ்திரேலிய பாதுகாப்பு மந்திரி ஸ்டீபன் ஸ்மித்தைச் சந்தித்தார்.

ஆஸ்திரேலியா அதன் தரைப்படைகளில் பெரும்பாலனவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும். ஆனால் 2014க்குப் பின்னரும் குறைந்தளவிலான சிறப்புப்படைகளை வழங்குதலை பற்றிப் பரிசீலிக்கும் என்ற கில்லார்டின் அறிக்கையையும் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது. செய்தித்தாளின் கூற்றுப்படி, இந்த அறிக்கை அமெரிக்க அதிகாரிகளால் உளமார வரவேற்கப்பட்டது; ஒரு மூத்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரி, இது திரும்பப் பெறுதல் என்று இல்லை என்பது மட்டுமின்றி, கடமைப்பாட்டின் அடையாளம் ஆகும் என்று அறிவித்த தாகவும் ஜேர்னல் மேற்கோளிட்டுள்ளது. 

வரைவு உடன்பாட்டின்படி உள்ள விதிகள் பற்றி வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் இந்த உடன்பாடு இரு திறத்தாருக்கும் இடையே உள்ள சக்தியின் உறவுகளை பற்றித் துல்லியமாக ஒத்து இருக்கின்றன: 2014க்குப் பின்னர் நிதியுதவி அல்லது மனிதச்சக்தி பற்றி அமெரிக்கா எந்த உறுதியான கருத்தையும் கூறவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் அமெரிக்கா ஈடுபடுத்தும் படைகளைக் கவனித்துப் பாதுகாக்கும் பொறுப்பை ஆப்கானிஸ்தான் ஏற்றுக் கொள்கிறது. 2014க்குப் பின்னர் குறைந்தப்பட்சம் ஒரு தசாப்தத்திற்கேனும் அமெரிக்க முழு செயற்பாட்டுச் சுதந்திரத்தையும் பெற்றிருக்கும். அதே நேரத்தில் ஆப்கானிய ஆட்சி அதன் ஆணைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்.

அமெரிக்கப் பாதுகாப்பு பிரிவுடைய ஈடுபாட்டின் தன்மை, செயற்பாடு, அளவு ஆகியவை இன்னமும் இறுதியாக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட்டிடம்  கூறினார்.

ஒரு அமெரிக்கத் தளத்தில் குர்ரான் பிரதிகள் எரிக்கப்பட்டது, அமெரிக்கப் படை சார்ஜென்ட் ஒருவர் காந்தஹாரில் 9 குழந்தைகள் உட்பட 17 பேரைப் படுகொலை செய்தது மற்றும் போரில் மாண்டு போன எதிர்ப்போராளிகளின் சடலங்களை அமெரிக்க படையினர் இழிவுபடுத்திய புகைப்படங்கள், ஒளிப்பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டது ஆகியவை அடங்கிய  ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்கள் இழைந்த தொடர்ச்சியான கொடூரங்கள், குற்றங்கள் நடந்ததைத் தொடர்ந்து பேச்சுக்கள் பல மாதமாக தாமதத்திற்கு உட்பட்டிருந்தன.

பேச்சுக்களில் தொடர்ந்து கர்சாய் கடினப் போக்கைக் கொண்டிருந்தார், அமெரிக்க சிறப்புப் படைகள் இரவுத் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனக் கோரியது, போரின்போது ஆப்கானிய குடிமக்களைக் கைது செய்து வைத்திருந்த அனைத்து அமெரிக்கா நடத்தும் சிறைகளும் ஆப்கானியரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பவற்றை அவர் முன்வைத்திருந்தார். ஆனால் நடைமுறையில், கர்சாய்      ஆப்கானிய கட்டுப்பாடு, இறைமை என்னும் போலிமறைப்பை ஏற்றார். அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து அவர்கள் விரும்புவதைச் செய்வர்.

உடன்பாட்டுப் பொருளுரையில் குறிப்பிடப்படாத தனிப்பட்ட உத்தரவாதங்கள் குறித்துச் சில செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அமெரிக்கா கர்சாய் அரசாங்கத்திற்கு அளிக்கும் நிதியுதவி குறைந்தப்பட்சம் ஆண்டு ஒன்றிற்கு 2பில்லியன் டாலர்களாகவாவது இருக்கும். இது நாட்டில் இருந்து வெளியேறும் முதலீட்டைச் சமன் செய்யப் போதுமானதாக இருக்கும். ஆப்கானிஸ்தானில் ஆண்டு வருமானத்தில் கிட்டத்தட்ட பாதி ரொக்கமாக ஏற்றுமதியாகிறதுஇது அரசாங்க அதிகாரிகள் மற்றும் போரினால் இலாபம் அடைவோரால் நடத்தப்படுகிறது. இப்பணம் பாதுகாப்பான முறைகளில் அதாவது வங்கிகளில் சேமித்தல், பாரசீக வளைகுடா ஷேக் அரசுகளில் நிலச் சொத்துக்களை வாங்குதல் என்ற முறையில் முதலீடாகும்.

அசோசியேட்டட் பிரஸ் கடந்த வாரம் காபூலில் ஓர் உரையில் அவர், அவர்கள் நமக்கு நிதியளிக்கிறார்கள், அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எவ்வளவு என்பது பற்றி உடன்பாட்டில் குறிப்பிடவில்லை. நாம் சொல்லுகிறோம்எங்களுக்குக் குறைவாகக் கொடுங்கள், ஆனால் அதை உடன்பாட்டில் குறிப்பிடுங்கள். குறைவாகக் கொடுத்தாலும் அது பற்றி எழுத்து மூலமாகத் தெரிவியுங்கள் என்று புகார் கூறியதை வைத்து கர்சாயின் மனதில் அதிக இடம் பெற்றது எது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒருவேளை மிக முக்கிய பிரச்சினைகள் பிந்தைய விவாதத்திற்கு ஒத்திப் போடப்பட்டிருக்கலாம். அமெரிக்கக் கோரிக்கையான நீண்டகால இராணுவத் தளங்களை நீண்டகால வாடகைக்கு விடுவது, அதனூடாக அமெரிக்க வான் மற்றும் சிறப்புச் செயற்பாடுகளுக்கு கிட்டத்தட்ட நிரந்தரமான நிலைப்பாட்டை மத்திய ஆசியப் பிராந்தியத்தில் முன்வைத்தல், சுற்றிவளைக்கப்பட்டுள்ள ஈரானின் அனைத்துப் புறங்களிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளை கிழக்கே ஆப்கானிஸ்தானில், வடக்கே பல முன்னாள் சோவியத் குடியரசுகளில், மேற்கே துருக்கி, ஈராக், குவைத் இன்னும் பாரசீக வளைகுடா ஷேக் அரசுகளில், தெற்கே அரபுக் கடலில் நிலைநிறுத்தி வைத்தல் என்பதுமாகும்.

இந்த வரைவு உடன்பாடு தலிபான் மற்றும் பிற ஆக்கிரமிப்பை எதிர்க்கும் கெரில்லாப் படைகளுக்கு எச்சரிக்கை கொடுப்பது என்பதையும் நோக்கம் கொண்டுள்ளது. அதாவது, 2014ல் திடீரென அமெரிக்க, நேட்டோப் படைகள் திரும்பிச் சென்றுவிடாது, ஆனால் கர்சாய் ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்துவதைத் தொடர்ந்து செய்யும்என்பது பற்றி.

தலிபான் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று உடன்பாட்டின் முதல்தர இலக்கு மத்திய ஆசிய, காஸ்பிய எண்ணெய் வயல்களுக்கான பாதைகளைப் பாதுகாப்பாகக் கொள்ளுதல், மற்றும் இஸ்லாமிற்கு விரோதமாக, மேற்கின் நலன்களைக் பாதுகாக்கும் இராணுவத்தை நிறுவுதல் என்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளது.