WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
வலதுசாரி
சியோனிச ஆத்திரமூட்டலாளர்களும் மாணவர்கள் குழுப் பிரதிநிதியும், குந்தர் கிராஸை
பாதுகாக்கும் லைப்சிக் கூட்டத்தை நடக்கவிடாமல் செய்கின்றனர்
By our
correspondents
26 April 2012
use
this version to print | Send
feedback
சர்வதேச
சோசலிச சமத்துவத்திற்கான மாணவர் அமைப்பு
(ISSE)
என்னும் ஜேர்மனிய சோசலிச
சமத்துவக் கட்சியின்
(PSG)
மாணவர் பிரிவும்
“குந்தர்
கிராஸைப் பாதுகாக்கவும்”
என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை மூன்றாவது கூட்டத்தை நடாத்தினர்.
பிராங்பேர்ட் மற்றும் பேர்லினில் முந்தைய கூட்டங்களில் நடைபெற்றதைப் போலவே,
லைப்சிக்கில் செவ்வாயன்று நடைபெற்ற கூட்டமும் மிகப்பெரியளவில், ஒருங்கிணைந்த
ஆத்திரமூட்டலுக்குட்பட்டது. வலதுசாரி சியோனிச ஆத்திரமூட்டலாளர்களுடன் கூட்டுச்
சேர்ந்து லைப்சிக் பல்கலைக் கழக மாணவர் குழுவின் பிரதிநிதி ஒருவரும் கூட்டத்தை
முன்கூட்டியே முடித்துவிட்டார்.
கூட்டத்தின்
ஆரம்பத்திலேயே,
கிராஸிற்கு எதிரான வலதுசாரி எதிர்ப்பாளர்கள் குழு ஒன்று உள்ளே நுழைய முயற்சித்தது.
The Tin Drum
என்ற புத்தகத்தை
எழுதியவரும் நோபல் பரிசைப் பெற்றவருமான குந்தர் கிராஸை அவர்கள் யூத
எதிர்ப்பாளர் என்று கண்டித்து கூட்டத்தை விளம்பரப்படுத்திய துண்டுப்பிரசுரங்களையும்
கிழித்தெறிந்தனர். நிகழ்ச்சியை தடுப்பதில் தீவிரமாக அவர்கள் இருந்தனர் என்பதில்
சந்தேகம் இல்லை; கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர்களைப் பங்கு கொள்ள
அனுமதிக்கவில்லை.
சற்று
நேரத்தில் மற்றொரு ஆக்கிரோஷ சியோனிசக் குழு இஸ்ரேலியக் கொடிகளையும்,
“முல்லா
ஆட்சியை நிறுத்துக”
என்ற எழுதியிருந்த
பதாகையையும், ஒரு ஒலிபெருக்கியையும் கொண்டு வந்தனர். வெளியில் இருந்து உரக்கக்
“இஸ்ரேல்
நீடுழி வாழ்க”,
“முல்லாக்கள்
வீழ்க”
என்ற
கோஷங்களை முழங்கியபடி கூட்டத்தைத் தடைக்கு உட்படுத்த முயன்றனர். இதில் அவர்கள்
தோல்வி அடைந்தவுடன், கிட்டத்தட்ட 60 ஆத்திரமூட்டலாளர்கள் கூட்ட அரங்கு வாயிலுக்கு
முன்னே கூடி கதவுகள், சுவர்கள், வாயில்களை தட்டி ஆரவாரம் செய்தனர்.
பல முறை
அவர்கள் கூட்டத்தின் பாதுகாவலர்களை உடல்ரீதியாகத் தாக்கி, கூட்டத்தில்
வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டனர். குண்டர்களில் ஒருவர்,
“எவரிடமேனும்
இங்கு பனிக்கோடாரி உள்ளதா?”
என்று உரக்கக் கூவினார். இது 1940ம் ஆண்டில் ஸ்ராலினிச கையாள்
ஒருவன் பனிக்கோடாரியை பயன்படுத்தி ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்தது பற்றிய குறிப்பு
என்பது வெளிப்படை.
இத்தாக்குதல்களையும் மீறி கூட்டம் தொடர்ந்தபோது, வலதுசாரித் ஆத்திரமூட்டலாளர்களின்
தலைவன் ஒலிபெருக்கியல் கூட்டத்திற்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில் இருந்து ஓர்
அறிக்கையைப் படித்தார்.
“எங்கள்
நோக்கம் இந்த அறிக்கையை
ISSE
கூட்டத்தில் படிக்க
வேண்டும் என்பதாகும்: ஆனால் நாங்கள் உள்ளே நுழையமுடியவில்லை; எனவே இதை வெளியில்
இருந்து படிக்கிறேன்.”
என்றார்.
கிராஸ் ஓர்
“இழிந்த
யூத எதிர்ப்பாளர்”,
இரண்டாம் உலகப் போர் இறுதியில் 17 வயதிலேயே
SS
இல் குறுகிய காலம்
பணிபுரிந்த வகையில் தான் எந்த நிலைப்பாடு கொண்டுள்ளேன் என்பதைத் தெளிவாக்கியவர்
என்றார் அவர்.. இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஒரு முதல் இராணுவத் தாக்குதலுக்குத்
தயாரிப்புக்களைக் கொண்டிருக்கிறது என்னும் கிராஸின் கருத்து,
“இஸ்ரேலிய
ஆட்சி பற்றிய ஈரானிய முல்லாக்களின் யூத எதிர்ப்புக்களை”
மீண்டும் கூறுதல் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார் அவர்.
இஸ்ரேல்,
“யூதர்களின்
பாதுகாப்பான உறைவிடம்”
என்று விவரித்த
அவர், “உலகளாவிய
யூத எதிர்ப்பு கிறுக்குத்தனத்திற்கு”
எதிராக அனைத்துவகை
இராணுவ வழிவகையாலும் அதனை காப்பாற்றப்பட வேண்டும் என்றார். இவருடைய வாதம்,
வரலாற்றைக் கொடூரமாக
சிதைத்ததை அடிப்படையாகக் கொண்டிருந்தது; நாஜிக்களுடைய குற்றங்கள் மற்றும் படுகொலை
முகாம்களை
–Holocaust-
குறிப்பிட்டு அமெரிக்க, இஸ்ரேலிய அரசாங்கங்களின் ஆக்கிரோஷமான போர்க் கொள்கைகளை
நியாயப்படுத்தி, ஆதரிக்க முற்படுகிறது.
அந்தக்
கட்டத்தில் மாணவர் குழுவின் இரு பிரதிநிதிகளான மார்செல் வோட்நியோக் மற்றும் ஜாகொப்
ஹுய்சிமிட் இருவரும் வந்தனர்.
ISSE
பாதுகாவலர்களை கதவில் இருந்து நகரவேண்டும், ஆத்தரமூட்டுபவர்கள் கூட்டத்திற்குச்
செல்வதை தடுக்கக்கூடாது என அவர்கள் கூறினர். ஒரு அபத்தமானவாதத்தில் அவர்கள்
ஜனநாயகக் கொள்கைகள், மாற்றுக்கருத்துக்களைப் பொறுத்துக் கொள்ளுதல் மற்றும் பொது
நிகழ்வுகளில் அனைவரும் பங்கு பெறும் உரிமை ஆகியவற்றைக் கூறி, கூட்டத்தை தடைசெய்தல்
மற்றும் அதில் பங்குபெற்றோரை தாக்குதல் இவற்றை நியாயப்படுத்த முயன்றனர்.
மார்செல்
வோட்நியோக் சட்டம் படித்தவர். பொது நிகழ்வுகளில் பங்கு பெற அனுமதி என்பதற்கு
வன்முறையில் கூட்டத்தைத் தடுக்கும் நோக்கம் கொண்டு பதாகைகள், ஒலிபெருக்கிக்
கருவிகள் இவற்றுடன் வந்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அனுமதிக்கப்படமுடியாது
என்பதை நன்கு அறிவார். மாறாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்பவருக்கு நிகழ்வை ஒழுங்காக
நடத்த வேண்டும் என்னும் கடமையும், ஆத்திரமூட்டும் நோக்கத்தில் வருபவருக்கு உள்ள
இடம் மறுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.
வலதுசாரி
ஆத்திரமூட்டலாளர்களுடன் வோட்நியோக் கூட்டுச் சேர்ந்துகொண்டு கூட்டத்தில் அவர்கள்
அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
ISSE
பாதுகாவலர்கள் கூடும் உரிமை என்பது அடிப்படை ஜனநாயக, அரசியலமைப்பு உரிமை என்று
வாதிட்டனர். எனவே மாணவர் குழு பல்கலைக் கழகம் ஒப்புதல் கொடுத்துள்ள கூட்டத்திற்குத்
ஆத்திரமூட்டலாளர்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ளது என்றும்
கூறினர்.
வோட்நியோக்
இதைக் கோபத்துடன் எதிர்கொண்டார். கூட்டம் நடக்குமா, நடக்காதா என்பது பற்றித் தான்
முடிவெடுப்பதாகவும்
ISSE
அல்ல என்றும் கூறினார்.
ஆத்திரமூட்டலாளர்களின் ஆரவாரத்திற்கு நடுவே வோட்நியோக்
ISSE
நிகழ்வு
முடிந்துவிட்டது என்று அறிவித்தார். சில இஸ்ரேலியக் குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு,
அவர் பாதுகாவலர்களை ஒருபுறம் ஒதுக்கித் தள்ளவிட்டு, பார்வையாளர்கள் அறையில் இருந்து
உடனே வெளியேற வேணடும் என்று கோரினார்.
கூட்டத்தில்
கலந்து கொண்டவர்கள் பலர் இழிவுணர்வுடன் இதை முகங்கொடுத்தனர். சில வாரங்களுக்கு
முன்பு லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் வரலாற்று உண்மையைக் காத்தல் பற்றிய டேவிட்
நோர்த்தின் உரையைக் கேட்க வந்திருந்த மத்தியாஸ், பெரும் சீற்றம் அடைந்தார்.
“பல்கலைக்கழகத்தின்
இந்த வளாகத்தில்”
ஜனநாயக உரிமைகள் மீதான இத்தகைய தாக்குதல் நடக்கும் என தான்
நினைத்தும் பார்க்கவில்லை என்றார். 300 பேருக்கும் மேலான பார்வையாளர்களைக்
கொண்டிருந்து நோர்த் உரையாற்றிய விரிவுரை அரங்கு லைப்சிக் பல்கலைக்கழகத்தின் இதே
கட்டிடத்தில்தான் உள்ளது.
நிகழ்விற்குப் பின்னரும்கூட, கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் துன்புறுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டதுடன் வலதுசாரி ஆத்திரமூட்டலாளர்களால் தாக்கப்பட்டனர்.
ISSE
தன் கூட்டங்களை வன்முறையில் தடுப்பிற்கு உட்படுத்தப்படுவதை
எதிர்க்கப்போவதாக அறிவித்து, வந்திருந்தவர்கள் அனைவரும் குந்தர் கிராஸிற்குப்
பாதுகாப்பு, சுதந்திர பேச்சுரிமை ஆகியவற்றை பாதுகாத்தலை தீவிரமாக்குமாறு அழைப்பு
விடுத்தது. |