World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Netherlands government falls over austerity budget

சிக்கன நடவடிக்கை வரவு-செலவுத் திட்டம் பற்றிய சிக்கலால் நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்கிறது

By Chris Marsden 
24 April 2012
Back to screen version

டச்சுப் பிரதம மந்திரி மார்க் ருட்ட ராஜிநாமா செய்த நிலையில், அரசாங்கக் கடன் நெருக்கடியின் விளைவு, சர்வதேச நாணய நிதியம் (IMF), ஐரோப்பிய ஒன்றியம் (EU)  ஆகியவற்றின் கூடுதலான மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளுக்கான கோரிக்கைளின் விளைவாக அதிகாரத்தில் இருந்து விழுந்துவிட்ட நாடுகளின் பெரிதாகிவரும் பட்டியலில் நெதர்லாந்தும் சேருகிறது.

போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினில், சமூக ஜனநாயகக் கட்சிகள் பல பில்லியன் யூரோக்கள் செலவுகளைக் குறைத்ததால் ஏற்பட்ட அரசியல் சிக்கல்களால் வலதுசாரிக் கட்சிகள் ஆதாயமுற்றன. முன்பு ஆளும் கட்சியான சமூக ஜனநாயக PASOK இல் இருந்தவர்கள், பழமைவாத புதிய ஜனநாயகக் கட்சியினர், புதிய பாசிச கட்சியான LAOS ஐச் சேர்ந்தவர்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத கூட்டணி அரசாங்கத்துடன் பதவிக்கு வந்ததை கிரேக்கம் கண்ணுற்றது. இத்தாலியில் தொழில்நுட்பவாதிகளின் அரசாங்கம் சுமத்தப்பட்டது; இதுவும் கிரேக்கத்தைப் போலவே, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகியவற்றின் கோரிக்கைகளை ஒட்டி நடந்தது ஆகும்.

ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியாவிலும் அரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்தன. இப்பட்டியலில் அயர்லாந்தும் சேர்க்கப்படலாம். அங்கு பியன்னா பெயலுடன் (Fianna Fail) ஏற்பட்ட அதிருப்தி Fine Gael-Labour கட்சி கூட்டணி அரசாங்கம் அமைத்தல் என்னும் விளைவைக் கொடுத்தது.

சுதந்திரம், ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சி (VVD) கொண்டுள்ள தடையற்ற சந்தை அரசாங்கத்திற்கு ருட்ட தலைமை தாங்குகிறார்: அவர் வழிநடத்தும் சிறுபான்மை அரசாங்கத்தில் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் (CDA) உள்ளனர். அது தீவிர வலதுசாரி Freedom Party of Geert Wilders  உடைய ஆதரவுடன்தான் ஆட்சி செய்ய முடிந்தது.

VVD, CDA 2010ல் அதிகாரத்திற்கு வந்தன. இதற்குக் காரணம் ஆப்கானிஸ்தானில் டச்சு இராணுவம் பங்கு பெறுவது விரிவாக்கப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து தொழிற் கட்சி (PVDA) பிரிந்தவுடன், சிதைந்துபோன CDA தலைமையிலான கூட்டணி பற்றி ஏற்பட்ட அதிருப்திதான்.

VVD தலைமையிலான அரசாங்கம், ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 16 பில்லியன் யூரோக் குறைப்புக்களை கொள்வதற்கான பேச்சுக்களில் இருந்து வில்டர்ஸ் விலகிக் கொண்டவுடன், 558 நாட்களுக்குள் கவிழ்ந்தது. தன்னுடைய கட்சி சிக்கன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டதினால் ஆதரவாளர் தளத்தில் சரிவு ஏற்பட்டுவிடும் என்று வில்டர்ஸ் அஞ்சினார்.

16 மில்லியன் மக்கள் கிட்டத்தட்ட இருக்கும் நாட்டில், 6 பில்லியன் யூரோக்கள் ஏற்கனவே செலவுகளில் குறைக்கப்பட இருப்பது என்பது ஜேர்மனியில் 100 பில்லியன் யூரோக்கள், அமெரிக்காவில் 570 பில்லியன் டாலர்களை செலவுகளைக் குறைப்பதற்கு ஒப்பாகும். மேலதிகவெட்டுக்கள் என்று இப்பொழுது குறைக்க முற்படுவது அவற்றின் சமூக தாக்கங்களில் பெரும் அதிர்வைக் கொடுப்பதாகும்.

நெதர்லாந்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பல முக்கிய பிரிவுகளைக் கொண்டது ஆகும். அதன் பொருளாதாரம் ஐரோப்பாவில் வலுவான ஒன்று எனக் கருதப்படுகிறது. டச்சு அரசாங்கக் கடனுக்கு AAA தரம் கொடுக்கப்பட்டுள்ளது. யூரோப் பகுதி முக்கிய அங்கத்துவநாடு ஒன்றின் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்துள்ளமை, தனிநாணயம் தப்பிப் பிழைப்பதை பிரச்சனைக்குள்ளாக்குகிறது.

நெதர்லாந்தின் நீடித்த மற்றும் ஆழ்ந்த அரசியல் உறுதியற்ற தன்மை நிதியச் சந்தைகள் மற்றும் முக்கூட்டு எனப்படும் சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றின் இடைவிடா கோரிக்கைகளை தோற்றுவித்துள்ள வெடிப்புத்தன்மை நிறைந்த சமூக அழுத்தங்களின் வெளிப்பாடு ஆகும்.

ஏப்ரல் 30ம் திகதிக்குள் ஐரோப்பிய ஆணையத்திடம் அதன் வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு நெதர்லாந்திற்குக் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி அதன் 2013 வரவு-செலவுத்திட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7% பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்கான 3% உடன் ஒப்பிடத்தக்கது. ஆனால் வில்டர்ஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் எமில் றோமர் இருவரும் VVD  முன்வைத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்க மறுத்துவிட்டனர்.

எதிர்க்கட்சிகள் எப்படித் தம்மைக் காட்டிக் கொண்டாலும், ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கு சிக்கனத்திற்கான அதன் கோரிக்கைகளை முடுக்கிவிடத்தான் செய்யும். ஏற்கனவே நெதர்லாந்து இதற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதற்கு பாரிய அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. டச்சு நெருக்கடி மற்றும் நிக்கோலோ சார்க்கோசியின் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் மோசமான நிலைப்பாடு, பரிதாபத்திற்குரிய பொருளாதாரத் தரவுகள் இவற்றை ஒட்டி பங்குச் சந்தைகள் மற்றும் யூரோவும் சரிவைக் காண்கின்றன.

ஜேர்மனியில் உற்பத்தி அளவும் மூன்று ஆண்டுகள் இல்லாத குறைவை அடைந்துள்ளது. பிரான்ஸ் மற்றும் பரந்த யூரோப்பகுதி சுருக்கத்தைக் காட்டும் நிலையில், ஐரோப்பா ஏற்கனவே ஓர் இரட்டை இலக்க மந்த நிலையில் உள்ளது.

திங்களன்று ஜேர்மனியப் பங்குகள் 3.4% சரிவுற்றன; பிரெஞ்சுப் பங்குகள் 2.8% சரிந்தன; பிரித்தானியப் பங்குகுள் 1.9% சரிந்தன. வோல் ஸ்ட்ரீட்டிலும் அதிக அளவில் பங்குவிலைகள் குறைந்தன.

நெருக்கடி இப்பொழுது நெதர்லாந்துடன் நின்றுவிடவில்லை. ஐரோப்பா முழுவதும் மொத்தப் பற்றாக்குளைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. சிக்கன நடவடிக்களை சுமத்தியும் இந்நிலை தொடர்கிறது. ஸ்பெயின், இத்தாலி இரண்டும் ஐரோப்பிய உறுதிப்பாட்டு நிதியை வற்றச்செய்துவிடும் அளவிற்கு பிணையெடுப்பை நாட கட்டாயப்படுத்தப்படும் என்று பரந்த ஊகங்கள் உள்ளன. இதையொட்டி கண்டம் முழுவதுமே முன்னொருபோதுமில்லாத ஆழம், நீடித்தகாலம் ஆகியவற்றைக் கொண்ட மந்த நிலையில் தள்ளப்படும்.

நெதர்லாந்தின் அரசியல் நடைமுறை தன் சக்திக்கு எட்டும் வரை, உலக நிதிய உயரடுக்கின் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படும். CDA கட்சியைச் சேர்ந்த நிதி மந்திரி ஜான் கீஸ் ட ஜாகெர் வாஷிங்டனில் பேச்சுக்களுக்குப் பின் திரும்பினார். தன்னுடைய அரசாங்கம் அதிகாரத்தில் ஐந்து மாத காலம் இருக்கும் என்றும், சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்துவதற்கு மற்ற கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படுவது சாத்தியம் என்றும் கூறினார்.

என்னைப் பொறுத்தவரை, நிதியச் சந்தைகளுக்குத் ஒரு தகவல் கொடுப்பது என்பது முக்கியமாகும். எச்சூழ்நிலையிலும், நெதர்லாந்து வரவு-செலவுத்திட்ட கட்டுப்பாட்டினை பின்பற்ற தொடர்ச்சியாக முயலும். என்றார் அவர்.

இன்று ஒரு பாராளுமன்ற விவாதம் திட்டமிட்டபடியிலான கோடை விடுமுறைக்கு முன்பா அல்லது பின்னரா தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி நடக்க உள்ளது. காலதாமதம் ஆனால் நல்லதுதான் என்று ஐரோப்பிய ஆளும் வட்டங்களுக்குள் கருத்து உள்ளது; உறுதியற்ற தன்மை இருந்தாலும், இதன் உட்குறிப்பு ஒரே தேர்தல் என்பது மற்றொரு உறுதியற்ற ஆட்சியைத்தான் தோற்றுவிக்கும் என்பதாகும்.

ஒரு பொதுத்தேர்தலில் 11 கட்சிகள் பிரதிநிதித்துவம் பெறும் என்று கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி எந்தக் கட்சிக்கும் மொத்தப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பெருகும் உணர்வைக் காட்டும் வகையில், யூரோ பற்றி நம்பிக்கையற்ற ஒரு மாவோயிச வடிவமைபாகத் தொடங்கிய சோசலிஸ்ட் கட்சி அதன் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை 15ல்இருந்து 30% என இருமடங்காக ஆக்கிக்கொள்ளும் என்று கணிப்புக்கள் கூறுகின்றன. இது பல தீவிர வலதுசாரிக் கட்சிகள், CDA, குறைந்தப்பட்சம் இப்பொழுதேனும் வில்டஸின் Freedom Party இவற்றுடைய இழப்புக்களுடன் ஒப்பிடக்கூடியதுதான்.

நேற்று பாராளுமன்றத் தலைவர்களுடைய கூட்டம் ஒன்று ஜூன் 27 தேர்தல்கள் நடத்த மிகச் சிறிய பெரும்பான்மை ஆதரவளிக்கும் எனக் காட்டுகிறது. முன்கூட்டிய தேர்தல்களுக்கு வில்டர்ஸ், தொழிற்கட்சித் தலைவர் டீடரிக் சாம்சொம், சோசலிஸ்ட் கட்சித் தலைவர் எமில் றோமர் ஆகியோர் ஆதரவு உள்ளது.

இதற்கிடையில், வெட்டுக்களை இயற்றுவதற்குப் போதுமான பாராளுமன்ற வாக்குகளைப் பெறக்கூடிய இடைக்கால அரசாங்கத்தை இணைப்பதற்கான பெரும் முயற்சிகள் நடைபெறும். இதற்கு ருட்ட உடைய தாராளவாதிகள், கிறிஸ்துவ ஜனநாயவாதிகள் மற்றவர்களுடைய ஆதரவு தேவைப்படும். இத்துடன் தொழிற்கட்சி, கிறிஸ்துவ ஒன்றியம் D66 கட்சி ஆகியவையும் கவரப்பட வேண்டும். கடைசி மூன்று கட்சிகளும் வெட்டுக்களை ஆதரிக்கின்றன, ஆனால் அவை படிப்படியாக நீண்ட கால அளவில் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோருகின்றன.

தொழிற்கட்சி லிபரல்களுடன் சேர்ந்து இயங்கும் என்று சாம்சொம் கூறியுள்ளார். ஆனால் அதற்குச் சில சிறு சமரசம் தேவை எனவிரும்புகிறார். அது பொதுத் தேர்தலில் அவருடைய கட்சியின் நிலைப்பாட்டை மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்புகிறார். வரவுசெலவுத்திட்ட வெட்டுக்களுக்கு உடந்தை எனக் காணப்பட்டால், தேர்தல்களில் பெரும் தண்டனையைப் பெற நேரிடும் என்று ஒவ்வொரு கட்சியும் அஞ்சுகின்றன.