WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
Assange lawyer delayed while flying to Australia
ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில்
முன் அசாஞ் இன் வக்கீல்
தாமதப்படுத்தப்பட்டார்
By Mike Head
20 April 2012
முன்பு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் இன் சார்பில் வாதாடிய
ஆஸ்திரேலிய வக்கீல் ஒருவர், இலண்டனில் விமானத்தில் ஏறமுன் தாமதப்படுத்தப்பட்டபின்,
இன்று காலை சிட்னியை வந்து அடைந்தார்.
“ஒரு
தடைசெய்யப்பட்ட”
பயணிகள் பட்டியலில் அவருடைய பெயர் இருந்ததால் இத்தாமதம் ஏற்பட்டது. அசாஞ் ஐ
சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று ஒபாமா நிர்வாகம் செயல்படுத்தும் உலகளாவிய
நடைமுறையில்,
கில்லார்ட் உடைய தொழிற்கட்சி அரசாங்கம் நெருக்கமான தொடர்புகளைக்
கொண்டுள்ளது பற்றி இந்நிகழ்வு பல புதிய வினாக்களை எழுப்புகிறது.
போலியாகத் தயாரிக்கப்பட்ட பாலியல் தாக்கல் குற்றச்சாட்டுகளுக்காக
ஸ்வீடனுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதை எதிர்த்த அசாஞ் இன் பிரித்தானிய
சட்டப்பூர்வச் சவாலில் உதவிய வக்கீல் ஜெனிபர் ரொபின்சன், வியாழன் அன்று ஹித்ரோ
விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டார். அவர் பயணிக்க இருந்து விமானத்தின் நிறுவனமான
வர்ஜின் அவரிடம் லண்டனில் இருக்கும் ஆஸ்திரேலியத் தூதரகம் ஒப்புதல் கொடுக்கும் வரை
அவர் ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் ஏறமுடியாது என்று கூறிவிட்டது.
சிட்னி விமான நிலையத்திற்கு வந்தபின்
Australian Broadcasting Corporation
ஆல்
பேட்டி காணப்பட்ட ரொபின்சன் விமான நிறுவனத்தின் ஊழியர்கள்
அவருடைய கடவுச்சிட்டை எடுத்து வைத்துக் கொண்டு அவர் பயணிக்க இயலாது எனத்
தெரிவித்ததாக குறிப்பிட்டார். ஒரு குடியேறுபவர் பாதுகாப்பு அதிகாரி அவரிடம்,
“நீங்கள்
ஏதோ பிரச்சனைக்குரியதை செய்துள்ளீர்கள். ஏனெனில் நாங்கள் தூதரகத்துடன்
தொலைபேசித்தொடர்பு கொள்ள வேண்டும்”
என்றார். வர்ஜின் நிறுவன ஊழியர்கள் இதேபோல் முன்பு ஒரு அமெரிக்க
செய்தியாளருடன் பிரச்சினை இருந்தது என்றனர்.
ஆஸ்திரேலிய பிரஜையான ரொபின்சன் தன்னுடைய நிலைமையை ட்விட்டர் மூலம்
விரைவாக வெளியிடும் வகையில் எழுதினார்:
“LHR (லண்டன்
ஹித்ரோ விமான நிலையத்தில்) விமானத்தில் ஏறுவதற்குமுன் தாமதிக்கப்பட்டுவிட்டேன்;
ஏனெனில் ஆஸ்திரேலிய தூதரகத்தின் ஒப்புதல் தேவை என்னும் முறையில்
“தடைசெய்யப்பட்டு
விட்டேன்.”
ஒரு
“குறிப்பிட்ட
அரசாங்க அமைப்பின்”
பட்டியலில் தன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ரொபின்சனுடைய தகவல்
கூறியது.
ஆஸ்திரேலிய வெளியுறவு, வணிகத் துறைக்கு
(DFAT)
வக்கீல் ட்வீட் அனுப்பிக் கேட்டார்:
“தயவு
செய்து விளக்கவும்:
“தடைசெய்யப்பட்ட”
பயணிகளின் பட்டியல் என்பது என்ன? என்னை ஏன் அதில் சேர்த்துள்ளீர்கள்?”
சற்று தாமதத்திற்குப்பின் வர்ஜின் ஊழியர்கள் அவருக்கு அனுமதி
கொடுக்கும் சீட்டு அச்சடிக்கப்பட்டுவிட்டதால், அவர் இப்பொழுது பயணிக்கலாம் என்று
கூறினர்.
ABC
யிடம் ரொபின்சன் இதில் பல வினாக்கள் எழுந்துள்ளன,
“எச்சூழ்நிலையில்
ஆஸ்திரேலிய குடிமகன் தாய்நாட்டிற்குத் திரும்பவதற்கு [அரசாங்கத்தின்] ஒப்புதலைப்
பெற வேண்டும்? என்பதும் இதில் அடங்கியுள்ளது.”
என்றார்.
ASIO
எனப்படும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு உளவுத்துறை என்னைப்போன்ற
வக்கீல்கள் மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கண்காணிப்புக்களைக்
கொண்டிருக்கக் கூடும் என்ற கவலையையும் மேலும் தெரிவித்தார்.
இத்தகைய இரகசிய பயணத்தடை இருந்தால், அது அடிப்படைச் சட்ட,
குடியுரிமைகளை மீறுவது ஆகும். முறையான ஆஸ்திரேலியக் கடவுச் சீட்டையை கொண்டுள்ள
ரொபின்சன் குற்றம் எதையும் செய்துள்ளதாகத் தகவல் ஏதும் இல்லை. தாயகத்திற்குத்
திரும்புவதற்கு அரசியல் அல்லது பிற காரணங்கள் இல்லாமல் ஒருதலைப்பட்சமாக
ஆஸ்திரேலியக் குடிமகன் ஒருவர் தடுக்கப்பட்டதாக இதற்கு முன்னோடியான செயலெதுவும்
இல்லை.
ஆஸ்திரேலிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளோ விடைகளைவிட
வினாக்களைத்தான் அதிகம் எழுப்பியுள்ளன. ட்விட்டர் மூலம்
DFAT
ரொபின்சன் மீது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தடைகள் குறித்து அதற்கு
“ஏதும்
தெரியாது”
என்று விடையிறுத்துள்ளது. குடிவரவுத்துறை வலியுறுத்திக் கூறுவதாவது:
“எந்த
ஆஸ்திரேலிய நிறுவனமும் ஜெனிபர் ரொபின்சனை லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் இன்று
முன்னதாக பயணிக்கத் தடை செய்யவில்லை. மேலும், எந்த ஆஸ்திரேலிய நிறுவனமும்
“தடைசெய்யப்பட்டவர்கள்”
பட்டியல் என்று எதையும் கொண்டிருக்கவில்லை.”
இதேபோல் கான்பெர்ராவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அமெரிக்கப்
பயணப்பட்டியல்
“தடைசெய்யப்பட்டவர்கள்”
அல்லது அதேபோன்ற பட்டியல் எதையும் கொண்டிருக்கவில்லை என்று
கூறியுள்ளது.
உண்மையில்
“தடைசெய்யப்பட்டது”
என்பது அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சொற்றொடர் ஆகும்.
Crikey
வலைத் தளச் செய்தியாளர் பெர்னார்ட் கையின் அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புப்
பிரிவின் அக்டோபர் 28, 2008 ஆவணம் ஒன்று,
“தடைசெய்யப்பட்டுள்ளதற்கு
தகுதி.... என்றால் ஒரு பயணி அல்லது பயணிக்காத நபர்
TSA
யினால் [போக்குவரத்துப் பிரிவுப் பாதுகாப்பு நிர்வாகம்] குறிப்பிட்ட பகுதியை
அணுகுவதற்கு உரிய சிட்டையை விமான நிலைய பாதுகாப்பு நிறுவனமோ, விமானமோ அனுமதிக்கக்
கூடாது என்ற பொருளைத்தரும்.”
ரொபின்சன் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டுள்ள வக்கீல் ஆவார். மனித
உரிமைகள் மீறல் வழக்குள் தொடர்பாக பாப்புவா, இந்தோனிசியா, இன்னும் பிற இடங்களில்
பணிபுரிந்துள்ளார். விக்கிலீக்ஸிற்கு இரகசிய அமெரிக்கத் தூதரகத் தந்திகளைக் கசிய
விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரான பிராட்லி மானிங் விசாரணைகளிலும்
அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
CLA
எனப்படும் காமன்வெல்த் வக்கீல்கள் சங்கம், ரொபின்சனை இன்று சிட்னியில் ஒரு சர்வதேச
சட்ட மாநாட்டிற்கு உரையாற்ற அழைத்திருந்தது, ஓர் அறிக்கையில் கூறுவது:
“இத்தகவல்கள்
சரியானவை என்றால், பின்
CLA
வக்கீல்கள், அவர்களுடைய கட்சிக்காரர்கள் சுதந்திரத்தைப் பற்றிய ஆழ்ந்த
பிரச்சினைகளைத் தாங்கள் எழுப்பக்கூடும் என்று நம்புகின்றனர்.”
இது நடந்துள்ள நேரம் மேலும் சில வினாக்களை எழுப்புகின்றன.
ஸ்வீடனுக்கு அனுப்புதல் குறித்து அசாஞ் இன் முறையீடு பற்றிய தீர்ப்பு எந்த நேரமும்
எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து அவர் அமெரிக்காவிற்கு ஒப்புவிக்கப்பட உள்ளார்.
அங்கு அவர் டிசம்பர் 2010ல் பிற்போக்குத்தன 1917 உளவுச்சட்டத்தின்கீழ்
குற்றங்களுக்காக இரகசிய நடுவர் மன்றத்தில் குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தில் அவர் வெற்றி பெற்றாலும், அமெரிக்க அதிகாரிகள்
இரகசிய நடுவர் நீதிமன்றக் குற்றசாட்டை வெளியிட்டு அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட
வேண்டும் என்று கோர முயற்சிப்பர். ஆறு வாரங்களுக்கு முன்புதான் கில்லார்ட்
அரசாங்கம் அசாஞ் இன் பிரித்தானிய முறையீடு தோற்றால், ஆஸ்திரேலியாவிற்கு அவர்
அமெரிக்காவிடம் ஒப்புவித்தலைத் தவிர்ப்பதற்கு, திரும்பி வரும் முயற்சியில் அவரைத்
தடுக்கும் வகையில் ஒரு சட்ட வரைவை இரகசியமாக இறுதி நிலையில் இயற்றுவதற்கு
தயாரித்துள்ளது.
ஒப்புவித்தல் சட்டத் திருத்தங்கள் என்று பசுமைவாதிகளின் ஆதரவுடன்
செனட்டில் முத்திரையிடப்பட்டுள்ள இச்சட்டம்,
“அரசியல்
குற்றங்கள்”
(பயங்கரவாதம், ஒற்றுப் பார்த்தல் போன்றவை) சுமத்தப்பட்டவர்கள்மீது ஒப்புவித்தலில்
இருக்கும் தடைகளை ஒதுக்கிவிட அரசாங்கத்திற்கு உரிமை அளிக்கிறது. இது குறிப்பாகத்
தேர்தெடுக்கப்பட்டுள்ள சில அரசாங்கங்களுக்கு மட்டும் பொருந்தும்.
லண்டனில் இருந்து ரொபின்சன் புறப்படுவதை நிறுத்தும் ஆரம்ப முயற்சி,
கில்லார்ட் அரசாங்கம் தன் இங்கிலாந்து தலைமை நீதிமன்றத்திடம் கொடுத்துள்ள முறையீடு
வெற்றிபெற்றால், அசாஞ் விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு விமானம் மூலம் வந்துவிடுவதை
தகர்க்கும் நோக்கத்துடன் அமெரிக்க, பிரித்தானிய அரசாங்கங்களுடன் உருவாக்கியுள்ள
சதிவேலைகளைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு ஆஸ்திரேலியக் குடிமகனான அசாஞ் இன் சட்டபூர்வ உரிமைகளைப்
பாதுகாப்பதற்கு முற்றிலும் மாறாக, கில்லார்டும் அவருடைய மந்திரிகளும் அவருக்கு
எதிரான ஒபாமா நிர்வாகத்தின் மோதல்களுக்குத் தொடக்கத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து
வருகின்றனர். அமெரிக்க நடுவர் நீதிமன்றம் 16 மாதங்களுக்கு முன்பு இரகசியமாகக்
கூட்டப்படுகையில், கில்லார்ட் அமெரிக்கத் தூதரகத் தகவல் தந்திகளை விக்கிலீக்ஸ்
வெளியிட்டது
“சட்டவிரோதம்”
என்று முத்திரையிட்டார்—அது
ஆதாரமற்ற, பெரும் ஒருதலைப்பட்சக் குற்றச்சாட்டு ஆகும்.
வாஷிங்டனுக்கு முழு ஆதரவு கொடுக்கும் வகையில்தான் தொழிற்கட்சி
அரசாங்கம் உள்ளது. அசாஞ் ஐ சிறையில் தள்ளி விக்கிலீக்ஸை நசுக்குவதற்குத்தான்
கான்பெர்ரா முற்படுகிறது. ஏனெனில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆயிரக்கணக்கான
ஆவணங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கத் தலைமையில் நடத்தப்பட்ட
போர்க்குற்றங்களை அம்பலப்படுத்த உதவியுள்ளன. மேலும் பிற தவறுகள், சதிகள்,
போர்த்தயாரிப்புக்கள், அடக்குமுறைகள் என்று உலகம் எங்கும் ஆஸ்திரேலியா உட்பட
ஏகாதிபத்திய சக்திகள் மேற்கொள்ளுபவை பற்றியும் அம்பலப்படுத்த உதவியுள்ளன.
|