சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Pro-Israeli provocateurs unsuccessfully try to disrupt SEP (Germany) meeting in defence of Günter Grass

சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி) இன் குந்தர் கிராஸ் பாதுகாப்பு கூட்டத்தை கலைப்பதில் இஸ்ரேலிய சார்பு ஆத்திரமூட்டலாளர்களின் முயற்சி தோல்வி

By our correspondents
23 April 2012
use this version to print | Send feedback

சனிக்கிழமையன்று ஒரு வலதுசாரி, இஸ்ரேலிய சார்பு ஆத்திரமூட்டலாளர்களின் குழு ஒன்று, சமூக சமத்துவத்திற்கான சர்வதே மாணவர் அமைப்பு (ISSE) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) இரண்டும் குந்தர் கிராஸிற்கு ஆதரவாக நடத்திய கூட்டம் ஒன்றைத் தடுத்து நிறுத்த முயன்று தோல்வி அடைந்தது.

Frankfurt-Bockenheim ல் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு போர் வெறியர்களை நிறுத்துக! குந்தர் கிராஸிற்கு ஆதரவு கொடுக்கவும் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது; இதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்தும் போர்த்தயாரிப்புக்களைப் பற்றி எடுத்துரைத்தது; அத்தயாரிப்புக்களுக்கு ஜேர்மனிய அரசாங்கத்தின் ஆதரவும் இருந்தது.

கூட்டத்திற்கான அழைப்பிதழ் கூறியது: தன்னுடைய கவிதை என்ன கூறப்பட வேண்டும்என்பதில் குந்தர் கிராஸ் உடைய முக்கிய கூற்றுக்கள் முற்றிலும் நியாயமானவையும் சரியானவையும் ஆகும். இஸ்ரேலிய அரசாங்கம் ஈரான்மீது ஆக்கிரோஷப் போருக்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறது; இது ஒரு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

 

flag
பொலிஸ் வந்த பின் ஓர் அமெரிக்கக் கொடியுடன்
ஆத்திரமூட்டலாளர்கள்

கூட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு 30-40 பேர் கொண்ட குழு ஒன்று சமீபத்திய பூங்காவில் இருந்து கூட்டம் நடக்குமிடமான Bockenheimer அரங்கை நோக்கி நடந்தது. இவர்கள் இஸ்ரேலிய, அமெரிக்கக் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், டேவிட் நட்சத்திரத்தினால் இழைக்கப்பட்ட  பெரிய அளவு பிளாஸ்டிக் மரச்சுத்தியலையும் வைத்திருந்தனர். அதிக கூச்சல் போட்ட வண்ணம் இருந்த அவர்கள் கூட்டம் பற்றி விளம்பரப்படுத்திய சுவரொட்டி ஒன்றையும் கிழித்தெறிந்தனர்.

PSG பொறுப்பாளர்கள், இவ் ஆத்திரமூட்டலாளர்கள் தொந்திரவு கொடுக்கத்தான் வந்துள்ளனர் என்பதை அறிந்ததும் கூட்டத்தில் அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்தனர். இதைத்தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் படிக்கட்டைத் தடைக்கு உட்படுத்தினர்: கூட்டம் நடக்க இருப்பதைத் தடுக்கப்போவதாகவும், உள்ளே நுழைய முற்பட்டவர்களைத் திட்டவும் செய்தனர்.

நிகழ்விற்கு வந்திருந்த ஒரு ஈரானியப் பெண்மணி சூழப்பட்டு அச்சுறுத்தப்பட்டார். PSG யின் பொறுப்பாளர் ஒருவர் பெண்மணிக்கு உதவி புரிய விரைந்தார்; அவருடைய காமெரோ திருட்டுப் போயிற்று. இத்தடுப்பை மீறி உள்ளே நுழைந்த ஒரு மனிதரின் பையையும் குண்டர்கள் திருடிவிட்டனர்.

 

hallway
படிக்கட்டில் செல்லவிடாமல் தடுத்தல்

பொறுப்பாளர் பொலிசை அழைத்தபின்னரே குண்டர்கள் படிக்கட்டை விட்டு நீங்கினர். இதன்பின் அவர்கள் சாலையில் எதிர்ப்புறம் நின்று கொண்டு இஸ்ரேலிய, அமெரிக்கக் கொடிகளை அசைத்து இஸ்ரேல் நீடுழி வாழ்க என்று முழக்கமிட்டனர்.

இத்தடுப்பையும் மீறிக் கூட்டம் ஒரு பெரும் வெற்றிகரமாக அமைந்தது. மிரட்டல், அச்சுறுத்தல் ஆகியவற்றால் பதட்டப்படாத கிட்டத்தட்ட 70 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வாழ்க்கையின் பல துறைகளில் இருந்தும் அவர்கள் வந்திருந்தனர்; விமான நிலைய ஊழியர்கள், பொறியியல் வல்லுனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இருந்தனர். பலரும் சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல், ஈரான் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கூட்டத்திற்குக் கொடுத்த அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி தலைமையின் ஓர் உறுப்பினரான வொல்ப்காங் வேபர், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொண்டுள்ள இராணுவ நிலைப்பாடு குறித்துப் பேசி, தற்போதைய போர் அச்சுறுத்தலின் அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியையும் எழுப்பினார்.

அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டாவுடைய அறிக்கையை அவர் மேற்கோளிட்டார்; ஜனவரி மாதம் வாஷிங்டன் போஸ்ட்டிற்கு அவர், ஏப்பிரல், மே அல்லது ஜூன் மாதத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது அநேகமாக நடக்கக்கூடிய காரியம்தான். தற்பொழுது ஈரானுக்கும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மனியுடன் பேச்சுக்கள் நடக்கின்றன என்றாலும், இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் ஈரானுக்கு எதிரான சட்டவிரோத இராணுவத் தாக்குதல் என்னும் விருப்பத் தேர்வை பகிரங்கமாக ஆதரித்துப் பேசியுள்ளார்.

இந்த நிலைமையில், ஈரான்மீதான இஸ்ரேலியத் தாக்குதலின் ஆபத்து குறித்து எச்சரிக்க கிராஸ் ஒரு கவிதையைப் பயன்படுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் மோதலை இப்போர் ஏற்படுத்தும், ஜேர்மனி இதற்கு ஆயுதங்களை (நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை) அளிக்கிறது. இந்த அறிக்கைகளில் என்ன தவறு இருக்கிறது?என்றார் வேபர்.

ஈரானுக்கு எதிரான போர்த் தயாரிப்புக்களின் வரலாற்றுப் பின்னணியை வேபர் விளக்கி, உண்மையான உந்து சக்திகளை வெளிப்படுத்தினார்: முதலிலும் முக்கியமானதுமாக, எண்ணெய் வளங்களின் மீதான கட்டுப்பாடு. 1953ம் ஆண்டு அமெரிக்கா தேசியவாத Mossadeq ஆட்சியை ஈரானில் இருந்து அது நாட்டின் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கியபின் அகற்றி ஷா ரேஸா பஹ்லவியைக் கைப்பாவை போல் பயன்படுத்தியது. 1978-79 ஈரானியப் புரட்சி பின்னர் அமெரிக்கா அப்பிராந்தியத்தில் கொண்டிருந்த நேரடிக் கட்டுப்பாட்டிற்கு முற்றுப் புள்ளி வைத்தது. அப்பொழுது முதல் அமெரிக்க ஏகாதிபத்தியம் பலமுறையும் தன் இழந்த செல்வாக்கை மீட்க முயன்று வருகிறது.

இறுதியில் பிரச்சினை அமெரிக்க தன் நலன்களுக்காக எண்ணெய் ஆதாரங்களைச் சுரண்டுதல் என்பதோடு நின்றுவிடாமல், அதன் போட்டியாளர்களிடம் இருந்தும் எரிசக்தி அளிப்புக்கள் மீதான கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டுவிடுதல் என ஆகிவிட்டது. ஈரானிய எண்ணெயை இப்பொழுது முக்கியமாக வாங்குபவை சீனா, அதைத் தொடர்ந்து ஜப்பான், இந்தியா, பாக்கிஸ்தான் இன்னும் சில நாடுகள் ஆகும்.

முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski தன்னுடைய The Grand Chessboard (1998) என்னும் புத்தகத்தில் இப்பிராந்தியத்தில் தன்னுடைய மிக்குயர் சக்தி என்னும் நிலைமையை அமெரிக்கா காக்க வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியதையும் வேபர் நினைவுபடுத்தினார்.

இஸ்ரேல் அரசு ஹோலோகாஸ்ட்டிற்குப் பின் செமிடிய எதிர்ப்பு, அழிக்கப்பட்டுவிடுதல் என்னும் ஆபத்திற்கு எதிரான புகலிடமாக வந்தவர்களுக்கு ஒரு சோகம் ததும்பிய பொறியாகிவிட்டது”  என்று வேபர் விளக்கினார். அதன் ஆரம்பத்தில இருந்து, பாலஸ்தீனியர்களை வெளியேற்றியதில் இருந்தே, இஸ்ரேலிய அரசாங்கம் ஒரு நிரந்தரப் போர் நிலைப்பாட்டில்தான் உள்ளது. முன்பு பல யூதர்கள் தொடந்து துன்புறுத்தப்படுவதற்கு எதிரான ஒரு விடையை சோசலிசத்தில் கண்டனர். ஜேர்மனிய தொழிலாளர் இயக்கத்தின்மீது ஸ்ராலனிசம் சுமத்திய தோல்விக்குப் பின்னும், பிந்தைய நாஜி ஆட்சியின் குற்றங்களுக்குப் பின்னரும்தான், சியோனிஸ்ட்டுக்கள் தங்களின் சொந்த தேசிய தீர்வு என்பதன் மூலம் மேலாதிக்கத்தைப் பெற்றனர்.

ஒரே மாதிரித் தன்மை என்ற நிலையில் இருந்து இஸ்ரேல் முற்றிலும் தொலைவில் உள்ளது என்பதை வேபர் சுட்டிக்காட்டினார். ஆழ்ந்த வர்க்கப் பிளவுகளால் நாடு சிதைந்துள்ளது. கடந்த கோடைகாலம் இஸ்ரேலின் வரலாற்றிலேயே மிகப் பெரிய சமூக எதிர்ப்புக்களைக் கண்ணுற்றது. இன்று, கருத்துக் கணிப்புக்கள் இஸ்ரேலிய மக்களில் 80% ஈரானுக்கு எதிரான முதல் தாக்குதலை எதிர்க்கின்றனர் எனக் காட்டுகின்றன. இஸ்ரேலின் போர்த்தயாரிப்புக்களைக் குறைகூறுபவர்களுடன் எவரேனும் இணைந்து நின்றால், அவர்கள் செமிடிய எதிர்ப்பாளர்கள் என்று கூறப்படுகின்றனர்; அப்படியானால் இஸ்ரேலிய மக்களில் 80% செமிடிய எதிர்ப்பாளர்கள் எனப்பட வேண்டும் என்றார் வேபர்.

அதன் பின் வேபர் ஜேர்மனியின் இராணுவவாதம் குறித்து விளக்கினார்: இது உலகம் முழுவதும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது, குறிப்பாக மறு இணைப்பின் பின்னர்; பால்கன்கள், ஆப்கானிஸ்தான் போர்களில் பங்கு பெறுதல், ஈராக்கிய போருக்குப் பின்னணியில் ஆதரவு கொடுத்தது, இப்பொழுது சிரியா மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களில் நேரடித் தீவிர ஈடுபாடு ஆகியவை அவரால் கூறப்பட்டன.

போருக்கு எதிரான போராட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கம் வாஷிங்டன், பேர்லின், டெல் அவிவ் ஆகியவற்றில் இருக்கும் போர் வெறியர்களுக்காக திரட்டப்படுவதை தளமாகக் கொள்ள வேண்டும்.என்று வேபர் முடிவுரையாகக் கூறினார். நம்முடைய முழக்கம் இதுதான்: ஐக்கிய சோசலிச மத்திய கிழக்கு அரசுகள்! ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள்!.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து ஒரு உயிரோட்டமான விவாதம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களில் பலர் வேபரின் கருத்துக்களைப் புகழ்ந்தனர். பங்கு பெற்றவர்களில் சிலர் போர் அச்சுறுத்தல் குறித்தும் கிராஸிற்கு எதிராகத் தொடக்கப்பட்டுள்ள தீமை நிறைந்த பொதுத் தாக்குதல்கள் குறித்தும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். மற்றவர்கள் PSG, மற்றும் நான்காம் அகிலம் ஆகியவற்றின் தன்மை, முன்னோக்கு குறித்து அதிகம் அறிய விரும்பினர்.

கூட்டத்திற்குப் பின், பல பார்வையாளர்கள் தனிப்பட்ட முறையில் பேச்சாளருக்கு நன்றி தெரிவித்து அவருடைய கரங்களைக் குலுக்கினர். ஒரு குர்திய பங்கு பெற்றவர், உண்மையிலேயே ஆழ்ந்த இந்த அளிப்பைபாராட்டுவதாக தெரிவித்தார். சிரியாவில் இருந்து வந்த ஒரு முதிய தொழிலாளி, ஜேர்மனியில் 40 ஆண்டுகள் வேலைபார்த்தவர், சிரியாவைப் பற்றிய உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை மறுப்பதற்காக PSG க்கு வெளிப்படையாக நன்றி கூறினார். அவர் எப்படி PSG  க்கு வாக்களிக்க முடியும் என்றும் கேட்டார். கூட்டத்தில் பங்கு பெற்ற பலர் தங்கள் முகவரிகளைக்கொடுத்து, PSG  உடன் தொடர்பில் இருக்க வேண்டும் என விரும்பினர்.

பிராங்பேர்ட் கூட்டத்தை குழப்பும் முயற்சி மத்திய கிழக்கில் போருக்கான தயாரிப்புக்களுக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை மிரட்டி, மௌனப்படுத்துவிடும் முயற்சிகள் என்ற பின்னணியில் காணப்பட வேண்டும்.

என்ன கூறப்பட வேண்டும் என்பது வெளியிடப்பட்டதில் இருந்து, 84 வயது நோபல் பரிசு பெற்ற குந்தர் கிராஸ் ஜேர்மனிய வரலாற்றின் இருண்ட நாட்களை நினைவுபடுத்தும் அவதூறு அலைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தன்னுடைய இலக்கியப் பணி முழுவதையும் நாட்டின் நாஜிக் கடந்த காலத்தை எதிர்கொள்வதற்கு அர்ப்பணித்துள்ள கிராஸ் முக்கிய செய்தி ஊடகங்களில் செமிடிய எதிர்ப்பாளர், ஹிட்லரின் ஆதரவாளர் என்று தூற்றப்பட்டுள்ளார்.

அரசியலிலும், செய்தி ஊடகத்திலும் உள்ள ஆளும் உயரடுக்கு மத்திய கிழக்கில் புதிய போர்க் குற்றங்களுக்கான தயாரிப்புக்கள் குறித்து விவாதங்கள் கூடாது என்பதை உறுதிபடுத்தி நிற்பது தெளிவு. அதில் இவர்கள் கிராஸ் தன்னுடைய கவிதையில் சுட்டிக்காட்டியுள்ளபடி ஆழ்ந்த முறையில் தொடர்பைக் கொண்டுள்ளனர்.

பிராங்பேர்ட்டில் கூட்டத்தை கலைப்பதில் தோல்வியுற்ற ஆத்திரமூட்டலாளர்கள், தங்கள் அடையாளத்தை மறைக்க முற்பட்டுள்ளனர். அவர்கள் பிரசுரித்த துண்டுப்பிரசுரம் எழுதியவர் பெயரையோ, பொருளுரைக்குப் பொறுப்பானவர் பெயரையோ கொடுக்கவில்லை. இந்த ஆத்திரமூட்டலுக்கு ஒப்புதல் கொடுத்து ஒரு கட்டுரை கிட்டத்தட்ட உடனடியாக Indymedia Internet அரங்கில் வெளிவந்தது; அதில் எழுதியது பிராங்பேர்ட் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆத்திரமூட்டலின் வடிவமைப்பு, பொருளுரை ஆகியவை அமைப்பு ரீதியாக என்று இல்லாவிடினும் அரசியல் அளவில் இஸ்ரேலிய, அமெரிக்க, ஜேர்மனிய அரசாங்கங்களுடன் நெருக்கமான தொடர்புடையவர், தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்டவர் என்பதைத் தெளிவாக்குகிறது. போர் எதிர்ப்புக் கூட்டங்கள் பற்றி விவரமாக விளக்குவது வைமார் குடியரசின்போது நாஜிக்கள் கையாண்ட உகந்த தந்திரம் ஆகும்.

Axel Feuerherdt எழுதிய கட்டுரை ஒன்று, Jungle World இதழில் வெளியிடப்பட்டது, அவர்களுடைய துண்டுப்பிரசுரம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது; இதுவும் இஸ்ரேலிய சார்பு குண்டர்கள் தான் ஜேர்மனிய எதிர்ப்பாளர்கள் என்று கூறப்படும் பிரிவுடன் தொடர்புடையவர்கள் என்பதைக் காட்டுகிறது. இது ஒரு அரசியல் இயக்கம், இஸ்ரேலிய_ அரசாங்கத்தின் கொள்கையை பற்றிச் சிறு குறைகூறினாலும் அதை செமிடிய எதிர்ப்பு எனக் கண்டிக்கிறது.

Indymedia அரங்கின் அறிக்கை, பேர்லினிலும் லைப்சிக்கிலும் 23, 24 ஏப்ரலில் நடக்க இருக்கும் குந்தர் கிராஸ் ஆதரவுக் கூட்டங்கள் PSG யால் நடத்தப்படுவதற்கு எதிராக ஆத்திரமூட்டுதல் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. இண்டிமீடியா உடனே தன் இணைய தளத்தில் இருந்து இந்த பேச்சுரிமை சுதந்திரம் குறித்த அப்பட்டமான தாக்குதலை உடனே நீக்கிவிட வேண்டும் என்று PSG கோரியது; ஆனால் இதுவரை அதற்கு விடையிறுப்பு ஏதும் இல்லை.

WSWS வாசகர்கள் அனைவரையும்,  இத்தாக்குதலை எதிர்க்க வேண்டும் என்றும் பேர்லினிலும் லைப்சிக்கிலும் நடக்க இருக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.