WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பெருமளவிலான
நவ-பாசிச வாக்குகள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலை அதிரச் செய்கிறது
By Alex Lantier and Johannes Stern in Paris
24 April 2012
use
this version to print | Send
feedback
பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மே
6 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றில்
சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்டுக்கும் நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசிக்கும் இடையிலான போட்டிக்கு தேர்தல் பிரச்சாரம் முன்செல்கின்ற நிலையில்,
ஞாயிறன்று நடந்த முதல் சுற்றில் நவ-பாசிச வேட்பாளர் மரின் லு
பென்னுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைத்திருப்பதென்பது,
தேர்தல் பிரச்சாரத்தை உலுக்கியிருக்கிறது.
லு பென்
17.9 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தில்
வந்தார். ஹாலண்ட் (28.6 சதவீதம்) மற்றும் சார்க்கோசி (27.2
சதவீதம் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப்
பிடித்திருந்தனர். லு பென்னை நான்காமிடத்திற்குத் தள்ள உறுதி பூண்டிருந்த இடது
முன்னணியின் வேட்பாளர் ஜோன் லூக் மெலன்சோன் வெறும் 11.1
சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இடதிலான அரசியல் வெற்றிடத்தால் முன்வைக்கப்படும் அபாயங்களை லு
பென்னுக்குக் கிட்டியிருக்கும் வாக்குவீதம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
PS மற்றும் சார்க்கோசியின் மக்கள் இயக்கத்திற்கான
ஒன்றியம் (UMP) ஆகிய இரண்டு கட்சிகளின் சிக்கன நடவடிக்கைக்
கொள்கைகளின் மீதும் எழுந்திருக்கும் பரவலான சமூகக் கோபத்தை அதிவலது தனக்கு
மூலதனமாக்கிக் கொள்ள இந்த வெற்றிடம் தான் வழிவகை செய்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி,
புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும் தொழிலாளர் போராட்டம்
போன்ற குட்டி முதலாளித்துவ இடது சக்திகள் வெகுஜன மக்களின் எதிர்ப்பை PS
மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பின்னால் பாயச் செய்வதற்கு
வேலை செய்கின்றதால் தான், லு பென்னின் தேசிய முன்னணிக்கு (FN),
சிக்கன நடவடிக்கை-விரோத மற்றும் ஸ்தாபக-விரோதக் கட்சியாகக்
காட்டிக் கொள்வதற்கும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அது
பிரதிநிதித்துவப்படுத்தும் வங்கிகளை நோக்கிய வெகுஜன வெறுப்புக்கு
விண்ணப்பிப்பதற்கும், அத்துடன்
மோசடியான ஜனரஞ்சகவாதத்தை புலம்பெயந்தவர்களுக்கு எதிரான இனவாதத்துடனும் வெறி பிடித்த
தேசியவாதத்துடன் ஒன்றுகலப்பதற்கும் சுதந்திரம் கிடைக்கிறது.
மெலன்சோனின் இடது முன்னணியின் (அவரது இடது கட்சி மற்றும் பிரெஞ்சு
கம்யூனிஸ்ட் கட்சி (PCF)
இடையிலான கூட்டணி)பிரச்சாரம் ஸ்ராலினிச PCFக்கும்
புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA)போன்ற இடது
கட்சிகளுக்கும் வழக்கமாய் வாக்களிக்கும் சுமார் 10 சதவீதம்
பேருக்கு வெளியில் அதிகம் ஆதரவைத் திரட்ட முடியவில்லை. மெலன்சோனின் இடது வாய்ஜாலம்
எல்லாம் இருந்தபோதிலும் PS
பிரச்சாரத்துக்கு ஆதரவாய் ஓட்டுப் பிரிக்கும் ஒரு வேட்பாளராகவே இடது முன்னணி
இருந்தது என்பது தெளிவானது.
சார்க்கோசி ஹாலண்ட் இருவருமே நேற்று தங்களது உரைகளில் லு
பென்னுக்குக் கிடைத்திருக்கும் வாக்கு அளவினைக் குறிப்பிட்டுப் பேசினர். சார்க்கோசி
சுயபாதுகாப்புவாத மனோநிலைக்கும்,
புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான
மனோநிலைக்கும் சற்றும் நாணமில்லாமல் விண்ணப்பம் செய்தார்.
அவர் கூறினார்:
“மக்களைப் பாதுகாக்கத் தான் தேசிய எல்லைகள்
இருக்கின்றன. உலகத்தை உள்ளபடி எடுத்துப் பாருங்கள்,
தேசத்தையும் தேசிய அடையாளத்தையும் மதிக்கின்ற நாடுகள் தான் வெற்றியடைகின்றன.
அமெரிக்காவில் எத்தனை அமெரிக்கக் கொடிகள் இருக்கின்றன என்பதைப் பார்த்தால் தெரியும்,
அங்கே மக்கள் தமது நாட்டை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை.”
ஐரோப்பிய ஒன்றியம் புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான கடுமையான
நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளாது போனால் செங்கன் உடன்படிக்கையில் இருந்து பிரான்ஸ்
திரும்பப் பெற்றுக் கொள்வதான தனது முந்தைய பிரச்சார மிரட்டலையும் அவர்
எதிரொலித்தார். அவர் அறிவித்தார்,
“ஐரோப்பா தனது எல்லைகளைப் பாதுகாக்க பணியாற்றாது போனால்,
பிரான்ஸ் அதனைத் தன்னிச்சையாகச் செய்யும்.”
ஹாலண்ட் தன் பங்கிற்கு
“ஒரு புதிய அதிகாரப்பரவல் சட்ட”த்திற்கு
வாக்குறுதியளித்தார். நிதிப் பற்றாக்குறையில் 115 பில்லியன்
யூரோவைக் (152 பில்லியன் அமெரிக்க டாலர்)குறைக்க அவர்
வாக்குறுதியளித்திருப்பதால், பொதுச் சேவைகளை சிதிலமடைந்து,
நிதியாதாரமற்றுக் கிடக்கும் பிராந்திய
மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் கரங்களுக்கு மாற்றி விடுவதன் மூலம் செலவினங்களை
வெட்டுவது என்பது தான் மேற்கண்ட அதிகாரப்பரவல் கூறும் அர்த்தமாக இருக்க முடியும்.
மெலன்சோனுக்கும் ஐரோப்பா-சூழலியல்-பசுமைக் கட்சி(EELV)வேட்பாளரான
எவா ஜோலிக்கும் ”எனது வேட்புநிலைக்கு ஆதரவாக எந்தவித
நிபந்தனைகளும் இல்லாமல் ஆதரவை அறிவித்தமைக்காக” ஹாலண்ட்
மீண்டும் நன்றி கூறினார். மெலன்சோன், ஜோலி மற்றும்
NPA வேட்பாளரான பிலிப் புட்டு ஆகியோர் ஹாலண்டிடம் எந்த
கோரிக்கைகளும் வைக்காமலேயே அவருக்கு வாக்களிக்கும் படி நேரிடையாகவோ அல்லது “சார்க்கோசிக்கு
எதிராய் வாக்களிக்க”க் கோருவதின் மூலமாகவோ அழைப்பு
விடுத்துள்ளனர். இதன் மூலம் இடது முன்னணி, EELV மற்றும்
NPA அனைத்தும் PSக்கு
அதன் வலதுசாரிக் கொள்கைகளை முன்நடத்துவதற்கு ஒரு தொகை நிரப்பாது கையெழுத்திட்டளித்த
காசோலையை வழங்கியிருக்கின்றன.
பின் ஹாலண்ட் அதி வலது வாக்குகளின் அதிகரிப்புக்கான மொத்தப்
பழியையும் சார்க்கோசி மீது சுமத்தினார். அவர் கூறினார்:
“அதி வலதின் எழுச்சிக்குப் பொறுப்பான நபர்
யாரென்றால் அதன் வார்த்தைகளை அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கக் கூடிய மனிதர்
தான். ஐந்து வருட காலத்தில் ஏராளமான அடிப்படை உரிமைகளைத் தகர்த்த மனிதர் தான் அதி
வலதின் எழுச்சிக்குப் பொறுப்பான மனிதராவார்.”
சார்க்கோசி நவ-பாசிச உணர்வுகளுக்கு விண்ணப்பித்து வந்திருக்கிறார்
என்பதில் சந்தேகமில்லை என்கிற அதேசமயத்தில்,
லு பென்னின் தேர்தல் வெற்றிக்கு சார்க்கோசி மீது பழி போட ஹாலண்ட்
முயலுவது அபத்தமானதும் மோசடியானதும் ஆகும். பிரான்சில் நிலவும் ஆழமான சமூக
நெருக்கடியையும் PS உள்ளிட ஒட்டுமொத்த அரசியல் உயரடுக்கின்
பிற்போக்குத்தனமான கொள்கைகளையும் தான் FNக்கு
அதிகரித்து வரும் ஆதரவு பிரதிபலிக்கிறது.
லு பென்னின் வாக்குகள் குறிப்பாக வடகிழக்கிலும் மற்றும் மத்திய
தரைக்கடல் கரையோரப் பகுதிகளிலும் - இங்கு வேலைவாய்ப்பின்மை பிரான்சின் மிக அதிக
அளவில் ஒன்றாய் இருக்கிறது - அதிகமாய் இருந்தது. இந்தப் பகுதிகளிலான தேர்தல்
மாவட்டங்களில் எல்லாம்,
இந்த பாசிச வேட்பாளர் 20 சதவீதத்திற்கும்
அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்,
பல இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
தெற்கில்,
கார்ட் பகுதியில் அவர் 25 சதவீதத்திற்கும்
அதிகமான வாக்குகளைப் பெற்று முதலாவதாய் வந்தார். கார்ட் சென்ற ஆண்டில் பிரான்சில்
வேலைவாய்ப்பின்மையின் உச்ச வீதமான 12.9 சதவீதத்தைக்
கொண்டிருந்த Languedoc-Roussillon
பிராந்தியத்தின் பகுதியாகும்.
வடக்கின்
Pas de-Calais பிராந்தியத்தில் இவர் அரை மில்லியன் வாக்குகளுக்கும்
மேல் பெற்றிருக்கிறார். Pas de-Calais தொகுதியில் அவர்
25 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்று ஹாலண்டுக்கு
அடுத்த இரண்டாமிடத்தைப் பெற்றார். Nord ல் 21
சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தில்
வந்தார். Nord-Pas-de-Calais பகுதி,
சென்ற ஆண்டின் வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரத்தில் 12.8
சதவீதத்துடன் இரண்டாமிடத்தில் இருந்தது.
தெற்கின் மத்தியதரைக்கடல் பகுதியைப் போலவே,
இப்பிராந்தியமும் ஒருகாலத்தில் சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட்
கட்சிகளின் வலிமையான பகுதிகளாய் இருந்தது. 1983 இல்
சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதியான பிரான்சுவா மித்திரோனும் அவரது PS-PCF
அரசாங்கமும் தொழிலாள வர்க்கத்தின் மீது மிருகத்தனமான சிக்கன
நடவடிக்கைகளைத் திணித்த போது தான் FN எழுச்சி காணத்
தொடங்கியது. ஹாலண்ட் கூறுவதற்கு நேரெதிரான வகையில், அவரது
சொந்தக் கட்சியும் பிரெஞ்சு முதலாளித்துவ “இடது”ம்
தான் FN இன் வலதுசாரி ஜனரஞ்சகவாதத்திற்கு களம்
தயாரித்தளித்தவை ஆகும். அது சமூகச் செலவினங்களை வெட்டியதோடு பிராந்தியத்தின்
நிலக்கரித் தொழிற்சாலைகள், நூற்புத் தொழிற்சாலைகள் மற்றும்
இரும்பாலைகளில் பெரும்பாலானவற்றை அழித்து விட்டது. Nord-Pas-de-Calais
பகுதியின் கடைசி நிலக்கரிச் சுரங்கம் 1990
இல் மூடல் கண்டது.
முதலாளித்துவ
“இடது”களின் இந்த சிக்கன
நடவடிக்கைக் கொள்கைகளின் வரலாறு தான் லு பென்னை சின்னஞ்சிறு மக்களின் நாயகியாக
தன்னை முன்நிறுத்த அனுமதிக்கிறது. மார்ச்சில் அப்பெண்மணி அறிவித்தார்: “அவரைப்
[ஜோன் லூக் மெலன்சோனை] போல், தொழிலாள
வர்க்கத்தின் மீது ஆர்வம் கொள்வதற்கு ஒரு செனட்டராகப் பதவி கிட்டும் வரை 25
வருடங்கள் நான் காத்திருக்கவில்லை. எப்படியிருப்பினும் ஜோன் லூக்
மெலன்சோனின் வாக்காளர்கள் எல்லாம் தொழிலாள வர்க்கமும் இல்லை,
மாறாக அவர்கள் ”போபோ”[ஏழைகளின்
அனுதாபிகளாய்க் காட்டிக் கொள்ளும் உயரடுக்கினர்] வாக்காளர்கள் தான்.”
நவ பாசிச வாக்குகளின் அதிகரிப்பு மக்கள் முகம் கொடுக்கும் சமூக
நெருக்கடியை மட்டும் அல்ல,
ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் வலது நோக்கி நகர்ந்துள்ளதையும்
பிரதிபலிக்கிறது. ”பயங்கரவாதத்தின் மீதான போர்”என்கிற
அல்லது “மதச்சார்பின்மை” (பர்தாவைத்
தடைசெய்வது) என்கிற பதாகையின் கீழ் முஸ்லீம்-விரோத இனவெறியை அது தொடர்ந்து
ஊக்குவித்தது தான் மரின் லு பென் சென்ற ஜனவரியில் அவரது தந்தையான ஜோன்-மரி லு
பென்னிடம் இருந்து கட்சித் தலைமையை எடுத்துக் கொண்ட பின்னர் பிரதான அரசியல்
நீரோட்டத்தின் பாகமாக FN க்கு
மறுமுத்திரை அளிக்க அனுமதித்தது.
சென்ற மாதத்தில் நடத்தப்பட்ட
BVA கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரெஞ்சு நாட்டினரில்
52 சதவீதம் பேர் FN ஐ “மற்ற
கட்சிகளைப் போன்ற ஒன்றாகவே கருதுவதாய்” கூறியிருந்தனர்.
குறிப்பாக மக்களில் வறுமை நிலையிலிருக்கும் அடுக்குகளிடையே இந்தப் பதில் மிகச்
சரளமாய் (63 சதவீதம்) கிட்டியதாக
கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள் தெரிவித்தனர்.
குட்டி முதலாளித்துவ
“இடது” கட்சிகள் பல
சமயங்களில் நவ பாசிசக் கட்சிகளை எதிர்த்துப் போரிடுவதான பேரில் நடத்திய வலது
நோக்கிய நகர்வு தான் இதில் மிக முக்கியமானதாகும். 2002 ஆம்
ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜோன்-மரி லு பென்னும் கன்சர்வேடிவ் வேட்பாளரான ஜாக்
சிராக்கும் இரண்டாம் சுற்றை எட்டிய போது, PS, PCF மற்றும்
புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகம் (NPA இன் முன்னோடியான
LCR) ஆகியவை லு பென்னுக்கு எதிராய்
சிராக்குக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தன.
சிராக்கின் நிர்வாகத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு
சுயாதீனமான அரசியல் போராட்டத்தை தயாரிப்பு செய்யும் பொருட்டு தேர்தலைப்
புறக்கணிக்கும்படி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)
விடுத்த அழைப்பை இவை எதிர்த்தன.
இந்த சக்திகள் எல்லாம் பிரான்சிலும் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும்
சமூகப் பிற்போக்கிற்கான ஒரு அதிமுக்கிய ஆதரவாக எழுந்ததை அடுத்துவந்த தசாப்தம்
கண்டது. எப்படி கிரீஸ்,
ஸ்பெயின், மற்றும் அயர்லாந்து போன்று
நெருக்கடியில் சிக்கிய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்குப்
பேரம் பேசிக் கொண்டிருந்த தொழிற்சங்கங்களை குட்டி முதலாளித்துவ “இடது”
கட்சிகள் ஆதரித்தனவோ, அதைப் போல இவை
ஓய்வூதிய வெட்டுகளுக்கும் மற்றும் பிற சமூகத் தாக்குதல்களுக்கும் சிராக் மற்றும்
சார்க்கோசி உடன் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளை ஆதரித்தன.
அதேபோல் தொழிற்சங்கங்கள் அவை அமல்படுத்த உதவியிருந்த நடவடிக்கைகளுக்கு எதிராய்
அழைப்பு விடுத்த மழுங்கிப் போன ஆர்ப்பாட்ட்டங்கள் குறித்து எந்த விமர்சனங்களையும்
இவை வைக்கவில்லை. அத்துடன் சார்க்கோசியின் முஸ்லீம்-விரோதக் கொள்கைகளையும்,
அத்துடன் சென்ற ஆண்டில் லிபியாவிற்கு
எதிராகவும் இன்று சிரியாவுக்கு எதிராகவுமான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் போர்களையும்
இவை ஆதரித்தன.
இப்போது இவை,
தொழிலாள வர்க்கத்தின் மீது சுதந்திரச் சந்தையின்
தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருப்பவரும்,
தான் “ஆபத்தானவனில்லை”என்கிற
பிரபலமான வாக்குறுதியை லண்டன் வங்கிகளுக்கு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கியவருமான
ஹாலண்டை ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. |