சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

WSWS speaks to Socialist Party supporters at Vincennes campaign rally

உலக சோசலிச வலைத் தளம் வன்சென் பிரச்சாரப் பேரணியில் சோசலிஸ்ட் கட்சி ஆதரவாளர்களோடு உரையாடுகிறது

By Antoine Lerougetel
18 April 2012
use this version to print | Send feedback

ஞாயிறன்று பாரிஸின் Château de Vincennes மைதானத்தில் நடந்த சோசலிஸ்ட் கட்சியின் (சோ..) ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்டின் பேரணியில் உலக சோசலிச வலைத் தள (.சோ..) செய்தியாளர்கள் தலையீடு செய்தனர்.

ஒரு பதாகை குறிப்பிட்டது: “ஹாலண்ட் நம்பிக்கைக்குரியவர்". சோசலிஸ்ட் கட்சி கொடிகளுக்கு அப்பாற்பட்டு, வரவிருக்கும் சோ.. தலைமையிலான அரசாங்கத்துடன் வெளிப்படையாக ஒரு கூட்டணியை எதிர்பார்க்கலாம் என்பதற்கு ஆதாரமாக கம்யூனிஸ்ட் கட்சி (PCF) பதாகைகளும் இருந்தன. முன்னணியிலிருந்த சோ.. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களைத் தவிர, மற்றவர்களிடம் உற்சாகம் மட்டுப்பட்டிருந்தது

Hassan
ஹாசன் மற்றும் அவரது குடும்பம்

மொராக்கோவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவரும் 30 ஆண்டுகளாக பிரான்சில் வசித்து வந்தவருமான ஒரு சிறு வணிகர் ஹாசன், ஹாலண்டிற்கு ஆதரவாக அவருடைய மனைவி, மகள் (இரண்டாம் ஆண்டு உயர்கல்வி மாணவி) மற்றும் அவருடைய இளம் குழந்தைகளோடு வந்திருந்தார். தாம் சோசலிஸ்ட் கட்சியில் சேர இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் சிக்கன முறைமைகளால் அவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்று கேட்ட போது, அவர் கூறியது: “சார்க்கோசி வெறும் பொய்களை மட்டுமே கூறியுள்ளார். அவர் வாங்கும் சக்தியை (purchasing power) சீராக வைக்கவில்லை. அவர் புலம்பெயர்ந்தவர்களைப் பலிக்கடா ஆக்குகிறார் என்ற அதே கதை தான் எப்போதும் இருக்கிறது. ஆனால் பிரெஞ்சு மக்களோ வேலைகள் மற்றும் வாழ்க்கைக்கான செலவுகள் குறித்து ஆர்வமாக உள்ளனர். 65 வயதில் ஓய்வூதியம் என்பதில் மக்கள் நைந்து போகிறார்கள். பிரான்ஸ் ஒரு மதசார்பற்ற குடியரசு என்று கூறப்படுகிறது. ஆனால் வாடகை முதலியவற்றை செலுத்த முடியாதவர்களுக்கு அது அவ்வாறு கிடையாது. அது அவர்களுக்கு ஒரு சர்வாதிகாரமாக உள்ளது. சிக்கன நடவடிக்கைகள் செல்வந்தர்களுக்கு கிடையாது, மாறாக ஏழைகளுக்குத் தான்".  

கூடுதலாக அவர் மனைவி கூறியது: “எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இங்கே சமத்துவம் என்பதே கிடையாது. புறநகர்களில் (banlieues) இருக்கும் பாடசாலைகளை விட பாரிஸில் உள்ள பாடசாலைகளுக்கு நிறைய நிதி ஒதுக்கப்படுகின்றன. எங்களுடைய குழந்தைகளுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விட்டது. தனியார்துறையோடு ஒப்பிடுகையில் அரசு பாடசாலைகளில் நிலைமைகள் மோசமாக உள்ளன.”

லிபிய இராணுவ தலையீட்டை ஹாசன் கண்டனம் செய்தார்: “சார்கோசி மறைமுகமாக ஒரு குற்றவாளி ஆவார்".

.சோ.. செய்தியாளர்கள் ஹாலண்ட் உடனான கடந்த வார La Tribune நேர்காணலை குறிப்பிட்டு காட்டினர். அதில் அவர் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான ஐரோப்பிய நிதியியல் உடன்படிக்கையை, “ஆனால் அதிலுள்ள அவசியமான சிக்கன நடவடிக்கை பகுதியைத் தவிர" ஏனையவற்றை மறுபரிசீலனை செய்வது குறித்து விவாதித்திருந்தார்".   

ஹாசன் கூறியது: “நான் அதனோடு உடன்படவில்லை. அவர்கள் மக்களைப் பலிக்கடாவாக ஆக்குகிறார்கள். ஏழையாக இருப்பது வாழ்வின் ஒரு தற்செயலான விபத்தாகும். மீண்டும் மீண்டும் ஏழைகளே அரசியல் மற்றும் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்படுகிறார்கள். நீங்கள் சில பிரமுகர்களை ஆதரிக்கலாம்; உங்களுக்கு யாரை நம்புவதென்று தெரியாமல் இருக்கலாம். பிரான்ஸிலும் அரசியல் அந்த பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் சோசலிசம் என்பது சமூக ஐக்கியத்திற்காக அதிவலதிலிருந்து வரும் அனைத்திற்கும் எதிராகவும் போராடும் ஒரு கட்சியாகும். ஆனால் அது பணக்காரருடன் இணைந்ததல்ல.

ஹாலண்ட் சிக்கன நடவடிக்கையை ஆதரிக்கிறார் என்றால் நம்மால் அவர்மீது நம்பிக்கை வைக்க முடியாது.” 

சோசலிஸ்ட் கட்சி முன்னர் பதவியில் இருந்த போது கொண்டிருந்த அதன் பிற்போக்குத்தனமான கொள்கைகளின் தரப்பில் நின்ற, வன்சென் பேரணியிலிருந்த அதன் சில ஆதரவாளர்கள், சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் முதலாளித்துவ "இடது" கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட ஏகாதிபத்திய யுத்தங்களை பாராட்டினர்

ஒரு கணினி மென்பொருள் ஆலோசகரான (software consultant) சீசெல் கைவண்டியிலிருந்த அவருடைய கைக்குழந்தையோடு வந்திருந்தார்: “சார்கோசியின் கீழ், நான் என்னுடைய துணைவரின் நிலமையால் பாதிக்கப்பட்டேன். நாற்பத்தி ஐந்து வயதில் இருந்த அவரை வேலைக்கு சேர்ப்பதில் மிகவும் வயதானவராக பார்க்கப்பட்டார். ஒரு ஆண்டுக்கு அவர் வேலையின்றி இருந்தார். வயதானவர்கள் கையாளப்படும் விதம் குறித்து எனக்கு கவலையாக உள்ளது. அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் உபயோகமற்று உள்ளது".

மத்தியதட்டு வர்க்கத்தின் மீது குறைந்த வரிவிதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சிக்கன முறைமைகளை ஆதரிப்பதாக சீசெல் குறிப்பிட்டார்: “யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சிக்கன நடவடிக்கைகள் அவசியமாக உள்ளது. உயர்ந்த சம்பளங்களைப் பெறுபவர்களை விட நாங்கள் அதிக வரி செலுத்துகிறோம். அந்த விஷயத்தில் ஹாலண்ட் நிறைய சமநோக்கோடு உள்ளார். சார்கோசியின் அணுகுமுறைகள் எனக்கு அதிர்ச்சியாக உள்ளன; அவர் ஒரு இணக்கத்திற்கு வர முயலவில்லை. [நவ-பாசிச] தேசிய முன்னனியோடு அவர் தொடர்ந்து அடிவருடி வருவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.” 

பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீது சிக்கன கொள்கைகளால் முன்னிருத்தப்படும் அபாயங்களை சீசெல் பெரிதாக கருதவில்லை: “கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் என்ன நடந்து வருகிறதோ அது பிரான்சிலும் நடக்குமென்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை இதில் நான் தவறாக கூட இருக்கலாம். இன்னும் கொஞ்சம் மனிதாபிமானத்தை நடைமுறைப்படுத்த, திட்டமிட்டு அவதூறு பரப்புவதைத் தடுக்க, இங்கே விதிகள் இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் சோசலிசம் என்பது பங்கீடு செய்வது, மனிதயின ஐக்கியம், என்னால் செய்ய முடிவதைப் போல சமூக ஏணியில் ஏறுவதற்கான வாய்ப்பு (l’ escalateur social) ஆகியவையே ஆகும். இதற்கு அரசின் ஒரு சிறந்த கல்விமுறை அவசியமாகும்.

லிபியா மற்றும் சிரியாவில் சார்கோசியின் தலையீடு குறித்து சீசெல் கூறியது: “நீங்கள் கூறுவதைப் போல, அந்நாடுகளின் மக்கள் மீது அவருக்கு எந்த நல்லெண்ணமும் இருப்பதாக நானும் நினைக்கவில்லை.” சோசலிஸ்ட் கட்சியும் ஹாலண்டும் அந்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளித்திருப்பதை நினைவுபடுத்தியதும், அவர் அந்த கொள்கையை மன்னித்த வகையில்: “நாம் எல்லையில்லா வானம்பாடிகள் அல்ல. பிரான்ஸிற்கென்று அதன் நலன்கள் உள்ளனஎன்றார்.

students
O
livier, Victoria and Mona

.சோ.. செய்தியாளர்கள் ஓரிரு மாணவர்களிடமும் பேசினர். கிரீஸ், அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியவை சான்றாக இருந்தபோதினும் தாம் சிக்கன நடவடிக்கை அவசியமென்று கருதுவதாக அவர்கள் தெரிவித்ததோடு, அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமென்றும் கூறினர்.

மாணவர்களில் ஒருவர் கூறினார், “அது சந்தைகளுக்கு மறு-உத்தரவாதம் அளிப்பதற்காக ஆகும். ஹாலண்ட் அதிகாரத்திற்கு வந்த உடனேயே, வளர்ச்சியும் திரும்பும். அவர்களால் சிக்கன நடவடிக்கையையும் விட்டொழிக்க முடியும். சிக்கன நடவடிக்கையும், வளர்ச்சியும் அவசியமாகும். நாம் விளைவுகளைப் பார்க்க வேண்டியுள்ளது". மற்றொருவர் கூறியது: “கிரீஸ் அல்லது ஸ்பெயின் போலில்லாமல், பிரான்சில் இதுவரையில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று உங்களால் கூற முடியாது. நிதியியல் உடன்படிக்கையின் சர்வாதிகார விதிகள் அமுல்படுத்தப்பட்டால், நாம் அந்த இடத்தை அடையலாம்.”   

லிபியாவில் தலையீடு என்பது "லிபிய இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதாக" இருந்ததாகவும், ஆனால் முதலாளித்துவ "இடது" கட்சிகள் அதை ஆதரித்ததானது மனித உரிமைகள் குறித்த அக்கறையால் உந்தப்பட்டிருந்ததாகவும் அந்த மாணவர் கருதினார்.