World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Polls show dead heat in first round of French presidential election

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் வெற்றிக்கான போட்டி மிகக் கடுமையாக இருக்கப் போவதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன

By Alex Lantier in Paris
21 April 2012
Back to screen version

ஏப்ரல் 22 ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் ஏறக்குறைய ஒரே மாதிரியான முடிவையே அளிக்கின்றன. சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்டும் நடப்பு ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசியும் அதிகமான வாக்குகளைப் பெற்று மே 6 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்புக்கு முன்னேறுவார்கள் என்று இந்தக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

முதல் சுற்றில் ஹாலண்ட் முன்னிலை வகிப்பார், அல்லது சார்க்கோசியுடன் நூலிழை வித்தியாசத்தில் இருப்பார் என்பதை மிக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் காட்டியுள்ளன. ஏப்ரல் 18-19 அன்று நடந்த Ipsos கருத்துக்கணிப்பு ஹாலண்ட் 29 சதவீத வாக்குகள் பெறுவார் என்றும் சார்க்கோசி 25.5 சதவீத வாக்குகள் பெறுவார் என்றும் காட்டியது. நவ-பாசிச மரின் லு பென் (16 சதவீதம், இடது முன்னணி வேட்பாளர் ஜோன் - லூக் மெலன்சோன் (14 சதவீதம்)மற்றும் கன்சர்வேடிவ்மையவாதவேட்பாளர் பிரான்சுவா பாய்ரூ(10 சதவீதம்)ஆகியோர் வரிசையில் அதற்கடுத்த இடங்களைப் பிடிக்கின்றனர். சார்க்கோசிக்கு எதிரான போட்டியில் இப்போதைய நிலவரப்படி ஹாலண்ட் 56 சதவீத வாக்குகளுடன் மிக எளிதாக இத்தேர்தலில் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

வாக்களிக்காதோர் விகிதம் 25 முதல் 30 சதவீதம் வரை என மிக அதிகமாய் இருக்கலாம் என்றும் இது ஞாயிறன்றான தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கும் கருத்துக்கணிப்புகளில் மதிப்பிடப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கைக்குமான வித்தியாசத்திற்கு ஒரு காரணியாக அமையலாம் என்றும் கருத்துக்கணிப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். லு பென்னின் வாக்குகள் பல சமயங்களில் துருப்புச் சீட்டாக நிரூபணமாகியிருக்கிறது; இது 2002 இல் கணிக்கப்பட்ட அளவுக்கு 3.3 சதவீதம் அதிகமாகவும் 2007 இல் கணிக்கப்பட்ட அளவுக்கு 3.4 சதவீதம் குறைவாகவும் இருக்கிறது. எப்படியிருப்பினும் லு பென் இப்போது இரண்டாம் சுற்றுக்கு முன்னேறப் போவதில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது

சார்க்கோசியும் ஹாலண்டும் இப்போது இரண்டாம் சுற்றில் சிறு கட்சிகளிடம் இருந்தான வாக்குகளைக் கைப்பற்றும் முயற்சிகள் குறித்து கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Les Echos என்கிற வணிக இதழுக்கு பய்ரூ - இவர் ஒரு வலதுசாரி வேட்பாளர்; நவ-பாசிசவாத வாக்குகளுக்கு விண்ணப்பித்ததாய் சார்க்கோசியை இவர் விமர்சித்திருக்கிறார் - அளித்த ஒரு நேர்காணலில் இரண்டு வேட்பாளர்களையுமே தான் வழிமொழியப் போவதில்லை என்று தெரிவித்தார். “நெருக்கடி ஒன்று வெடிக்கின்ற சமயத்தில் தனதுபயன் இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாய் அவர் கூறினார். ஹாலண்ட் வெற்றி பெறும் பட்சத்தில், ஜூன் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஹாலண்ட் உருவாக்கவிருக்கும் முதல் அரசாங்கம் நிலைகுலையும் என்றும், அப்போது ஹாலண்ட் தன்னை பிரதமராக்கக் கூடும் என்றும் பாய்ரூ தொடர்ந்து கூறினார்.

லு பென்னும் இந்த இரண்டு வேட்பாளர்களையும் வழிமொழிவதற்கு மறுத்து விட்டார். சார்க்கோசிக்கு வாக்களிப்பதுபயனற்றதுஏனென்றால்முதலாம் சுற்றிலும் பின் இரண்டாம் சுற்றிலும் அவர் தோற்கவிருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டியுள்ளன என்றார் அவர். ஹாலண்டும் சார்க்கோசியும்இரட்டையர்கள், அதிலும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று கூட சொல்லலாம்என்று அவர்களைக் கண்டனம் செய்த லு பென் இவர்கள்அழிவுகரமான சுதந்திரச் சந்தை கற்பனாவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் .

முதலாளித்துவஇடது வேட்பாளர் யார் முதலில் வந்தாலும் அவருக்கு ஆதரவாக, அதாவது ஹாலண்டுக்கு ஆதரவாக, தான் அழைப்பு விடுக்கப் போவதாய் மெலன்சோன் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார். மெலன்சோனுக்கு வாக்களிப்பவர்களில் 70 சதவீதத்துக்கும் மேலானோர் அடுத்த சுற்றில் ஹாலண்டுக்கு வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது, மெலன்சோன் மற்றும் இடது முன்னணியின் கோரிக்கைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கே தான் நோக்கம் கொண்டிருப்பதை PS தெளிவாக்கி விட்டிருக்கிறது என்கிற நிலையிலும்.  

செவ்வாயன்று, முன்னாள் PS கட்சிப் பிரதமர் லோரென் ஃபாபியுஸ் பேசுகையில், மெலன்சோனுடனான பேச்சுவார்த்தைகள் எதனையும் நிராகரித்தார். “வெற்றி பெறும் மனிதரின் வேலைத்திட்டத்திற்கே நாங்கள் வாக்களிக்கவிருக்கிறோம் என்றார் அவர். தேர்தல் பிரச்சாரத்தின் போது இடது முன்னணி வாக்காளர்களின் மனதைக் கவரும் பொருட்டு ஹாலண்ட் முன்வைத்த சில தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆலோசனைத் திட்டங்களில் இருந்து தள்ளி நிற்கும் PS இன் பிரச்சாரத்தையே ஃபாபியுஸ் தெளிவாக்கியிருக்கிறார்.

சீரழிந்திருக்கும் பொருளாதாரச் சூழலை மேற்கோள் காட்டிய அவர், ஹாலண்ட் தனது ஜனாதிபதி பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் செய்வதற்கு வாக்குறுதியளித்திருக்கக் கூடிய செலவின நடவடிக்கைகளின் விடயத்தில் PS ”இதைக் கருத்தில் கொள்ளும்என்றார். எரிவாயு விலைகளை மூன்று மாதத்திற்கு மாற்றமின்றி நிறுத்துவது, பொதுத் துறை வேலை வெட்டுகளை நிறுத்துவது ஆகியவையெல்லாம் இந்த வாக்குறுதிகளில் அடங்கும். தொழிற்சாலையின் தலைமை நிர்வாகிக்கும்-தொழிலாளிக்கும் இடையிலான ஊதிய வித்தியாச விகிதம் 20 க்கு 1 என்கிற வரம்புக்கு மீறக் கூடாது என்கிற ஆலோசனையையும் ஃபாபியுஸ் நிராகரித்தார். தனியார் துறையில் இதுநடைமுறைசாத்தியமற்றது என்று கூறிய அவர், ஆடம்பரப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதையும்ஐரோப்பிய சட்டநடைமுறைகளுக்கு விரோதமானது என்று கூறி நிராகரித்தார்.

இப்படித் தான் இரண்டு ஏறக்குறைய பிரித்தறியச் சிரமமான பெரு-வணிக வேட்பாளர்களுக்கு இடையிலான ஒரு இரண்டாவது சுற்றுக்குத் தயாரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருவருமே நிதிப் பற்றாக்குறைகளை பூச்சியமாக்க உறுதிபூண்டுள்ளனர், சார்க்கோசி 2016க்குள்ளாக, ஹாலண்டு 2017க்குள்ளாக. இதற்கு செலவின வெட்டுகளிலும் மற்றும் வரி அதிகரிப்புகளிலுமாய் குறைந்தபட்சம் 115 பில்லியன் யூரோக்கள் (152 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசியமாய் உள்ளது. இதன் பெரும்பகுதியை (சார்க்கோசிக்கு நான்கில் மூன்று பங்கு, ஹாலண்டுக்கு குறைந்தபட்சம் 60 சதவீதம்)செலவின வெட்டுகளில் இருந்து பெறுவதற்குத் தான் இரு வேட்பாளர்களும் வாக்குறுதியளித்துள்ளனர்

மத்திய கிழக்கிலும் மற்றும் ஆப்பிரிக்காவிலும் அமெரிக்கா தலைமையிலான போர்களில் பிரான்சின் பங்குவகிப்பைத் தொடர்வதற்கான தங்களது ஆதரவை இரண்டு வேட்பாளர்களும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். இதன்மூலம் பிரான்சை நேட்டோவின் ஒருங்கிணைந்த இராணுவத் தலைமைக்குள் வைத்திருப்பதற்கு வாக்குறுதியளித்திருக்கின்றனர். ஐநாவின் ஒப்புதல் இருக்கும் பட்சத்தில் சிரியாவுக்கு எதிரான சர்வதேச இராணுவத் தலையீட்டில் பிரான்ஸ் பங்குபெறுவதற்கு தான் ஆதரவளிக்க இருப்பதாக ஹாலண்ட் நேற்று கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (காணவும்: பாரிஸ்சிரியாவின் நண்பர்கள் கூட்டம்: ஏகாதிபத்திய சக்திகள் சிரியாவுக்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்கின்றன).

நிதி உயரடுக்கு பிரெஞ்சு அரசுக் கடனுக்கு எதிரான ஊக வணிகத் தாக்குதல் சாதனங்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது - ஒரு வாரத்திற்கு முன்பாக, ஜேர்மன் பங்குச் சந்தையின் யூரெக்ஸ் என்னும் துணைநிறுவனம் இந்த நோக்கத்திற்காக ஒரு புதிய வகை எதிர்காலக் கொள்முதல் பங்குகள் (futures contract) வகையை உருவாக்கியது - என்ற போதிலும் அது ஹாலண்டின் வெற்றிக்கு அவர்கள் ஆட்சேபம் கொண்டிருக்கிறார்கள் என்பதால் அல்ல.

நேற்று ஒரு Parisian வங்கியின் பொருளாதாரத் தலைமை நிபுணரை மேற்கோள் காட்டி Libération தினசரி கூறியது: “சந்தைகள் இடது பக்கம் வாக்களிக்கிறதா அல்லது வலது பக்கம் வாக்களிக்கிறதா என்பதல்ல பிரச்சினை. அரசியல் வேலைத்திட்டங்களை விடவும் நிச்சயமற்ற நிலை தான் அவர்களை நகர்த்துகிறது.” Libération தனது தலையங்கத்தில் கருத்துத் தெரிவித்தது: “இரண்டாம் சுற்றுக்குப் பின்னர் சந்தைகள் பதட்டமடையுமானால், அவை சோதிக்கப் போவது ஹாலண்டை அல்ல, பிரான்சை.”

அதாவது வங்கிகளுக்கு நன்கு தெரியும், சார்க்கோசியின் மட்டத்திற்கு ஹாலண்டும் தங்கள் பக்கம் தான் இருக்கிறார் என்பதும், ஆனால் அவை செய்யவிழையும் ஆழமான சமூக வெட்டுகளுக்கு பிரெஞ்சு மக்களிடம் இருந்து தான் ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்பதும். உண்மையில், வருகின்ற ஜனாதிபதி பாரிய வெகுஜன எதிர்ப்பையும் தாண்டி இத்தகைய வெட்டுகளைத் திணிக்கின்ற வகையிலான ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்குவது தான் இவற்றின் விநோதமான நிதி சாதனங்கள் உருவாக்க முனைகிற நிதித்துறைப் பீதிகள் மற்றும் ஊக வணிகத் தாக்குதல்களின் கடைந்தெடுத்த நோக்கமாய் இருக்கிறது.

இது பிரெஞ்சுத் தேர்தலிலான அடிப்படை யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: முதலாளித்துவஇடது”, வலதில் இருந்து அதிகம் பிரித்தறிய முடியாத நிலையில் இருக்கும் சூழலில், தொழிலாள வர்க்கம் இடதின் பக்கத்திலான ஒரு அரசியல் வெற்றிடத்தின் மூலமாக வாக்குரிமை மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் மீதான நச்சுத்தனமான தாக்குதல்களும் பெரும் வர்க்கப் போர்களும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கப்படும் நிலையில், தொழிலாள வர்க்கம் ஒரு புதிய அரசியல் சுயாதீனமான சோசலிச இயக்கத்தை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஹாலண்ட் மீதான விமர்சனங்களை உச்சரித்திருக்கின்ற அதே சமயத்தில், இடது முன்னணி தான், அனைத்து சிறு கட்சிகளிலும், முக்கிய முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றுடன் - இச்சந்தர்ப்பத்தில் PS உடன் - மிக நெருக்கமாய் நிற்கும் கட்சியாக உண்மையில் இருக்கிறது. PS வெல்ல ஏற்பாடு செய்து விட்டு பின் இடது-சாரி கொள்கைகளுக்காக அதற்கு நெருக்குதல் கொடுப்பது என்பதான கருத்தில் தான் வெளித்தெரியா வண்ணம் அதன் விண்ணப்ப அடித்தளம் அமைந்துள்ளது. வருகின்ற மாதங்களில் இந்தப் பிரமை அப்பட்டமாய் அம்பலப்படவிருக்கிறது, ஏனென்றால் வரவிருக்கும் ஜனாதிபதி, அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தாலும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராய் ஆழமான தாக்குதல்களைத் தொடுக்கவிருக்கிறார்

தொழிலாள வர்க்கத்தில் ஒரு அரசியல் சுயாதீனமான இயக்கம் உருவாகாத பட்சத்தில், இடது முன்னணி மற்றும் PS இன் நம்பிக்கைத்துரோகத்தால் பிரதானமாகப் பலனடையவிருப்பது கடுகடுப்பான முகத்துடன் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு விமர்சகராகவும் எதிரியாகவும் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கும் நவ பாசிச லு பென் தான். லியோனில் ஏப்ரல் 7 அன்று நடந்த கூட்டத்தில், “வங்கிகளாலும் நிதிய சந்தைகளாலும் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வாதிகாரத்தை கண்டனம் செய்த அவர், தான் மட்டுமேஅமைப்புமுறைக்கு எதிரான ஒரே வேட்பாளர் என்று கூறிக் கொண்டார்.