WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
பாரிஸ்
”சிரியாவின்
நண்பர்கள்”
கூட்டம்:
சிரியாவுக்கு எதிரான போருக்கு ஏகாதிபத்திய சக்திகள் தயாரிப்புச்
செய்கின்றன
By Johannes Stern
21 April 2012
use
this version to print | Send
feedback
பெரும் ஏகாதிபத்திய சக்திகளையும்,
அவர்களது நேட்டோ கூட்டாளிகளையும் மற்றும் வளைகுடாப் பகுதி
முடியாட்சிகளையும் கொண்ட
“சிரியாவின்
நண்பர்கள்”
என்று அழைத்துக் கொள்கின்ற ஒரு அமைப்பு சிரியாவுக்கு எதிரான தங்களது
போர்த் தயாரிப்புகளை தீவிரப்படுத்த வியாழனன்று மாலையில் பாரிஸில் சந்தித்தது.
அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டன்,
“ஆசாத்
ஆட்சிக்கு எதிராய் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் நாம் நிறையச் செய்ய
வேண்டியிருப்பதாகக் கருதுகிறேன்”
என்று அக்கூட்டத்தில் அறிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில்
“7
ஆம் அத்தியாய தடைத் தீர்மான”த்திற்கு
அவர் அழைப்பு விடுத்தார்.
இன்னொரு நாட்டிற்கு எதிரான இராணுவத் தலையீட்டுக்கு அனுமதிக்கும்
சாசன வசதியைக் குறிப்பிட்டு அவர் அதனைக் கூறினார்.
பயணப் போக்குவரத்துத் தடைகள்,
நிதித் தடைகள் மற்றும் ஆயுதக் கொள்முதல் தடைகளையும் அத்துடன்
“கோபி
அனானின் ஆறு அம்ச வேலைத்திட்டத்திற்கு இணங்குவதற்கு அந்த ஆட்சிக்கு நாம்
அளிப்பதற்கான அழுத்தத்திற்கும்”
அவர் வலியுறுத்தினார்.
கோபி அனானின் அமைதித் திட்டத்தை ஹிலாரி கிளிண்டன்
கையிலெடுப்பதென்பது முற்றிலும் சிடுமூஞ்சித்தனமானதாகும்.
முதல் நாளில் இருந்தே,
அனான் மத்தியஸ்தம் செய்து வரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை சிரிய
ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தின்
ஆட்சிக்கான ஒரு பொறியாகவே அமெரிக்கா பயன்படுத்தி வந்திருக்கிறது.
”அமைதி”க்கு
ஆதரவளிப்பது போல் தோற்றம் காட்டிக் கொண்டே,
அமெரிக்கா,
ஆசாத்தை பதவியில் இருந்து அகற்றுவது தான் இந்த செயல்முறையின் இலக்கு
என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
அத்துடன் சிரிய எதிர்ப்புப் படையினர் சிரிய அரசாங்க பாதுகாப்புப்
படைகளுக்கு எதிராய் மேற்கத்திய நிதியாதாரத்துடனும் ஆயுதமேந்தியும் நடத்தி வருகிற
குண்டு வெடிப்புகள் மற்றும் பிற தாக்குதல்களுக்கு ஓசையின்றி ஆதரவளித்தும் வருகிறது.
எதிர்ப்புப் படைகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் நிலைக்கு ஆட்சியை
சீண்டி விடுவது,
பின் போர் நிறுத்தத்தை ஆசாத் மீறி விட்டார் என்று சொல்லி அதை
தீவிரப்பட்ட இராணுவத் தலையீட்டுக்கான நொண்டிச்சாக்காய் பயன்படுத்துவது என்பது தான்
ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்காவின் சிந்தனையாக இருந்து வந்திருக்கிறது.
ஒரே மூச்சாக
“அமைதியை”
வலியுறுத்துவதாய்க் கூறும் ஹிலாரி கிளிண்டன் அடுத்த மூச்சில்
எதிர்ப்புப் படையினருக்கான அமெரிக்க உதவியை அதிகப்படுத்துவதை அறிவித்தார்.
”சிரிய
எதிர்ப்பாளர்களுக்கான தகவல் பரிவர்த்தனை,
தடவாளப் பரிவர்த்தனை மற்றும் பிற உதவிகளை”
அமெரிக்கா விரிவுபடுத்திக் கொண்டிருப்பதாய் அவர் அறிவித்தார்.
சிரியாவுக்குள்ளான எதிர்ப்புக் குழுக்களுக்கான உதவியை துருக்கி
அளிக்கும் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைப்பதையும் அமெரிக்கா சிந்தித்து வந்ததாகவும்
அவர் தெரிவித்தார்.
பாரிஸ் கூட்டத்தில் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான
இளவரசர் சவுத் அல்-ஃபசல்
உடன் ஹிலாரி கிளிண்டன் நெருக்கமாய் விவாதித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல்
1
அன்று இஸ்தான்புல்லில் நடந்த
“சிரியாவின்
நண்பர்கள்”
கூட்டத்தில் கத்தாரும் சவுதி அரேபியாவும்
“கிளர்ச்சியாளர்களை”உத்தியோகபூர்வமாய்
தங்களது ஊதியப் பட்டியலில் வைத்தன.
அமெரிக்கா,
பிரான்ஸ்,
பிரிட்டன் மற்றும் வளைகுடா அரசுகளின் சிறப்புப் படைகள் ஏற்கனவே
சிரியாவுக்குள் இயங்கி வருவதாய் தகவல்கள் கூறுகின்றன.
சிரியாவில் நேட்டோவின் பாத்திரத்திற்கான சாத்தியத்தையும் ஹிலாரி
கிளிண்டன் சுட்டிக் காட்டினார்.
ஏப்ரல்
9
அன்று எல்லைப்புறத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் துருக்கிய எல்லையின் மீது சிரியப் படைகள் சுட்டதில்,
ஒரு அகதிகள் முகாமில் இருந்த நான்கு சிரியர்களும் இரண்டு துருக்கிய
ஊழியர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக துருக்கியப் பிராந்தியத்தில் இருந்து தங்களது படைகள் மீது
தாக்குதல் நடத்தப்பட்டதாய் சிரிய ஆட்சி கூறுகிறது.
சிரிய எல்லையை ஒட்டிய துருக்கிய பிராந்தியம் தான் கிளர்ச்சிப்
படையான
“சுதந்திர
சிரியப் படை”யின்
செயல்பாடுகளின் பிரதான தளமாக இருக்கிறது.
சென்ற வாரத்தில் இச்சம்பவத்திற்கு பதிலிறுப்பு செய்த துருக்கியின்
பிரதமர் ரிசெப் தயிப் எர்டோகன் பிரிவு
5
இன் கீழ் நேட்டோவிற்கு இருக்கும் பொறுப்புகளைக் குறிப்பிட்டார்.
நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின் மீது நடத்தப்படும் தாக்குதல்
ஒட்டுமொத்த நேட்டோ உறுப்புநாடுகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும்,
அதற்கு கூட்டான பதிலடி தரப்பட முடியும் என்று நேட்டோ ஒப்பந்தத்தின்
இந்தப் பிரிவு அறிவிக்கிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலின் ஏழாம் அத்தியாயத்
தீர்மானம் இல்லாமலேயே
(இதுவரை
ரஷ்யாவும் சீனாவும் இதைத் தடுத்து வந்திருக்கின்றன)சிரியா
மீது நேட்டோ தாக்குதல் நடத்துவதற்கு இந்தப் பிரிவு
5
இன் பயன்பாடு அனுமதிக்கும்.
“சர்வதேச
அமைதி மற்றும் பாதுகாப்பை”
மீட்சி செய்வதற்கு இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு
கவுன்சிலை
7
ஆம் அத்தியாயத் தீர்மானம் அனுமதிக்கிறது.
7
ஆம் அத்தியாயத்தின் கீழ் மார்ச்
17, 2011
அன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட
தீர்மானம்
1973
தான் லிபியாவில் ஆட்சிமாற்றம் செய்ய அமெரிக்கா-நேட்டோ
போர் புரிவதற்கான சட்டரீதியான மறைப்புத் திரையை வழங்கியது.
பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி பாரிஸ் கூட்டத்தின் தொனியை
நிர்ணயித்தார்.
ஆசாத்தை ஒரு பொய்யர் என்று அழைத்த அவர்,
லிபியப் போரின் முடிவில் மேற்கத்திய ஆதரவுடனான
“கிளர்ச்சியாளர்”களால்
படுகொலை செய்யப்பட்ட லிபியத் தலைவர் முமார் அல்-கடாபி
உடன் ஆசாத்தை ஒப்பிட்டார்.
“பஷார்
அல்-ஆசாத்
அவமானகரமான வகையில் பொய் கூறிக் கொண்டிருக்கிறார்.
கடாபி பெங்காசி நகருக்குச் செய்தது போல் இவர் ஹோம்ஸ் நகரை
வரைபடத்தில் இருந்தே அழித்து விடுவதற்கு விரும்புகிறார்”என்று
யூரோப்
1
வானொலியில் சார்க்கோசி அறிவித்தார்.
சிரியாவில் மனிதாபிமான கூடங்களை உருவாக்க வேண்டும்,
அப்போது தான்
“அங்கு
எதிர்ப்பவர்கள் இருப்பதற்கே முடியும்”
என்றார் அவர்.
லிபியக் காட்சிகளை சிரியாவில் மீண்டும் நிகழ்த்திக் காட்ட
ஏகாதிபத்திய சக்திகள் தீர்மானித்து விட்டிருப்பதையே இவை அனைத்தும் காட்டுகின்றன.
லிபியா விவகாரத்தில் போலவே,
இரத்த ஆறு ஓடுவதை நியாயப்படுத்துவதற்கு மிக சிடுமூஞ்சித்தனமான
பொய்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உண்மையில்
“பெங்காசியை
வரைபடத்தில் இருந்து துடைத்தழிப்பதற்கு”
கடாபி ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
மாறாக,
நேட்டோ தான்,
களத்தில் இருந்த அதன்
“கிளர்ச்சி”ப்
பினாமிகளைக் கொண்டு
-
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சிறப்புப் படைகளின் உதவியுடன்
- “அப்பாவி
மக்களை”ப்
பாதுகாப்பதான வெளித்தோற்றத்தில் மிகப் பெரும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை
ஒருங்கிணைப்பு செய்தது.
இந்த நிகழ்முறையில்,
அமெரிக்கா,
பிரான்ஸ்,
பிரிட்டன் மற்றும் இவற்றின் நேட்டோ உடந்தையாளர்கள் எல்லாம் சேர்ந்து
பத்தாயிரக்கணக்கிலான லிபியர்களைக் கொன்று குவித்ததோடு திரிப்போலி மற்றும் சிர்டே
உள்ளிட்ட ஒட்டுமொத்த நகரங்களையும் குப்பை மேடுகளாக்கினர்.
சூழ்நிலையைக் கண்காணிக்க
300
பார்வையாளர்களை சிரியாவுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தத்தில்
வியாழனன்று சிரியாவும் ஐக்கிய நாடுகள் சபையும் கையெழுத்திட்டன.
இதனிடையே போர்நிறுத்த மீறல்களுக்கான ஒட்டுமொத்த பழியையும் ஆசாத்தின்
மீது தூக்கிப் போடுவதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையின் ஒரு கருவியாக
ஐநாவின் பாத்திரத்தை ஐநா பொதுச் செயலரான பான் கி மூன் விளங்கப்படுத்தியிருக்கிறார்.
சிரிய அரசாங்கம்
“அதன்
துருப்புகளின் நடவடிக்கைகள் அல்லது அவற்றின் இடநிறுத்தங்களின் விடயத்திலோ,
அல்லது அவை மீண்டும் தங்கள் படையிடங்களுக்குத் திரும்பும்
விடயத்திலோ தான் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட கடமைப்பாடுகளை”
முழுமையாகச் செயல்படுத்துவதில் தோல்வி கண்டிருப்பதாக அவர் கண்டனம்
செய்தார்.
அதேநாளில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சாட்சியமளித்த பாதுகாப்புச்
செயலர் லியோன் பனெட்டாவும் படை ஊழியர்களின் கூட்டுத் தலைவர்களின் தலைவரான ஜெனரல்
மார்ட்டின் டெம்சேயும் அமெரிக்கா போருக்குத் தயார் நிலையில் இருப்பதன் தெளிவான
சமிக்ஞைகளை அளித்தனர்.
அழைக்கப்படுகையில் நடவடிக்கைக்குத் தயார் நிலையில் அமெரிக்க
இராணுவம் இருப்பதாய் டெம்சே அறிவித்தார்.
பனெட்டா கூறினார்:
“இராணுவத்தை
ஈடுபடுத்தும் விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேச சமுதாயத்தில் அது விடயத்தில் ஏதாவது
செய்ய முயலுவதற்கு ஒரு ஒற்றுமை எழுவது தான்,
அமெரிக்கா அதனை செய்வதற்கு இருக்கும் ஒரே வழி என்பது தெளிவாக
இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.”
ஆசாத்
“பதவியிறக்கப்படுவார்”
என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.
லெவான்
(Levant)
பகுதியில் இருக்கும் மூலோபாயரீதியான முக்கியத்துவம் பெற்ற இந்த நாடு
13
மாதங்களாய் ஆயுத மோதலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது.
2011
மார்ச்சில் ஆசாத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்த சற்று
காலத்திற்கெல்லாம்,
மேற்கத்திய சக்திகள் ஒரு தலையீட்டை வைப்பதற்கு அச்சூழ்நிலையைக்
கைப்பற்றிக் கொண்டு விட்டன.
துருக்கி மற்றும் வளைகுடா சர்வாதிகாரங்களுடன் இணைந்து வேலை செய்து,
இவை,
சுதந்திர சிரியப் படைக்கும் பிற பிரிவினைவாத சுன்னி
“கிளர்ச்சி”க்
குழுக்களுக்கும் ஆயுதங்களை வாரி வழங்கி அவை அரசாங்கக் கட்டிடங்களுக்கும்
பாதுகாப்புப் படையினருக்கும் எதிராய் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு
வழிவகை செய்து கொடுத்தன.
சிரியாவுக்கு எதிரான போர்த் தயாரிப்புகள் ஒட்டுமொத்த மத்திய
கிழக்குப் பகுதியையும் ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான
ஒரு விரிந்த திட்டத்தின் ஒரு பாகமாகும்.
வாஷிங்டனில் பனெட்டாவுடன் சந்தித்ததற்குப் பின்னர் இஸ்ரேலின்
பாதுகாப்பு அமைச்சரான எஹுத் பராக்
CNNக்கு
அளித்த நேர்காணல் ஒன்றில்,
ஆசாத்தை அகற்றுவது
“ஈரானை
மிகப்பெரும் வகையில் பலவீனப்படுத்தும்”
என்றார்.
அவர் தொடர்ந்து கூறினார்:
“இது
மட்டும் தான் அரபு உலகத்திற்குள் ஈரானியர்களின் சாவடி போல் இருக்கிறது.
ஈரானியர்கள் அரபியர்கள் அல்ல,
எனவே இது லெபனானில் ஹெஸ்போல்லாவையும் காசாவில் ஹமாஸையும் என
இரண்டையுமே மிகப் பெருமளவில் பலவீனப்படுத்தும்.
அத்தகைய ஒன்று ஒரு மிக நம்பிக்கையூட்டும் நிகழ்வாக இருக்கும்.”
பிரான்ஸ்,
லிபியாவில் போலவே தனது முன்னாள் காலனிகளில் ஒன்றான சிரியாவில்,
ஒரு மேற்கத்திய ஆதரவு ஆட்சியை அமர்த்தி வைப்பதில் ஒரு தலைமைப்
பாத்திரத்தை வகித்துக் கொண்டிருக்கிறது.
ஏப்ரல்
22
அன்று ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று நடைபெறுவதற்கு இரண்டே
நாட்கள் முன்னதாய் வெள்ளியன்று,
சோசலிஸ்ட் கட்சியின்
(PS)
ஜனாதிபதி வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்ட்,
சிரியாவுக்கு எதிரான போரை தான் ஆதரிப்பதாய் பிரான்சின்
கூட்டாளிகளுக்கு வாக்குறுதியளித்தார்.
“ஐக்கிய
நாடுகள் அமைப்பின் கட்டமைப்புக்குள்ளாக செய்யப்படுமானால்,
அந்தத் தலையீட்டில் நாம் பங்கேற்போம்”
என்று
அவர் அறிவித்தார். |