World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Fascist Anders Breivik defends mass killings as trial opens in Norway

நோர்வேயில் விசாரணை தொடங்குகையில் பாசிச ஆண்டெர்ஸ் ப்ரீவிக் ஏராளமான பேர் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்துகின்றார்

By Jordan Shilton
18 April 2012
Back to screen version

வழக்கு விசாரணையின் இரண்டாம் நாள் அன்று, ஆண்டர்ஸ் ப்ரீவிக் தான் ஒஸ்லோவிலும், பெரும்பாலும் நோர்வேயின் தொழிற்கட்சி இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்களை யுடோயா தீவிலும் கடந்த ஜூலை 22ல் 77 பேரை படுகொலை செய்ததை நியாயப்படுத்தி பேசியதுடன், தான் அவ்வாறு மீண்டும் செய்யக்கூடும் என்றும் கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் இப்படுகொலைகள் மிகவும் நயமானவை, வியத்தகு அரசியல் தாக்குதல் என்று தான் செய்தவற்றை விவரித்த ப்ரீவிக், தன்னை கம்யூனிச-எதிர்ப்பு, இஸ்லாமிய-எதிர்ப்பு இயக்கத்தின் தளபதி என்றும் அது குடியேறியவர்கள், முஸ்லிம்கள் மற்றும் நோர்வேயில் உள்ள ஒரு மார்க்சிச சர்வாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானது என்றும் கூறினார்.

தன்னுடைய குற்றத்தின் அரசியல் இயல்பு குறித்து ப்ரீவிக்கே வலியுறுத்தியபோதிலும், இதற்கு முந்தைய விசாரணையும், வழக்குமே பொதுவாக கொலை செய்தவரின் மனநிலை பற்றிய பிரச்சினையில் முக்கியத்துவத்தை காட்டின. வழக்கு விசாரணை ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்புதான், நீதிமன்றம் நியமித்த மனநோய் மருத்துவர்கள் குழு ஒன்று அதன் இரண்டாம் அறிக்கையில் நவம்பர் 2011ல் கொடுத்த முந்தைய மதிப்பீட்டிற்கு முரணாக ப்ரீவிக் குற்றம்சார்ந்த தன்மையில் மனநலம் குன்றியவர் என்று கருதப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய அறிக்கை ப்ரீவிக்குடன் நேர்காணல்களை நடத்தி, அவருடைய செயற்பாடுகளை நீண்டகாலத்திற்கு அவதானித்த இரு மனநோய் மருத்துவர்களின் இரண்டுமாத உழைப்பில் தயாரிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தின் பார்வையில் இது, ப்ரீவிக்கின் மனநலம் பற்றிய பிரச்சினையை தீர்த்துவிடவில்லை.

இரண்டு முரண்பட்ட அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் ப்ரீவிக்கின் மனநிலை பற்றிய சந்தேகத்தின் அளவை ஒட்டி அவர் குற்றம் சார்ந்த வகையில் மனநோயாளி என அறிவிக்கப்படலாம் என்ற முடிவிற்கு வரலாம். அதையொட்டி அவர் சிறையில் தடுத்துவைக்கப்படாது மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான நிலையத்திற்கு அனுப்பப்படலாம்.

இந்த விவாதம் அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் ப்ரீவிக்கின் தாக்குதல்களைத் தடுப்பதில் தோற்றுவிட்டதின் பங்கு பற்றிய பல வினாக்களை மறைப்பதற்குத்தான் உதவுகிறது. ஜனவரி மாதம் ப்ரீவிக் மார்ச் 2011ல் நோர்வேஜிய பொலிசிடம் தான் தொழிற்கட்சி இளம் உறுப்பினர்களைப் படுகொலை செய்யத் தயாரிப்புக்கள் நடத்திவருவதாக எச்சரித்திருந்தார். இந்தத் தகவல் உரிய அதிகாரிகளுக்கு ஜூலை 22வரை தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ப்ரீவிக் போலந்தில் இருந்து அதிகளவு உரம் வாங்கியதை உளவுத்துறை கண்டுபிடிக்கத் தவறியது மற்றும் ஒஸ்லோவிற்கு வெளியே ஒரு பண்ணையை அவர் வாடகைக்கு எடுத்ததை விசாரணை செய்யத் தவறியமை இதைத்தொடர்ந்து வெளிந்துள்ளது. அப்பண்ணையில்தான் அவர் தன் தாக்குதல்களுக்கான தயாரிப்பை நடத்தியிருந்தார். நோர்வேயின் உளவுத்துறைப் பிரிவுடைய தலைவர் இதையொட்டி இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார்.

ஐரோப்பா முழுவதும் வலதுசாரிக் குழுக்களுடன் ப்ரீவிக் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய சான்றுகள் பெருகியுள்ளன. இவை இவரை ஒரு தனியான ஓனாய் என்று காட்ட எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ முயற்சியை முரண்பாட்டிற்குள்ளாக்கின்றது. சமீபத்திய மனநோய் பற்றிய அறிக்கை ப்ரீவிக் அவர் சிறையில் இருக்கும்போது அவருடைய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்த கணிசமான கடிதங்களைப் பெற்றார் என்பதைக் குறிப்பிடுகிறது.

ப்ரீவிக் ஒரு 1,500 பக்க பிரகடனம் ஒன்றை படுகொலை செய்வதற்குச் சில மணிநேரம் முன்பு வலைத் தளத்தில் வெளியிட்டதற்கு மேலதிகமாக இத்தகவல் உள்ளது. இப்பிரகடனத்தில் அவர் தன் தாக்குதலின் நோக்கம் ஐரோப்பா முழுவதும் மார்க்சிச கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு பழமைவாத கலாச்சாரப் புரட்சியைக் கொண்டுவர இருப்பதாக வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய பாசிச நோக்கத்திற்கு விளம்பரம் கொடுக்கும் வகையில் கொலைகளைப் பற்றிய விசாரணையை பயன்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ப்ரீவிக்கின் குற்றங்களில் உள்ள சிந்தாந்தப்போக்கு மற்றும் அதற்கான  அரசியல் வேர்களை எதிர்நோக்க உள்ள விருப்பமின்மை என்பது 33வயது பயங்கரவாதி போன்ற தீவிர வலதுச் சக்திகளை வளர்ப்பதில் நோர்வே மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள ஆளும் உயரடுக்கின் உடந்தையுடன் பிணைந்து உள்ளது.

ப்ரீவிக்கின் கூற்றுக்கள் ஒருபுறம் இருக்க, நோர்வேயின் தொழிற்கட்சி புலம் பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வைக் கடந்த தசாப்தம் முழுவதும் முன்னெடுத்து வந்துள்ளது. இதற்காக வலதுசாரி Progress Party யின் வார்த்தை ஜாலங்களை தான் அதிகம் ஏற்றுள்ளது. அக்கட்சியில்தான் ப்ரீவிக் 2007 வரை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உறுப்பினராக இருந்தார்.

மனித ஆட்கடத்துதலை கையாளல் என்ற மறைப்பில் வந்துள்ள தொழிற்கட்சி சமீபத்திய திட்டம் பொலிஸுக்கு புலம் பெயர்ந்தவர்களை நாடுகடத்தும் அதிகாரத்தை அளிக்கும். நோர்வேயின் சட்டப்படி பிச்சை எடுப்பது குற்றம் இல்லை என்றாலும், இவர்கள் பிச்சைக்காரர்கள்என்று முத்திரையிட்டு அவ்வகையில் நாடு கடத்தப்படுவர்.

தான் தயாரித்த அறிக்கையில், ஐரோப்பாவில் மூன்று மிகச் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று ப்ரீவிக் சுட்டிக்காட்டியுள்ளார். சார்க்கோசி, மேர்க்கெல் மற்றும் காமெரோன் ஆகியோர் பன்முக கலாச்சார முறை செயல்படுவதில்லை என ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் இருவரும் பன்முக கலாச்சார முறையின்” “தோல்வி குறித்து அறிவித்துள்ளனர். நிக்கோலோ சார்க்கோசியோ தன்னுடைய பிரெஞ்சு ஜனாதிபதி மறுதேர்தல் பிரச்சாரத்தில் புதிய பாசிசத் தேசிய முன்னணியின் புலம் பெயர்வோர்-எதிர்ப்பு, முஸ்லிம்-எதிர்ப்பு போராட்டத்தைச் சுற்றி ஆதரவைப் பெற முற்படுகிறார். முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது இப்பொழுது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் நடைமுறையில் உள்ளது. இதனால் முஸ்லிம் வழி உடையுடுத்துதல் மீதான தடை வந்துள்ளதுடன் மற்றும் பிற ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.

சமீபத்திய மாதங்கள் ஜேர்மனிய உளவுத்துறைப் பிரிவுகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாசிச அமைப்பு ஒன்று தொடர்ந்து செயல்படுத்தும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வசதி அளித்து, ஒத்துழைப்பதில் கொண்டுள்ள பங்கை அம்பலப்படுத்தியுள்ளன.

ப்ரீவிக் விசாரணை தொடங்குவதற்கு இரு வாரங்கள் முன்பு, EDL எனப்படும் ஆங்கிலப் பாதுகாப்புக்குழு மற்றும் அதற்கு ஒப்பான டென்மார்க்கின் பிரிவுடைய ஆர்ப்பாட்டம் டென்மார்க்கில் நடைபெற்றது. இது ஐரோப்பா முழுவதும் ஒரு தீவிர வலதுசாரி அமைப்பு தொடங்கப்படுவதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஜேர்மனி, போலந்து மற்றும் ஸ்வீடனில் இருந்து பங்குபெறுவோர் கலந்து கொண்டனர்.

 

கார்டியனில்  வந்துள்ள தகவல் ஒன்று ப்ரீவிக்கின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குபின்  வலதுசாரித்தன, புதிய பாசிய அமைப்புக்களின் வளர்ச்சி சர்வதேச அளவில் பெருகிவிட்டன. அறக்கட்டளைகள், ப்ளாக் எழுதுபவர்கள், அரசியல் செயலர்கள், தெரு ரௌடிகளின் வலைப்பின்னல்கள் நாடுகளை இஸ்லாமியமயமாக்குவதை நிறுத்துக என்பதற்கு ஒன்றாகச் சேர்ந்துள்ளன எனத் தெரிவிக்கிறது.

இக்குழுவை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய அரங்கு அமெரிக்காவைத் தளம் கொண்டுள்ள Gates of Vienna blog ஆகும். இதற்கு ப்ரீவிக் படுகொலைகளைச் செய்வதற்கு முன் வாடிக்கையாக பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்த அமைப்பு 9/11 தாக்குதல்கள் நினைவுதினத்தை ஒட்டி நியூயோர்க்கில் ஒரு உச்சிமாநாட்டை நடத்த உள்ளன. இதில் பிரிட்டிஷ் சுதந்திரக் கட்சியின் —EDL  உடைய அரசியல் பிரிவு தலைவர் போல் வில்சன் போன்றோர் சிறப்புப் பேச்சாளர்களாக இருப்பர். ப்ரீவிக் வெஸ்டன் தனது பிளாக்கில் பதிவுசெய்திருந்த, மேற்கிற்கும் இஸ்லாமிற்கும் இடையே ஐரோப்பிய உள்நாட்டுப் போர் என்னும் பொருள் பற்றி எழுதியிருப்பதை ப்ரீவிக் மேற்கோளிட்டுள்ளார்.

ப்ரீவிக் புரிந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வசதியளித்த பங்கைக் கொண்டிருந்த இக்குழுக்கள் தடையின்றி தங்கள் செயற்பாடுகளை நடத்தவும் ஒருங்கிணைக்கவும் அனுமதித்து, அதுபற்றி அதிகாரிகள் விசாரணை ஏதும் செய்யாமல் இருப்பது தொழிலாளர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் முதலாளித்துவ முறை ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கும் நிலை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீதான பாரிய தாக்குதல்கள் நடத்தப்படும் நேரத்தில், பாசிசப் பயங்கரவாதம் மறு எழுச்சி பெற்றுள்ளது. தீவிர வலது மற்றும் பாசிசப் போக்குகளின் வளர்ச்சி முதலாளித்துவ அரசால் ஆதரவுக்கு உட்பட்டுள்ளது. அதேபோல் அநேகமாக எல்லா உத்தியோகபூர்வ கட்சிகளுடைய ஆதரவும் உள்ளது. இதில் பெயரளவிற்கு இடது என்னும் அமைப்புக்களும் அடங்கும். இச்சக்திகளுக்கான ஆதரவு கொடுக்கப்படுவதற்கு காரணம் தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்புப் போராட்டங்கள் வெளிவரும்போது அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காகும்.