WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French president and Socialist Party
candidate hold Paris rallies
பிரெஞ்சு ஜனாதிபதியும்,
சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரும் பாரீஸில் பேரணிகளை
நடத்துகின்றனர்
By Antoine Lerougetel and Johannes Stern
18 April 2012
ஞாயிறன்று
பாரீஸில்
நடத்திய
வெட்டவெளி
பேரணிகளின்
போட்டாபோட்டியில்
தற்போதைய
ஜனாதிபதி
நிக்கோலா
சார்க்கோசியும்
சோசலிஸ்ட்
கட்சி
வேட்பாளர்
பிரான்சுவா
ஹாலண்டும்
ஏப்ரல்
22இல்
நடக்கவுள்ள
முதல்
சுற்று
ஜனாதிபதி
தேர்தல்களில்
முந்துவதற்காக
அவரவர்களின்
பிரச்சாரங்களை
முன்னுக்குத்தள்ள
முயன்றனர்.
Place de la Concorde
என்னும்
இடத்தில்
சார்க்கோசி
பேசினார்;
அதேவேளை
ஹாலண்டின்
பேரணி
Château de Vincennes
என்னும்
இடத்தில்
நடந்தது.
இரண்டு
தரப்பும்
அவர்களின்
பேரணிகளில்
100,000
பேர்
பங்கு
பெற்றதாக
மிகைப்படுத்தி
தெரிவித்திருந்தன.
தற்போது
கருத்துகணிப்புகள்
முதல்
சுற்றில்
27
சதவீதத்தில்
இருக்கும்
சார்கோசிக்கு
மிக
நெருக்கத்தில்
ஹாலண்டை
கொண்டு
வந்து
நிறுத்துகின்றன.
இருந்தபோதினும்,
அவை
தற்போதைய
ஜனாதிபதியை
விட
56
சதவீதத்திற்கு
44
சதவீதம்
என்றளவில்
ஹாலண்ட்
முந்தி
செல்வதற்கு
வாய்ப்பளிக்கின்றன.
நிதியியல்
சந்தைகள்
மற்றும்
ஐரோப்பிய
ஒன்றியத்தால்
(EU)
கோரப்பட்ட
சிக்கன
முறைமைகளைத்
தேர்தலுக்குப்
பின்னர்
நடைமுறைப்படுத்த
விரும்புவதாக
அந்த
இரண்டு
பிரதான
வேட்பாளர்களுமே
தொடர்ந்து
தெளிவுபடுத்துகின்றனர்.
பிரான்ஸின்
பற்றாக்குறையை
பூஜ்ஜியமாக
குறைக்கவும்,
பொருளாதாரத்தை
மறுகட்டமைப்பு
செய்யவும்
(இது
தொழிலாள
வர்க்கத்தை
மேலும்
வறுமையில்
மட்டுமே
தள்ளக்கூடியவையாகும்)
அவர்கள்
இருவருமே
அறைகூவல்
விடுக்கின்றனர்.
சனியன்று
நிகழ்த்திய
அவருடைய
உரையில்
ஹாலண்ட்
சில
ஜனரஞ்சக
வார்த்தைஜாலங்களுக்கு
பின்னர்
அவருடைய
சிக்கன
முறைமை
சார்ந்த
நிகழ்ச்சிநிரலை
மறைக்க
முயன்றார்.
“அதிகரித்துவரும்
அநீதி,
உலக
ஒழுங்கமைப்பின்
உடைவு,
நம்முடைய
பூமி
சூறையாடப்படுவது
மற்றும்
சந்தையின்
மீதான
வெறுப்பு
ஆகியவற்றிற்கு
எதிரான
கோபத்தை
நான்
கேட்கிறேன்,”
என்று
தெரிவித்த
அவர்,
“தனிச்சலுகைகளை
முடிவுக்குக்
கொண்டு
வரும்
ஜனாதிபதியாக"
நான்
இருப்பேன்
என்றும்
பிரகடனப்படுத்தினார்.
முதல்
சுற்று
தேர்தல்
நடக்கவிருப்பதற்கு
இன்னும்
ஒரு
வாரத்திற்கும்
குறைவான
நாட்களே
இருக்கின்ற
நிலையில்,
ஹாலண்ட்
இடது
முன்னனியின்
(இடது
கட்சி
மற்றும்
ஸ்ராலினிச
கம்யூனிஸ்ட்
கட்சியின்
ஒரு
கூட்டணி)
வேட்பாளரான
ஜோன்-லூக்
மெலன்சோனின் வார்த்தைஜாலங்களோடு
இணங்கி
வருகிறார்.
அதிகப்படியான
குறைந்தபட்ச
கூலி
மற்றும்
செல்வந்தர்கள்
மீதான
வரிவிதிப்பு
போன்ற
அவருடைய
அறிக்கைகளால்
மெலன்சோன்
தொடர்ந்து
அதிகளவில்
ஆதரவைப்
பெற்று
வருகிறார்.
கணித்துகணிப்புகளில்
அவர்
தற்போது
சுமார்
15
சதவீத
வாக்குகள்
பெற்றுள்ளார்.
சார்கோசிக்கு
மாற்றாக
இருக்கக்கூடிய
ஒரே
எதார்த்தமான
"இடது"
தாம்
மட்டுமே
என்பதாக
காட்டிக்கொண்டு,
இடது
முன்னனியின்
வாக்காளர்களை
வென்றெடுப்பதே
ஹாலண்டின்
நோக்கமாக
உள்ளது.
முதல்
சுற்றில்
மெலன்சோனுக்கு
வாக்களிக்கும்
வாக்காளர்களுக்கு
"எதிர்காலமற்றதில்
வாக்களித்து
புகலிடம்
தேடாதீர்கள்"
என்று
கூறி
அழைப்புவிடுத்தார்.
அவர்
வாதிட்டது:
“பிரான்ஸிற்கு
தலைமை
அளித்து
எடுத்து
செல்லவும்,
மக்களின்
கோபத்தை
அரசு
சட்டங்களாக
மாற்றவும்
நான்
மட்டுமே
ஒரே
இடது
வேட்பாளர்
இருக்கிறேன்,”
என்றார்.
சிக்கன
நடவடிக்கைக்கு
ஆதரவான
அவரது
வேலைத்திட்டத்தின்
அடிப்படையிலேயே
மெலன்சோனின்
வாக்காளர்களுக்கு
ஹாலண்டால்
முறையீடு
செய்ய
முடிகிறதென்பது
முதலாமவரின்
அரசியல்
மீதும்
மற்றும்
ஒட்டுமொத்த
முதலாளித்துவ
"இடதின்"
மீதும்
ஒரு
குற்றபத்திரிகையாக
உள்ளது.
இந்த
சக்திகள்,
சமூக
சீர்திருத்தங்களை
நடைமுறைப்படுத்த,
தொழிற்சங்கங்களோடு
சேர்ந்து
வேலை
செய்து,
தங்களால்
ஹாலண்ட்டிற்கு
அழுத்தம்
அளிக்க
முடியுமென்ற
பிரமைகளை
ஊக்குவிக்கின்றன.
இந்த
வாதங்கள்
எரிச்சலூட்டுவதும்,
பொய்யானவையும்
ஆகும்.
சார்கோசியைப்
போலவே,
ஹாலண்டும்
பிரெஞ்சு
முதலாளிகளின்
மற்றும்
வங்கிகளின்
ஒரு
வேட்பாளர்
ஆவார்.
மெலன்சோனே
மறைந்த
ஜனாதிபதி
பிரான்சுவா
மித்திரோன்
மற்றும்
பிரதம
மந்திரி
லியோனல்
ஜோஸ்பன்
பன்முக
இடது
அரசாங்கத்தின்
வலதுசாரி
கொள்கைகளின்
ஒரு
ஆதரவாளர்
ஆவார்.
அவரால்
முன்மொழியப்பட்ட
எந்தவொரு
முறைமைகளையும்
நடைமுறைப்படுத்துவது
அவருடைய
நோக்கமல்ல.
ஹாலண்டிடம்
பிரமைகளை
உருவாக்குவதன்
மூலம்,
உண்மையில்
சோசலிஸ்ட்
கட்சியின்
தொழிலாள
வர்க்க
விரோத
வேலைத்திட்டத்தை
அவர்கள்
ஆதரிப்பதையே
மிலென்சோனும்
புதிய
முதலாளித்துவ
எதிர்ப்பு
கட்சியும்
தெளிவுபடுத்துகின்றன.
அவரது
சிக்கன
முறைமைகளின்
உட்கூறுகளில்
இருந்து
(ஏனைய
சமூக
வரவு-செலவு
கணக்குகளில்
இருந்து
நிதிகளை
பெருமளவிற்கு
மாற்றுவதிலிருந்து)
பகுதியாக
வெளியேறுவதற்கான
ஹாலண்டின்
முன்மொழிவை
கடந்த
புதனன்று
சார்க்கோசி
தாக்கினார்:
“நாம்
மக்கள்
பணியாளர்களை
நியமிக்க
தொடங்கினால்,
மீண்டும்
நாம்
செலவு
செய்ய
தொடங்கினால்,
ஓய்வூதிய
சீர்திருத்தத்தை
கேள்விக்கு
இடமாக்கிவிட்டால்,
வட்டிவிகிதம்
உயரும்
என்பது
வெறுமனே
ஓர்
அபாயமாக
இருக்காது,
அது
நிச்சயமாக
அவ்வாறு
தான்
நடக்கும்.
அது
உடனடியாக
நம்பிக்கை
இழப்பு
நெருக்கடியை
(crisis of confidence)
தோற்றுவிக்கும்,”
என்றார்.
ஞாயிறன்று
சார்க்கோசி
அவருக்கு
எதிரான
சோசலிஸ்ட்
போட்டியாளரின்
வார்த்தைஜாலத்தோடு
ஓரளவிற்கு
வரிசைகட்டி
நின்று,
ஐரோப்பிய
மத்திய
வங்களின்
மீதும்
மற்றும்
ஐரோப்பிய
ஒன்றிய
அரசியலின்
மீதும்
ஒரு
விமர்சனத்தை
முன்வைக்கவும்
முயன்றார்.
Place de la Concorde
இல்
அவருடைய
ஆதரவாளர்களிடம்
அவர்
கூறியது:
“மத்திய
வங்கி
வளர்ச்சியை
ஆதரிக்கவில்லையென்றால்,
நம்மால்
போதியளவிற்கு
வளர்ச்சியை
எட்ட
முடியாது.”
யூரோவை
மறுமதிப்பீடு
செய்யவும்
அல்லது
"ஐரோப்பிய
ஏற்றுமதியை
அதிகரிக்கும்
விதத்தில்
யூரோவிற்கான
செலாவணி
விகிதத்தை
சாத்தியமான
அளவிற்கு
இன்னும்
கூடுதலாக்கவும்"
அவர்
அழைப்புவிடுத்தார்.
பணப்புழக்கத்தைத்
தளர்த்தும்
முறையை
(deflation)
ஐரோப்பா
தேர்ந்தெடுக்கின்றதென்றால்,
"அது
இடந்தெரியாமல்
போய்விடும்;
நாம்
30களை
நினைவுபடுத்திப்
பார்க்க
வேண்டும்,”
என்றார்.
Le Monde
குறிப்பிட்டது:
“மரியோ
மொண்டியின்
[ஐரோப்பிய
ஒன்றியத்தால்
நியமிக்கப்பட்ட
இத்தாலிய
“தொழில்
உத்தியமை”
பொருந்திய
பிரதமர்]
முன்னிலையில்
நவம்பர்
24இல்
ஸ்ட்ராஸ்பேர்க்கில்
ஜேர்மன்
சான்சிலர்
ஆங்கேலா
மேர்கெலுடன்
நடந்த
மாநாட்டில்
மூடி
வைக்கப்பட்டிருந்த
மௌன
உடன்படிக்கையை,
அதாவது
ஐரோப்பிய
மத்திய
வங்கியை
ஒருபோதும்
குறிப்பிடக்
கூடாது,
அது
அதன்
வேலையைச்
செய்யட்டும்
என்பதை
நிக்கோலா
சார்க்கோசி
உடைத்துள்ளார்.”
திங்களன்று
France Info radioஇல்
நேர்காணல்
செய்யப்பட்ட
ஒரு
பொருளாதார
நிபுணர்
கூறுகையில்,
இதுபோன்றவொரு
கொள்கை
"வடக்கு
ஐரோப்பா
மீதான
ஒரு
யுத்த
பிரகடனத்திற்கு"
ஒப்பானதாகும்
என்றார்.
அனைத்திற்கும்
மேலாக
அது
ஐரோப்பிய
மத்திய
வங்கியின்
பண-அச்சடிப்பை
காரணமாக
அச்சுறுத்துகிறது
என்ற
அதீத-பணவீக்கத்தைத்
தவிர்க்க
விரும்புகிறது.
முதலாளித்துவத்தின்
சார்பாக
பிரெஞ்சு
தேசபற்றுவாத
(French chauvinism)
முறையீடுகளைத்
தூண்டிவிட்டு
சார்க்கோசி
சமூக
நெருக்கடியிலிருந்து
கவனத்தைத்
திசைதிருப்ப
முயற்சிக்கிறார்.
“பிரான்சின்
ஆத்மார்த்த"
பாரம்பரியத்தை
சிதைக்க
சோசலிஸ்ட்
கட்சியை
தாம்
அனுமதிக்க
போவதில்லை
என்று
அவர்
அவருடைய
ஆதரவாளர்களிடம்
கூறினார்.
“அதை
விஞ்சி
நிற்காமல்,
ஆனால்
அப்பட்டமான
தேசபற்றுவாத
முறையீடுகளுக்கும்
குறைவில்லாமல்"
ஹாலண்டும்
தேசிய
கொடிக்கு
மரியாதை
செலுத்தினார்
என்று
Le
Nouvel Observateur
குறிப்பிட்டது. |