World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Stalinist CPM promotes alliance with regional bourgeois parties

இந்தியா: பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளுடனான கூட்டணியை ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊக்குவிக்கிறது 

By Deepal Jayasekera in Kozhikode
7 April 2012
Back to screen version

இந்தியாவின் நாடாளுமன்ற ஸ்ராலினிசக் கட்சிகளில் பிரதானமானதான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், தனது 20வது தேசிய மாநாட்டை ஏப்ரல் 4 புதனன்று தொடக்கியது. தென்மேற்கு இந்திய மாநிலமான கேரளாவின் ஒரு துறைமுக நகரமான கோழிக்கோடில் நடந்து வரும் இந்த மாநாடு ஏப்ரல் 9 திங்களன்று நிறைவு பெறும்.

இதுவரையான அதன் விவாதங்களில், சிபிஎம் சமீப வருடங்களில் முன்னெடுத்த முக்கியமான கொள்கைகளை மாநாடு மறு உறுதி செய்திருக்கிறது. வலதுசாரி காங்கிரஸ்-கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டணி அரசாங்கத்தை 2004 மே முதல் 2008 ஜூன் வரை முட்டுக் கொடுத்தது மற்றும் மேற்கு வங்காளத்தில் சென்ற வருடத்தில் தோல்வி காணும் வரை அரசாங்கமமைத்திருந்த சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி அங்குமுதலீட்டாளர்-ஆதரவுகொள்கைகளை பின்பற்றியமை ஆகியவையும் மறு உறுதி செய்யப்பட்ட கொள்கைகளில் அடங்கும்.

ஏறிச் செல்லும் விலைவாசி, பொருளாதாரப் பாதுகாப்பின்மை, உடையும் பொதுச் சேவைகள், மற்றும் பிளவுற்றுச் செல்லும் சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழை மக்களிடம் இருந்து எதிர்ப்பு பெருகி வந்திருக்கக் கூடிய நிலைமைகளின் கீழ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும்(UPA)அதன் போட்டித் தேர்தல் அணியான இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA)”ஒரு இடதுசாரி ஜனநாயக மாற்றினைகட்டியெழுப்புவதற்கு சிபிஎம் மாநாடு அழைப்பு விடுக்கிறது. இந்தமாற்றுசிபிஎம் தலைமையிலான இடது முன்னணியையும் மற்றும் பல்வேறு பிற்போக்குவாத பிராந்திய மற்றும் சாதியக் கட்சிகளையும் கொண்டதாய் இருக்கும்.

CPM 2009 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அது பயன்படுத்தியமூன்றாவது அணிஎன்ற பதப் பிரயோகத்தை திட்டமிட்டு மறைத்தாலும் வித்தியாசம் பெருமளவில் வார்த்தை வித்தியாசத்தைத் தாண்டவில்லை.

ஏப்ரல் 5 அன்று செய்தியாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த CPM பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்: “நாங்கள்மூன்றாவது அணிஎன்கிற பிரயோகத்தைப் பயன்படுத்தவில்லை. மூன்றாவது அணி என்பது தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு முன்னணி அமைப்பு. இடது ஜனநாயக மாற்று என்பது எங்களது மூன்றாவது மாற்று. தேர்தல்களுக்கும் அன்றாடப் பிரச்சினைகளின் விடயத்திலும், நாங்கள் [பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளுடன்] சற்று புரிந்துணர்வுக்கு வர முடியும்.”

நடப்பு முதலாளி-நிலப்பண்ணையார் ஒழுங்கிற்கான ஒரே மாற்றுஒருஇடது ஜனநாயக முன்னணி மட்டுமே என்று ஏப்ரல் 5 அன்று வெளியான CPM செய்திக் குறிப்பு போற்றியதுஆனால் அதற்கடுத்ததாய் அதுமுதலாளித்துவக் கட்சிகள் என்று முத்திரை குத்துகின்ற, அத்துடன்முதலாளி-நிலப்பண்ணையார்ஒழுங்கினைத் தக்க வைப்பதற்கு முழு உறுதிப்பாடு பூண்டிருக்கின்ற, கட்சிகளுடன் கைகோர்த்து வேலை செய்வதற்கான நோக்கத்தையும் வெளிப்படுத்தியது. அச்செய்திக் குறிப்பு அறிவித்தது: “கூட்டாட்சி முறையையும் மதச் சார்பின்மையையும் பாதுகாத்து மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளுடனும் மற்றும் பிராந்தியக் கட்சிகளுடனும் மக்கள் பிரச்சினைகளில் கட்சி இணைந்து செயலாற்றும்.”

2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு, CPM ம் அதன் இடது முன்னணியும்மூன்றாவது அணிஒன்றை ஒட்டுப் போட்டு தைத்திருந்தன. தமிழகத்தைச் சேர்ந்த அஇஅதிமுக மற்றும் ஒரிசாவின் பிஜூ ஜனதா தளம் (BJD) போன்ற வலதுசாரிப் பிராந்தியக் கட்சிகளை இது கொண்டிருந்தது. இந்தக் கட்சிகள் எல்லாம் முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடனோ அல்லது பாரதிய ஜனதாக் கட்சியுடனோ அல்லது இரண்டு கட்சிகளுடன் மாறி மாறியோ கூட்டணி சேர்ந்து வந்திருப்பவை ஆகும் இயங்கத் தொடங்குவதற்கே முடியாததாக இந்த முன்னணி நிரூபணமானது மட்டுமல்ல. அதன் சிதிலமடைந்த தன்மையும் கடுகடுப்பான முகத்துடன் அது ஒன்று சேர்க்கப்பட்ட விதமும் ஸ்ராலினிஸ்டுகளின்மூன்றாவது அணிகருத்தை மதிப்பிழக்கச் செய்து விட்டது.  

போட்டித் தேர்தல் கூட்டணிகளில் ஏதாவது ஒன்று உவப்பான பங்கை முன்வைத்தால் நாளையே தாங்கள் கூட்டணியை விட்டு விலகி விடுவோம் என்பதை ஸ்ராலினிஸ்டுகளின் வெளிப்படையான மூன்றாவது கூட்டணிக் கூட்டாளிகளில் பலவும் தெளிவாக்கின. ஸ்ராலினிஸ்டுகளைப் பொறுத்தவரை, ஒரு கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியில் வந்து விட்டாலே போதும் அது இவர்களதுமதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின்வருகைப் பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கு.

UPA அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் மூன்றாவது அணி பற்றிய பேச்சை மூட்டை கட்டி விட்டனர். ஆனால் வலதுசாரி தேர்தல் கூட்டணிகளின் அத்தனை வகைகளையும் உருவாக்கிப் பார்ப்பதை அவர்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை உடைக்க திரளாய் கைதுகளையும் கூட்டங்களின் மீதான துப்பாக்கிச் சூடுகளையும் பயன்படுத்திய, அத்துடன் அரசியல் எதிரிகளைத் தண்டிக்க அசுரத்தனமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்திய அஇஅதிமுக கட்சி 2011 தமிழ்நாடு மாநிலத் தேர்தலில் வென்று அதிகாரத்திற்குத் திரும்ப உதவியதும் இதில் அடங்கும். ”நவ-தாராளவாதக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியைக் கண்டனம் செய்கின்ற அதேசமயத்தில், தொழிலாளர்கள் தங்களது சக்தியைமக்கள்-ஆதரவுக் கொள்கைகளைப் பின்பற்றுமாறு UPA அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுப்பதற்காகச் செலவிடுவதை நோக்கிச் செலுத்த வேண்டும் என்று CPM அவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

CPM மாநாட்டின் தொடக்க உரையில் கராத் கூறினார்: “UPA மற்றும் NDA ஆகிய இரண்டு கூட்டணிகளுமே திண்ணப்படுவதற்கும் வளருவதற்கும் தோல்வியுற்றிருப்பதையே சமீபத்திய அரசியல் அபிவிருத்திகள் காட்டுகின்றன. நடப்பு ஒழுங்கின் திவால் நிலையும் ஊழலடைந்த தன்மையும் மேலும் மேலும் வெளிப்படையாக ஆக, மக்கள் ஒரு மாற்றினைத் தேடுகிறார்கள்.”

இடது மற்றும் ஜனநாயக சக்திகள் மட்டுமே அத்தகையதொரு மாற்றினை வழங்க முடியும்என்று வாதிட்ட அவர் கூறினார்: “இடது மற்றும் ஜனநாயகக் கூட்டணியைக் கட்டியெழுப்பவும் அத்தகையதொரு மாற்றினை உருவாக்கவும், எல்லாவற்றுக்கும் முதலாய், CPM ஐ வலுப்படுத்துவதும், அதன் தளத்தையும் செல்வாக்கையும் நாடெங்கிலும் விரிவுபடுத்துவதும் அவசியமாகும். ஒரு வலிமையான CPM இடது ஐக்கியத்தை வலுப்படுத்த முடியும், அதன்மூலம் ஒரு இடது மற்றும் ஜனநாயகத் தளத்தை வழங்க மற்ற ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட முடியும்.”

காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகளுக்குப் போட்டியாய் ஒரு முதலாளித்துவ அரசாங்க மாற்றினை ஒட்டுப் போட்டுத் தைக்க CPM ஐக் கட்டுவது தான் முக்கியமானது என்று கராத் வலியுறுத்துகிறார் என்றால் அதற்குக் காரணம், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அவர்கள் இழந்ததற்கும் சென்ற ஆண்டு மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் நடந்த மாநிலத் தேர்தலில் அதிகாரத்தில் இருந்து வீழ்ந்ததற்கும் பின்னர் இந்திய முதலாளித்துவ உயரடுக்கின் அரசியலுக்குள்ளாக ஒதுக்கப்படுவது குறித்த ஸ்ராலினிஸ்டுகளின் அச்சம் தான்.

புதனன்று CPM இன் ஆரம்ப அமர்வில் பேசிய கட்சியின் மூத்த தலைவரான எஸ். ராமச்சந்திரன் பிள்ளை புலம்பினார்: “இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இடதுகளும் இந்திய அரசியலில் முக்கியத்துவத்தையும் பொருத்தத்தையும் இழந்து நிற்பதாக பெருநிறுவன ஊடகங்களும் ஆளும் வர்க்கங்களின் அரசியல் பண்டிதர்களும் பொய்யாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.” 

அரசாங்கத்திற்கும் இரு தசாப்த கால பொருளாதாரசீர்திருத்தங்களுக்கும்எதிராய் பெருகி வரும் வெகுஜன எதிர்ப்பை அரசியல்ரீதியாய் பாதுகாப்பான பாதைகளுக்குத் திருப்பி விடும் தங்களது திறனை(பிப்ரவரி 28 அன்று நடந்த தேசிய வேலைநிறுத்த விடயத்தில் செய்ததைப் போல )விளங்கப்படுத்துவதன் மூலமாக முதலாளித்துவ ஆட்சியின்இடதுகாவலர்களாக தங்களது தொடர்ந்த முக்கியத்துவத்தை முதலாளித்துவத்திற்கு நிரூபிக்க முடியும் என்று ஸ்ராலினிஸ்டுகள் கணக்குப் போடுகிறார்கள்

காங்கிரஸ் கூட்டணி அல்லாத, பாஜக கூட்டணி அல்லாத ஒரு முதலாளித்துவக் கூட்டணியைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை CPM வலியுறுத்தியுள்ளதை அதன் இடது கூட்டணிக் கூட்டாளியும் சக ஸ்ராலினிசக் கட்சியுமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(CPI)வரவேற்றுள்ளது. பதவிக் காலம் முடியும் நிலையில் இருக்கும் CPI இன் பொதுச் செயலரான ஏ.பி.பரதன் CPM மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசுகையில், பிராந்திய முதலாளித்துவக் கட்சிகள் சில சமயங்களில்சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிந்து விடுகின்றன என்றாலும் அவை பல விடயங்களிலும் இடதுடன் கைகோர்த்திருக்கின்றன என்றார். “மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டு நின்றிருக்கிறோம். அவ்வப்போதான சந்தர்ப்பவாதங்கள் இருப்பினும் கூட அவர்கள் மதச்சார்பின்மை விழுமியங்களைக் கொண்டுள்ளனர்.” இந்த வலது சாரிக் கட்சிகளுடன் கைகோர்த்துச் செயல்படுவதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தும் விதமாக பரதன் அறிவித்தார்: “இடது மட்டுமே முழுக்க நிரப்பக் கூடிய ஒரு அரசியல் வெற்றிடம் இருக்கிறது.”

நவ-தாராளவாத அல்லது சந்தை-ஆதரவு பெருவணிகக் கொள்கைகளுக்கு எதிரான முன்னணியான போராளியாக CPM காட்டிக் கொள்கிறது. இது ஒரு அப்பட்டமான பொய் ஆகும். அரசுக் கட்டுப்பாடுகளை அகற்றுவது, தனியார்மயமாக்கம், பெரு வணிகங்களுக்கு வரி விலக்குகள் அளிப்பது மற்றும் சமூகச் செலவின வெட்டுகள் ஆகியவற்றை வலியுறுத்தி வந்திருக்கின்ற இந்திய அரசாங்கங்களுக்கு CPM தொடர்ந்து முட்டுக் கொடுத்து வந்திருக்கிறது - இதில் நடப்பு காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தை நான்கு வருடங்கள் முட்டுக் கொடுத்திருந்ததும் அடங்கும் - என்பது மட்டுமல்லகடந்த இரண்டு தசாப்தங்களில் இக்கட்சி எந்தெந்த மாநில அரசாங்கங்களில் எல்லாம் தலைமையில் இருந்திருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் இதேபோன்ற கொள்கைகளையே நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்.

இக்கட்டுரையின் ஆசிரியர் மாநாட்டில் இது விடயமாக கேள்வி எழுப்பியபோது, CPM பொதுச் செயலரால் பதிலளிக்க இயலவில்லை என்பது நிரூபணமானது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏப்ரல் 5 செய்தியாளர் மாநாட்டின் நிறைவில் கராத்தை இக்கட்டுரையாசிரியர் கேட்டார்: “UPA அரசாங்கம் நடத்திய நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மேற்குவங்கத்தின் முந்தைய இடது முன்னணி அரசாங்கம் நடத்திய முதலீட்டாளர்-ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை உங்களால் விளக்க முடியுமா?”. கராத் அந்தக் கேள்வியைத் தவிர்த்தார். “அது ஒரு பெரிய விவாதத்திற்குரியது. குறைந்தது அரைமணி நேரம் பிடிக்கக் கூடியதுஎன்று அறிவித்து விட்டு ஏதுமறியாதவர் போல அவர் அரங்கத்தில் இருந்து அகன்று சென்று விட்டார்.