WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹாலண்ட் இடது முன்னணி வேட்பாளர் மெலன்சோனைப்
புகழ்கிறார்
By Kumaran Ira
14 April 2012
se
this version to print | Send
feedback
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரான்சுவா
ஹாலண்ட் வெள்ளியன்று முக்கிய செய்தித்தாள்களுக்கு விரிவான நேர்காணல்களை அளித்தார்.
இவற்றில் இடது முன்னணி வேட்பாளரான ஜோன்-லூக்
மெலன்சோனை அவர் புகழ்ந்ததோடு அவரை தனது சொந்த போர்-ஆதரவு,
சிக்கன நடவடிக்கைகள் ஆதரவுக் கொள்கைகளுக்கான ஒரு மறைப்பாகப்
பயன்படுத்திக் கொள்ள முனைந்தார்.
Libération
இதழில் ஹாலண்ட் தெரிவித்தார்:
“ஜோன்-லூக்
மெலன்சோன் என் எதிரி அல்ல,
அல்லது எனது போட்டியாளரும் அல்ல.”
மெலன்சோன்
“பல
வருடங்களாக ஒரு சோசலிஸ்ட் கட்சிக்காரர் என்பதோடு அவர் அதற்குள் ஒரு நீரோட்டத்திற்கு
தலைமையும் வகித்தார்”
என்று அவர் குறிப்பிட்டார்.
மெலன்சோனுக்கு அதிக வாக்கு கிடைப்பதென்பது உங்களுக்கு உதவக் கூடுமா
என்ற கேள்விக்கு ஹாலண்ட் பதிலளிக்க மறுத்து விட்டார்.
“முதல்
சுற்றில் பிரான்சுவா ஹாலண்டுக்கு நல்ல வாக்குகள் கிடைக்கிறதா என்பது தான் முக்கியம்”
என்ற அவர்
“என்
விடயத்தில்,
நான் வெற்றி பெறுவதற்கான ஜனாதிபதிப் பிரச்சாரத்தில் இருக்கிறேன்”என்றும்
சேர்த்துக் கொண்டார்.
மெலன்சோனின் வாக்கு வங்கி
17
சதவீதத்துக்கு அதிகரித்து,
அவரை ஹாலண்ட் மற்றும் நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி
ஆகியோருக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் அமர்த்தியிருப்பதை வாக்கெடுப்புகள்
காட்டுகின்றன.
குறைந்தபட்ச மாதாந்திர ஊதியத்தை
1700
யூரோக்களாக
(2,223
அமெரிக்க டாலர்கள்)
உயர்த்த வேண்டும்,
சொத்து வரி விதிக்க வேண்டும் என்பது போன்ற அவர் முன்வைக்கும்
வாக்குறுதிகளுக்கான ஆதரவையே இந்த அதிகரிப்பு பிரதிபலிக்கிறது.
ஆயினும் இந்த வாக்குறுதிகள் எல்லாம் ஏன் கடுகடுப்புடன்
முன்வைப்பவையாக இருக்கின்றன என்றால்,
மறைந்த ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் மற்றும் பிரதமர் லியோனல்
ஜோஸ்பனது பன்முக இடது அரசாங்கத்தின் வலது சாரிக் கொள்கைகளின் ஆதரவாளரான
மெலன்சோனுக்கு மேற்கூறிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் எந்த எண்ணமும் கிடையாது.
காணவும்:
“பிரெஞ்சு
இடது முன்னணி வேட்பாளர் ஜோன்-லூக் மெலன்சோனின் அரசியல்
என்ன?”)
ஹாலண்ட்டின் வேலைத்திட்டம் வலதுசாரித் தன்மையுடையதாக இருந்தபோதிலும்
அவர் தனது சொந்தப் பிரச்சாரத்துக்கு ஒரு இடது முகத்தை வழங்குவதற்கு மெலன்சோனை
நம்பியிருக்கிறார் என்கிற உண்மையையே மெலன்சோனுக்கு ஹாலண்ட் அளிக்கும் சமிக்ஞைகள்
வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இதுவே இடது முன்னணி உள்ளிட்ட ஒட்டுமொத்த முதலாளித்துவ
“இடது”
அரசியலின் மீதும்,
அது ஹாலண்டை சார்க்கோசிக்கான மாற்றாக முன்நிறுத்துவதன் மீதும்
வைக்கப்படுகின்ற குற்றப் பதிவு ஆகும்.
சீர்திருத்தவாதப் பிரமைகளுக்கு உரம்போட ஹாலண்ட் இடது முன்னணியைத்
தான் நம்பியிருக்கிறார்.
பிரதானமாய் ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியையும் மெலன்சோனின் இடது
கட்சியையும் கொண்ட இந்த இடது கூட்டணி புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக்
கட்சியால் ஊக்குவிப்பு செய்யப்படுவதாகும்.
இதனிடையே வெற்றி பெறும் வாய்ப்பு கொண்ட ஒரே
“இடது”
வேட்பாளராக ஹாலண்ட் தன்னை காட்டிக் கொள்கிறார்.
தனது பிரச்சாரம் குறித்து தொழிலாள வர்க்கத்திற்குள் பிரமைகளை
ஊக்குவிக்க ஹாலண்ட் செய்யும் நம்பிக்கை-குலைப்பு
சூழ்ச்சிகளில் இது சமீபத்தியது மட்டுமே.
பிப்ரவரி மாதத்தில் வருடத்திற்கு
1
மில்லியன் யூரோவுக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு
75
சதவீத வரி விதிக்க ஒரு வெற்று வாக்குறுதியை அவர் வழங்கினார்.
முன்னதாக அதேநாளில்,
அவர் நேட்டோவில் பிரான்சின் பங்கேற்பைத் தொடர்வதற்கும்,
புலம் பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதலை ஆழப்படுத்துவதற்கும்,
அத்துடன் சார்க்கோசியால் திணிக்கப்பட்ட நடவடிக்கையான முழு
ஓய்வூதியம் பெறும் தகுதியாக அதிகரிக்கப்பட்ட செலுத்து கால அளவைத் தொடர்ந்து
பராமரிப்பதற்கும் அவர் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
மெலன்சோனுக்கு சமிக்ஞைகள் கொடுத்து வருகின்ற அதே சமயத்தில்,
ஹாலண்ட்
முதலீட்டாளர்களுக்கும்,
பிரான்சின் சர்வதேச போட்டித் திறனை மீட்டெடுப்பதற்கு சிக்கன
நடவடிக்கைகளைப் பின்பற்றவிருப்பதையும் ஊதியங்களை வெட்டவிருப்பதையும் நேரடியாகச்
சொல்லாவிட்டாலும் பிழையாகப் புரிந்து கொள்ளவியலாத வகையில் வாக்குறுதியளிக்கிறார்.
ரென் இல் நடந்த ஒரு சமீபத்திய கூட்டத்தில் அவர் தற்பெருமை பொங்கக்
கூறினார்:
“எங்களிடம்
சொல்கிறார்கள்,
‘பாருங்கள்,
இடது திரும்பி வந்து விட்டது,
அது அரசு கஜானாவைக் காலி செய்யப் போகிறது’
என்று அது ஏற்கனவே நடந்து விட்டிருக்கிறது!
‘பாருங்கள்,
இடது திரும்பி வந்தால் அது கடனை அதிகரிக்கச் செய்து விடும்’
என்று.
அது ஏற்கனவே நடந்து விட்டிருக்கிறது!
‘இடது
போட்டித் திறனைப் பாதிக்கும்’என்று.
அது ஏற்கனவே நடந்து விட்டிருக்கிறது!
:
நல்லது,
நாங்கள் மாறான விடயங்களைத் தான் செய்து காட்டவிருக்கிறோம்.”
2017
க்குள் பிரான்சின் பற்றாக்குறையை பூச்சியத்திற்கு மீட்டெடுக்கும்
பொருட்டு பொதுச் செலவினங்களை வெட்டவிருப்பதாக ஹாலண்ட் தெளிவுபடுத்தி விட்டார்,
அத்தகைய ஆழமான சிக்கன நடவடிக்கைகள் எல்லாம் தொடர்ச்சியான பொருளாதார
வளர்ச்சிக்கு இணக்கத்துடன் கைகோர்த்து நிகழும் என்று அபத்தமாய்க் கூறிக் கொள்கிறார்
என்றபோதிலும்.
பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்கள் எங்கெல்லாம் ஆபத்தில் இருக்கிறதோ
அங்கெல்லாம் பிரான்சின் இராணுவத் தலையீட்டைப் தொடர்ந்து பின்பற்றவிருப்பதையும் அவர்
சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நேட்டோவின் உத்தரவிடும் தலைமையில் பிரான்சைப் பராமரிக்க
வாக்குறுதியளித்துள்ளதுடன் லிபியாவிலான நேட்டோவின் இராணுவத் தலையீட்டுக்கு ஆதரவும்
வழங்கியிருக்கும் இவர் தொடர்ந்து சிரியாவுக்கு அழுத்தமளிக்கவும்
வாக்குறுதியளித்தார்.
சிரியா
“ஒரு
அதி தொந்தரவான விடயமாக இருக்கப் போகிறது.
அங்கே படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும் திறன்படைத்த தடைகள் மற்றும்
தலையீடுகளின் ஒரு மட்டத்தைக் குறித்து பாதுகாப்பு கவுன்சில் இறுதியாகத்
தீர்மானிக்கும் வகையில் நான் எல்லாவற்றையும் செய்வேன்.
அத்துடன் பிரெஞ்சு இராஜதந்திரத்தை மேற்கொள்வது குறித்தும் எனக்கு
விமர்சனமில்லை”என்றார்
அவர்.
ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்படுவாரேயானால்,
அவரது கொள்கை அவரது தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளால்
தீர்மானிக்கப்படுவதாய் இருக்காது,
மாறாக தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழமான வெட்டுகளையும்
தாக்குதல்களையும் கோரும் நிதி மூலதனத்தின் கோரிக்கைகளால் தீர்மானிக்கப்படுவதாகவே
இருக்கும்.
சந்தைகளில் இருந்து அழுத்தம் வருகையில் தனது வேலைத்திட்டத்தை
கிடப்பில் போடுவேன் என்கிற தொனியிலான மறைமுகமான கருத்துகளையும் அவர் ஏற்கனவே
தெரிவித்திருக்கிறார்.
வெள்ளியன்று இன்னொரு நேர்காணலில்,
பிரான்சின் வணிக நாளிதழான
Les Echos
ஹாலண்டிடம் கேட்டது:
“நீங்கள்
வளர்ச்சியின் முன்முயற்சியை விரும்புகிறீர்கள்.
ஆனால் சந்தைகள் காத்திருக்குமா?”
PS
வேட்பாளர் அதற்கு அளித்த பதில்:
”ஒரு
வேட்பாளராக எனது பொறுப்பு எங்களது தெரிவுகள் குறித்தும் எங்கள் வாக்குறுதிகள் மீதான
நம்பிக்கைகள் குறித்தும் ஒரு ஒருமைப்பட்ட செய்தியை அளிப்பது தான்.”
ஆயினும்,
நிதிநிலைப் பற்றாக்குறையைக் குறைக்கவிருப்பதாக ஹாலண்ட் வாக்குறுதி
அளித்திருப்பதால்,
அதற்கிருக்கும் ஒரே
“ஒருமைப்பட்ட”
கொள்கை ஆழமான வெட்டுகளுக்கு அழுத்தமளிப்பது தான்.
கார்டியன்
குறிப்பிட்டது:
“சந்தைகள்
ஸ்பெயின் குறித்தும் இத்தாலி குறித்தும் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில்,
பொருளாதார நிபுணர்கள் யூரோவை உலுக்கவிருக்கும் அடுத்த பொருளாதாரப்
புள்ளியாக பிரான்ஸ் இருக்கலாம் என்று எச்சரித்திருக்கின்றனர்.”
ஐரோப்பாவிலேயே பிரான்ஸ் தான் மிக உயர்ந்த அளவில் அரசுச் செலவினம்
கொண்ட நாடாகும்,
மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
55
சதவீதத்திற்கும் மேலாக இதற்கு செலவிடப்படுகிறது.
அரசுச் செலவினத்தைக் குறைக்க சமூக வெட்டுகளை பிரான்ஸ் போதுமான
தூரத்துக்குக் கொண்டு சென்றிருக்கவில்லை என்று நிதி ஊடகங்கள் தெரிவிக்கின்ற
அதேசமயத்தில் பிரான்சின் போட்டித்திறனை,
குறிப்பாக ஜேர்மனிக்கு எதிராக,
ஊதிய விகிதங்கள் பலவீனப்படுத்துவதாய் பெரு வணிகங்கள்
விமர்சிக்கின்றன.
சமூக வெட்டுகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை தொழிற்சங்க
அதிகாரத்துவம் காட்டிக் கொடுக்கின்ற போதிலும்,
இந்த வெட்டுகளுக்கு எழக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு
குறித்து நிதிச் சந்தைகள் அறிந்துள்ளன.
பிரான்சின் முன்னணி வங்கியாளர் ஒருவரை மேற்கோள் காட்டி
ஃபைனான்சியல் டைம்ஸ்
கூறியது:
“நிறைய
செய்யப்பட்டிருக்க வேண்டும்,
ஆனால் இத்தகைய சீர்திருத்தங்களை நீங்கள் பிரான்சில்
மேற்கொள்ளும்போது அதற்கு மிகப் பலம்வாய்ந்த எதிர்ப்பை கடக்க வேண்டியிருக்கும்.”
“பிரெஞ்சு
தேர்தல்:
இரண்டு ஜனாதிபதி வேட்புமனுக்களின் கதை”(“French
election: A tale of two presidencies,”
)
என்ற தலைப்பில் ஏப்ரல்
11
அன்று
ஃபைனான்சியல் டைம்ஸ்
ஒரு கட்டுரையை வெளியிட்டது.
நடப்பு வலது-சாரி
ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி
2007
இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலாய் முக்கியமான சமூக வெட்டுகளை
செய்து முடிப்பதில் தோல்வி கண்டிருப்பதாய் இது சுட்டிக் காட்டியது.
ஃபைனான்சியல் டைம்ஸ் கூறுவதன் படி,
“பிரான்சின்
நலன்புரி அரசின் மாதிரியை தீவிரமான மறுவடிவத்துக்குட்படுத்த திரு.சார்க்கோசி
ஆலோசனையளிக்கவில்லை.”
2010
இல் அவப்பெயர் பெற்ற ஓய்வூதிய வெட்டினை
-
தொழிற்சங்கங்கள் இதற்கு எதிரான தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்டங்களை
காட்டிக் கொடுத்த பின் சார்க்கோசியுடன்
பேச்சுவார்த்தை நடத்தின
-
அவர் அமல்படுத்தியிருந்த போதிலும் கூட,
சார்க்கோசியின் கீழ்
“35
மணி வேலைநேர வாரம் என்பது அகற்றப்படுவது,
டாக்சி வர்த்தகம் போன்ற மூடிய கடைகளைத் திறப்பது உள்ளிட்டவை
செயல்படுத்தப்படாமலே சென்றதானது இன்னும் நிறைய எதிர்பார்ப்புடன் இருந்த பலரையும்
ஏமாற்றத்திற்குத் தள்ளியது”
என்று ஃபைனான்சியல் டைம்ஸ் குறை கூறுகிறது.
”பிரான்சை
வேறொரு சகாப்தத்திற்குக் கொண்டு செல்கின்ற திறன் நிக்கோலோ சார்க்கோசிக்கு இல்லாமல்
போனதை”
விமர்சனம் செய்கின்ற
Challenges,
இதழின் தலைமை ஆசிரியரான வின்சண்ட் பியூஃபில்ஸை இச்செய்தித்தாள்
மேற்கோளிட்டது.
”யூரோ
மண்டலத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான பிரான்ஸ்,
தாராள நல உதவிகளாலும் மேற்கு ஐரோப்பாவில் அரசுச் செலவினங்களின் மிக
உயர்ந்த மட்டத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதாலும்,
அது பராமரிக்க முடியாத கடன் சுருளுக்குள் செல்லும் அபாயத்தை
எதிர்நோக்குவதாக அதன் தேசியத் தணிக்கையாளர் கூறியிருக்கிறார்”
என்று
கார்டியன்
கூறுகிறது.
அச்செய்தி தொடர்கிறது:
“வேலைவாய்ப்பின்மை
12
வருடத்தின் உயர்ந்த மட்டத்திற்குச் சென்று ஏறக்குறைய
10
சதவீதமாக இருக்கிறது.
வளர்ச்சி நின்று போய்க் கொண்டிருக்கிறது,
மூன்று
A
தரமதிப்பீடு குறைக்கப்பட்டிருக்கிறது,
அத்துடன் கல்விக்குப் பின் இரண்டாவது பெரிய அரசுச் செலவினம்
வட்டித்தொகைச் செலுத்தங்கள் தான் என்கிற அளவுக்கு நாடு கடனளவைக்கொண்டுள்ளது.” |