WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Despite talks, US-Iran confrontation continues
பேச்சுக்கள் இருந்தபோதிலும், அமெரிக்க-ஈரான் மோதல் தொடர்கிறது
By
Peter Symonds
16 April 2012
இஸ்தான்புல்லில் சனிக்கிழமை அன்று ஈரானுக்கும்
P5+1
குழுவினருக்கும்
–அமெரிக்கா,
பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி—இடையே
நடைபெற்ற பேச்சுக்கள் ஈரானின் அணுச்சக்தித் திட்டங்கள் குறித்த அழுத்தம் தரும்
மோதலைக் குறைப்பதில் எதையும் செய்யமுடியவில்லை. அடிப்படைப் பிரச்சினைகள் ஏதும்
தீர்க்கப்படுவது ஒருபுறம் இருக்க, விவாதிக்கப்படக்கூட இல்லை. அதே நேரத்தில்
ஜூலையில் ஈரான்மீது கடுமையான, புதிய, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளன;
அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற
அச்சுறுத்தலைத் தொடர்ந்து கொடுக்கின்றன.
எட்டு மணி நேரப் பேச்சுக்களில் மே 23ம் திகதி பாக்தாத்தில் கூடுதல்
விவாதங்கள்
“நம்பிக்கையை
வளர்ப்பதற்காக”
நடத்தப்படும் என்னும் முடிவுதான் எடுக்கப்பட்டது. இஸ்தான்புல் கூட்டத்திற்குத்
தலைமை தாங்கிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் காத்திரின்
ஆஷ்டன், செய்தி ஊடகத்திடம் பேச்சுக்கள்
“ஆக்கபூர்வமாகவும்,
பயனுடையனவாகவும்”
இருந்தன என்று கூறினார். ஆனால் எந்தக் கட்சியும் குறிப்பிட்ட
பிரச்சினை பற்றி அதிகம் கூறவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்.
“நம்பிக்கையை
வளர்த்தல்”
என்பதைப் பொறுத்தவரை, ஈரான் மீதுதான் முழுமையான பொறுப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.
CNN
இடம் பாக்தாத்தில் விவாதிக்கப்பட இருக்கும் நடவடிக்கைகள்
“அணுவாயுதத்
திட்டம் ஏதும் இல்லை என்ற நம்பிக்கையை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்படும்,
உதாரணமாக ஈரானில் பார்வையிட இது ஆய்வாளர்களை அனுப்பிவைக்க உதவும்”
என்றார் அவர்.
ஈரான் முக்கிய சலுகைகளைக் கொடுக்க வேண்டும் என்பதை அமெரிக்கா
தெளிவாக்கியுள்ளது. இஸ்தான்புல் பேச்சுக்களுக்கு முன்னதாக அமெரிக்க வெளிவிவகாரச்
செயலர், கிளின்டன் அணுவாயுதங்களை ஈரான் நிராகரிப்பது
“ஒரு
அருவமான நம்பிக்கை அல்ல”
என்று வலியுறுத்தினார். இதில் ஈரானின் 20%அடர்த்தி செய்யப்பட்ட யுரேனியம் நாட்டை
விட்டு வெளியே அனுப்புதல் அடங்கும் என்றும்
“இடைவிடா
ஆய்வுகளும் சரிபார்த்தல்களும் இருக்க வேண்டும்”
என்றும் குறிப்பிட்டார்.
தெஹ்ரான் உற்பத்தி செய்யும் மருத்துவ ஐசோடெப்ஸிற்கு ஆய்வு
உலைக்கூடத்திற்காக, அதற்கு 20% அடர்த்தி செய்யப்பட்டுள்ள யுரேனியம் தேவைப்படுகிறது.
இந்த அளவு அணுவாயுதங்கள் தயாரிப்புக்குத் தேவையான 90% அடர்த்தியைவிட மிக மிகக்
குறைவாகும். ஈரானின் அணுச்சக்தி நிலையங்கள், கிடங்குகள் அனைத்திலும் இருக்கும்
அடர்த்தி செய்யப்பட்டுள்ள யுரேனியம் ஏற்கனவே கண்காணிப்பில் உள்ளன,
IAEA
எனப்படும் சர்வதேச அணுச்சக்தி நிறுவனத்தால் ஆய்வு செய்யவும் படுகின்றன.
இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகு இஸ்டான்புல்
கூட்டம் ஈரானுக்கு
“இலவசப்
பொருள் போன்றதாகும்”
என்று கடுமையாகக் குறிப்பிட்டார்.
“எந்த
வரம்பும், தடையும் இல்லாமல் அடர்த்தியைத் தொடர்வதற்கு அதற்கு ஐந்து வாரங்கள்
கிடைத்துள்ளன. அனைத்து அடர்த்தி செய்தலையும் நிறுத்துவதற்கு ஈரான் உடனடி
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அடர்த்தி செய்யப்பட்ட யுரேனியம் அனைத்தையும்
வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும், கோமில் உள்ள அணுநிலையத்தை அகற்ற வேண்டும் என நான்
நினைக்கிறேன்”
என்றார் அவர்.
ஈரான் கோம் நகருக்கு அருகே உள்ள அதன் போர்டா அடர்த்தி ஆலையை
மூடவேண்டும் என்னும் இஸ்ரேலின் கோரிக்கை குறிப்பிடத் தக்கவகையில் ஆத்திரமூட்டுதல்
தருவதாகும். நெத்தென்யாகுவும் இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக்கும் பலமுறை
அதிக மறைப்பில்லாத இராணுவத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது
நடத்தப்படும் என்று எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். மிகப் பாதுகாப்புடைய போர்டோ
ஆலையை மூடுதல் என்பது,
அனைத்து ஈரானிய அணுசக்தித் திட்டங்களையும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு
உட்படுத்திவிடும்.
2012
ஈரானை நிறுத்துவதற்கு
“ஒரு
நெருக்கடியான ஆண்டு”
என்று இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி அறிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில் இந்த
வனப்புரையை எதிரொலிக்கும் வகையில் பல முறை
“நேரம்
குறைந்துவருகிறது”
என்று ஒபாமா நிர்வாகம் கூறிவருவதுடன், தற்பொழுதைய
P5+1
பேச்சுக்கள் கடைசி வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. ஜனாதிபதி ஒபாமா
இந்த அச்சுறுத்தலை அடிக்கோடிடும் வகையில் ஈரான் மீதான அவருடைய கொள்கை
கட்டுப்படுத்துதல் இல்லை, தடுத்தல் என்று அறிவித்துள்ளார்; அதாவது அமெரிக்கா
இராணுவத் தாக்குதல்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் ஈரானின் அணுத்திட்டங்களை
நிறுத்த எடுக்கும்.
ஒரு பெயரிடப்படாத மூத்த அமெரிக்க அதிகாரி
Financial Times
இடம்,
“காலவரையற்ற
அவகாசத்தை நாம் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.”
என்றார். மற்றொரு பெயரிடப்படாது தூதர் கூறினார்:
“பாக்தாத்திற்குப்
பின்னரும் நமக்கு அதிக கூட்டங்கள் தேவை. ஆனால் ஆண்டு இறுதிவரை இதே ரீதியில் செல்வது
பற்றி என் எஜமானர்கள் மகிழ்ச்சி அடையமாட்டார்கள். எங்கள் பொறுமை அதிகம்தான் ஆனால்,
உலகம் ஆபத்தில் உள்ளது.”
உயர்மட்ட ஈரானியப் பேச்சுவார்த்தை வல்லுனர் சயித் ஜலாலி,
அணுபரவா உடன்படிக்கையின்கீழ் ஈரானுக்கு யுரேனியத்தை அடர்த்தி செய்வது உட்படப் பல
உரிமைகள் உண்டு என்று வலியுறுத்தினார். ஐந்து ஈரானிய அணுச்சக்தி விஞ்ஞானிகள் கடந்த
மூன்று ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்கள் படங்களைக் கொண்ட பதாகையின் முன் அவர் செய்தி
ஊடகத்திடம் பேசினார்—இவர்கள்
அமெரிக்காவின் உட்குறிப்பான ஆதரவுடன் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டிருக்கக் கூடும்.
இஸ்தான்புல் கூட்டத்திற்கு முன்னதாக ஜலாலி ஈரான் தன் 20% அடர்த்தி
உடைய யுரேனியம் குறித்து நடவடிக்கைகளைப் பரிசீலிக்கலாம் என்றும், அதற்கு ஈடாக
சர்வதேசப் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தல் போன்ற நடவடிக்களை எதிர்பார்ப்பதாகவும்
கூறினார். தண்டனை கடுமையாக உள்ள அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் நடவடிக்கைகள்
ஈரானின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளன என்றும் அதன் நாணயத்தின் மதிப்பு
50% சரிந்து விட்டது என்றும் கூறினார். ஜனவரி மாத இறுதியில் சுமத்தப்பட இருக்கும்
கூடுதலான பொருளாதாரத் தடைகளில் ஐரோப்பா ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும்
எண்ணெய் மீதான தடை மற்றும் ஈரானுடன் வணிகம் நடத்தும் நாடுகள், நிறுவனங்களுக்கு
எதிரான அமெரிக்க நடவடிக்கைகளும் அடங்கும்.
பாக்தாத்தில் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும்
குறைந்தவை. அனைத்து அமெரிக்கக் கோரிக்கைகளையும் ஈரான் ஏற்றாலும், இன்னும் கூடுதலான
கோரிக்கைகள் முன்வைக்கப்படும். முடியாததை நிரூபிக்குமாறு ஈரான் அமெரிக்காவால்
கோரப்படுகிறது; அதனிடம் அணுவாயுதங்களை வருங்காலத்தில் தயாரிப்பதற்கான திட்டம்
இல்லை, அந்த நாட்டின் எந்த இடத்திலும் அதற்கான திறனும் இல்லை.
உண்மையில் வாஷிங்டன் அணுப்பிரச்சினையை தெஹ்ரானில் ஆட்சி
மாற்றத்திற்கு, தேவையானால் போர் நடத்தி அமெரிக்கப் பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு
உகந்த முறையில் நிலைநிறுத்தப் போலிக்காரணமாகத்தான் பயன்படுத்துகிறது. மத்திய
கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் விசைச் செழிப்பு உடைய பிராந்தியங்களில்
அமெரிக்காவின் மூலோபாயமான தன் மேலாதிக்கத்தை அதிகப்படுத்துவதற்கு ஈரான் மத்திய
இடமாக இருக்கிறது; சீனா, ரஷ்யா உட்பட மற்ற நாடுகளின் செல்வாக்கையும் அங்கு
குறைமதிப்பிற்கு அமெரிக்கா உட்படுத்த விரும்புகிறது.
P5+1
சமீபத்திய பேச்சுச் சுற்று ஒபாமா நிர்வாகத்திற்கு வசதியான செயல் ஆகும்.
இக்கூட்டங்கள் அமெரிக்காவை ஈரானை
“ஒரு
போக்கிரி நாடு”
எனச் சித்தரிக்க அனுமதிக்கின்றன. அதே நேரத்தில், பேச்சுக்கள் வழிவகை
முடியும் வரை ஈரான்மீது தாக்குதலை நிறுத்தி வைக்க இஸ்ரேல் மீது அழுத்தங்களையும்
கொடுக்கின்றன. இஸ்ரேலும் அமெரிக்காவும் நெருக்கமான நட்பு நாடுகளாயினும், இராணுவத்
தாக்குதல்கள் நேரம் குறித்து தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்தக்
கட்டத்தில், ஒபாமா நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதித்
தேர்தல்களுக்கு முன்பு தான் போரை விரும்பவில்லை என்று குறிப்புக் காட்டியுள்ளார்.
அதே நேரத்தில், ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்பை ஒட்டி பேர்சிய
வளைகுடாவில் பென்டகன் தன்னுடைய படைகளை அதிகப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று
வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலில் வந்துள்ள நீளமான கட்டுரை ஒன்று இக்கட்டமைப்பு குறித்துப்
பரிசீலித்துள்ளது; இதில் அமெரிக்காவின்
Avenger
வகுப்பு, நிலத்தடித் தகர்ப்பு கப்பல்கள் இரு மடங்காக ஆக்கப்பட்டுள்ளது, அமெரிக்க
போர்க்கப்பல்களில் ஈரானிய தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நவீன கருவிகள்
பொருத்தப்பட்டுள்ளன; மேலும் சிறு ரோந்துப் படகுகளும் உள்ளன. அமெரிக்க இராணுவம்,
“அதன்
மரபார்ந்த குண்டுகளைத் தரம் உயர்த்தியுள்ளது; இது கோட்டை போல் உள்ள ஈரானிய நிலத்தடி
நிலையங்களை நன்கு ஊடுருவும்.”
அமெரிக்கக் கடற்படை ஏற்கனவே பேர்சிய வளைகுடாவிற்கு அருகிலும்
அங்கும் இருக்கும் விமானத் தளம் கொண்ட கப்பல்களின் எண்ணிக்கையை
இருமடங்காக்கியுள்ளது. |