சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy proposes police measures after Toulouse shootings

துலூஸ் துப்பாக்கி சூட்டை அடுத்து சார்க்கோசி பொலிஸ் முறைமைகளை முன்மொழிகிறார்

By Antoine Lerougetel
13 April 2012

use this version to print | Send feedback

ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு வெளியில் செயல்படும்தனித்த வெறியர்களின்" அல்லது "சுயமாக-தீவிரப்பட்டவர்களின்" பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக என்ற வெளிவேஷத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கம் புதிய ஜனநாயக-எதிர்ப்பு சட்டங்களை நேற்று முன்மொழிந்தது. இந்த முறைமைகள் "பயங்கரவாத" வலைத் தளங்களைப் பார்வையிடும் அல்லது பயங்கரவாத பயிற்சிகளைப் பெற வெளிநாடுகளுக்கு பயணிக்கும் மக்களைத் தண்டிக்கும்.

La Dépêche இதழ் அறிவிக்கிறது: “நீதித்துறை மந்திரியின் கருத்துப்படி, குழந்தைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்துவோருக்கு (paedophiles) எதிராக போராடுவதற்காக தற்போது செய்யப்பட்டதைப் போல பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் வலைத் தளங்களை 'வழக்கமாகவும், சட்டபூர்வ தேவையின்றியும்' பார்வையிடுவோரை அந்த சட்டமசோதா தண்டிக்கிறது... மரத்துப்போன வெறுப்போடு கவர்ந்திழுக்கும் மற்றும் தூண்டிவிடும் பிம்பங்களிடம் தனிநபர்கள், பெரும்பாலும் இளைஞர்களும் மற்றும் எளிதில் வளைந்து கொடுக்கக்கூடியவர்களும்' மாட்டிக் கொள்வதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்களை வெளியுலகிற்குக் காட்டுபவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது.”        

குழந்தைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்துவோருக்கு எதிரான விதிகளை முன்மாதிரியாக கொண்ட இச்சட்டத்தின் தண்டனைகள், “வழக்கமான பார்வையாளர்களுக்கு" இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 30,000 யூரோ (40,000 அமெரிக்க டாலர்) அபராதம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

மார்ச் 11 மற்றும் 19க்கு இடையில், மூன்று துணை-இராணுவ துருப்புகள், ஒரு யூத குரு மற்றும் மூன்று யூத பள்ளி குழந்தைகளை துலூஸ் மற்றும் மொந்தபானில் கொடூரமாக கொன்ற முஹம்மது மேராவின் மூர்க்கத்தனமான நடவடிக்கையை அடுத்து, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக முன்மொழியப்பட்ட ஜனநாயக-விரோத முறைமைகளின் ஒரு   சரமாரியான பொழிவிற்கு இடையில் இந்த சட்டம் வந்துள்ளது.

சட்டப்பூர்வ புலம்பெயர்வை 50 சதவீதத்திற்குக் குறைத்திருப்பதாக அறிவித்திருக்கும் சார்க்கோசி, ஐரோப்பா உள்ளிருந்தும் மற்றும் வெளியிலிருந்தும் தேவையற்ற புலம்பெயர்வைத் தடுக்க முறைமைகள் பலப்படுத்தப்படவில்லை என்றால் கடவுச்சீட்டின்றி பயணிக்கும் செங்கென் வலையத்திலிருந்து (Schengen passport-free zone) பிரான்ஸை வெளியில் எடுத்துக் கொள்ளவிருப்பதாக அச்சுறுத்தினார். ஹலால் அல்லது கோஷர் உணவு வசதிகளுடன் பள்ளி உணவகங்களில் சிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஏப்ரல் 22இல் நடைபெற உள்ள முதல் சுற்று பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலுக்கு மிக முன்னதாக வெளியாகி உள்ள சார்க்கோசியின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பிரச்சாரமானது பிரான்ஸிற்குள் நிலவும் அரசியல்-எதிர்ப்பிற்கு எதிராக பொலிஸ் அதிகாரங்களை வலுப்படுத்துவதாக உள்ளது. அதேவேளையில் தேர்தல் பிரச்சாரத்தில் சட்ட-ஒழுங்கு சீர்கேடுகள் என்பதைக் கொண்டு விஷத்தைப் பரப்புவதாகவும் உள்ளது. சார்கோசியின் சமூக கொள்கைகளுக்கு, அதாவது பொது செலவினங்களை இன்னும் கூடுதலாக குறைத்தல், சமூக உரிமைகளை அழித்தல் மற்றும் வேலைவாய்ப்பின்மையின் கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றிற்கு தொழிலாள வர்க்கத்திடையே ஆழ்ந்த எதிர்ப்பு நிலவுகிறது. கடைசி வார பிரச்சாரங்களில் சார்கோசி தேர்தல் முடிவைத் திருப்பி போட விரும்புகிறார்.

துலூஸ் படுகொலையின் உடனடி தாக்கமாக கருத்துக்கணிப்புகளில் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஹாலன்டை சார்க்கோசி எட்டி பிடிக்க முடிந்திருந்தது; முதல் சுற்றில் முன்னனுமானிக்கப்பட்ட வெற்றியாளராக அவர் சார்கோசியைக் கடந்து வந்திருந்தார். சமீபத்திய கருத்துகணிப்புகளில் 29 சதவீதம் பெற்ற ஹாலன்டிற்கு எதிராக ஜனாதிபதிக்கு 29.5 சதவீத வாக்குகள் கிடைத்தன. இருந்தபோதினும் இரண்டாம் சுற்றில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் சார்க்கோசியைவிட வசதியான இடத்தில் இருக்கிறார், அதாவது ஹாலன்ட் சுமார் 56 சதவீதமாகவும், இவர் 46 சதவீதமாகவும் உள்ளார்கள்

எவ்வாறிருந்த போதினும், அனைத்திற்கும் மேலாக, வலைத் தளங்களைப் பார்வையிடுவதை அல்லது முஸ்லீம் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர வேறெதையும் செய்யாத மக்களையும் குற்றவாளிகளாக்க அந்த சட்டம் அரசிற்கு அதிகமான அளவில் அதிகாரங்களை வழங்குகின்றது. “பயங்கரவாதத்தின்" வரையறையே இழிவார்ந்த முறையில் குழப்பப்பட்டு வருகிறது; மேலும் அது பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் சூழ்ச்சிகள் செய்வதற்கு பயன்படுவதோடு, முற்றிலும் சட்டபூர்வமான பயணம் மற்றும் இணைய உலாவலையும் கூட குற்றத்தனத்திற்கு உள்ளாக்க அது பாதை வகுக்கிறது.  

இதுபோன்ற கடுமையான சட்டமசோதாவைக் கொண்டு வருவதற்கு மேரா சம்பவத்தை சார்க்கோசி பயன்படுத்தியிருப்பதானது, அந்த படுகொலை சம்பவத்தின் போது இருந்த மிகவும் சந்தேகத்திற்கிடமான நிலைமைகள் குறித்து இன்னும் கூடுதலான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பொலிஸ் உளவாளியும் மற்றும் இறுக்கமான கண்காணிப்பும் இருந்தும் கூட, மேரா பாதுகாப்பு துருப்புகளால் தொந்தரவு செய்யப்படாமல் ஒன்பது நாட்களுக்கு அவருடைய கொடூரமான படுகொலைகளை அவரால் தொடர முடிந்தது. (பார்க்கவும்: துலூஸ் துப்பாக்கிதாரி ஒரு பிரெஞ்சு உளவுத்துறைச் சேர்ந்தவர் என்று அறிக்கைகள் குறிப்புக் காட்டுகின்றன" )

சார்கோசியின் உள்துறை மந்திரி Claude Guéant மற்றும் மார்ச் 22இல் மேராவின் வீட்டில் சோதனை நடத்த உத்தரவிட்ட ஜனாதிபதியின் பிரத்யேக உளவுத்துறை இயக்குனர் பேர்னார்ட் ஸ்குவார்சினியின் மேற்பார்வையின் கீழ், அரசின் மரண தண்டனை என்ற பெயரில் அவர் கொல்லப்பட்டதால் அவர் வழக்கு விசாரணைக்கும் நிறுத்தப்படவில்லை; பிரெஞ்சு பாதுகாப்புத்துறை உடனான அவரின் உறவுகளும் விளக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை இழிவுபடுத்த துலூஸ் துன்பியலைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு காரணம், பிரெஞ்சு நவ-காலனித்துவ இராணுவவாதத்தின் வெடிப்பிற்கு ஒரு நியாயத்தைக் கற்பிப்பதற்காக ஆகும். பிரெஞ்சு மக்களின் பெரும்பான்மையினர் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை எதிர்கின்றனர் என்பதையும், லிபியாவிற்கு எதிரான யுத்தத்தையும் நிராகரிக்கின்றனர் என்பதையும் கணித்து கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இருந்தபோதினும் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் சிரிய ஆட்சிக்கு எதிராக மேற்கு-ஆதரவு துருப்புகளுக்கு ஆதரவளித்து வருகிறது. அது ஈரானை அச்சுறுத்தி வருவதோடு மாலியில் ஓர் இராணுவ தலையீட்டிற்கு ஆதரவளிக்கவும் உத்தேசித்து வருகிறது.  

மேராவின் மரணத்திற்குப் பின்னர் உடனடியாக, சார்க்கோசி அவரது ஆதாயத்தை உள்நாட்டில் வலியுறுத்தினார். பெரும் பொதுப்படையான நடவடிக்கைகளில், ஊடகங்களால் ஊட்டிவிடப்பட்ட வெறித்தனத்தின் உதவியோடு, உத்தியோகபூர்வ, அரசு-அங்கீகாரம் பெற்ற முஸ்லீம் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த சம்பவங்களில் கலந்துகொள்ள பிரான்ஸிற்குள் நுழைவதிலிருந்து குறைந்தபட்சம் ஆறு முஸ்லீம் மதகுருமார்களையும் மற்றும் விரிவுரையாளர்களையும் அவர் தடுத்து நிறுத்தினார். சுமார் 30 “சந்தேகத்திற்கு" இடமானவர்களை பொலிஸ் கைது செய்தது; அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லாததால் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டார்கள்.

தேசிய ஐக்கியத்திற்கான சார்கோசியின் ஓர் அழைப்போடு சேர்ந்து கொண்டும், வலதிலிருந்து அவரை விமர்சித்து கொண்டும், முயற்சி செய்யப்பட்ட அரசியல் சூழ்ச்சிக்கு சோசலிஸ்ட் கட்சி முற்றிலுமாக அடிபணிந்தது. பாதுகாப்பு விஷயத்தில் அஜாக்கிரதையாக இருப்பதற்காக சார்கோசியைக் குற்றஞ்சாட்டிய ஹாலன்ட், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரை விஞ்சி நிற்பதற்கு உறுதியளித்தார்.  

வலைத் தளங்களை பார்வையிடும் பார்வையாளர்களை குற்றவாளியாக்கும் முன்மொழிவின் மீது சோசலிஸ்ட் கட்சி அதன் விடையிறுப்பைக் குவிக்கையில், அந்த சட்டமே ஆழ்ந்த வகையில் ஜனநாயக விரோத குணாம்சத்தை கொண்டிருப்பதன் மீதான பிரச்சினையை ஓரங்கட்டிவிட்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக முறைமைகள் அதில் போதியளவிற்கு இல்லையென்று அது விமர்சித்தது. சோசலிஸ்ட் கட்சியின் "பாதுகாப்பு வல்லுனர்" செனட்டர் பிரான்சுவா ரெப்சமென் கூறுகையில், அந்த திட்டம் "உபயோகமற்ற, துல்லியமற்ற, ஆக்கபூர்வமற்றதாக கூட இருக்கக்கூடியது" என்பதை நிரூபிக்கும் என்றார்

ஹாலன்ட் கூறினார், “அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் துல்லியத்தின் விளைவுகளை ஆராயாமல் அவசரகதியில் சட்டமாக்குகையில் பணயத்தில் வைக்கப்படுபவை மிகவும் முக்கியமாகி விடுகின்றன" என்றார்.

அவருடைய சட்ட-ஒழுங்கு பாராட்டுக்களை உறுதிப்படுத்தியதன் மூலமாக புலம்பெயர்ந்தோர் விவகாரங்களில் அவர் மென்மையாக இருந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளை அவர் எப்போதும் மறுத்து வருகிறார். மார்ச் 16இல் பிரான்ஸ் 2 டிவியில் அவர் கூறுகையில், “சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஒழுங்கமைப்போடு நெறிப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தில் அங்கே ஒரு தனிச்சிறப்பு பெற்ற ஒரு படை இருப்பதாக" தெரிவித்தார்.   

சோசலிஸ்ட் கட்சியும், அதன் குட்டி-முதலாளித்துவ "இடது" ஆதரவாளர்களும்புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), அல்லது Jean-Luc Mélenchon இன் இடது கட்சி மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவை உட்பட அவரின் இடது முன்னணிசார்க்கோசியின் புதிய, ஜனநாயக விரோத சட்டங்களைத் தீவிரமாக எதிர்க்க இலாயக்கற்று உள்ளனர். குறுநலவாத உணர்வை ஏவிவிட சார்க்கோசியால் பயன்படுத்தப்பட்ட சட்ட-ஒழுங்கு முறைமைகளை அவர்கள் அனைவரும் ஆதரித்துள்ளனர். பள்ளிகளில் முஸ்லீம்கள் முக்காடு அணிவதை மற்றும் பொது இடங்களில் பர்தா அணிவதைத் தடுக்கும் சட்டங்களும், அத்தோடு லிபியாவில் சார்க்கோசியின் யுத்தமும் இவற்றில் உள்ளடங்கும்

துலூஸ் படுகொலைகளுக்குப் பின்னர் லீல்லில் மார்ச் 28இல் பேசிய உரையில் "லூ பென் குடும்பத்தைப் பற்றிய ஆரவாரவுரையை" அவர் பகிரங்கமாக கண்டனம் செய்திருந்த போதினும், பிரான்ஸிற்குள் அதி-வலது, சட்ட-ஒழுங்கு அரசியலை அடிக்கோடிடும் ஏகாதிபத்திய கொள்கைகளையும் Mélenchon ஆதரிக்கிறார். லீல்லில் பேசிய அதே பேச்சில், ஐரோப்பிய எல்லைகளில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் விசாக்களை அளிப்பதில் அவர் ஒரு பாதுகாப்புவாத அழைப்பையும் விடுத்தார். லிபியாவில் நேட்டோ தலையீட்டிற்கு ஆதரவாகவும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மெலொன்சோன் வாக்களித்தார்