சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Inside the New Anti-capitalist Party’s Paris election meeting

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் பாரிஸ் தேர்தல் கூட்டத்தில்

By Alex Lantier and Johannes Stern in Paris
14 April 2012

use this version to print | Send feedback

வியாழனன்று பாரிஸில் நடந்த புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் பிராந்திய தேர்தல் கூட்டத்திற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் சென்றிருந்தனர். இக்கூட்டத்திற்கு NPA இன் ஜனாதிபதி வேட்பாளர் பிலிப் புட்டுவும் NPA இன் முன்னாள் செய்தித் தொடர்பாளரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஒலிவியே பெசன்செனோவும் வருகை தருவது முக்கிய அம்சமாய் இருந்தது.

இந்தக் கூட்டம் NPA மற்றும் அதன் நடுத்தரவர்க்க சுற்றுப்புறங்களின் - தொழிற்சங்க அதிகாரத்துவம், பல்கலைக்கழக வட்டங்கள், புத்தகப் பிரசுரங்கள் - ஒரு வாழும் சித்திரமாய் இருந்தது. சில நூறு NPA உறுப்பினர்களும் அத்துடன் சிறு எண்ணிக்கையிலான பார்வையாளர்களும் பாரிஸின் Halle Carpentier அரங்கத்தின் ஒரு முனையில் நிரம்பினர். 30 நிமிடங்கள் தாமதமாய் தொடங்கிய இந்தக் கூட்டம் ஒரு திருவிழா போன்றதொரு உணர்வுடன் இருந்தது. மாணவர் இளைஞர்கள் விற்பனைக்கு டி-சேர்ட்டுகள் கடைவிரிக்கப்பட்டிருந்த ஒரு மேஜையைச் சுற்றி குழுமியிருந்தனர், நன்றாக உடையணிந்திருந்த மூத்த குடிமக்கள் சிலர் ஆங்காங்கே மூன்று நான்கு பேர்களாய் குழுமிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அலட்டிக் கொள்ளாத ஒரு தொனியே முழுக்க நிலவிக் கொண்டிருந்தது. NPA இன் மாணவர் தலைவரான மினா கலில் மற்றும் அஞ்சல் தொழிற்சங்க நிர்வாகி Gaël Quirante ஆகியோர் தெரிவித்த கருத்துகளில், புட்டுவும் பெசென்செனோவும் ஜோக்குகளையும் கைசாடைகளையும் பரிமாறிக் கொண்டனர்.

NPA இன் செய்தித் தொடர்பாளரான கிறிஸ்டின் புப்பன், “பொது, சூழலியல் மற்றும் ஜனநாயக திட்டமிடலைக் கோரி பேசினார். புட்டுவின் தேர்தல் பிரச்சாரம், “வங்கிகளைப் பறிமுதல் செய்வதற்கும் பொது எரிசக்தி சேவைக்கும் ஆலோசனையளிப்பதால் வாக்காளர்கள் அவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி அப்பெண்மணி தனது பேச்சைத் தொடக்கினார். பிரான்ஸ் அணு எரிசக்தியை நம்பியிருக்கும் நிலைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கூறிய அவர்வங்கிகளைக் காப்பாற்றுவதற்கு எழுந்திருக்கும் பதிலிறுப்புக்கும் சூழலியல் கேள்விகளில் செயலற்று இருப்பதற்கும்இடையிலான வித்தியாசத்தைக் கண்டனம் செய்தார்.

அவரது கருத்துகள் தான் கூட்டத்தின் தொனியை நிர்ணயிப்பதாய் அமைந்தது. சோசலிசத்தைப் பற்றிய பேச்சே இருக்கவில்லை - அந்த வார்த்தை ஒரு முறை கூட உச்சரிக்கப்படவில்லை. அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் பல டிரில்லியன் டாலர் வங்கிப் பிணையெடுப்புகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட பல டிரில்லியன் டாலர் சமூக வெட்டுகளுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்தும் பேச்சில்லை. மறுசுழற்சி பற்றி கவலை கொள்கிற ஒரு Electricité de France இன் மத்திய நிலை மேலாளருக்கு ஏற்கத்தக்க ஒரு மெல்லியதானசூழல்-சோசலிசம்(eco-socialism)தான் இருந்தது.

பெசன்செனோ சுருக்கமாய் ஒரு உரை கொடுத்தார். தொழில்முறை அரசியல்வாதிகள் தவிர்க்கவியலாமல் மக்களுக்குத் துரோகமிழைப்பதன் மீது அவர் கவனம் குவித்தார். அவர் கூறினார்: “எங்களது செய்தித் தொடர்பாளர் யார் என்பது மாறுகிறது. இது எங்களுக்கு சஞ்சலமளித்தாலும், நாங்கள் பெருமிதத்துடன் கூறக் கூடியதாகும். எத்தனையோ தொழில்முறை அரசியல்வாதிகள் நம்மிடம் இருந்து வந்திருக்கின்றனர்; அவர்கள் ரொம்ப சீக்கிரத்தில் காட்டிக் கொடுப்பார்கள் என்பது தான் ஒருவரின் கருத்தாக உள்ளது.”

அரசியல்வாதிகளை அவர்களது அரசியல் இணைவு மற்றும் முன்னோக்கை எல்லாம் பார்க்காமல் சகட்டுமேனிக்கு கண்டனம் செய்வதென்பது ஆழமாய் பிற்போக்குத்தனமுடையதாகும். தொழிலாள வர்க்கத்தில் வெகுஜனப் புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச மார்க்சிச இயக்கத்தின் போராட்டத்திற்கு குரோதம் காட்டுகின்ற குட்டி-முதலாளித்துவ அராஜகவாதிகளின் கடைச்சரக்காகும் இது. பெசென்செனோவிடம் இருந்து வந்தவை குறிப்பாக நேர்மையற்றதாகவும் அபத்தமாகவும் இருந்தன. பகுதி-நேர அஞ்சல் ஊழியராகவும் மற்றும் ஒரு தொழிற்சங்கவாதியாகவும் இருப்பதாக என்னதான் அவர் நாடகமாடினாலும், அவரும் ஒரு தொழிற்முறை அரசியல்வாதியாகவே இருக்கிறார், இலாபகரமான புத்தக ஒப்பந்தங்களுடனும் பிரெஞ்சு அரசியல் உயரடுக்கு முழுவதிலுமான உறவுகளுடனும்

NPA கூட்டத்தின் அநேக உரைகளில் போலவே, பெசன்செனோவின் கருத்துகளின் முக்கியத்துவமானது, உரையாற்றுபவர்கள் வெளிப்படையாகக் கூற விரும்பாத ஏராளமான கூறப்படாத கருதுகோள்களில் இருந்து தேற்றம் செய்து கொள்ளப்பட வேண்டும். 2012 தேர்தலில் பெசன்செனோவை நிறுத்தாமல் அதிகம் அறியப்படாத வேட்பாளரான புட்டுவை நிறுத்துவதென்ற NPA இன் முடிவை இந்த உரை பாதுகாத்தது. ஊடகங்கள் எல்லாம் தனது கவனத்தை ஸ்ராலினிச மேலாதிக்கம் கொண்ட இடது முன்னணியின் மீதும் அதன் வேட்பாளரான முன்னாள் PS அமைச்சர் ஜோன்-லூக் மெலன்சோன் மீதும் அதிகமாய்த் திருப்பி விட்டிருந்ததால் புட்டு கணிசமாய் குறைந்த தொலைக்காட்சி வெளிச்சத்தையே பெற்றிருக்கிறார்

போர்தோ அருகேயிருக்கும் ஒரு ஃபோர்டு தொழிற்சாலையில் CGT தொழிற்சங்க நிர்வாகியாக இருக்கும் புட்டு தன்னை அதிகம் தயாரிப்பு செய்து கொண்டிராத அதிக அப்பாவியான தொழிலாளியாகவே பரவலாய்க் காட்டிக் கொள்கிறார், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தொழிற்முறை அரசியலின் சூழலில் இடமாறி வந்து விட்டவரைப் போல. ஒருஅடித்தட்டு வர்க்க தொழிலாளியாககூட்டத்தில் பேசுவதென்பதுகொஞ்சம் அச்சமூட்டுவதாய்இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொண்டு அவர் தனது உரையைத் தொடங்கினார்.

எப்படி பெசன்செனோ ஒரு பகுதி-நேர அஞ்சல் ஊழியராகக் காட்டிக் கொள்கிறாரோ, அதற்குக் கொஞ்சமும் சளைக்காத ஒரு மோசடி தான் புட்டு ஒரு எளிமையான வாகன உற்பத்தித் தொழிற்சாலைத் தொழிலாளியாகக் காட்டிக் கொள்வதும். எந்தக் குறிப்புகளும் கையிலெடுத்துக் கொள்ளாமல் பல்வேறு புள்ளிவிவரங்களையும் NPA இன் பேச்சுபொருட்களையும் முழங்கும் திறம்படைத்திருக்கும் புட்டு நிச்சயமாக ஒரு அனுபவம் படைத்த அரசியல் செயல்பாட்டாளரே. அவர் NPA வுடன் சேர்ந்து கொண்டு தன்னை ஏதுமறியா ஒரு தொழிலாளியின் வேடத்தில் பொருத்திக் கொள்கிறார். இந்த வேடம் தொழிலாள வர்க்கத்திற்கு NPA இன் தலைமை கொண்டிருக்கும் பெரியமனிதர்-அலட்சியத்தையே பிரதிபலிக்கிறது, தொழிற்சங்க நிர்வாகியான பிலிப் புட்டுவின் உண்மையான தோற்றம் இங்கு இல்லை.

புட்டுவின் வேட்புநிலை திட்டமிட்டு பலவீனமான தோற்றம் காட்டப்படுவதன் மூலமாக அது ஊடகங்களுக்கு மெலன்சோன் மீது கவனத்தை நகர்த்த உதவியிருக்கிறது. மெலன்சோன் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் அவரது சமூக வெட்டு வேலைத்திட்டங்களின் பின்னால் குட்டி முதலாளித்துவஇடதுகளை திரளச் செய்வதற்கான பொறியமைவு ஆகும்.(காணவும்: ”பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான ஹாலண்ட் இடது முன்னணியைப் புகழ்கிறார்”).

அடுத்த ஜனாதிபதி திணிக்க முயலுவார் என்று புட்டுவே ஒப்புக் கொள்கின்ற சமூக வெட்டுகளுக்கு எதிராக NPA “இடதுகளின் இடதின்” - இடது முன்னணி, தொழிலாளர்கள் போராட்டம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் இடது - ஒரு ஒன்றிணைந்த எதிர்த்தாக்குதலுக்கு தயாரிப்பு செய்வதற்கு புட்டு அழைப்பு விடுக்கிறார். மே 6 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் நடப்பு கோலிச ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசிக்கு எதிராய் ஹாலண்டை NPA ஆதரிக்கும் என்பதையும் புட்டு சுட்டிக் காட்டினார். “சார்க்கோசியையும் அவரது கூட்டத்தையும் தூக்கியெறிவதேமிக முக்கியமான விஷயமாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஹாலண்ட் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார் என்பதை NPA ஒப்புக் கொள்கின்ற நிலையிலும், தேர்தலுக்குப் பின்னர் மே 7 அன்று ஹாலண்டை சந்திக்க தான் விரும்புவதாக பெசன்செனோ தெரிவித்தார்.

மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் பிரான்ஸ் பங்குபெற்ற ஏகாதிபத்தியப் போர்களுக்கு ஒரு ஏமாற்றுத்தனமான எதிர்ப்பு நாடகத்தை புட்டு காட்டினார். ”இரண்டு நூற்றாண்டுகளாய் மக்களைச் சூறையாடிய, ஏழை நாடுகளைச் சூறையாடியபிரெஞ்சுக் குடியரசைக் கண்டித்துஏகாதிபத்திய-எதிர்ப்பைஆதரிப்பதாய் அவர் கூறிக் கொண்டார்.

கட்சியின் வரலாறு குறித்து எந்த ஆய்வையும் அவர் தவிர்த்து விட்ட காரணத்தால் தான் - இது NPA இன் குணாம்சம் - NPA அத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருந்ததைப் போன்று புட்டுவால் கூறிக் கொள்ள முடிந்தது. வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போருக்கு ஆதரவளிப்பது அத்துடன் சொந்த நாட்டில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிடிக்கு நழுவ அச்சுறுத்துகின்ற எந்த தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்கும் குரோதம் காட்டுவது என்பதின் வரலாறாகும் அது.

பிரான்சில் கடைசியாக நடந்த பெரும் வேலைநிறுத்தமான, 2010 இல் ஜனாதிபதி சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிராக எண்ணெய் ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தின் போதே, தொழிலாளர் போராட்டங்களை நோக்கிய NPA இன் மனோபாவம் தெளிவாகி விட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குடனான CGT, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாய்க் கிளம்பிய மற்ற போராட்டங்களை ஒழுங்கமைக்க மறுத்ததின் மூலம், போலிஸ் வேலைநிறுத்தத்தை உடைப்பதை ஓசையில்லாமல் ஆதரித்ததென்றால், NPA, வரம்புபட்டவிளையாட்டுத்தனமான ஆர்ப்பாட்டங்களுக்கான CGT இன் அழைப்புக்களை முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு எதிரொலித்தது

ஒரு ஏகாதிபத்திய-எதிர்ப்பு கட்சியாகத் தொடர்ந்து காட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, மேற்கத்திய நாடுகளின் நிதியாதாரத்துடன் ஆயுதமேந்தும்கிளர்ச்சிக் குழுக்கள் எல்லாம் ஜனநாயகத்திற்கான சுதந்திரமான போராட்டங்களை நடத்துகின்ற புரட்சிகரவாதிகள் என்பதான ஒரு பொய்யை அடிப்படையாகக் கொண்டு லிபியாவிலான பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போரை NPA ஆதரிப்பதோடு சிரியாவிலான இந்த ஏகாதிபத்தியங்களின் இப்போதைய தலையீட்டுக்கும் ஆதரவு தெரிவிக்கிறது.

கூட்டத்திற்குப் பின்னர் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் இது குறித்து அலென் கிறிவினுடன் சுருக்கமாக உரையாடினர். 2009 இல் NPA ஐ நிறுவிய புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகத்தின்(LCR)நெடுநாள் தலைவராவார் இவர்.

சிரியாவிலும் லிபியாவிலும் மேற்கத்திய ஆதரவுடன் ஆயுதமேந்தும்கிளர்ச்சிப் படைகளுக்கு NPA ஆதரவளிப்பது குறித்து கேட்கப்பட்டபோது கிறிவின் கூறினார்: “அரசின் எந்த ஆயுதத் தலையீட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம். ஆயுதத் தலையீடு என்பது வலிந்த தாக்குதல் தான். மறுபக்கத்தில், மக்கள் ஆயுதங்கள் வாங்குவதை நான் விரும்புகிறேன்.”

ஏகாதிபத்திய அரசுகள் சிரியாவிற்குள் இருக்கும் அவற்றின் பினாமிகளுக்கு ஆயுதங்கள் அளிப்பதை ஆதரிக்கின்ற அதே சமயத்தில் சிரியாவில் அரசுத் தலையீடு எதனையும் தான் எதிர்ப்பதாய் கிறிவின் கூறுவதென்பது அர்த்தமற்ற விளக்கமென்பதோடு போருக்கான அவரது ஆதரவை மறைக்கும் நோக்கத்தையே கொண்டதாகும்.   

வெளிநாட்டு அரசுகளுக்குத் தொடர்பில்லாத முகம் தெரியாத அமைப்புகளின் மூலம் ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன என்றாலொழிய, சிரியகிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது என்கின்ற கிறிவின் ஆதரித்து நிற்கும் நடவடிக்கை என்பது உண்மையில் சிரியாவிலான அரசுத் தலையீடு தானே என்று உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர் குறிப்பிட்டுக் காட்டினார். கிரைவின் அளித்த பதில்: “சரியே, அத்தகைய அமைப்புகள் இருக்கவில்லை; ஆயுதக் கடத்தல் என்பது தான் இருக்கிறது.”