World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US conspires with Turkey over militarized buffer zone following Syrian ceasefire

சிரியப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து இராணுவமயமாக்கப்படும் இடைத்தடைப்பகுதி குறித்து அமெரிக்கா துருக்கியுடன் சதி செய்கிறது

By Chris Marsden 
13 April 2012
Back to screen version

வியாழன் அன்று செயலுக்கு வந்த போர்நிறுத்தம் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் திட்டத்தில் ஒரு ஆரம்ப கட்டம்தான் என்பதை வாஷிங்டன் தெளிவாக்கியுள்ளது.

G8 வெளியுறவு மந்திரிகள் உச்சிமாநாட்டை ஓர் அரங்காகப் பயனபடுத்திக் கொண்ட ஒபாமா நிர்வாகம் பஷிர் அல்-அசத்தின் அரசாங்கம் .நா.வின் அனைத்துத் திட்டங்களையும் ஏற்று மேற்கத்தைய ஆதரவு கொண்ட எழுச்சியாளர்களுடன் நடக்கும்மோதலை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரியுள்ளது. போர்நிறுத்தத்தின் முதல் நாளன்றே வெளிவிவகாரச் செயலர் கிளின்டன், .நா.வின் முன்னாள் தலைமைச் செயலர் கோபி அனன் தீட்டியுள்ள 6 அம்சத்திட்டத்தின் ஏனைய பிரிவுகளைச் செயல்படுத்தவில்லை என வலியுறுத்திக் கூறினார். அனன் திட்டம் ஒன்றும் விருப்பத் தேர்வுகளாகக் கொடுக்கப்படவில்லை; அவை ஒரு தொகுப்பாக உறுதியாக ஏற்கப்பட வேண்டிய கடமைகளாகும் என்று அவர் அறிவித்தார்.

முதலில் செய்யப்பட வேண்டிய உத்தியோகபூர்வ நடவடிக்கை நாட்டில் .நா. கண்காணிப்பளார்களைச் சில நாட்களுக்குள் நிறுவுதல் ஆகும்; அவர்கள் தங்கள் கவனத்தை போர்நிறுத்தம் குறித்த மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் பற்றி செலுத்துவர்; ஆனால் எதிர்த்தரப்பிற்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை. இக்கடமைகள் அனைத்தையும்முற்றிலும், காணக்கூடிய வகையில் நிறைவு செய்வது ஆட்சியுடன்தான் தொடர்ந்து இருக்கும் என்று கிளின்டன் கூறினார்.

ஆனால் அமெரிக்கா ஆட்சி மாற்றத்தை விரும்புகிறது, அதற்குக் குறைந்த எதையும் ஏற்பதாக இல்லை என்று அவர் அப்பட்டமாகக் கூறினார். தன் மக்களுக்கு எதிரான போரை ஆட்சி நிறுத்தவேண்டும், அரசியல் மாற்றம் தொடங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அசாத் அகற்றப்பட வேண்டும். என்றார் அவர்.

அவருடைய உணர்வுகள் பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் ஆகியோரால் எதிரொலிக்கப்பட்டன; உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதற்கு சிரியாவில் உயர்மட்டத்தில் மாறுதல் தேவை என்று பிந்தையவர் கூறினார். பிரித்தானியாவின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் புதன் அன்று போர்நிறுத்தம் வரவிருக்கும் நாட்களில் முற்றிலும் செயல்படுத்தப்படவில்லை என்றால்..... நாங்கள் சிரியாவில் தீர்வைக் காண்பதற்கான புது முயற்சிக்குப் பாதுகாப்புக் குழுவை மீண்டும் அணுகுவோம்; எதிர்த்தரப்பிற்கான எங்கள் ஆதரவை நாங்கள் தீவிரப்படுத்துவோம். என்ற அச்சுறுத்தலை விடுத்தார்.

முன்னதாக வெள்ளை மாளிகை செய்தி ஊடகத்திடம் ஜனாதிபதி பாரக் ஒபாமா ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் பேசினார் என்றும், .நா.பாதுகாப்புக் குழு இன்னும் உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை ஒப்புக் கொண்டார் என்றும் கூறியது; அசாத் அரசாங்கம் கோபி அனன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வந்துள்ள உடன்பாட்டின் விதிகளை அசாத் அரசாங்கம் செயல்படுத்தவில்லை என்ற கவலை இரு தலைவர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது, ஆட்சி தன் மக்களுக்கு எதிராகவே ஏற்கத்தகாத மிருகத்தன நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது என்ற கருத்தை மேர்க்கெல் பகிர்ந்து கொள்கிறார் என்றும் அது தெரிவித்துள்ளது.

உண்மையில், மேற்கத்தைய சக்திகள் சிரிய தேசியக் குழு என்னும் கருவி மூலம் எழுச்சிக்கு நிதி கொடுத்து அதை இயக்குகின்றன; நாட்டில் தங்கள் செயற்பாடுகளை பிராந்திய பதிலிகள், குறிப்பாக துருக்கி, சௌதி அரேபியா மற்றும் கட்டார் மூலம் செயல்படுத்துகின்றன.

அசாத்திற்கு எதிரான ஒரு இராணுவத் தலையீட்டிற்கான தளத்தை தோற்றுவிப்பதற்கு ஒரு பிராந்திய ஒப்புதல் தேவைப்படுகிறதுஇது ஒரு போலி சமிக்ஞையாகும், அமெரிக்காவும் நேட்டோவும் திரைக்குப் பின்னால் செயல்படுவதற்கான வழிவகையாகும். அரபு லீக், அங்காரா மற்றும் வளைகுடா நாடுகள் ஆகியவைதான் இதைச் செய்து முடிப்பதற்கான கருவிகளாக உள்ளன. சிரிய தேசியக் குழுவிற்கு துருக்கிதான் புரவலராக உள்ளது; SNC தலைமையில் முன்னாள் ஆட்சிக் கூறுபாடுகள், இஸ்லாமிய அடிப்படை வாதிகள் மற்றும் CIA  சொத்துக்கள் ஆகியவை உள்ளன; அதன் இராணுவப் பிரிவான சுதந்திர சிரிய இராணுவமும் துருக்கியின் பேராதரவில் உள்ளது. சிரிய பாதுகாப்புப் படையினர் மற்றும் பிற இலக்குகளில் பலவும் துருக்கியில் இருந்துதான் அரங்கேற்றப்படுகின்றன. சௌதி அரேபியாவும் நிதிகள், ஆயுதங்கள் மற்றும் போராளிகளை SNC க்குக் கொடுக்கின்றன.

துருக்கிய எல்லையை ஒட்டி ஒரு இடைப்பகுதியை நிறுவுவதில் இப்பொழுது கவனம் தீவிரப்படுத்தப்படுகிறது. SNC க்கும் பல இரகசியச் செயலர்களுக்கும் இது தளமாக இருந்து பாலம் போல் விளங்கும். இன்னும் முக்கியமான முறையில் இதன் பாதுகாப்பு ஒரு இன்னும் பரந்த இராணுவ நிலைப்பாடு, வான் தாக்குதல்களை நெறிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்; அவ்வாறுதான் சமீபத்தில் லிபியாவில் செயல்படுத்தப்பட்டது.

துருக்கியின் வெளியுறவு மந்திரி அஹ்மெத் டாவுடோக்லு வீடியோ மூலம் துருக்கி நிலைப்பாடு பற்றி G8 ல் தெளிவாக்குமாறு கோரப்பட்டார். அவர் ஓர் இடைப்பட்ட பகுதி குறித்துக் கருத்துத் தெரிவித்திருப்பாரா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் அவ்வாறு செய்யத் தேவையில்லை. துருக்கிய செய்தி ஊடகம் அரசாங்கம் சிரியப் பகுதியைக் கைப்பற்றி அங்கு இடைப்பகுதி ஒன்றை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுத்துவருகிறது என்ற தகவல்களை நிறைய கொடுத்துள்ளது. திங்களன்று Zaman துருக்கி சிரியாவுடன் 1998ல் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தைச் செயல்படுத்தலாமா என்று பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது. அந்த உடன்படிக்கையில் துருக்கியின் பாதுகாப்பிற்கு சிரியா குறைமதிப்பு ஏற்படுத்தாது என்றும் உறுதி மொழி அடங்கியிருந்தது.

டாவுடோக்லுவுடன் ஓர் இடைப்பகுதி குறித்துத் தொலைப்பேசியில் முன்னதாக கிளின்டன் பேசினார். வெளிவிவகாரச் செயலகத்தின் அதிகாரி கூறினார்: இன்னும் கூடுதலான ஈடுபட்டிற்கு தான் இரு வழிகைகளைக் கொண்டுள்ளதாகத் துருக்கி எப்பொழுதுமே கூறிவந்துள்ளது. ஒன்று ஏராளாமாகப் பெருகும் அகதிகள் எண்ணிக்களைஇந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகிறது என்றுதான் அவர்கள் நம்மிடம் கூறியுள்ளனர்; இரண்டாவது பூசல் எல்லை கடந்து வரும் என்பாதகும். சமீப காலத்தில் நடப்பது இதையொட்டி இருக்குமா, என்பது பற்றி இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை.

துருக்கிய எல்லையில் ஒரு சிறு துப்பாக்கிச் சண்டையையை தொடர்ந்து, திங்களன்று வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், துருக்கியின் வெளியுறவு மந்திரி, சிரியாவில் உள்ள தற்போதைய ஆட்சியின் மிருகத்தனத்தை ஒட்டி எங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள சிரியக் குடிமக்கள் துருக்கியின் முழுப் பாதுகாப்பின்கீழ் உள்ளனர். இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு நாங்கள் தக்க நடவடிக்கைகளை உறுதியாக எடுப்போம். என்றார்.

செவ்வாயன்று துருக்கிய அரசாங்கம் .நா.பாதுகாப்புக் குழு தேவையான நடவடிக்கைகளை சிரிய மக்களுக்கு அளித்தல் உட்பட பல முடிவுகளை ஏற்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஏனெனில் அசாத் அவர் கூறிய உறுதிகளை ஒட்டி நடக்கவில்லை. ஆனால், .நா. இராணுவ நடவடிக்கை மூலம் செயல்படுத்துவது என்பது பிரச்சினைக்கு உரியது; ஏனெனில் ரஷ்யா மற்றும் சீனாவின் எதிர்ப்புக்கள் உள்ளன. வியாழன் அன்று கிளின்டன் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்தார்; ஆனால் அன்னனுடைய திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தும் கூட, .நா. ஆதரவு நடவடிக்கைக்கு மாஸ்கோ ஒப்புக் கொள்ளும் என்பதற்கான அடையாளம் ஏதும் இதுவரை இல்லை. அது இன்னும் வன்முறையை நிறுத்த எதிர்க்கட்சி முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்றுதான் பகிரங்கமாகக் கூறிவருகிறது.

இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகன் Hurriyet நாளேட்டிற்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் சிரியாவிற்கு எதிரான துருக்கிய நடவடிக்கைக்கு நேட்டோ ஆதரவு வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காதான் முக்கிய சக்தியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்கிய வகையில், அவர் மேலும் கூறினார்: இதுவரை, இந்த நெறி ஒருமுறைதான் வேண்டப்பட்டுள்ளது: செப்டம்பர்112011ல் உலக வணிக மையம், நியூ யோர்க்கிலும் வாஷிங்டனுக்கு அருகே பென்டகனும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உட்பட்டபின் அமெரிக்கா கோரியது.

9/11 துருக்கி கூறியிருப்பது, சிரிய மக்களுக்கும் மற்றும் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ளப்பட வேணடும்; ஏனெனில் அதுதான் ஆப்கானிஸ்தானத்திலும் ஈராக்கிலும் நடத்தப்பட்ட பேரழிவு தந்த போர்களுக்கு போலிக் காரணமாகப் பயன்படுத்தப்பட்டது.

சௌதியின் பாதுகாப்பு மந்திரி இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிசும் புதன் அன்று சிரியா குறித்து பென்டகனில் பேச்சுக்களை நடத்தினார். சௌதி தூதரகம் கொடுத்துள்ள தவகல்படி, அவர் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க மையக்கட்டுப்பாட்டு வெளிநாட்டுத் துருப்புக்களின் தலைவர் என்ற முறையில் உள்ள ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிசையும் சந்தித்தார். அதன்பின் அவர் ஓவல் அலுவலகத்தில் ஒபாமாவுடனும் பேச்சுக்களை நடத்தினார்: இருவரும் பலதரப்பட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தனர். இன்று ரியாத்தில் மன்னர் அப்துல்லாவுடன் எர்டோகன் பேச்சுக்களை நடத்த உள்ளார்: அப்துல்லாவிடம் அரபு நாடுகள் சிரிய அரசாங்கத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைகளில் அரபு நாடுகள் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறப்போவதாக Hyrriyet தகவல் கொடுத்துள்ளது.

சிரியாவிற்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை அதன் சவால் விடமுடியாத உலக மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு நடக்கும் முயற்சிகளுடன் பிணைந்துள்ளது. சிரியாவுடன், G8 மாநாடு ஈரான் பற்றியும் விவாதித்தது. இது அசாத்தை பதவியில் இருந்து இறக்கி வாஷிங்டனுக்குக் கட்டுப்படும் ஒரு சுன்னி ஆட்சியை அங்கு துருக்கி, வளைகுடா நாடுகளுடன் இணைந்து நிறுவுவதற்கான மறைமுக இலக்கு ஆகும்; அதேபோல் ஆத்திரமூட்டலை ஒரு சுழற்சியாக தொடர்ந்த வகையில் திட்டமிட்டு பாலிஸ்டுக் ஏவுகணைச் சோதனைகளை நடத்தும் வட கொரியாவிற்கு எதிராகவும் ஆகும் என்று கிளின்டன் விவரித்துள்ளார்.