சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

New Anti-Capitalist Party backs Left Front, social cuts in French presidential election

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் புதிய முதலாளித்துவ கட்சி இடது முன்னணியையும் சமூக வெட்டுகளையும் ஆதரித்து நிற்கிறது

By Alex Lantier in Paris
12 April 2012

use this version to print | Send feedback

பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியை (NPA) சேர்ந்த முன்னணி உறுப்பினர்கள் நேற்று ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு ஊடகப் பிரச்சாரத்தில், ஸ்ராலினிச ஆதிக்கமுடைய இடது முன்னணியுடனான ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததோடு சோசலிஸ்ட் கட்சி (PS) வேட்பாளரான ஃபிரான்சுவா  ஹாலன்ட் சுதந்திர-சந்தைக்கு பிரச்சாரம் செய்கின்ற போதிலும் அவரை ஆதரிக்கவிருப்பதை சூசகம் செய்தனர்.

NPAவின் ஜனாதிபதி வேட்பாளரான பிலிப் புட்டு Le Monde இல் அளித்த நீண்ட நேர்காணலில் “PSக்கு எதிர்ப்பணியை கட்டுவதற்கு இடது முன்னணி மற்றும் குட்டி முதலாளித்துவஇடது தொழிலாளர் போராட்டம் (LO) குழு ஆகியவை கைகோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவர் விளக்கினார்: “ இடது (PS) வெற்றி பெற்றால் அரசாங்கத்திற்கான எதிர்ப்பு அணியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். இந்த எதிர்ப்பு அணியை NPA மட்டும் செய்து விட முடியாது.”

நடப்பு ஜனாதிபதியான கன்சர்வேடிவ் கட்சியின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியைத் தோற்கடிக்க இரண்டாவது சுற்றில் ஹாலன்டுக்கு வாக்களிக்க அழைப்பு விடுப்பீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ஆம் என்பதான சமிக்ஞையை புட்டு வெளிப்படுத்தினார்: “முதல் சுற்று முடிந்ததற்குப் பின்னர் மொத்தமாய் அமர்ந்து NPA என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதை விவாதிப்போம். சார்க்கோசியையும் அவரது ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் அகற்றியாக வேண்டும் என்பது தான் இன்று நாங்கள் சொல்வது.” 

NPA இன் செய்தித் தொடர்பாளரும் இருமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவருமான ஒலிவியே பெசன்செனோ யூரோப்1 வானொலியில் தோன்றி இதேபோன்றதொரு செய்தியையே வழங்கினார்: “அரசாங்கத்தின் இடது பக்கத்தில் நாம் ஒரு எதிர்ப்பணியை உருவாக்க வேண்டும், இந்தக் கோரிக்கையைத் தான் நாம் ஜோன்-லூக் மெலென்சோன் (இடது முன்னணி வேட்பாளர்)மற்றும் நத்தலி ஆர்தாட்(LO வேட்பாளர்) நோக்கி வைக்கிறோம். அவர்கள் எங்களுடன் இணையத் தயாரா? ஆம் அல்லது இல்லை என்ன பதில் கிடைக்கப் போகிறது?”

எலிசேயின் ஜனாதிபதி மாளிகையில் சார்க்கோசியோ அல்லது ஹாலண்டோ வருவதை விரும்பவில்லை என்கின்ற மட்டத்திற்கு PSக்கான அவரது எதிர்ப்பு இருக்குமா என்கின்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்: “இல்லை, இல்லை. சார்க்கோசியை நம்மால் தோற்கடிக்க முடியுமாயின் ஃபிரான்சுவா ஹாலன்ட் தான் எலிசே மாளிகையில் இருக்கப் போகிறார்.”  ஹாலன்ட்  ஜனாதிபதி பதவியை வெற்றி கண்டால் இடது முன்னணியின் பெரும் பிரிவுகள் பதவிகளைப் பெறும் என்பதைக் குறிப்பிட்டுப் பேசும்போது அவர்மிக சுயாதீனமான மனிதர்களுடனான உறவுகளைத் தான் விரும்புவதாய் கூறினார். “எதிர்ப்பு என்கின்ற அம்சத்தைக் கொண்டு தான் நான் விடயங்களைப் பார்க்கிறேன் என்று சேர்த்துக் கொண்டார்.

எதிர்ப்பு அணி மற்றும்எதிர்ப்பு என்றெல்லாமான NPA இன் வெற்றுக் கூடான வாக்குறுதிகளுக்குப் பின்னால், அக்கட்சி  ஹாலன்ட்  வெற்றி பெறுவதை ஆதரிக்கிறது என்பதும் அமைச்சரவை கேபினட்களில் அல்லது நாடாளுமன்ற குழுக்களில் PS நிர்வாகிகளுடன் கைகோர்க்கவிருக்கும் சக்திகளுடன் ஒரு கூட்டணிக்கு அது தயாரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் தான் அரசியல் யதார்த்தமாகும். இந்த சக்திகளில், இப்போது இடது முன்னணி வேட்பாளராய் களத்திலிருக்கும் முன்னாள் PS அமைச்சரான மெலன்சோனின் இடது கட்சி (PG), மற்றும் இடது முன்னணியின் உறுப்பினத்துவத்தில் பெரும் எண்ணிக்கைக்கு பங்களிப்பு செய்வதும் PS இன் பாரம்பரியமான கூட்டணிக் கூட்டாளியுமான ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி(PCF)ஆகியவையும் அடங்கும்.   

அவர்கள் முன்னெடுக்கும் கொள்கைகள் இருந்தபோதிலும் அவர்களை NPA ஆதரிக்கிறது என்பதல்ல, அவர்கள் முன்னெடுக்கும் கொள்கைகளால் தான் அவர்களை NPA ஆதரிக்கிறது, அக்கொள்கைகள் NPA நன்கு அறிந்து ஆதரவளிக்க விரும்புபவையே. இவ்வாறாக, மார்ச் 27 அன்று கிளெர்மொன்-ஃபெராண்ட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திற்குப் பின்னர் புட்டு கூறுகையில், ”இடது-சாரி சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளைக் கொண்ட ஹாலன்ட் மீது NPAவுக்குநம்பிக்கை ஏதும் கிடையாது என்கிற போதிலும் கூடசார்க்கோசி தோற்கடிக்கப்படுவதற்கு தான் அழைப்பு விடுக்க விரும்புவதாய் கூறினார். “அதற்காக சார்க்கோசியும் ஹாலண்டும் ட்வீட்லெடீ ட்வீட்லெடம் போல் பிரித்துப் பார்க்கவியலாத ஒரே அச்சு ஜோடி என்று அர்த்தமில்லை.”

அதாவது, சார்க்கோசியாக இல்லாமல் ஒரு முதலாளித்துவஇடது கட்சி முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கையை ஆதரிக்க NPA விருப்பத்துடன் இருக்கிறது. இது விரிந்த அளவில் NPA இன் கொள்கைகளுக்கு முற்றிலும் பொருந்தி வருவது தான். சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் கழுத்தை நெரித்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தை இது ஆதரித்திருக்கிறது, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை அதன் லிபியா மற்றும் சிரியாவிலான போரில் ஆதரித்திருக்கிறது. இந்தக் கொள்கைகள் எல்லாம் வலது நோக்கித் துரிதமாய் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஏகாதிபத்திய-ஆதரவு குட்டி முதலாளித்துவக் கட்சியாக NPA அடையாளம் காட்டுகின்றன

ஒரு முதலாளித்துவஇடதின் அரசியல்வாதியாக  ஹாலன்ட்  மென்மையான, அதிகம் ஏற்கப்படக் கூடிய வெட்டுகளை நடத்துவார் என்று அவரை ஆதரிப்பதற்கு புட்டு முன்னெடுக்கும் வாதம் ஒரு அரசியல் பொய் ஆகும்.

உண்மைகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த வாதம் பிழையானதாகும். கிரீஸில் ஐரோப்பாவிலான மிகக் கொடுமையான வெட்டுகளை முன்னெடுப்பதன் மூலம், தொழிலாள வர்க்கம் கொண்டிருந்த போருக்குப் பிந்தைய காலத்தின் வெற்றிகளை எல்லாம் அழிப்பதற்கு முதலாளித்துவ வர்க்கம் சமூக ஜனநாயக அரசியல்வாதிகளின் பக்கம் திரும்பியது, முதலில் 2009 இல் ஜோர்ஜ் பாப்பான்ட்ரூ நோக்கியும் அதன்பின் சென்ற ஆண்டில் லூகாஸ் பாப்பாடெமோஸ் நோக்கியும். சமூக ஜனநாயகக் கட்சியின் இந்த இரண்டு பிரதமர்களும் ஊதியங்களை 30 முதல் 50 சதவீதம் வரைக் குறைத்துள்ளனர், வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கச் செய்துள்ளனர், அத்துடன் எண்ணிலடங்கா மக்களுக்கு இருப்பிடமும் மருத்துவ வசதிக்கான அணுகலும் கிட்டாதபடி செய்துள்ளனர்.

ஆயினும் மிகக் குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்கான ஒரு புரட்சிகர எதிர்ப்பணியின் கண்ணோட்டத்திற்கும் NPA  இன் கண்ணோட்டத்திற்கும் இடையே பிரித்து நிற்கும் வர்க்கப் பிளவை இது சுட்டிக் காட்டுகிறது. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி என்று பெயர் இருந்தாலும் அது முதலாளித்துவத்திற்கு எதிரானது இல்லை; மாறாக PS இன் சுற்றுவட்டத்திற்குள் இருக்கும் குட்டி-முதலாளித்துவஇடது சக்திகளுக்குள் தனது இடத்தை மறுபேரம் செய்து கொள்வதற்குத் தான் அது முனைகிறது.

புட்டு தன் Le Monde பத்திரிகை நேர்காணலில் ஸ்ராலினிச PCF மற்றும் PG (இடது கட்சி), மெலன்சோன் ஆகியோர் PS இல் இருந்து உடைத்துக் கொண்டதற்கு இசைவளித்து பேசினார். மெலன்சோனின் பிரச்சாரத்தைப் புகழ்ந்து அவர் கூறினார்: “பன்முகத் தன்மை இடதின் வேலையைச் செய்வது என்பதால் அது ஒரு பிரச்சினையாக இருந்தாலும்  PCF (பிரெஞ்சு கம்யூனிஸ்டுக் கட்சி) மற்றும் PG இன் ஆதரவாளர்களுக்கு இது உற்சாகமூட்டும் என்பதால் இது ஒரு சாதகமான வெற்றியே ஆகும்.”

உண்மை என்னவென்றால், 1997-2002 காலத்தில் PCF மற்றும் PG தலைமையிலான பன்முக இடது அரசாங்கத்திற்கு ஆதரவாளராய் ஆரம்பத்தில் மெலென்சோன் இருந்தார். இதன் தனியார்மயமாக்கம் மற்றும் வேலை வெட்டு வேலைத்திட்டங்கள் இதற்கு பெரும் அவப்பெயர் சம்பாதித்துத் தந்தன. அப்படியிருக்க இடது முன்னணியானது பன்முகத் தன்மை இடது அரசாங்கத்தில் இருந்து வேறுபட்டதான ஒரு கொள்கையை நடத்த முடியும் என்பதான பிரமைகளை புட்டு ஊக்குவிக்கிறார் என்றால் அது அவர்களுக்கான NPA இன் ஆதரவை நியாயப்படுத்துவதற்குத் தான்.

இது 2009 இல்ட்ரொட்ஸ்கிச-குவேராயிச புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) தன்னை கலைத்துக் கொண்டு NPA உருவாக்கியதையொட்டி உலக சோசலிச வலைத் தளம் முன்வைத்த ஆய்வறிக்கையை முழுமையாய் ஊர்ஜிதம் செய்கிறது. உலக சோசலிச வலைத் தளம் எழுதியது: “இடதுகள் மீதான முதலாளித்துவ மறுசீரமைப்பின் பகுதியாக LCR இருக்க வேண்டுமென்றால், புரட்சிகர அரசியலுடன் அது கொண்டிருக்கக் கூடிய நூலிழை சம்பந்தத்தையும் கூட அது முறித்துக் கொண்டிருக்கின்றது என்பதை அது தெளிவுபடுத்தியாக வேண்டும். பொதுவில் LCR ட்ரொட்ஸ்கிசத்துடன் அடையாளப்படுத்திக் கொள்கிறது என்கிற மட்டத்திற்கு, அது தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் மற்ற சக்திகளுடன் ஒத்துழைக்கின்ற வகையில் மேற்கொள்வதற்குத் தள்ளப்படக் கூடிய வலது நோக்கிய கூர்மையான நகர்வுக்கு இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கும்.”

கிரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் இவற்றைக் கடந்து வேறெங்கிலும் பேரழிவான சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டு ஐரோப்பாவெங்கிலுமான வர்க்க உறவுகளை மாற்றியமைக்க முதலாளித்துவ வர்க்கம் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தக் கொள்கைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிப்பதில் உதவ NPA விரும்புகிறது. அதை இடது முன்னணிக்குள் அமர்ந்து கொண்டு PS ஆதரவு நாடாளுமன்றப் பெரும்பான்மையின் பகுதியாகச் செய்கிறதா அல்லது வெறுமனே PSக்கு நம்பகமான எதிர்ப்பணியாக அமர்ந்து கொண்டு  ஹாலன்ட் மீதான நேர்மறை விமர்சனத்தை வழங்குவதன் மூலம் செய்கிறதா என்பது ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரை ஒரு தொழில்நுட்ப வேறுபாடு தான். வெட்டுகளுக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை மிகத் திறம்பட்ட வகையில் மட்டுப்படுத்தும் ஒரு தெரிவு எதுவோ அதைக் கோரி அது அழுத்தமளிக்கப் போகிறது.  

ஜேர்மன் தொழிற்துறையுடன் போட்டியிட வேண்டுமென்றால் சகல நிலைகளிலும் 10 முதல் 20 சதவீதம் வரை ஊதியங்களை வெட்டியாக வேண்டும் என்று பிரான்சில் பொருளாதார நிபுணர்கள் வாதிட்டு வருகின்றனர். எனினும் இது, தெற்கு ஐரோப்பாவிலும் ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் தொழிற்மயப்பட்டு வரும் நாடுகளிலும் இருக்கின்ற வர்க்க சகோதரர்கள் ஆட்படுகின்ற அதே மகா-சுரண்டல் மட்டத்தில் பிரெஞ்சு மற்றும் தொழிலாளர்களைப் பராமரிப்பதற்குக் கோரப்படும் வெட்டுகளில், முதல் செலுத்துதொகை(down payment ) மட்டுமே.

PS ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுகின்ற பட்சத்தில் இக்கடமையைத் தான்  ஹாலன்ட்  மற்றும் NPA போன்ற அவரது குட்டி-முதலாளித்துவஇடது ஆதரவாளர்கள் முதலாளித்துவத்திடம் இருந்து விதிக்கப் பெறவிருக்கின்றனர்.