WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
European Court’s extradition ruling: A major blow to democratic rights
நாடுகடத்துவது பற்றிய ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்பு: ஜனநாயக உரிமைகளுக்குப் பாரிய
அடி
By Julie Hyland
12 April 2012
ஐரோப்பிய
மனித உரிமைகள் நீதிமன்றத்தின்
European Court of Human
Rights (ECHR)
முடிவான
பயங்கரவாதத் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் காவலில் உள்ள ஐந்து பேர்
அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்னும் தீர்ப்பு ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு
முக்கிய அடியாகும்.
ECHR
என்பது 47 உறுப்பினர்கள் அடங்கிய ஐரோப்பியக் குழுவினால்
ஏற்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய உடன்படிக்கையை மீறியது குறித்த
வழக்குகளில் இறுதி நீதிமன்றம் ஆகும்.
செவ்வாயன்று
நடந்த விசாரணை அபு ஹம்சா, அடெல் அப்துல் பாரி, கலீட் அல்-பவ்வாஸ், பாபர் அஹ்மத்,
சையத் டல்கா அசன் மற்றும் ஹரூன் ரஷித் அஸ்வத் என ஆறு பேர் பற்றியது ஆகும். அனைவரும்
இப்பொழுது இங்கிலாந்தில் அமெரிக்கா கோரியுள்ள நாடுகடத்தி ஒப்படைத்தல் அழைப்பாணையின்
கீழ் உள்ளனர்.
காவலில்
வைக்கப்பட்டவர்களுள் ஹம்சா நன்கு அறியப்பட்டுள்ளவர். கொழுக்கி வடிவக் கையை உடைய,
எகிப்தில் பிறந்த தீவிரவாத
மதகுருவான இவர் 9/11
பயங்கரவாதத் தாக்குதல்களை பாராட்டியவர், நீண்டகாலம் பிரித்தானிய அரசியல்
ஆளும்தட்டினரின் வெறுப்பிற்குட்பட்ட நபர் ஆவார். அரசியல் ஆளும்பிரிவினரோ
“பயங்கரவாதத்திற்கு
எதிரான போர்”
என்னும் பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள கடுமையான உரிமை மீறல்களை
நியாயப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது.
2006ம்
ஆண்டு ஹம்சா கொலை மற்றும் இன வெறுப்பைத் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு
ஏழாண்டுகாலம் சிறைவாசம் விதிக்கப்பட்டார். அமெரிக்கா அவர் வன்முறை ஜிகத் அல்லது
புனிதப் போரைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால்
ஹம்சாவைப் போல் அன்றி, மற்ற ஐந்து காவலில் இருப்பவர்கள்மீது இங்கிலாந்தில் எந்தக்
குற்றச்சாட்டும் இல்லை. ஆயினும் அட்டூழியமான முறையில் அவர்கள் பல ஆண்டுகளாக விசாரணை
ஏதும் இன்றிச் சிறையில் உள்ளனர்.
இவர்களில்
அஹ்மத், அஹ்சன் மற்றும் அஸ்வத் ஆகியோர் பிரித்தானியக் குடிமக்கள் ஆவர்.
அஹ்மத்
எட்டு ஆண்டுகளாகச் சிறையில் உள்ளார். ஐக்கிய இராஜ்ஜியத்தில் பயங்கவாத எதிர்ப்புச்
சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு ஏதும் இல்லாமல் நீண்ட காலமாகக் காவலில் உள்ள
பிரித்தானியர் ஆவார் இவர்.
2003ல்
முதலில் கைதுசெய்யப்பட்ட அஹம்த் ஆறு நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
அவருடைய புகாரான தான் கைதுசெய்யப்பட்ட காலத்தில் பலமுறை உடல்ரீதியாக,
பாலியல்ரீதியாக, மதரீதியாக தவறாக நடத்தப்பட்டார் என்பது மார்ச் 2009 இல்
மெட்ரோபொலிடன் பொலிசால் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இறுதியில்
அஹமத்திற்கு மிருகத்தனத் தாக்குதல்களால் ஏற்பட்டிருந்த 73 பதிவான உடற்காயங்களுக்காக
இழப்பிட்டுத் தொகை
£60,000
வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள் அவர் ஏற்கனவே ஐந்து ஆண்டு காலம் குற்றச்சாட்டு ஏதும்
இன்றி, ஆகஸ்ட் 2004ல் அமெரிக்க அரசாங்கம் கோரிய நாடுகடத்தி ஒப்புவித்தல்
கோரிக்கையின்படி காவலில் வைக்கப்பட்டுவிட்டார்.
அசனுடன்
அஹ்மதும் அவர் நடத்திய பல வலைத் தளங்கள் மூலம் பயங்கவாதத்திற்கு ஆதரவு கொடுக்க
சதித்திட்டம் இடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவற்றுள்
Azzam
Publications
என்பது அடங்கும். இது சேஷ்ஷேன்யா, ஆப்கானிஸ்தான் இன்னும் பிற இடங்களில் ரஷ்யா
மற்றும் மேலைச் சக்திகள் நடத்திய கொடூரங்களைப் பற்றிய குறிப்புக்களைக்
கொண்டிருந்தது. வலைத் தளம் லண்டனில் இருந்து செயல்பட்டாலும், அது கனக்டிகட் தளமுடைய
தகவல் பரிமாற்ற கணனிகளை
பயன்படுத்துவதால் அமெரிக்கா தன் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என உரிமை கோருகிறது.
2006ல்
இருந்து குற்றச்சாட்டு ஏதும் இன்றிக் காவலில் இருக்கும் அசன் ஒருவகை மனக்குழப்ப
நோயினால் அவதியுறுவதால், தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்திற்கு உட்படலாம் என
கருதப்படுகிறார்.
அஸ்வத்
2005ல் இருந்து, இவர் 1999ல் ஓரேகான் பயங்கரவாதப் பயிற்சி முகாமில் தொடர்பு
கொண்டுள்ளார் என்னும் குற்றச்சாட்டை ஒட்டிய அமெரிக்கப் பிடி ஆணையின்கீழ் காவலில்
உள்ளார். பெரும் மனச் சிதைவினால் அவதியுறும் இவர் மனநோயினாலேயே பாதிக்கப்பட்டு
இப்பொழுது பிராட்மூர் பாதுகாப்பு மருத்துமனையில் காவலில் உள்ளார்.
ஓர்
எகிப்தியக் குடிமகனான பாரி மற்றும் சவுதி அரேபியாவின் அல்-பவாஸ் ஆகியோரின்
நிலைமையும் இன்னும் மோசமானது ஆகும். அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில்
அவர்கள் தனித்தனியே லண்டனில் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகளாகக் குற்றச்சாட்டு ஏதும்
இன்றிக் காவலில் உள்ளனர். இருவரும் 1998ல் தன்சானியாவில் நடந்த அமெரிக்கத்
தூதரகத்தின் மீதான குண்டுவீச்சில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்
சாட்டப்பட்டுள்ளனர்.
இவர்களை
தங்களிடம் ஒப்புவிக்கவேண்டும் என்பது 2003 அமெரிக்க/ஐக்கிய இராஜ்ஜிய ஒப்புவித்தல்
உடன்படிக்கையின்படி கோரப்பட்டது. இது இரு நாடுகளும் ஈராக் மீதான தங்கள் குற்றம்
சார்ந்த படையெடுப்பு ஆக்கிரமிப்பு ஆகியவற்றைத் தொடங்கி ஒரு மாதத்திற்குள்
கையெழுத்தானது.
ஐக்கிய
இராஜ்ஜியத்தில் இருந்து எந்த நபரும் அக்குற்றம் இங்கிலாந்திற்குள்
நடத்தப்பட்டிருந்தாலும் அமெரிக்கச் சட்டத்தை மீறினால் அமெரிக்காவிற்கு ஒப்படைக்க
இந்த உடன்பாடு அனுமதிக்கிறது. மேலும், அமெரிக்க அடிப்படைச் சான்று எதையும்
குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கொடுக்கத் தேவையில்லை;
“காரணமிக்க
சந்தேகம்”
உள்ளது என்று கூறினால் மட்டும் போதும்.
இவை
அனைத்தும் ஐக்கிய இராஜ்ஜிய அதிகாரிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் பல
முறையும் பிரிட்டனில் இவர்களை விசாரிப்பதற்கு மறுத்துள்ளதுடன், அவர்கள்
அமெரிக்காவிடம் ஒப்படைப்பதில் உறுதியாக உள்ளனர்.
2010ம்
ஆண்டில் அறுவரும்
ECHR
இடம் மேல்முறையீடு
செய்தனர். அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு, நாட்டின்
“மிக
அதிக பாதுகாப்புடைய”
சிறைகளில் காவலில்
வைக்கப்பட்டால், அது
“மனிதாபிமானமற்ற,
இழிந்த நடத்தும் முறை அல்லது தண்டனையை”
தடுக்கும் ஐரோப்பிய மனித உரிமைகளை மீறுவதாகும் என்று
வாதிட்டுள்ளனர்.
இவ்வகையில்
செய்ததாலேயே இன்னும் மதிப்பிழந்துவிடும் என்ற ஓர் உறுதிப்பாட்டின் அடிப்படையில்,
அமெரிக்க
ECHR
இடம் இந்த அறுவரும் அசாதாரண
கடத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டர்கள்,
“விரோதிப்
போராளிகள்”
என நடத்தப்பட மாட்டார்கள் அல்லது மரண தண்டனை அளிக்கப்படமாட்டாது
என்று கூறியுள்ளது.
ஆயினும்கூட,
ECHR
ஜூலை 2010ல்
நாடுகடத்தல் செயற்பாடுகளை நிறுத்தி, குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்தது.
அமெரிக்க
உத்தரவாதங்களை ஏற்றும், இரு முக்கிய பிரச்சினைகள் இருந்தன: நீடித்த தனிச்சிறைவாசம்
மற்றும் தற்காலிக விடுவிப்பு இல்லாத ஆயுள் தண்டனை ஆகியவை முறையற்ற செயலா என்பவையே
அவை.
செவ்வாயன்று
ECHR
அவை அவ்வாறு அல்ல என்ற முடிவிற்கு வந்தது.
தனிச்
சிறைவாசம் என்பது அத்தகைய சிறைகளில்
“ஒரு
வழமையான நெறிதான்”
என்று நீதிமன்றம்
கூறப்பட்டது. ஆனால் அப்பட்டமான பாசாங்குத்தனத்துடன்
ECHR
காவலில் உள்ளவர்கள்
“பெரும்பாலான
ஐரோப்பியச் சிறைகளில் கொடுக்கப்படும் பணிகள், செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு
மேலானவற்றை பெறமுடியும்”
என்று கண்டறிந்துள்ளது.
“காவலில்
உள்ளவர்களுக்கு இடையே இடைத்தொடர்பிற்குப் போதுமான வாய்ப்புக்கள் உள்ளன.
அறைகளுக்குள் இருக்கையில் மற்றவர்களுடன் பேசுதல் முடியும், ஆனால் அது காற்று வரும்
இடத்தின் மூலம்தான்”
என்று தலைகீழ்த்தனமாக அது தீர்ப்புக் கூறியுள்ளது.
இத்தகைய தடை
செய்யும் நிபந்தனைகள் காவலில் உள்ளவர்கள்
“கணிசமான
பாதுகாப்பு அபாயம் அளிப்பவர்கள்”
என்றால் நியாமானவையே
என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தற்காலிக விடுவிப்பு இல்லாத ஆயுள் தண்டனை வாய்ப்பைப்
பற்றிக் கூறுகையில்,
ECHR
இது
“பிரச்சினையின்
தீவிரத்தைப் பொறுத்தது”
எனத் தீர்ப்பளித்துள்ளது.
அவருடைய
இயலாமைகளின் காரணமாக பெரும் பாதுகாப்புச் சிறையில் அடைக்கக்கூடாது என்ற ஹம்சா
கோரியதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அஹ்மத், அசன், பாரி ஆகியோரின் மன
ஆரோக்கியப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, நீதிமன்றம் இவை ஒன்றும் ஐக்கிய இராஜ்ஜிய
அரசியல் உயர்பாதுகாப்புச் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டதைத் தடுக்கவில்லை என்று
கூறுகிறது.
அஸ்வத்
குறித்த முடிவு இன்னும் ஆராயந்து முடிக்கப்படவில்லை. மற்ற ஐந்து பேரும்
ECHR
உடைய பெருமன்றத்திற்கு முறையீடு செய்ய மூன்று மாத அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளனர்;
அக்கோரிக்கையும் அநேகமாக நிராகரிக்கப்பட்டுவிடும்.
இத்தீர்ப்பு
அரசியல் நோக்கத்தை கொண்டுள்ளது.
Los
Angeles Times
கூறியுள்ளபடி, இந்த
வழக்கு “அமெரிக்க-ஐரோப்பிய
உறவுகளுக்கு”
முக்கியத்துவத்தை
கொண்டுள்ளது. நாடுகடத்தலை தடுத்தல் என்பது
“அமெரிக்க
நீதிமன்ற, திருத்த முறைகளைக் கண்டிப்பதற்கு ஒப்பாகும், அட்லான்டிற்கு இடையிலான
கூட்டு பயங்கரவாத எதிர்ப்புச் செயல்களுக்கு பெரும் பாதிப்பைக் கொடுத்திருக்கும்”
என்று அது கூறுகிறது.
பிரித்தானிய
அதிகாரிகள் நீதிமன்றம் எதிர்மறைத் தீர்ப்பு கொடுத்தால் அது அமெரிக்க/ஐக்கிய
இராஜ்ஜிய அரசியல் உறவுகளைப்பாதித்திருக்கும் என்று குறைகூறியுள்ளனர்; சிலர் ஐக்கிய
இராஜ்ஜியம்
ECHR
இல் இருந்து விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஐக்கிய
நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரான ஜோன் போல்டன் ஒரு படி மேலே
சென்றுள்ளார். தீர்ப்பிற்கு முன் பேசிய அவர்
ECHR
தடுப்பதிகாரம்
“பயங்கரவாதத்திற்கு
எதிரான போரில் ஐரோப்பா முழுவதுமாக ஒரு திறமையான பங்காளியாக இருக்கும் திறனை
கேள்விக்கு உட்படுத்திவிடும்”
என்றார்.
இறுதியில்,
ECHR “ஜனநாயகம்,
மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு மரியாதை அளித்தல் என்னும் நீண்ட
வரலாற்றை உடைய ஒரு நாட்டிடம்”
நாடுகடத்தலை
மறுத்தல், மனித உரிமைகளை தவறாகப் பயன்படுத்துதல் என்பதில் சிறிதும் கவலைப்படுவதற்கு
இல்லை”
என்றும் கண்டறிந்துள்ளது.
நீதிமன்றத்தின் முடிவு பயங்கரவாத வழக்குகளுக்கும் அப்பால் தாக்கங்களை கொண்டுள்ளது.
BBC
குறிப்பிட்டதுபோல், இந்தத்
தீர்ப்பு “எந்த
அளவிற்கு அமெரிக்காவின் சட்டத்தை செயற்படுத்தும் கைகள் ஐரோப்பாவை அடையலாம் என்பதை
வரையறுக்கிறது”
என்று கூறியுள்ளது.
கடந்த
மாதம், ஐக்கிய இராஜ்ஜிய அதிகாரிகள் 23 வயது ரிச்சர்ட் ஓ’டயர்
அமெரிக்காவிடம் காப்புரிமை மீறல் குற்றத்திற்காக ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதற்கு
ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
அடுத்த
வாரம் ஐக்கிய இராஜ்ஜியத்தின் தலைமை நீதிமன்றம் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன்
அசாஞ்ச்
ஐ
அவர் ஸ்வீடனிடம் தயாரிக்கப்பட்ட பாலியல் தாக்குதல்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்காக
ஒப்படைக்கப்பட வேண்டும் என்று செய்துள்ள கோரிக்கையின்மீது தீர்ப்பைக் கொடுக்க
இருக்கிறது.
டிசம்பர்
2010 முதல் அசாஞ்ச் லண்டனில் வீட்டுக்காவலில் உள்ளார். இது ஐரோப்பிய கைதுப்
பிடியாணையின் கீழ் நடந்துள்ளது (EAW).
EAW,
2003 பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டையும் ஒப்புக் கொண்டு, அதன் அடிப்படையில் ஒரு
நபர் அவர்கள் வசிக்கும் நாட்டில் குற்றம் செய்ததற்காக குற்றம்சாட்டப்பட்டிருக்காத
போதிலும் ஐரோப்பாவில் எந்த இடத்திலும் ஒப்படைக்கப்படலாம், என்று கூறியுள்ளது.
ஸ்வீடனிடம்
தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் அசாஞ்ச் அவ்வாறு செய்யப்படுவது அவர்
அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதற்கு முன்னோடிச் செயல் ஆகிவிடும் என்று
வாதிட்டுள்ளார். அந்நாட்டுடன் ஸ்வீடனும் நாடுகடத்தல் உடன்பாட்டை பிரித்தானியா போல்
கொண்டுள்ளது.
வேர்ஜீனியாவில் ஓர் இரகசிய நடுவர் மன்றம் அசேஞ்ச்
க்கு எதிராக,
ஒற்றுக் கேட்டல் என்று முத்திரையிடப்பட்டுள்ள குற்றச்சாட்டைத்
தயாரித்துள்ளது. இதன்படி அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.
விக்கிலீக்ஸ் அமெரிக்கா மற்றும் அதன் உடந்தை நாடுகளின் போர்க் குற்றங்கள் குறித்த
ஆயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்குப் பதிலடிதான் இக்குற்றச்சாட்டு
ஆகும்.
எதிர்பார்ப்பது போல், தலைமை நீதிமன்றம் அசாஞ்ச் ஐ ஒப்படைக்கப்படலாம் என்று
தீர்ப்புக்கொடுத்தால், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்
(ECHR)
தான் விக்கிலீக்ஸின் நிறுவனருக்கு கடைசி சட்டபூர்வ
பொறுப்புடையதாகும். |