WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
ஏதென்ஸில் டிமிட்ரிஸ்
கிறிஸ்ரோலாஸ் நினைவுப் பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு
By Julie
Hyland
9 April 2012
use
this version to print | Send
feedback
ஏதென்ஸின்
சின்டகமாக சதுக்கத்தில் புதன் காலை கைத்துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொன்று
விட்ட 77 வயதான முன்னாள் மருந்தகப் பணியாளர் டிமிட்ரிஸ் கிறிஸ்ரோலாஸின் நினைவுப்
பிரார்த்தனைக் கூட்டத்தில் சனியன்று நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இரங்கலுக்கு
வந்தவர்கள் அழுதனர், கவிதைகளையும் கடிதங்களையும் படித்தனர், கிறிஸ்ரோலாஸ்
“அரசியல்
கொலையுண்டவர்”
என்று கோஷங்களைப் பாடினர். மத சார்பற்ற கூட்டத்திற்குப்பின் அவர்கள்
ஏதென்ஸ் நகரத்தின் மையத்தின்வழியே சதுக்கத்திற்குச் சென்றனர்.
தன்னுடைய
தற்கொலைக் குறிப்பில் கிறிஸ்ரோலாஸ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய
நிதியின் ஆணையில் மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் கிரேக்கத்தின் கூட்டணி
அரசாங்கத்தை,
இரண்டாம் உலக யுத்த
காலத்தில் நாஜி ஆக்கிரமிப்பில்
Georgios Tsolakoglou
தலைமையின் கீழ் இருந்த கைப்பாவை அரசாங்கத்துடன் ஒப்பிட்டிருந்தார்.
“உணவிற்கு
குப்பைகளைக் கிளறி வாழ்தல்”
என்று முடிவதை விட
கௌரவத்துடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தயார் என்று கூறிய வகையில் குறிப்பில்
எழுதியிருந்த அவர் இளைஞர்களை எழுச்சி செய்து
“1945ல்
இத்தாலியர்கள் முசோலினியை தூக்கிலிட்டது போல் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களை
சின்டகமாக சதுக்கத்தில் தூக்கிலிடுமாறு”
அழைப்பு விடுத்திருந்தார்.
கிறிஸ்ரோலாஸ் தன்னையே சுட்டுக் கொன்ற பைன் மரக்கீழ்ப்ப்பகுதி ஓர் வழிபாட்டுத்தலமாக
மாறிவிட்டது; அந்த இடத்தைச் சுற்றிலும் மெழுகுவர்த்திகளும், மலர்களும்
நிறைந்துள்ளன;
“கடன்
கொடுத்தவர்களுடைய ஆட்சிக்குழு வீழ்க”
என்ற குறிப்புக்களும் நிறைய இருந்தன. புதன்மாலை தன்னியல்பாக எழுந்த
எதிர்ப்புக்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்; தற்கொலையை கேட்டுக்
கூடிய இவர்கள் மிருகத்தனமாக கலகப் பிரிவுப் பொலிசாரால் கண்ணீர்ப்புகை மற்றும்
கையெறி குண்டுகள் மூலம் தாக்கப்பட்டனர்.
சனிக்கிழமை
நினைவுநாளை அடுத்து, எதிர்ப்பாளர்கள் குழு ஒன்று ஒரு பொலிஸ்காரரைத் தாக்கியது;
அவரிடம் இருந்து குண்டு துளைக்காத கவசம் மற்றவற்றை எடுத்துச் சதுக்கத்தில்
தீயிலிட்டது.
தன்னுடைய
பாராட்டுரையில் கிறிஸ்ரோலாஸின் 43 வயது மகள் எம்மி தன்னுடைய தந்தையாரின் தற்கொலை
“ஆழ்ந்த
அரசியல் தன்மையுடையது”
என விவரித்தார்.
“என்னுடைய
தந்தையார் விட்டுச் சென்றுள்ள குறிப்பு,
தவறான
பொருள்விளக்கத்திற்கு இடம்விட்டு வைக்கவில்லை. அவருடைய முழு வாழ்வும் ஒரு இடது
போராளியாகவும், தன்னலமற்ற நோக்கம் உடையவராகவும் விளங்கியது. இறுதிச் செயலும் ஒரு
முழு நனவான அரசியல் செயல்தான், அவர் நம்பி வாழ்ந்த முழுக் கோட்பாடுகளுடன்
முற்றிலும் இயைந்தது”
என்று அவர் கூறினார்.
“தந்தையே,
அவர்கள் சுதந்திரம், ஜனநாயகம், கௌரவம் ஆகியவற்றைக் கொல்வதை உங்களால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை”.
“உங்கள்
தியாகத்தை விலையாகக் கொடுத்துள்ளீர்கள்”.
இப்பொழுது எங்கள் முறை வந்துள்ளது. தந்தையே,....... நாங்கள் 11 மில்லியன்
இருக்கிறோம்; எங்கள் பெயர் எதிர்ப்பு.”
என்று அவர் தொடர்ந்திருத்தார்.
இரங்கலில்
பேசியவர்கள், கிறிஸ்ரோலாஸ் தன்னுடைய இறப்பை ஒரு
“கிரேக்க
வசந்தத்தின்”
தொடக்கம் என விரும்பினார், என்று கூறினர்: இது டிசம்பர் 2010 ல்
தன்னைத் தீயிலிட்டுக் கொண்ட துனிசிய காய்கறி விற்றவர் முகம்மது பௌவாஜிஜி பற்றிய
குறிப்பு ஆகும்; அந்நிகழ்வு வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டியது.
வட
ஆபிரிக்காவில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான எதிர்ப்புக்களுடன் தொடர்புடைய
அத்தகைய பெருந்திகைப்புச் செயல்கள் ஏதென்ஸிலும் பின்பற்றப்படுகின்றன என்பது
கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதும் வர்க்க உறவுகளின் நிலைப்பாடு பற்றி அதிகம்
கூறுகிறது. கடந்த நான்கு ஆண்டு காலமாக ஒன்றன்பின் ஒன்றாக சிக்கன நடவடிக்கைகள், ஊதிய
வெட்டுக்கள் என்று என பல சுற்றுக்களை இயற்றிய தேசியப் பாராளுமன்றத்தில் இருந்து ஒரு
சில மீட்டர்கள் தூரத்தில்தான் கிறிஸ்ரோலாஸ் தன் உயிரை முடித்துக் கொள்ளத்
தேர்ந்தெடுத்தார்; பாராளுமன்றம் அவற்றிற்கு ஈடாக கிரேக்க வங்கிகள் மற்றும்
சர்வதேசக் கடன் கொடுத்தவர்களுக்கு ஆதாயம் அளித்த பிணை எடுப்பு நிதியைத்தான்
பெற்றது.
இவற்றின்
விளைவினால், நாட்டின்
GDP,
மொத்த
உள்நாட்டு உற்பத்தி 17% சரிந்தது; சமாதானக் காலத்தில் இது முன்னோடியற்ற சரிவு
ஆகும். உத்தியோகபூர்வ வேலையின்மை 21% என்று உள்ளது; இளைஞர்களிடையே இது 50% என்று
உள்ளது. பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்களும், ஓய்வூதியங்களும் மூன்றில் ஒரு
பங்கிற்கு மேல் வெட்டப்பட்டுவிட்டன. பல ஆயிரக்கணக்கானவர்கள் இப்பொழுது இலவச சூப்
வழங்கும் இடங்களைத்தான் உணவிற்கு நம்பியுள்ளனர். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும்
மருந்துகள் பற்றாக்குறையில் உள்ளன.
ஆரம்பத்தில்
அரசியல் உயரடுக்கு தன் கொள்கைகளுக்கும் கிறிஸ்ரோலாஸின் தற்கொலைக்கும் எந்தொடர்பும்
இல்லை என மறுக்க முற்பட்டது.
PASOK
யின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி பானோஸ் பெக்லிடிஸின் அலுவலகங்கள் அவர்
“தற்கொலை
நாட்டின் தற்பொழுதைய நிதிய இழிநிலையுடன் தொடர்பு படுத்தப்பட முடியாது”
என்று கூறியபோது,
தாக்குதலுக்கு உட்பட்டன.
“மேலும்,
அவர் கடன்களை அதிகம் வைத்திருந்தாரா அல்லது அவருடைய குழந்தைகள் இதில் தொடர்பு
கொண்டவர்களா என்பது பற்றியும் நமக்குத் தெரியாது”
என்றும் அவர் கூறியிருந்தார்.
இதைத்
தொடர்ந்து, ஒரு மௌனத் திரையை அரசாங்கம் கொண்டுள்ளது—
கிறிஸ்ரோலாஸின் மரணம் குறித்த மரியாதை என்று அதைப் புலப்படுத்திக்
கொள்ளும் வகையில்.
சமூக ஜனநாயக
PASOK,
கன்சர்வேடிவ் புதிய
ஜனநாயகம் இவற்றைக் கொண்ட ஆளும் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் பான்டெலிஸ்
காப்சிஸ், இது ஒரு
“மனிதச்
சோகம்”
என்றும் அரசியல் விவாதத்தின் பொருளுரையாக ஆக்கப்படக்கூடாது என்றும் கூறினார்.
தன்னுடைய
அறிக்கையில் முன்னாள் வங்கியாளரும், தேர்ந்தெடுக்கப்படாத பிரதம மந்திரியுமான
லூகாஸ் பாப்படெமோஸ்,
“இக்கடின
காலத்தில் நம் சமூகம் முழுவதும்—அரசாங்கமும்
குடிமக்களும்—நம்மிடையே
பெரும் திகைப்பில் உள்ளவர்களுக்கு ஆதரவை அளிக்க வேண்டும்.”
என்றார்.
PASOK
இன் தலைவர் எவாஞ்சலோஸ் வெனிஜோலோஸ்
“இத்
தற்கொலை பெரும் துயரம் வாய்ந்தது, இதைப் பற்றி எந்த அரசியல் கருத்தும் முறையற்றது,
இழிந்தது”
என்றார்.
இத்தகைய
அறிக்கைகள் ஆழ்ந்த இழிந்த தன்மை உடையவை. ஆளும் உயரடுக்கு இச்சமூகப் பேரழிவு
கிரேக்கத்தின்மீது சுமத்தப்படுவதை ஓர் இயற்கைப் பேரிடர் என்று சித்தரிக்கின்றனர்;
அவர்கள் சர்வதேச நிதிய மூலதனத்துடன் இணைந்து வேண்டுமென்றே தூண்டிவிட்டது என்று
கருதவில்லை.”
கடந்த
மாதம்தான் அரசாங்கம் ஒரு புதிய சுற்று செலவுக் குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர்
துறை
“சீர்திருத்தங்களுக்கு”
இரண்டாம் பிணையெடுப்பிற்கு ஈடாக இயற்ற ஒப்புக் கொண்டது.
கிறிஸ்ரோலாஸின் நினைவுரைகள் முடிந்தவுடனேயே, வெனிஜெலோஸ் இன்னும் அதிக வெட்டுக்கள்
வராது எனக் கூறவதற்கில்லை, கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய
நிதியம் கோரும் விதிகளை ஏற்கத்தான் வேண்டும் என்றார்.
கிறிஸ்ரோலாஸ்
“ஒரு
கௌரவமான இறப்பு என்பதைத் தவிர வேறு எத்தகைய போராட்டத்தையும் காண்கிலேன்”
என்று எழுதியிருக்கும் உண்மை நிலைமை கிரேக்த்தில்
எதிர்ப்புக்களின்மீது மேலாதிக்கம் கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது
குழுக்கள் ஆகியவற்றின் திவால்தன்மை குறித்த பெரும் சோகம் ததும்பிய குற்றச்சாட்டு
ஆகும்; இவற்றுள் பலவற்றில் கிறிஸ்ரோலாஸ் தீவிர பங்கு பெற்றிருந்தார்.
கிறிஸ்ரோலாஸின் தற்கொலைக் குறிப்பு பெரும்பாலான மக்கள் முதலாளித்துவம், அதன்
கட்சிகள் ஆகியவற்றிற்கு எதிரான வர்க்க விரோதம் குறித்துப் பேசினாலும், இந்த உணர்வு
இத்தகைய அமைப்புக்களால் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. 2009ல் இருந்து கிரேக்கம் 17
பொது வேலைநிறுத்தங்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகக் கண்டுள்ளது; அனைத்தும்
ஓரிரு நாட்கள் பெயரளவு வேலைநிறுத்தங்கள், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம்
கொண்டிராமல், அத்துடன் ஒத்துப் போகும் வகையில் நடத்தப்பட்டவை.
இத்தகைய
காலம் முழுவதும் போலி இடது குழுக்களான
SYRIZA
எனப்படும் தீவிர இடது
கூட்டணி, ஆட்சி தூக்கியெறிவதற்கான முதலாளித்துவ எதிர்ப்பு இடது ஒத்துழைப்பு என்னும்
Antarsya
மற்றும் கிரேக்கத்தின்
ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சி
KKE
ஆகியவை
தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு கரவொலி எழுப்பும் கூட்டமாகத்தான் செயல்பட்டுள்ளன.
இந்த
அமைப்புக்கள் இப்பொழுது கிறிஸ்ரோலாஸின் இறப்பைப் பற்றிய பரந்த அதிர்ச்சி, சீற்றம்
ஆகியவற்றை பாராளுமன்றத் தேர்தல்களில் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுத்த
விரும்புகின்றன; தேர்தல்கள் ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத் தொடக்கத்தில் நடக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அலெக்சிஸ்
சிப்ராஸ் என்னும்
SYRIZA
தலைவர் தொழிலாளர்களும்
இளைஞர்களும் தங்கள் இகழ்வுணர்வை
“அதிர்ச்சி
வாக்காக”
மாற்ற வேண்டும் என்று
வலியுறுத்தினார்:
KKE
பொதுச் செயலாளர் அலேகா
பாபரிகா அவர்கள் வாக்குப் பதிவைப் பயன்படுத்தி
“இந்த
அமைப்பு முறையையே அரசியல் தற்கொலைக்கு வழிவகுக்குமாறு”
செய்யவேண்டும் என்றார்.
இத்தகைய
அறிக்கைகள்,
கிரேக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமே முதலாளித்துவம் ஜனநாயகம், பொதுமக்கள்
கருத்து ஆகியவற்றிற்குத் தன் அவமதிப்பை தெளிவாக்கிய நிலையில் வருகின்றன—அரசாங்கங்கள்
அகற்றப்பட்டு புதியவை நிறுவப்படும் நேரத்தில்; மேலும் நிதியத் தன்னலக்குழுவின்
நலன்களை காத்தல் என்று வரும்போது அனைத்தையும் செய்ய உறுதி கொண்டுள்ளன. |