சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

The repression against workers and youth in Spain

ஸ்பெயின் தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு எதிரான அடக்குமுறை

By Alejandro López
6 April 2012

use this version to print | Send feedback

கடந்த வாரம் ஸ்பெயினில் நடந்த பொது வேலைநிறுத்தம் வலதுசாரி மக்கள் கட்சி (Popular Party- PP) அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கம் எதிர்க்க தயாராக இருப்பதைத்தான் வெளிப்படுத்தியது.

வேலைநிறுத்தத்தின்போதும், அதற்குப் பின்பும் போலிசாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கடுமையான அடக்குமுறை, பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகையில் ஆளும் உயரடுக்கு எத்தகைய விடையிறுப்பை கொடுக்கும் என்னும் ஒரு எச்சரிக்கையாகும்.

போலிசார் காடலோனியாவில் 79பேரைக் கைது செய்து, 100 பேரைக் காயப்படுத்தினர். இப்பிராந்தியித்தில்தான் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றில் மிகப்பெரிய வெட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதுதான் மற்ற இடங்களிலும் சுமத்தப்பட இருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு பரிசோதனைக்கூடம் எனக் கருதப்படுகிறது.

La Directa என்னும் வார இதழின் கருத்துப்படி, வேலைநிறுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பிரிவினரின் எண்ணிக்கை முழுத்தொகையின் 60% ஆன 9,385 ஆக இருந்தது. இவர்களில் முழு ரோந்துப்பிரிவும்- Mobile Brigade- அடங்கியிருந்தது. இதில் 400 கலக எதிர்ப்புப் பிரிவினர் இருந்தனர்.

இவர்கள் ரப்பர்த் தோட்டாக்கள், புகை கையெறிகுண்டுகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் ஆகியவற்றை ஆர்ப்பாட்டக்காரரர்கள்மீது பயன்படுத்தினர். கண்ணீர்ப்புகைக் குண்டுகள் 16 ஆண்டுகளுக்குப் பின் முதல் தடவையாக டஜன் கணக்கான தீயணைக்கும் பிரிவினருக்கு எதிராக உபயோகிக்கப்பட்டது. அவர்கள் போலிசார் பார்சிலோனா மையத்தில் மக்கள் கூட்டத்தின்மீது ரப்பர்த் தோட்டடாகளால் சுடுவதை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினர். சீருடை அணியாத பொலிசார் கண்காணிப்புக்களில் ஈடுபட்டனர், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

சுடப்பட்ட ரப்பர்த் தோட்டாவினால் ஓர் இளைஞருடைய  நுரையீரல் துளைக்கப்பட்டு, மூன்று விலா எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில் அவதியுற்றார். மற்றொரு இளைஞர் கண் ஒன்றை இழந்தார்; மற்றொருவருடைய குடல் பகுதி ஒன்று அகற்றப்பட வேண்டியதாயிற்று. கிட்டத்தட்ட 19 பேர் பல காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 7, போலிசின் ரப்பர்த் தோட்டாக்களால் ஏற்பட்டவை. இன்னும் டஜன் கணக்கானவர்கள் புகை கையெறிகுண்டு, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் ஆகியவற்றால் தாக்கப்பட்டிருந்தனர். போலிஸ் நடவடிக்கைகளை எதிர்த்த சக்கர நாற்காலியில் வந்த ஒருவர், பொது ஒழுங்கின்மைக்குக் காரணம் என்று கைது செய்யப்பட்டார்.

எட்டு சிறுவர்கள் விடுவிக்கப்படு முன் இரவு முழுவதும் போலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டனர். மற்றும் ஒரு 41 பேர் குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ளனர்.

இரண்டு மாணவர்களும், EI Clot Assembly இன் (உள்ளூர்க்குழு ஒன்று) உறுப்பினர் ஒருவரும் சிறையில் உள்ளனர். இரு மாணவர்களும் பொது ஒழுங்கீனம், பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தல், பொலிசைத் தாக்கியது மற்றும் பிற பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கியது ஆகியவற்றைக் காரணம் காட்டிக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலைநிறுத்தத்தின் நடந்த அன்று மாலைநேர கலவரங்களில் தொடர்பு என்று அவர்கள்மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அவர்கள் காலையிலேயே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இருவரும் பிந்தைய குழப்பங்களில் தொடர்புடைய குழுவின் ஒரு பகுதியினர் என்று பொலிசார் இதை நியாயப்படுத்தினர். இவர்கள் இன்னும் அதிகமாக முறைக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக சிறையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வாதிட்டுள்ளனர். குறிப்பாக மே 3ம்தேதி பார்சிலோனாவில் நடைபெற உள்ள ஐரோப்பிய மத்திய வங்கி உச்சிமாநாட்டின் போது திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புக்களில் பங்கு பெறாமல் தடுப்பதற்காக.

ஒரு எதிர்காலக் குற்றத்தைச் செய்யக்கூடும் என்பதற்காக ஒருவரைச் சிறையில் அடைப்பது என்பது தடுப்புக் காவலுக்குச் சமம் ஆகும்.

இத்தகைய தீய நிகழ்வுகள் 2008ல் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததில் இருந்து ஆளும்பிரிவினால் எடுக்கப்படும் நீண்ட அடக்குமுறை நடவடிக்கைகளில் சமீபத்தியதாகும்.

இவை முதலில் சமூக ஜனநாயக ஸ்பெயின் சோசலிச தொழிலாளர்கள் கட்சி (PSOE) அரசாங்கத்தால் டிசம்பர் 2010ல் ஆரம்பிக்கப்பட்டன. அது இராணுவத்தை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடைய வேலைநிறுத்தத்திற்கு எதிராகப் பயன்படுத்தியது. அவர்கள் தங்கள் ஊதியங்களில் 50% வெட்டுக்கள் மற்றும் பணிநிலைகள்மீது தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடி வந்திருந்தனர்.

2011 மே மாதம், போலிசார் ரப்பர் தோட்டாக்களைச் சுட்டதுடன், பார்சிலோனாவின் Plaza de Catalunya சதுக்கத்தில் அமைதியாக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அடிக்கவும் செய்தனர். இதற்கு அடுத்த மாதத்தில் பொலிசார் கட்டலினா பாராளுமன்றம் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பிற்கான குறைப்புக்களுக்கு ஒப்புதல் கொடுத்த நேரத்தில் வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வன்முறையைப் பயன்படுத்திக் கலைத்தனர்.

மக்கள் கட்சி இத்தாக்குதலை விரிவுபடுத்துகிறது. பொது வேலைநிறுத்தத்திற்கு முன், மாணவர்களும் பள்ளிக் குழுந்தைகளும் பெப்ருவரி மாதம் வலென்சியாவில் கல்வித்துறை வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, இவர்களை பிராந்தியப் போலிஸ் தலைவர் விரோதிகள்என்று விபரித்தபின், கடுமையான போலிஸ் தாக்குதல்களுக்கு உட்பட்டனர்.

ஒவ்வொரு நிகழ்விலும் வலதுசாரிச் செய்தி ஊடகம் அடக்குமுறைக்கு ஆதரவு கொடுத்து, அதற்கு கூடுதலான அதிகாரம் வழங்கப்படவேண்டும், சிக்கன நடவடிக்கை எதிர்ப்புக்களுக்கு எதிராக பாசிச சக்திகள் அணிதிரட்டப்பட வேண்டும் என்றது. உதாரணமாக 1903ல் அது நிறுவப்பட்டதில் இருந்து ஒவ்வொரு பிற்போக்குத்தன, பாசிச ஆட்சியையும் ஆதரித்துவரும் ABC நாளேடு, அராசங்கத்திற்கு எதிர்ப்புத் தூண்டுபவர் என்று குற்றம் சாட்டித் தனிநபர்கள், அமைப்புக்களின் பெயர்களை பிரசுரம் செய்தது. 15M (இயக்கம்), சுற்றுச்சூழல் பாதுகாப்புவாதிகள், தீவிரபோக்குடையவர்கள் ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டனர்.

இக்கோரிக்கைகளை ஒட்டிய வகையில், காடலான் உள்துறை பிராந்திய மந்திரி பிலிப் புயிக் செவ்வாயன்று அரசுநிராகரிப்புவாத-தொழிற்சங்கவாதிகளான CNT, CGT தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்தின்போது நடந்த கலவரங்களுக்காக குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும், ஒன்றுகூடுவதற்கான உரிமை பற்றிய சட்டத்தை திருத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

குடிமக்கள் வன்முறையில் ஈடுபடுவோரை அடையாளம் காட்ட வசதியாகஒரு வலைத் தளம் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார். இத்துடன் இன்னும் கடுமையான முறையில் அடையாளச் சோதனைகளும் நடத்தப்படுவதுடன் இது இணைந்திருக்கும் என்றும் இன்னும் 100 அதிகமான கலக எதிர்ப்புப் பிரிவு பொலிசார் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், புயிக் விவிரித்துள்ளபடி ஐரோப்பா முழுவதும் பொலிஸ் படைகள் ஒருங்கிணைந்து அமைப்புமுறைக்கான எதிர்ப்பாளர்கள் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

உள்துறை மந்திரி ஜோர்ச் பெர்னான்டஸ் டயஸ் அரசாங்கம் சட்டத்தை மாற்ற விரும்புகிறது, அதையொட்டி பாத்திஸ்ட் பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பொது குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

மரியானோ ராஜோய் அரசாங்கம் வரவு-செலவுத்திட்ட வெட்டுக்களில் 27 பில்லியன் யூரோக்களை சுமத்தும் நிதியில், பொதுப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5 % என்பதில் இருந்து இந்த ஆண்டே 5.3% எனக் குறைக்கும் நோக்கத்தில், ஸ்பெயினினதும் ஐரோப்பாவினதும் ஆளும் வர்க்கம் இது ஜனநாயக வழிமுறைகளால் சுமத்தப்பட முடியாது என்பதை நன்கு அறியும்.

இவர்கள் விரும்புவது என்னவென்பது ஏற்கனவே கிரேக்கத்தில் தெளிவாகிவிட்டது. அங்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் பல சுற்றுக்கள் செலவுக்குறைப்புக்கள், வரிவிதிப்பு உயர்வுகள் என்று தொடர்ச்சியாக ஒன்றையொன்று மிஞ்சும் வகையிலான தீமைமிக்கவற்றை முடிவின்றி எதிர்கொள்கின்றனர்.

ஐரோப்பா முழுவதும் இருப்பதைப் போலவே, ஸ்பெயினிலும் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவம் அதன் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் உட்பட, அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை எதிர்கொள்கிறது.

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகள் அனைத்துமே சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு போராடுவதன் மூலம்தான் முடியும்.