WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The “German model” and the attack on European
workers
“ஜேர்மனிய
மாதிரியும்”
ஐரோப்பியத்
தொழிலாளர்கள்
மீதான
தாக்குதலும்
Cristoph Dreier
9 April 2012
கடந்த வியாழக்கிழமை அன்று பிரெஞ்சு ஜனாதிபதி
நிக்கோலா சார்க்கோசி, தான் அடுத்த மாத தேர்தல்களில்
வெற்றிபெற்று மீண்டும் பதவிக்குவந்தால், ஒரு கடுமையான சிக்கனத்
திட்டத்தை செயல்படுத்தப்போவதாக உறுதியளித்துள்ளார்.
பொதுத்துறைகளில் ஏராளமான பணி நீக்கங்கள் மற்றும் சுகாதாரத்
துறையில் வெட்டுக்கள் ஆகியவற்றின் மூலம் முக்கியமாக
€53
பில்லியன் சேமிக்க இருக்கும் தன் விருப்பத்தையும் அவர்
அறிவித்தார். இவரை எதிர்த்துப் போட்டியிடும் சோசலிஸ்ட்
கட்சியின் வேட்பாளார் பிரான்சுவா ஹோலண்ட் ஒரு வானொலிப்
பேட்டியில்,
தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அனைத்து
அரசாங்கச் செலவுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, பல
திட்டங்களை நிறுத்திவைத்துவிடப் போவதாகக் கூறினார்.
முன்னதாக சார்க்கோசி தொழிலாளர் செலவினங்களை
€13
பில்லியன் குறைக்கப் போவதாகவும், தன்னுடைய திட்டங்களைச் சில
ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்ட 2010
செயல்திட்டத்துடன் ஒப்பிட்டார். செயற்பட்டியல் 2010
ஜேர்மனியில் தொழிலாளர் செலவினங்களைக் கணிசமாகக்
குறைத்துவிட்டது, நாட்டின் பிரான்ஸிற்கு எதிரான போட்டித்
தன்மையை அதிகரித்துள்ளது என்று சார்க்கோசி குறிப்பிட்டார்.
பிரான்ஸ் தன்னுடைய வேலையின்மை விகிதத்தை ஜேர்மனிய அளவிற்குக்
குறைக்க வேண்டும் என விரும்பினால், அது
“ஜேர்மனிய
மாதிரியைப்”
பின்பற்றி, அதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என்று சார்க்கோசி கூறினார்.
இந்த ஆண்டு, முன்னதாக தேர்ந்தெடுக்கப்படாத
இத்தாலியில்
“தொழில்துறை
வல்லுனர்”
பிரதம மந்திரி மரியோ மோன்டி இதேபோல்
செயற்பட்டியில் 2010க்கு மரியாதை அளித்து ஜேர்மனி ஐரோப்பாவில்
பொருளாதார விவாதத்தில் வெற்றி பெற்றுவிட்டது என்றும்
அறிவித்தார்.
செயற்பட்டியல் 2010 என்பது 1998க்கும்
2005க்கும் இடையில் இருந்த சுரோடர் தலைமையிலான
SPD
சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய
தொடர்ந்த நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறது. அந்த அரசாங்கம்
ஜேர்மனியின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றிலேயே
மிக விரிவான தாக்குதல்களை பொதுநல அரசாங்கத்தின்மீது நடத்தியது.
பொதுநலச் செலவுகளைக் குறைப்பதற்கு ஓய்வூதிய திட்டத்தை பகுதியாக
தனியார் மயமாக்கியது, பெருநிறுவன ஊதியச் செலவுகளைக் கணிசமாகக்
குறைப்பதற்கு தொழிலாளர் சந்தையில்
“சீர்திருத்தங்கள்”
அறிமுகப்படுத்தப்பட்டது ஆகியவற்றின் மூலம்
SPD
மற்றும் பசுமைக் கட்சிக் கூட்டணி உயர்மட்ட வரிவிதிப்பைக்
குறைத்து, சொத்துக்களின்மீது இருந்த உபரி வரியையும் அகற்றியது.
இதன் விளைவு ஒரு மிகப்பெரிய குறைவூதியப் பிரிவை
ஏற்படுத்தியதாகும். தற்பொழுது ஜேர்மனியில் தொழிலாளர்
தொகுப்பில் 23% க்கும் மேலானவர்கள் குறைவூதிய வேலைகளைத்தான்
கொண்டுள்ளனர்; சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு
€7
ஐ விடக் குறைவாகப் பெறுகின்றனர். கிட்டத்தட்ட 4.9 மில்லியன்
தொழிலாளர்கள் சிறு வேலைகள்என அழைக்கப்படுபவற்றில் உள்ளனர்;
இதில் முதலாளிக்குக் கிட்டத்தட்ட கூடுதல் தொழிலாளர்
செலவினங்களே கிடையாது எனலாம். நூறாயிரக்கணக்கானவர்கள்
கூட்டாட்சி தொழிலாளர் வேலை அமைப்பு நிறுவனங்களால் மணி
ஒன்றிற்கு ஒரு யூரோ ஊதியம், அதைத்தவிர, தங்குமிடம் உணவு
இவற்றைப் பெறும் நிலையில்தான் கட்டாயப்படுத்தப்பட்டு பணி
புரிகின்றனர்.
இதைத்தவிர, ஜேர்மனிய நிறுவனங்கள் குறைந்தப்பட்ச
ஊதியத் தேவைகளைக் கடக்கும் வகையில், ஒப்பந்த உடன்பாடுகளை பணி
ஒப்பந்தங்கள் என்று கூறப்படுபவற்றின் மூலம் அடைந்துள்ளனர்;
இதன்படி முதலாளிகள் தொழிலாளர் துறைச் சட்டங்களுக்கு உட்படாமல்,
அற்ப ஊதியத்தை மட்டுமே கொடுக்கின்றனர். சில நிறுவனங்களில்
தொழிலாளர்கள் இத்தகைய முறையில் இருப்பது, முறையான ஒப்பந்தப்படி
உள்ள தொழிலாளர்களைவிட மிக அதிகமாகத்தான் உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் மார்ச் மாத
தொடக்கத்தில் ஒப்புக்கொண்ட நிதிய உடன்பாட்டின் நோக்கம் இந்த
மாதிரியை ஐரோப்பா முழுவதும் விரிவுபடுத்துதல் என்பதாகும்.
ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பாவில் முன்னுரிமை
அரசாங்கச் செலவுகளைக் குறைப்பது என்று மட்டும் இல்லாமல்,
தொழிலாளர்களின் உரிமைகளை அழிப்பதும் ஆகும் என்பதைத்
தெளிவாக்கியுள்ளார்.
“ஐரோப்பா
சர்வதேசப் போட்டியில் அதன் நிலைமையை, சீனா, பிரேசில் போன்ற
நாடுகளுக்கு எதிரான போட்டித்தன்மையில் தக்கவைத்துக் கொள்ள
வேண்டும் என்றால், ஜேர்மனி போல் போட்டித்தன்மையை அவை
கொண்டால்தான் முடியும்”
என்று அவர் அறிவித்தார்.
இத்தகைய தொழிலாள வர்க்கத்தின் மீதான
தாக்குதலின் முதல் சோதனைக்கூடம் கிரேக்கம் ஆகும். இந்நாடு
ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளால் கண்டம் முழுவதும் தொழிலாள
வர்க்கத்தின் மீது சுமத்தப்பட இருக்கும் நடவடிக்கைகளை பற்றிச்
சோதிக்கத் தேர்தெடுக்கப்பட்டது.
ஏராளமான வேலைநிறுத்தங்கள், ஊதியக்
குறைப்புக்கள் ஆகியவற்றைத் தவிர, பொதுநல முறைகளை அகற்றுதல்,
நுகர்வோர் வரிகளை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் நாடு
வணிகங்களுக்கு பெரும் களிப்புத்தரும் இல்லமாக மாற்றப்படுகிறது.
நாட்டின் மாதாந்திரக் குறைந்தப்பட்ச வருமானம்
€160
ல் இருந்து
€590
வரை குறைக்கப்பட்டுள்ளது; வணிக வரிகள் குறைக்கப்பட்டுள்ளன,
பெரும்பாலான ஊதிய உதவிநிதிகள் அகற்றப்பட்டுவிட்டன.
சமூக இடர் மற்றும் வறுமை என இந்நடவடிக்கைகளால்
கட்டவிழ்த்துவிடப்பட்டவை ஊதியங்களை குறைக்கவும், பணிநிலைகளில்
சுமையை ஏற்றவும் நினைத்தபடி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஜேர்மனிய அரசாங்கம் வடக்கு கிரேக்கத்தில்
“தடையற்ற
வணிகப் பகுதிகள்”
நிறுவப்பட வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது.
இச்சிறப்புப் பகுதிகளில் குறைந்தபட்ச ஊதியம்
€590
என்பது
€300
ஆகக் குறைப்படுவதுடன் பெருநிறுவன வரி 20%ல் இருந்து 2% என்று
குறைக்கப்பட்டுவிடும்.
இதேபோன்ற நடவடிக்கைகள் மற்ற ஐரோப்பிய
நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்பெயினில்
நிறுவனங்கள் ஊதியங்களை குறைத்து, பணிநேரங்களையும் சங்கங்களின்
ஒப்புதல் இன்றி மாற்ற முடியும். பணிநீக்கத்திற்கு எதிராக
தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்த சட்டங்கள், தங்கள்
உரிமைகளை அவர்கள் பணிநீக்கத்தின்போது பெரும் மொத்தத் தொகை
போன்றவை கடுமையாகக் குறைக்கப்பட்டுவிட்டன.
இத்தாலியில் சமூகப் பாதுகாப்பு அளிப்பிற்கு
முதலாளிகள் கொடுக்கும் தொகை குறைக்கப்பட்டுவிட்டது; இந்நிறுவனங்கள்
இப்பொழுது உள்ள ஒப்பந்தங்களை புறக்கணித்து ஊதியங்களை
குறைக்கலாம். தொழிலாளர் செலவினங்களைக் குறைத்து,
பணிநீக்கங்களுக்கு உதவுவதற்காக நிறுவன அளவிலேயே அனைத்து
ஒப்பந்தப் பேச்சுக்களும் நடத்தப்பட வசதி அளிக்கப்பட்டுள்ளது.
போட்டித்தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக,
ஜேர்மனியில் முக்கிய அரசியல்வாதிகள் இப்பொழுது ஒரு புதிய,
இன்னும் கடுமையான
“சீர்திருத்தங்களை”
“செயல்பட்டியல்
2020”
என்ற பெயரில் கோரியுள்ளனர். முன்னாள் சான்ஸ்லர்
ஷ்ரோடர், முக்கிய ஜேர்மனிய பெருநிறுவனங்களுடன் நெருக்கமான
தொடர்புகளை கொண்டிருப்பவர், கடந்த வாரம் செயற்பட்டியில் 2030
தேவை என்று கூறக்கூடிய அளவிற்குச் சென்றுள்ளார்.
நலிவுற்றிருக்கும் நாடுகள் தங்கள் தேசிய இறைமையைத் துறந்து
ஐரோப்பிய நிதி மந்திரி ஒருவர் நியமிக்கப்படுவதை ஏற்று, புதிய,
பரந்த வகையிலான சமுகக் குறைப்புக்களை ஏற்க வேண்டும் என்று அவர்
வலியுறுத்தியுள்ளார்.
சார்க்கோசி, மோன்டி இன்னும் பிற ஐரோப்பிய
பெருவணிகத்தின் அரசியல் பிரதிநிதிகள்
“ஜேர்மனிய
மாதிரியை”ப்
பாராட்டுகையில், அவர்கள் ஜேர்மனிய தொழிலாளர்களின் உரிமைகள்,
வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றின் மீதான பெரும் தாக்குதலை
மட்டும் குறிப்பிடவில்லை. இத்தாக்குதல்கள் எப்படிச் சுமத்தப்பட
வேண்டும், தொழிற்சங்கங்களின் முழு ஒத்துழைப்புடன் என்றுதான்
குறிப்பிடுகின்றனர்.
செயற்பட்டியல் 2010 என்பது ஜேர்மனிய அரசாங்கம்
மற்றும் தொழிற்சங்கங்களால் கூட்டாகத் தொடக்கப்பட்டது. முக்கிய
தொழிலாளர் துறைச் சந்தைச் சீர்திருத்தம்
IG
Metall
தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும்
வோக்ஸ்வாகனுடைய நியமன இயக்குனர் பீட்டர் ஹார்ட்ஸின் ஆகியோரின்
தலைமையில் இருந்த ஒரு குழுவால் இயற்றப்பட்டது. இத்திட்டத்தை
அரசாங்கம் அப்படியே முத்திரையிட்டது.
2004ம் ஆண்டு பொதுநலச் செலவுக்
குறைப்புக்களுக்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபோது,
தொழிற்சங்கங்கள் தளராமல் உழைத்து அவற்றை நெரித்து, அடக்கின.
அப்பொழுது முதல் ஒவ்வொரு தொடர்ச்சியான ஜேர்மனிய
அரசாங்கமும் தொழிற்சங்கங்களை முற்றிலும் நம்ப முடிகிறது.
சமீபத்தில்
Schlecker
மருந்துக்கடைத் தொகுப்பில் 11,000க்கும்
மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபோது, வேர்டி
தொழிற்சங்கம் வேலைப்பாதுகாப்பிற்காக எத்தகைய தொழில்துறை
நடவடிக்கையையும் மறுத்தது மட்டும் இல்லாமல், நிறுவனத்திற்கு
எதிராகச் சட்ட நடவடிக்கை எதையும் எடுக்கக்கூடாது என்றும்
தொழிலாளர்கள் மீது அழுத்தம் கொடுத்தது. அரசாங்கம் மற்றும்
பெருநிறுவனங்களின் உதவிநிதியை பெறும் தொழிற்சங்கங்கள் தங்கள்
முக்கிய பங்கு பணியிடத்தில் ஏற்படும் எதிர்ப்பை அடக்குவதுதான்
என்று கருதுகின்றன.
அதிகம் போற்றப்படும் ஜேர்மனிய
மாதிரி
வடிவம்
இவ்வகையில்தான் உள்ளது; ஐரோப்பா முழுவதும் சீனா, பிரேசில்
ஆகியவற்றில் உள்ள ஊதியத்தரங்களுக்கு ஒப்பாக தன்னிச்சையாக
ஊதியங்களையும் தொழிலாளர் துறைச் செலவுகளையும் குறைப்பதற்கான
வழிவகை எனப் பாராட்டப்படுகிறது. தொழிற்சங்க
அதிகாரத்துவத்திற்கு எதிராக,
ஒரு
சோசலிச முன்னோக்கை அடித்தளமாகக்
கொண்டு, தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்பட்டு எழுச்சி
செய்வதின் மூலம்தான் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளையும் வாழ்க்கைத்
தரங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். |