World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

PSA, GM prepare further attacks against auto workers

PSA மற்றும் GM ஆகிய நிறுவனங்கள் கார்த் தயாரிப்புத் தொழிலாளர்களுக்கு எதிராக மேலதிக தாக்குதல்களை தயாரிக்கின்றன.

By Francis Dubois
7 April 2012
Back to screen version

சமீபத்திய வாரங்களில் பிரான்சின் கார்த் தயாரிப்பு நிறுவனமான  PSA அதனுடைய ஐரோப்பிய ஆலைகளிலுள்ள தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தல், ஊதிய, சமூக நலச் செலவுக் குறைப்புக்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கான அழுத்தங்களை அதிகரித்துள்ளது.

அமெரிக்கக் கார்த் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸுடனான (GM) அதன் உடன்படிக்கையையொட்டி, PSA அதனுடைய குறைப்புக்களை விரைவுபடுத்தி வருகிறதுஐரோப்பாவில் GM (Opel) க்குச் சமமாக நிற்கும் அதனுடைய உற்பத்தித் திறனை அகற்றும் வகையில். தொழிற்சங்க ஆதாரங்களின்படி, GM இடமிருந்து, Valenciennes ஆலைக்காகத் திட்டமிடப்பட்டிருந்த , கியர்பாக்ஸ் உற்பத்தி அகற்றப்படலாம் என்று தகவல்கள் உள்ளன. புதிய வாகனத்திற்கான ஒரு திட்டம், Rennes தொடங்கப்படாது ஆனால் GM தொழிற்சாலையில். மாட்ரீட் தொழிற்சாலை, தொடர்புடைய பணிநீக்கங்களுடன் ஒரு நேர சுழற்சிமுறை வேலையையும் இல்லாதொழிக்கும்.

பெரு நிறுவன சீரிய செயற்பாடுகள் இரு நிறுவனங்களிலும் தொழிலாளர்களைத் தாக்குகின்றன. ஒருபுறம் PSA ஐரோப்பாவிலுள்ள நடுத்தர மட்ட ஆலைகளை மூடும் திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது: பிரான்சில் Aulnay-sous-bois மற்றும் மாட்ரிட்டிலுள்ள Sevelnord ஆலைகள் இருப்பதை. 2011 இறுதியில் ஐரோப்பாவில் 6,000 வேலைகளை அகற்றிவிட்டதாக PSA அறிவித்துள்ளது; இவற்றுள் 5,000 பிரான்சில் இருந்தவை ஆகும்.

 

கடந்த வாரம் Wall Street Journal  ஐரோப்பாவில் ஜேர்மனியிலுள்ள Bochum ஓப்பல் மற்றும் பிரிட்டனின் எல்ஸ்மெயர் துறைமுகத்திலுள்ள வாக்ஸ்ஹால் ஆலைகள் தவிர்க்க முடியாமல் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

 

மார்ச் 22ம் திகதி பாரிஸிற்கு வடகிழக்கேயுள்ள Aulnay-sous-bois ஆலையில் Peugeot லுள்ள ஆலை மூடப்படும் என்ற அறிவிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; அங்கு 3,100 தொழிலாளர்கள் வேலைகளில் உள்ளனர்.   ஆனால் தொழிற்சங்கங்கள் Peugot, GM ஆகியவற்றிலிருக்கும் தொழிலாளர்களின் கூட்டுச் சர்வதேசப் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கவில்லை; மூடப்படும் அச்சுறுத்தல்களைக் கொண்டிருக்கும் பணியிடங்களை காப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொழிற்சங்கத் தலைவர்கள், அரசாங்கத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தனர்; அதே போல் நிறுவனங்களின் இயக்குனர் குழுக்களில் ஆலைத் தொழிற் சங்கப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இத்தகைய முன்னோக்கு, தொழிற்சங்கங்களை தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதற்கு எந்த உறுதிப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. மாறாக இது தொழிற்சங்கங்களை தொழிலாளர்களின் சமூக உரிமைகளை நிர்வாகம் தாக்குவதற்கு உதவ நல்ல நிலைமையைத்தான் கொடுக்கிறதுஇதுதான் அமெரிக்காவில் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்க நடவடிக்கையில் காட்டப்பட்டது; அத்துடன் பிரான்சின் CGT (பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு) 2008ல் தன் ஒத்துழைப்பை அறிவித்தது; இது சமீபத்திய PSA-GM உடன்பாட்டுடனும் பிணைந்துள்ளது.

ஐக்கிய கார் தொழிலாளர் சங்கம் (UAW) அமெரிக்காவில் கார்த் தொழிலாளர்கள் மீது மிருகத்தன தாக்குதல்களை சுமத்துவதில் மையப் பங்கைக் கொண்டிருந்தது. அத்துடன் ஒத்துழைத்த வகையில்தான் இப்பொழுது அது ஒரு பங்குதாரராகவும் GM ஓய்வூதிய நிதிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது— GM பெரும் ஊதியக் குறைப்புக்களையும் (பாதி என) பணி நிலைகளின் பெரும் சரிவைச் சுமத்தவும், ஆலை மூடல்களைச் செய்யவும் முடிந்தது.

2009ம் ஆண்டு GM ஒபாமா நிர்வாகத்தால் திவால்தன்மைக்குத் தள்ளப்பட்டது; ஆனால் தன் நடவடிக்கைகளை, “சலுகைகளைசுமத்தியதின் மூலம் மீண்டும் தொடங்கியது; அதாவது, தொழிலாளர்களுடைய ஊதியங்கள், சமூக நலன்களில் மிகப் பெரிய வெட்டுக்களை சுமத்தியதின் மூலம். இச்சலுகைகள் UAW னால் முறையாக ஏற்கப்பட்டன; ஆனால் தொழிலாளர்களோ, சங்கம் ஏற்பாடு செய்திருந்த வாக்கெடுப்புக்களில் இவற்றிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

PSA, GM இரண்டும், பிற கார் நிறுவனங்களைப் போலவே, அமெரிக்காவில் கார்த் தயாரிப்பு தொழிலாளர்கள் மீது வறுமை நிலைமை ஊதியங்களை சுமத்துவதில் ஈடுபட்டுள்ளன; அவைகள்தான் இப்பொழுது ஐரோப்பிய தொழிலாளர்கள் மீதும் சுமத்தப்படுகின்றன.

UAW இன் தலைவரான பாப் கிங், GM உடைய இலாபங்களைப் பெருக்குவதில் நிர்வாகத்திற்கு உதவும் வகையில் பங்கு பெற்ற சங்கத்தை வெளிப்படையாகப் பாராட்டியவர், இப்பொழுது Opel கண்காணிப்புக் குழுவில் அமர்ந்துள்ளார்இங்கு அவர் ஜேர்மனிய IG Metall Union ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். ஓப்பல் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தலைமை தாங்குவதை இப்பொழுது நோக்கமாகக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சியில் கிங், எங்கள் கண்ணோட்டம் மாறிவிட்டது. இந்நிறுவனங்களின் நீண்ட கால வெற்றி குறித்து அதிக பணயம் உடையவர்கள், உறுப்பினர்களாக இருக்கும் நாங்கள்தான் எனக் கூறியதாக மேற்கோளிடப்பட்டுள்ளது.

 

பெருநிறுவன வெற்றியை வளர்க்கும் தொழிற்சங்கத்தின் உந்துதல் தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், ஊதியங்களைக் காப்பதற்கு சமமானது அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாகத் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் தங்கள் வேலைகளையும், தேசிய அளவில் முதலாளிகளுக்கு இடைத்தரகர்களாக இருத்தல் என்னும் முறையில் சுகாதார, ஓய்வூதியக் குழுக்களில் என்பதைத் தக்க வைத்துக் கொள்ளுதல், கூட்டு தொழிற்சங்க-நிர்வாகப் பிரிவுகளை ஆலைக் குழுக்களில் தக்க வைக்கப்படுதல் ஆகியவற்றில்தான் ஆர்வம் கொண்டுள்ளன. ஒரு நிறுவனம் ஊதியத்தை வெட்டுவதாகவோ, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்று அச்சுறுத்தினாலோ, தொழிற்சங்க அதிகாரத்துவம் வெட்டுக்களைச் சுமத்த முற்படுகிறது.

தொழிற்சங்கங்கள் நிறுவனத்தின் ஒழுங்கை காப்பாற்ற முயல்கின்றன. CGT (பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு), CFDT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு), FO (தொழிலாளர்கள் போராட்டம்), SUD (ஜனநாயக ஒற்றுமைக்கான ஒன்றியம்) ஆகியவை அனைத்துமே பொறுப்பான சமூகப் பங்காளிகள் என்று செயல்பட விரும்புகின்றன.

பிரான்சில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி கோரிய சமூகநலச் செலவு வெட்டுக்களுக்கு தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசாங்கத்தை கீழிறக்குவதற்கு தொழிலாளர்களை அணிதிரட்டச் செயல்படவில்லை; மாறாக சார்க்கோசியை பேச்சுவார்த்தைகளுக்காக மேசையில் சந்திக்கத்தான் விரும்பின; அவர் வேலைநிறுத்த உரிமையைத் தாக்கி, வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு எதிராக CRS பொலிஸ் கலகப் பிரிவை நிறுத்தியபோதிலும்கூட. இதன் விளைவு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போராட்டங்கள் முறையாகத் தோற்கடிக்கப்பட்டதுதான்.

 

Aulnay-sous-bois ல் உள்ள ஆலையில் CGT க்கு தலைமை தாங்கும் முன்னாள் இடது குழுவான Lutte Ouvrière (தொழிலாளர்கள் போராட்டம்), தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நோக்கங்களை பற்றி எச்சரிக்கை கொடுப்பதில்லை; அதாவது, அவர்கள் ஒரு தோல்விக்கு தயாரிப்பு செய்கிறார்கள் என்று. 2009ம் ஆண்டு Clairoix Continental டயர் ஆலை மூடப்பட்டபோது LO காண்பித்தது போல் (அப்பொழுது வேலையிழப்பின்போது கொடுக்கப்பட்ட நிதிக்கு ஈடாக வேலை நீக்கங்களை அது ஒப்புக் கொண்டது), அது கார்த் தொழிலில் தொழிற்சங்கத்தின் கொள்கையைத்தான் செயல்படுத்தியது.

LO உடைய தீவிரவனப்புரை இதே முன்னோக்கைத்தான் அது கொண்டுள்ளது என்பதை மூடிமறைக்கத்தான் பயன்படுகிறது. அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு ஒப்புக் கொண்டு, அதை ஒரு பெரிய முன்னேற்றப்படி என்று பாராட்டுதல்அதைத்தான் ஒல்நேயில் LO  Jean-Pierre Mercier செய்தார்தொழிலாளர்களை உறுதிகுலைக்கும் வகையில் அரசாங்கம் மற்றும் PSA பற்றிய போலித் தோற்றங்களை வளர்க்கத்தான் உதவும்.

வேலை நீக்கங்களுக்கு எதிரான போராட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு அடிப்படை நிபந்தனை, இந்த அமைப்புக்கள், அவற்றின் தேசிய வேலைத் திட்டங்கள் மற்றும் முதலாளிகளுடன் அவர்கள் வெட்டுக்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்துதல் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக இருப்பதுதான். அனைத்து வேலைகளும், ஊதியங்களும் நிபந்தனையற்ற முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒன்றுதான் கார் உற்பத்தியாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ளும் வழியாகும்; அதேபோல் ஐரோப்பா முழுவதும் பல தலைமுறைகளாக இல்லாத அனைத்து மட்டங்களிலும் சுரண்டப்படுவது அறிமுகப்படுத்துப்படுவதையும் நிறுத்த ஒரே வழியாகும்.

அத்தகைய போராட்டம் கார்த் தயாரிப்புத் துறையில் பல ஆலைகளிலும் தேசங்களின் எல்லைகளைக் கடந்து தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு போராடினால் மட்டுமே வெற்றி அடையப்படமுடியும்; குறிப்பாக அவர்களுடைய அமெரிக்க தொழிலாள வர்க்க சகோதர, சகோதரிகளுடன் ஐக்கியப்பட்டு. இதன் நோக்கம் அனைத்து வேலைகளையும் பாதுகாத்தல் என்று இருக்க வேண்டும். அத்தகைய போராட்டத்திற்கு மூடப்படத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ஆலைகளிலும் வேலைப் பாதுகாப்பிற்கான பொதுப் போராட்டத்தை நடத்துவதற்கு அடிமட்டத் தொழிலாளர்களால் உருவாக்கப்படும் வேலைக் குழுக்கள் தேவையாகும்.