World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

What does the euro mean for the working class?

ஈரோ தொழிலாள வர்க்கத்திற்கு எதை அர்த்தப்படுத்துகிறது?

By Chris Marsden
8 January 2002
Back to screen version

ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 உறுப்பினர் அரசுகளில் 12ல் ஈரோ முழுதாய் தொழிற்படும் நாணயமாக அறிமுகமானதை ஜனவரி 1, 2002 கண்டது.

செயல்திட்டத்தின் தனிநிலை அளவானது இந்த பாரிய மாற்றத்தைச் செய்தது. பதினைந்து பில்லியின் தனிப்பட்ட ஈரோ தாள்கள் மற்றும் 52 பில்லியன்கள் நாணயங்கள் புழக்கத்திற்காக உருவாக்கப்பட்டன. புதிய பணத்தாள்களை ஒரு முனையை மற்றொரு முனை தொடுமாறு வைத்தால் நிலவைத் தொட்டுத் திரும்பிவரும் அளவில் இரண்டரை மடங்காக, சுற்றுக்களில் வைக்கப்பட்டன. ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் விம் டுசெய்ன்பேர்க் (Wim Duisenberg) படி, முறை மாற்றத்திற்கான செலவு 19-50 பில்லியன் ஈரோக்களுக்கு இடையில் உள்ளதாய் (17-45 பில்லியன் டாலர்கள்), அல்லது ஈரோ- மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும் 323 ஈரோக்கள் (290 அமெரிக்க டாலர்கள்) என்ற அளவில் உள்ளதாய் மதிப்பிடப்படுகிறது.

ஈரோவானது மூன்றாண்டுகளாக உண்மை பணமாக இருந்து வருகிறது. பங்கு முதல் மற்றும் பங்குப் பத்திர வணிகங்கள், வங்கி நடவடிக்கைகள், கடன் அட்டைகள் மற்றும் ஏனைய மின்னணுவியல் மூலமான பண நடவடிக்கைகள் அதேபோல 1999 ஜனவரி 1 க்குப் பின்னர் நடைபெற்ற சர்வதேச வர்த்தகம் ஆகியன ஈரோவில் நடைபெற்றன. இந்நாளில் இருந்து, 12 ஈரோ மண்டல நாடுகளில் விலைகள் ஈரோவில் காட்டப்பட்டது. அதன் பக்கத்தில் அவ்வந்நாட்டு தேசிய நாணயத்தில் குறிக்கப்பட்டது, அத்தேசிய நாணயங்கள் அடுத்து வரும் இரு மாதங்களில் சுழற்சியிலிருந்து முற்றிலுமாக திரும்பப் பெறப்படும்.

ஆனால் இம்மாற்றமானது வெறும் குறியீடல்ல. யூரோவானது ஆஸ்திரியா,பெல்ஜியம், பின்லாந்து, பிரான்சு, அயர்லாந்து, ஜேர்மனி, கிரீஸ், இத்தாலி, லுக்சம்பேர்க், நெதர்லாந்து, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள 300 மில்லியன் ஐரோப்பியர்களுக்கான பரிவர்த்தனைக்கான பண வழிமுறையாக இப்பொழுது ஈரோ இருக்கிறது.

சான்மரினோ, மொனோக்கோ மற்றும் வத்திக்கான் போன்ற சிறிய ஐரோப்பிய அரசுகளும் அதனுடன் அன்டோரா, கொசோவா மற்றும் மோண்டிநீக்ரோ ஆகியனவும் ஈரோவை ஏற்றுக் கொண்டன. பல்வேறு ஐரோப்பிய வல்லரசுகளின் முன்னாள் காலனித்துவ உடைமையாக இருந்தவை கூட நேரடியாகப் பாதிக்கப்பட்டன. மொத்தத்தில் 40 நாடுகள் --உலக நாடுகளில் ஐந்தில் ஒரு பங்கைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் நாடுகள்-- ஒன்றில் ஈரோவை ஏற்றுக் கொண்டன அல்லது அவர்களுடைய சொந்த நாணயத்தோடு இணைத்துக் கொண்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதற்கு மனுச்செய்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளான --போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, லாத்வியா மற்றும் பால்ட்டிக் குடியரசுகள்-- அதேபோல மால்டா மற்றும் சைப்ரஸ் ஆகியன கூட ஈரோவை விரைவில் ஏற்க இருக்கின்றன. தனித்த ஐரோப்பிய நாணயம் சர்வதேச மாற்று சாதனமாக டாலரை மறைக்க முடியும் அல்லது குறைந்த பட்சம் குறிப்பிடத்தக்க போட்டியை வழங்க முடியும்.

பிரிட்டன், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகியன ஈரோவை ஏற்காத ஒரே ஐரோப்பிய உறுப்பினர்கள் ஆவர், ஆனால் அது இந்நாடுகளில் ஏற்கனவே ஒரு இணை நாணயகமாக பரவலாக தொழிற்பட்டு வருகின்றது. இம் மூன்று அரசுகளிலும் உள்ள பெரிய சில்லறை வணிகர்கள் பலர் தங்களின் நடவடிக்கைகளில் இதனை ஏற்றுள்ளனர் மற்றும் பெரிய வங்கிகளில் பெரும்பான்மையானவை காசோலைக் கணக்குகளை வழங்குவதில் மற்றும் அடகுக்கு வாங்குவதில் ஈரோவில் குறிப்பிடுகின்றன. வர்த்தகம் மற்றும் சுற்றுலா வழிகளில் ஈரோக்கள் பிரிட்டனுக்குள் பாய்கின்றன. தொழிற்கட்சி அரசாங்கமானது அடுத்த 12 மாதங்களில் 40 மில்லியன் பிரிட்டிஷ் மக்கள் ஈரோ மண்டலத்திற்கு விஜயம் செய்ய இருக்கிறார்கள் என எதிர்பார்க்கின்றது, அதேவளை ஒவ்வொரு ஆண்டும் ஈரோ மண்டலத்திலிருந்து 13 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பிரிட்டனில் 4 பில்லியன் பவுன்களுக்கும் மேலாக செலவு செய்யப் போகின்றனர். பெரும்பாலான பொருளியலாளர்கள் பிரிட்டன் இறுதியில் ஈரோவை ஏற்றுக் கொள்ளல் தவிர்க்க முடியாதது என நம்புகின்றனர். ஐரோப்பிய அமைச்சர் பீட்டர் ஹெய்ன் புதிய நாணயத்துடன் பவுண்ட்ஸ் இணையாகத் தாக்குப் பிடிக்குமா என தான் சந்தேகப்படுவதாகக் கூறினார். மற்றும் பிரதமர் டோனி பிளேர் தொழிற் கட்சியின் தற்போதைய பதவிக்காலம் முடிவதற்கு முன், 2006க்கு முன்னதாக ஈரோவை ஏற்றுக் கொள்வது தொடர்பாக பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தப் போகிறார்.

ஈரோ அறிமுகம் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆழமான விளைவைக் கொண்டிருக்கும். அது தொழிலாள வர்க்கத்தை, ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்துக்குள்ளேயான ஈரோ ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களுக்கு எதிர்ப்பாக, தனது சொந்த சுதந்திரமான நிலைப்பாட்டை எடுப்பதனை அவசரத் தேவையாக தொழிலாள வர்க்கத்தின் முன் நிறுத்தி உள்ளது.

புதிய நாணயத்தில் பகுத்தறிவுபூர்வமானதும் புறநிலை ரீதியாக முற்போக்கானதுமான பல அம்சங்கள் இருப்பதை மிகக் குறுகிய மனப்பான்மை கொண்ட தேசியவாதிகள் மட்டும் அங்கீகரிக்க மறுக்கின்றனர். பயண ஏஜண்டுகள், வங்கிகள் மற்றும் நாணயம் மாற்றுமிடம் ஆகிய இடத்தில் இருந்து வெளிநாட்டு நாணயத்தை வாங்குவதற்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் எவரும், ஆர்தர் பி. லேஃபர் (Arthur B. Laffer), டிசம்பர் 31ல் வால்ஸ்ட்ரீட் பத்திரிகையில், "மக்களுக்கு என்றும் வாழ்பவராகத் தெரிந்த அவர்களை குறைவாய் ஈர்த்த உருவங்களுடன் -- சிதறலாய் பூச்சிடப்பட்ட கதம்பப் பண்புகளின் தாளை வெளியிடும் துண்டு துண்டாய் போன ஏகபோகங்களின் சகாப்தம் முடிந்து விட்டது. நாளை ஒரே ஒரு ஐரோப்பிய நாணயம் இருக்கப் போகிறது. ஈரோ நீடு வாழ்க" என்று எழுதியபோது தங்களது ஆதரவைக் காட்டக்கூடும்.

ஆனால் ஈரோவுக்கு மாறியது, சில பண நடவடிக்கைகளை செய்வதற்கு எளிதாக இருக்கிறது என்பதைவிட ஈரோ மிகவும் அடிப்படைப் பிரச்சினைகளை எழுப்புகிறது. தேசிய அரசு இனியும் பொருளாதார வாழ்க்கையின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய அலகைக் கொண்டிருக்கவில்லை என்பதை உணரும்படி ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தினர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பூகோள மயப்படுத்தல் திரும்பு கட்டத்தில், வர்த்தகம் மட்டுமல்ல, உற்பத்தியின் நிகழ்ச்சிப்போக்கே தேசிய எல்லைகளுடன் குறைந்த அளவில் அல்லது எந்த விதத்திலும் அதனைப் பொருட்படுத்தாது இயக்கப்படுகிறது. அந்தவாறாக, தேசிய நாணயம் என்ற கருத்துரு மிகத் தொலைநோக்கு கொண்ட ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தால், இந்த கண்டத்தின் பொருளாதார வாழ்க்கையை பகுத்தறிவு பூர்வமாகவும் திறமாகவும் ஒழுங்கமைப்பதற்கு ஒரு தடையாக இருப்பதாகக் கருதப்படுகின்றது.

இந்த நிலைப்பாட்டிலிருந்து, ஈரோவுக்கு எதிர்ப்பை வழிநடத்தும் அச்சக்திகள் பிற்போக்காளர்களைக் கொண்டிருக்கின்றன. உலகின் வழக்கில் இல்லாத பிரிவை வேறுபாடான தேசிய உள்தன்மைகளுக்குள் மீண்டும் பலவந்தமாகத் திணிக்க அவர்கள் விரும்புகின்றனர். பிரிட்டனில் ஈரோ வேண்டாம் எனும் முகாம் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் செய்தி ஊடக கோமகன் ருப்பர்ட் முர்டோக் (இவர் கடந்த இரு தேர்தல்களிலும் தொழிற்கட்சியை ஆதரித்திருந்தார்) ஆகியோரால் தலைமை வகிக்கப்படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சி சார்பு பத்திரிகை டெலிகிராப், இந்த சக்திகள் தனது சொந்த தலையங்கம் "ராணியும் நாணயமும்" என்பதைக் கலக்கும் கிரேக்க புராணக்கதை வகையிலான அழுக்காய் சுருக்கமாகக் கூறுகிறது. கட்டுரையானது "ஆரம்பகால எலிசபெத் காலத்தினர் அவர்களின் மேம்பட்ட தன்னம்பிக்கையில் வேறுபட்டிருந்தார்கள். அவர்கள் இங்கிலாந்து இப்பூமியில் உள்ள புகழ்வாய்ந்த நாடு என நம்பினார்கள் மற்றும் கடவுள் வெற்றியை அருளுவார் என நம்பினார்கள். மாறுபடும் விதமாக நாங்கள் எலிசபெத் காலத்தவர்களுக்கு புதியவர்கள், இந்த உணர்வை பெரும்பாலும் கைவிட்டுவிட்டவர்கள்."

இந்தத் தட்டினர் மத்தியில் பிரிட்டனின் தேசிய சுதந்திரத்திற்கான அக்கறை, வெளிவிவகாரக் கொள்கை பற்றிய பிரச்சினைகளுடன் இணைந்துள்ளது. அவர்கள் அமெரிக்க ஐக்கிய அரசுகளுடனான நோக்கு நிலைக்கு சார்பாக ஐரோப்பிய ஒருங்கிணைப்பை எதிர்க்கின்றனர், ஈரோவை ஏற்றுக் கொள்வது தற்போது ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு சமூக செலவினங்களையும் கார்ப்பொரேஷன் வரிகளை வெட்டும் பிரிட்டனின் திறமையைத் தடுக்கும் அல்லது கீழறுக்கும், அதன் மூலம் பூகோள கார்ப்பொரேஷன்களுக்கு மலிவான கூலி உழைப்பு உற்பத்தி மேடையை மற்றும் வரிவிலக்கு சொர்க்கத்தை அளிக்கவும் ஆன அதன் திறமையை இழக்கச்செய்யும் என்ற அச்சமாகவும் அது இருக்கின்றது. இது முர்டோச்சின் சன்  பத்திரிகை செய்தித்திரட்டின் ஆசிரியத் தலையங்க வரியால் சுருங்க உரைக்கப்பட்டது. பிரிட்டன் ஈரோவில் இணைந்தால் ஐரோப்பா உருவாக்கும் அரசியல் ஒன்றியத்தில் ஒரு பற்சக்கரத்தின் சிறிய பல் போல் நாம் ஆவோம். எண் 10 (பிளேயரின் உத்தியோகபூர்வ வசிப்பிடமான டெளனிங் தெரு) என்ன சொல்கிறது என்பது பொருட்படுத்தப்படப் போவதில்லை, இந்தக் கஷ்டமான யதார்த்தம் விரைவில் நடக்கப் போகிறது. பலவற்றின் மத்தியில் ஒரே குரலாக, நாம் திறமற்ற மற்றும் செல்வாக்கற்ற நாடாக முடிவை எய்தப் போகிறோம். அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பாவெல் போன்றோர் டெளனிங் தெருவைப் பொருட்படுத்தப் போவதில்லை --அவர்கள் நேரடியாக பிரஸ்ஸல்சுடன் தங்களது வேலையை வைத்துக் கொள்ளப் போகிறார்கள். இறையாண்மையை இழத்தல் என்பதன் பொருள் அதுதான். "இத்தாலியில் செய்தி ஊடக பெருஞ்செல்வர் சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான வலதுசாரி கூட்டரசாங்கம், அதனுள் உள்ள ஏனையோர் ஈரோவுக்கு குரோதமாக இருப்பதன் காரணமாக, அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெனாட்டோ ருஜிரோவின் ராஜினாமாவைக் கண்டிருக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் அன்டோனியோ மார்ட்டினோ ஈரோ செயல்திட்டம்" தோல்வியில் முடியும், அது அறிமுகப்படுத்தப்பட்ட வழியில் போய்விடும், என்று எச்சரித்தார். சீர்திருத்த அமைச்சரும் பிரிவினைவாத வடக்கு கழகத்தின் தலைவருமான, உம்பெர்ட்டோ போசி, "ஈரோ பற்றி வெறுப்புக் கூச்சல்போட மாட்டேன்" என்றார். போசி அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தை "பெரும் முதலாளிகள் மற்றும் ரகசிய சடங்குகளில் பரஸ்பரம் உதவும் உறுப்பினர்கள் மற்றும் சூழ்ந்து தாக்கும் குழந்தை மீது காமஇச்சை கொண்டோர்" மற்றும் கம்யூனிஸ்டுகளால் செய்யப்படும் "ஒரு சதி" ஆக இதனை விவரித்தார்.

இந்தத்ததட்டினர் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துதற்கு அல்லது பலவீனப்படுத்துதற்கு அவர்கள் பயன்படுத்தும் தேசியவாதம் மற்றும் அந்நியப் பொருள்களை வாங்காதே என்பதைக் கீழறுப்பதற்கு அச்சுத்தும் எதற்கும் அவர்களின் உள்ளார்ந்த எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் தொழிலாளர்கள் கண்டத்தில் உள்ள உழைக்கும் மக்களுடன் தங்களின் வாழ்க்கைத் தரங்களை ஒப்பிடக் கூடுமானால், கூலிகள் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பாக தாங்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறோம் என்பதை விரைவில் புரிந்துகொள்வார்கள், மேலும் அவர்கள் தங்களின் தலைவிதி தங்களது ஐரோப்பிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதாகக் கண்டுகொள்வதற்கு புறநிலைரீதியாக அதிகம் ஊக்குவிக்கப்டுவார்கள். இது தொடர்பானதில், ஈரோ அறிமுகப்படுத்தலின் சாதக அம்சங்களுள் ஒன்று, பிரதான சில்லறை வணிகர்களாலும் உற்பத்தியாளர்களாலும் விலை-நிர்ணயிக்கும் மட்டத்தை அது அம்பலப்படுத்தி இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். கார்கள், துணிகள் மற்றும் குறுந்தகடுகளிலிருந்து ஒவ்வொன்றினது விலைகளும் கண்டத்திலேயே மூன்றில் ஒரு பங்கு பிரிட்டனில் அதிகமாகும்.

இருப்பினும், ஒரே ஐரோப்பிய நாணயம் என்பது தாமே முற்போக்கான கருத்துருவாக இருக்கின்ற போதிலேயே, அது முதலாளித்துவ வர்க்கத்தாலேயே, அதன் நலன்களுக்காக அபிவிருத்தி செய்யப்பட்டது.

பொது நாணயத்தை உருவாக்குவது மட்டும் கண்டம் முழுவதும் அமைதியான அபிவிருத்திக்கான அடிப்படையை அளிப்பதில்லை. பூகோள ரீதியான ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்திக்கும் உலகம் பகைமை உடைய தேசிய அரசுகளாகப் பிளவுண்டு இருப்பதற்கும் இடையிலான அடிப்படை மோதலை வெல்வதற்கு முதலாளித்துவ வர்க்கம் அமைப்பு ரீதியாக முடியாததாக இருக்கிறது. மாறாக, தனி ஒரு ஐரோப்பியச் சந்தைக் கட்டமைப்புக்குள்ளே, கண்டத்தில் மேலாதிக்கம் செய்வதற்கு போட்டி ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியானது தொடரும் மற்றும் ஆழமடையும். எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் ஈரோ எதிர்ப்பு பிரிவானது, ஈரோவை இக்கண்டத்தில் ஜேர்மனியின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு இயங்கு முறையாக, அதன் கண்ணோட்டத்தை தெளிவாக ஆக்கி உள்ளது.

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஏனைய 10 அரசுகளையும் இந்தக் கட்டத்தில் ஒன்றாய்க் கொண்டுவந்து நிறுத்தியது என்னவெனில், அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தக யுத்தத்திற்கான கூட்டு மூலோபாயத்தை விரிவாக்கவும் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சமூகப் பொருளாதார தாக்குதலை மேற்கொள்ளவுமான அவர்களின் அவசரத் தேவை ஆகும்.

பேர்லின், பாரிஸ் எங்கும் உள்ள அரசியல் தட்டுக்கள், ஐரோப்பிய மூலதனம் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக சக்தி மிக்க வகையில் போட்டியிடும் பொருட்டு, தனி ஒரு நாணயம் கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னிலைப்படுத்தும், போட்டியை ஊக்கப்படுத்தும் என்று வாதிக்கின்றனர். தனி ஐரோப்பிய சந்தையானது ஐரோப்பாவுக்குள்ளே வர்த்தகத்திற்கும் முதலீட்டுக்கும் உள்ள தடைகளை அகற்றுகிறது என்பது தனி ஐரோப்பிய சந்தையின் தர்க்க ரீதியான விரிவாக்கம் என்பது புரிந்து கொள்ளப்பட்டது. பொதுவான நாணயத்தை உருவாக்கல் ஐரோப்பிய கம்பெனிகள் மூலதனத்தை திரட்டவும் குறைந்த வரி மற்றும் குறைந்த உழைப்புச் செலவு உள்ள இடங்களில் உற்பத்தியை மாற்றவும், ஒன்றிணைந்து பெரியதாக அதிகப் போட்டிமிக்க நிறுவனங்களாக மற்றும் ஈரோ பத்திரம் மற்றும் பங்குச் சந்தையிலிருந்து நிதிகளைச் சேகரிக்கவும் எளிதாக்கும். இது முறையே, தேசிய அரசாங்கங்களையும் இடக்கரடக்கலாக "நிதிக் கட்டுப்பாடு" என்று அழைக்கப்படுவதை செயற்படுத்தவும் ஐரோப்பா முழுவதும் "வரி இணக்கத்திற்கு" முயற்சி செய்வதற்காகவும் கூட இது வழி செய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது நடைமுறையில் எதை அர்த்தப்படுத்துகிறது எனில் ஒவ்வொரு தேசிய அரசாங்கமும் வர்த்தக வரிகளை வெட்டவேண்டும் என்பதாகும், அது தொழிலாள வர்க்கத்தின் முதுகில் வரிச்சுமையை ஏற்றியோ அல்லது முக்கிய சமூக வேலைத்திட்டங்களை வெட்டி அதனை இல்லாமற் செய்வதோ ஆகும். பெரும் கார்ப்பொரேஷன்கள் மற்றும் நிதிக் கழகங்களின் ஆலோசனைக் கூடத்திலிருந்து வரும் இன்னொரு கோரிக்கை தற்போது இருக்கும் குறைந்த பட்ச கூலி மசோதா என்னென்ன இருக்கிறதோ அதை அகற்றி, அதன் மூலம் கூலி மட்டங்களை மற்றும் வேலையில் வைக்கவும் வேலையில் இருந்து எடுக்கவுமான செலவைக் குறைக்கவும் மூலதன இயக்கத்தை அதிகரிக்கவும் செய்தலாகும்.

தொழிலாளர்களின் பொருளாதார நிலைமைகளை குறிப்பிட்ட மட்டத்துக்கு குறைத்தல் ஏற்கனவே இருந்து வருகிறது, ஆனால் இது பெரும் முதலாளிகளுக்கும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கும் போதுமானதாக இருக்கவில்லை. 1999ல் ஈரோ முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர். ஐரோப்பிய உற்பத்தித்திறன் அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்குப் பின்னால் பின்தங்குவது தொடர்ந்து இருந்தது மற்றும் நாணயம் அமெரிக்க டாலருக்கு எதிராக அதன் மூலமதிப்பில் 24 சதவீதத்தை இழந்தது. இது இப்பொழுது மாற வேண்டும்.

ஈரோவை மாற்றத்தக்க உறுதி உடைய நாணயமாக விட்டது பெரும் முதலாளிகளிடம் இருந்து மேலும் பெரிய பொருளாதாரச் "சீர்திருத்தங்களை" நடைமுறைப்படுத்துதற்கான கோரிக்கைகளை ஏற்படுத்துகிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை வெட்டுவதற்கான மற்றும் கார்ப்பொரேட் இலாபங்களை ஊக்கப்படுத்துதற்கான பிரிட்டனின் சொந்த முயற்சிகளை ஐரோப்பா தடுக்கும் என்ற டோரி வலதுகளின் அச்சத்திற்கும் அப்பால், ஐரோப்பா பின்பற்றுவதற்கான மட்டக் குறியை பிரிட்டன் அமைத்துக் காட்டும்.

உதாரணமாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிளேயரின் கொள்கை குருவான பீட்டர் மாண்டெல்சன் ஈரோவையும் தனி ஒரு ஐரோப்பிய சந்தையையும் புகழ்ந்து, "முதலாளிகள் முதலீடு செய்வதற்கு மிகவும் உகந்த சூழ்நிலைமைகளை உருவாக்குவதைச் சார்ந்து உள்ளது.... ஐரோப்பாவிற்கு மிகவும் திறந்த உற்பத்தி சந்தைகளின் தூண்டல், ஒரு உண்மையான ஒருங்கிணைந்த மூலதனச் சந்தை மற்றும் மிக நெகிழ்ச்சி உடைய ஒரு உழைப்புச் சந்தை தேவைப்படுகிறது."

வால்ஸ்ட்ரீட் பத்திரிகை ஜனவரி 2 ஆசிரிய தலையங்கப் பகுதியில் ஈரோ அறிமுகத்தை புகழ்ந்தது, அது "கண்டத்து ஐரோப்பியர்கள் தங்களின் நலன்சார் அரசின் சுமைகளை மற்றும் இமைகாப்பதான உழைப்பு சந்தைகளை சீர்திருத்தத் தவறிவிட்டனர்." மாறாக, அவர்கள் "இவ்வாரம் ஐரோப்பா எதிர்பாராத வகையில் துணிவாய் இருக்கிறது... மார்க்கரெட் தாட்சர் ஒருமுறை ஐரோப்பிய அமைப்பின் தலைவர் ஜாக்வெஸ் டீலர்சை, அவர் 'கொல்லைப்புற வழியால் சோசலிசத்தை' அறிமுகப்படுத்த முயற்சிக்கிறார் என முக்கியமாய் குறிப்பிட்டிருந்தார். தனி ஒரு நாணயத்தின் சிற்பிகள் தாட்சரிசத்தை கொல்லைப்புற வழியாய் அறிமுகப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவது சற்று அளவுக்கு அதிகமானது, ஆனால் பாதிப்பு அதேமாதிரிதான்.

கண்டத்து தலைவர்கள் அரிதாகவே பொருளாதார தாராண்மைவாதிகள் ஆவர். ஆனால் அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவுக்கு ஐரோப்பாவிற்கு அதிகம் நெகிழ்ச்சியான வர்த்தக சூழ்நிலைமை தேவை என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. கண்டத்து அரசியல்வாதிகள் தங்களது மக்கள் அவர்கள் பேணிவந்த சமூக மற்றும் தொழிலாளர் உரிமைகளை மனமுவந்து கைவிடுவதற்கு தங்களது மக்களை வழிப்படுத்துதலில் சிறிதே நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். ஆகையால் தனி ஒரு நாணயம் அவர்களுக்கான அந்த வேலையைச் செய்யும் என்று நம்புகிறார்கள்."

பிரிட்டனின் ஃபைனான்சியல் டைம்ஸ்  ஈரோ தொடர்பாக அதேவிதமான நம்பிக்கையை வைத்து, சமநிலைப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டங்களுக்கு, கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு, பொருளாதார நெகிழ்வுத்தன்மைகளுக்கு, ஓய்வு ஊதியத்தை வெட்டுமாறும் மக்களை குறைந்த கூலி வேலைவாய்ப்புக்களுக்கு நிர்ப்பந்திக்குமாறும் வேண்டுகின்றது.

ஈரோவுக்கு அடியில் இருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் இயல்பானது, தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயகபூர்வமான கட்டுப்பாட்டின் எந்த விதமான வடிவத்திற்கும் எதிராக ஒத்துப்போகாதிருக்கிறது. ஈரோவை எதிர்ப்பவர்களால் மேற்கோள் காட்டப்படும் அக்கறையின் ஒரு உண்மையான அம்சம் நடத்தைக்கு பதில் சொல்லும் பொறுப்பு இல்லாமை ஆகும். ஐரோப்பிய மத்திய வங்கியானது, பெரும் முதலாளிகள் மற்றும் அரசியல் தட்டினருக்கு மட்டும் கடப்பாடுடையதாக, மக்களின் உரிமைக் கட்டளை போன்ற எதுவும் இல்லாமல் கூட நிதி மற்றும் பணக் கொள்கையின் பல அம்சங்களைத் தீர்மானிக்கும். இருப்பினும், இதே விமர்சனத்தை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் தற்போது இருக்கின்ற அரசியல் மற்றும் பண ஒழுங்குமுறைக்கும் வைக்க முடியும்.

ஈரோவுக்கு எதிர்ப்பைத் தாங்கி நிற்கும் தேசியவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் வகையிலான அடிப்படையில், முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தினை தொழிலாளர்கள் எதிர்க்க முடியாது. இதில் பொருளாதார பூகோளமயமாக்கலின் யதார்த்தத்துக்கு தங்களின் முகத்தை திருப்பிக் கொள்வதற்கு மேலாக எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், உலக ரீதியான உற்பத்தி, விநியோகம் மற்றும் பரிவர்த்தனையின் பொருளாதார யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் முன்னோக்கை ஏற்றுக் கொள்வது தொழிலாளர் இயக்கத்திற்கு தேவையானதாக இருக்கிறது.

முதலாளித்துவ வர்க்கம் தன்னை சர்வதேசரீதியாக ஒழுங்கு செய்துகொள்ள முயற்சிக்கும் அந்த மட்டத்துக்கு, சீர்திருத்தவாத கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பழைய தேசிய அடிப்படையிலான மூலோபாயத்தின் ஆற்றலின்மையை கோடிட்டுக்காட்ட இது உதவுகிறது. இன்றைய வர்க்கப் போராட்டமானது சர்வதேசரீதியாக எண்ணிப் பார்க்கப்பட வேண்டும். தேவைப்படுவது என்னவெனில், ஐரோப்பா முழுமையும் உள்ள தொழிலாள வர்க்கம், அதன் வாழ்க்கைத் தரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதில், தனி ஒரு முதலாளித்துவ ஐரோப்பிய சந்தைக்கு எதிர்ப்பாக, ஒரு ஐரோப்பிய சோசலிச ரசுகளின் ஒன்றியத்தை பெறுவதில் அதனை ஒழுங்கமைத்தல் ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசியவாத அல்லது ஈரோ-வெறுப்பு அரசியல்வாதிகள் ஒரு ஐரோப்பிய நாட்டு தொழிலாளர்களை இன்னொரு ஐரோப்பிய நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்துதற்கும், அல்லது ஐரோப்பியத் தொழிலாளர்களை அமெரிக்காவில், ஜப்பானில் மற்றும் உலகில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நிறுத்துதற்கும் எதிராக உறுதியுடன் போராடுவது இதற்கு தேவைப்படுகிறது.