WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஐரோப்பிய ஒன்றியத்தின்
உண்மையான முகம்
Stefan
Steinberg
6 April 2012
use
this version to print | Send
feedback
இந்த ஆண்டு
மார்ச் 25ம் திகதி, ஐரோப்பிய ஒன்றியம் (EU)
ரோம் உடன்படிக்கைகள் இயற்றப்பட்டு அதன் அஸ்திவாரங்கள் போடப்பட்ட
55வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பகட்டுத்தனம்,
ஆடம்பரம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய கொண்டாட்டங்கள்
சற்றே அமைதியான முறையில்தான் இருந்தன. அப்பொழுது கண்டத்தின் அரசியல், அரசாங்கத்
தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்களுடன் ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் தம்மையே
பாராட்டிக்கொள்ளும் பெரும் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
பீத்தோவனின்
Ode to Joy
பாடல் இசை பின்னணியுடன்,
கூடியிருந்த பிரமுகர்கள் சாம்பெயின் அருந்திக் களித்தனர். அந்நிகழ்விற்காக
இயற்றப்பட்டிருந்த உரையின் பந்தி இவ்வாறு ஆரம்பித்தது,
“பல
நூற்றாண்டுகளாக ஐரோப்பா என்பது ஒரு கருத்துவடிவில்தான் இருந்தது; அமைதி,
புரிந்துணர்வு ஆகியவற்றிற்கு நம்பிக்கை காட்டிய வகையில்தான் இருந்தது. அந்த
நம்பிக்கை இப்பொழுது நிறைவு பெறுகிறது. ஐரோப்பிய ஒன்றிணைப்பு சமாதானத்தையும்
செழிப்பையும் சாத்தியமானதாக்கியுள்ளது.”
என்று தொடங்கியிருந்தது.
ஐரோப்பிய
ஒன்றியத்தின் பேர்லின் அறிக்கை தொடர்ந்தது:
“அமைதிக்கும்,
சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும், பரஸ்பர மரியாதை,
பொறுப்புணர்வை பகிர்ந்துகொள்ளல், செழிப்பு, பாதுகாப்பு, சகிப்புத்தன்மை, பங்கு
பெறுதல், நீதி, ஒற்றுமை ஆகியவற்றிற்காக நாம் பாடுபடுகிறோம்.”
“அமைதி,
செழிப்பு, ஒற்றுமை”
இவற்றை உத்தரவாதப்படுத்துவதற்கு முற்றிலும் மாறாக, ஐரோப்பிய
ஒன்றியம் ஐரோப்பிய உழைக்கும்மக்களுக்குப் பெருகிய முறையில் பேரழிவு தரும் அமைப்பு
என்னும் ஒரு பிற்போக்குத்தனமான பொறியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்டம்
முழுவதும் நடைபெறும் சமீபத்திய தொடர் நிகழ்வுகள் இந்த மதிப்பீட்டை
எடுத்துக்காட்டுகிறது.
செவ்வாயன்று
77வயது கிரேக்க ஓய்வூதியம் பெறும் ஒருவர் பட்டப்பகலில் நாட்டின் பாராளுமன்றக்
கட்டிடத்தில் முன் தற்கொலை செய்து கொண்டார். தன்னைத் தானே சுட்டுக் கொள்ளுவதற்கு
முன், டிமிட்ரிஸ் கிறிஸ்ரோலாஸ் தற்பொழுதைய ஏதென்ஸ் அரசாங்கத்தை இரண்டாம் உலகப்
போரின்போது ஜேர்மனிய பாசிச ஆக்கிரமிப்புப் படைகளுடன் ஒப்பிட்டு ஒரு தற்கொலைக்
குறிப்பையும் எழுதி, விட்டுச் சென்றுள்ளார்.
நூறாயிரக்கணக்கான மூத்த கிரேக்கக் குடிமக்களின் விதியைத்தான் கிறிஸ்ரோலாஸ்
பகிர்ந்திருந்தார். வாழ்நாள் முழுவதையும் மருந்துகள் கொடுக்கும் தொழிலில்
செலவிட்டபின், கிரேக்க அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்ட சீர்திருத்தங்களினால் அவர்
ஓய்வூதியத்தை இழந்தார். தன்னுடைய குறிப்பில் அவர் எழுதியது:
“...
எனக்கு நீதி கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால், குப்பைகளில் உணவைத் தேடி அலையுமுன்,
என்னுடைய குழந்தைக்கு ஒரு சுமையாக இருப்பதைக் காட்டிலும், [என் வாழ்வைக்] கௌரவமாக
முடித்துக் கொள்ளுவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.”
தற்போதைய
கிரேக்க அரசியல் உயரடுக்கு இத்தாலிய பாசிசத் தலைவருக்கு நேர்ந்த கதியைத்தான்
அடையும் என்று முன்கணித்த வகையில் தன்னுடைய குறிப்பை அவர் முடிக்கிறார்:
“வருங்காலமே
இல்லாத இளைஞர்கள் 1945ல் முசோலினிக்கு இத்தாலியர்கள் செய்தது போல் ஒரு நாள்
ஆயுதமேந்தி சின்டாக்மா சதுக்கத்தில் தேசத்துரோகிகளை தலைகீழாக தூக்கிலிடுவர்.”
அதே தினம்
சில காலமாக வேலையின்றி இருக்கும் ஒரு 38 வயது அல்பானியர், கிரேடா தீவில் ஒரு
கட்டிடத்தின் இரண்டாம்மாடி மாடிமுகப்பிலிருந்து கீழே குதித்து இறந்துபோனார்.
உள்ளூர் செய்தித் தகவல்கள் அவருடைய தற்கொலைக்கு காரணம் நிதிய கஷ்டங்கள் என்று
கூறின.
ஐரோப்பிய
ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (EU,
ECB, IMF)
ஆணையிடும் மோசமான சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக, கிரேக்கத்தில்
ஓய்வூதியங்கள் சராசரியாக 40% வீழ்ச்சியடைந்துவிட்டன. நாட்டின் வேலையின்மை 21%
என்பது ஐரோப்பாவிலேயே அதிகமானவற்றுள் ஒன்றாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம்
ஐரோப்பாவிலேயே மிகவும் குறைந்த தற்கொலை விகிதத்தைக் கொண்டிருந்தது. இந்த விகிதம்
கடந்த இரண்டு ஆண்டுகளில் இருமடங்காக ஆகிவிட்டது.
இவ்விதத்தில் வாழ்க்கைத்தரங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள் அழிந்து நிற்பது
கிரேக்கத்தோடு நின்றுவிடவில்லை.
அதேபோல்
இந்த வாரம் செவ்வாயன்று, ஒரு 78 வயது மூதாட்டி சிசிலியில் தன் அடுக்குவீட்டில்
இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மாதாந்திர ஓய்வூதியம் 800ல்
இருந்து 600 யூரோக்கள் எனக் குறைக்கப்பட்டுவிட்டதாக அவருக்குச் சமீபத்தில் தகவல்
கொடுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கின்றது......
திங்களன்று
படங்களுக்கு சட்டம் போடுபவர் ஒருவர் ரோமில் தூக்குப் போட்டுக் கொண்டார். அவருடைய
தற்கொலைக் குறிப்பில் அதிகளவு பொருளாதாரப் பிரச்சினைகள் குறிக்கப்பட்டிருந்தன.
அவருடைய இறப்பிற்கு முன் வடக்கு இத்தாலியில் இரு தற்கொலை முயற்சிகள்
நடைபெற்றிருந்தன. தனித்தனி நிகழ்வுகளில் கட்டிட வணிகத்தில் ஈடுபட்டிருந்த இரு ஆடவர்
தங்களை உயிரோடு எரித்துக் கொள்ள முற்பட்டனர். கடுமையான தீக்காயங்களுடன் தப்பிப்
பிழைத்த இருவரும் தங்கள் அழிவுகரமான பொருளாதார நிலைமைதான் தங்கள் செயல்களுக்குக்
காரணம் என்று எழுதி வைத்திருந்தனர்.
ஐரோப்பாவில்
சமீபத்திய சமூக நெருக்கடி என்பது வயதுமுதிர்ந்த தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்களை
மட்டும் பாதித்துவிடவில்லை. அதிகரித்தளவில் முழுக் குடும்பங்களினதும்
குழந்தைகளினதும் எதிர்கால வாய்ப்புக்கள்
“நிதிய
உறுதிப்படுத்தல்”,
“சமூகநலச்
சீர்திருத்தம்”
ஆகியவற்றை கோரும்
ஒரு சலுகை பெற்றுள்ள சிறிய நிதிய அடுக்கிற்காக தியாகம் செய்யப்படுகின்றது.
Le Monde
ல்
வந்துள்ள ஒரு சமீபத்திய அறிவிப்பு எப்படி பல்லாயிரக்கணக்கான இத்தாலியச் சிறு
குழந்தைகள் பள்ளியை விட்டு நீங்குகின்றன, வேலை கிடைத்துக் குடும்பத்திற்கு உதவியாக
இருப்பதற்காக, என்பதைக் கூறுகிறது. இக்கட்டுரை பத்து வயதுக் குழந்தைகள் நாள்
ஒன்றிற்கு 12 மணி நேரம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு யூரோ, அல்லது அதையும்விடக் குறைவு
என்னும் ஊதியத்திற்கு உழைக்கின்றனர் என்று தெரிவிக்கிறது.
வறுமையும்
தீவிர சமூக துருவப்படுத்தல்களும் முழுக் கண்டத்தையும் நாசப்படுத்தியுள்ளன. ஏற்கனவே
அதிகம் காலம் கடந்துவிட்ட 2009 க்கான ஐரோப்பிய ஒன்றியப் புள்ளிவிவரங்கள்
மேற்குஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், கிரேக்கம் ஆகியவற்றிலுள்ள மக்களில் 20%
மேலானவர்கள் வறுமையில் வாழ்வதாகத் தெரிவித்தன. இந்த விகிதங்கள் பல மத்திய மற்றும்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளான லாட்வியா, லித்துவேனியா, ருமேனியா மற்றும் பல்கேரியாவில்
அதிகமாகிவிட்டன.
இந்நாடுகள்
அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியம்,
சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் பாரிய சிக்கன நடவடிக்கைகளுக்கு
உட்பட்டுள்ளன. சமூக நெருக்கடியின் நேரடி விளைவாக, ருமேனியாவில் மக்கள் தொகை கடந்த
பத்து ஆண்டுகளில் 12% குறைந்துவிட்டது. இது சராசரி ஆயுட்காலத்தில் குறைப்பு,
பிறப்பு விகிதங்களில் சரிவு, இளைஞர்கள் வெளிநாடுகளில் ஏராளமாகக் குடிபெயர்ந்து
செல்லுதல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற மக்கள் தொகைத் தரச் சரிவுகள்
பல்கேரியா, லாட்வியா ஆகியவற்றிலும் பதிவாகியுள்ளன. வறுமை மற்றும் சமூகத்
துருவப்படுத்தல்களும் வியத்தகு அளவில் ஐரோப்பாவின் இதயத்தானமான ஜேர்மனி, பிரான்ஸ்
போன்ற பெரிய நாடுகளிலும் பெருகிவிட்டன.
வாழ்க்கைத்தரங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள் கண்டம் முழுவதும்
அழிக்கப்பட்டுள்ளது. அமைதியான காலத்தில் இது முன்னோடியில்லாத ஒரு நிகழ்வு ஆகும்.
இது முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியம், குறிப்பாக தொழிற்சங்கங்கள், முன்னாள் இடது
கட்சிகளில் உள்ள அதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மீதான பேரழிவுடைய
குற்றச்சாட்டுத்தான்.
டிமிட்ரிஸ்
கிறிஸ்ரோலாஸ் தன் உயிரை இந்தவாரம் எடுத்துக் கொள்ளத் தூண்டிய அவநம்பிக்கை அவருடைய
பொருளாதார பரிதாபகரமான நிலை என்பதன் மூலம் மட்டுமே விளக்கப்பட முடியாது. உழைக்கும்
மக்களும் அவர்களுடைய குடும்பங்களும் இத்தகைய கடுமையான பிரச்சினைகளை கடப்பதற்கு,
அவர்களின் சார்பில் போராடுவதற்கு
தயாராக ஒரு அமைப்பு அல்லது
கட்சியின் ஆதரவு உள்ளது
என்ற உணர்வு
இருந்தால்தான் முடியும். ஆனால் தற்போதைய நிலைமையில் இதுதான் முக்கியமாக
இல்லாதுள்ளது.
தொழிலாள
வர்க்கத்திற்கு கடமைப்பட்டுள்ளதாக பெயரளவிற்கேனும் கூறிக்கொள்ளும் அமைப்புக்கள்
அனைத்தும் நீண்டகாலம் முன்னரே எதிர்த்தரப்பிற்கு சென்றுவிட்டன. ஐரோப்பிய ஒன்றியம்
மற்றும் அதன் கொள்கைகளுக்கு ஐரோப்பிய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி இடது
துணை அமைப்புக்களான கிரேக்கத்தின்
SYRIZA,
ஜேர்மனிய இடது கட்சி,
பிரான்ஸில் NPA
போன்றவற்றை விட
உறுதியான ஆதரவை வேறுஎவையும் கொடுக்கவில்லை. இவை பேசும் சீர்திருத்தங்கள் மற்றும்
“சமூக
ஐரோப்பா”
பற்றிய சாத்தியம் ஆகியவை,
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவம், அதன் புருஸ்ஸல்ஸில் உள்ள
சிந்தனைக்குழுக்கள், செல்வாக்கு நாடும் குழுக்களுடன் அவை கொண்டுள்ள தொப்புட்கொடி
உறவை மறைக்கும் நோக்கம் கொண்டவை ஆகும்.
தற்போது
கண்டத்தைச் சூழ்ந்துள்ள சமூகப்பேரழிவிற்கு ஒரே மாற்றீடு ஐரோப்பா முழுவதும் உள்ள
தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக
திரட்டி தொழிலாளர்கள் அரசாங்கங்களை அமைப்பதுதான். அத்தகைய அரசாங்கங்கள்தான்
உடனடியாக சிக்கன நடவடிக்களை, கடன் திருப்பிக் கொடுத்தல் திட்டங்கள் என்று வங்கிகள்
ஆணையிடும் நடவடிக்கைகளை நிராகரித்து, ஐரோப்பிய ஒன்றியம், அதன் அமைப்புக்கள்
அனைத்தில் இருந்தும் விலகி, பரந்த மக்களின் தேவைகளைத் பூர்த்திசெய்வதை நோக்கமாக
கொண்ட உண்மையான ஜனநாயக மாற்றீடு ஒன்றிற்கு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்பதை
கட்டமைக்க ஆரம்பிக்கவேண்டும்.
|