World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

Irish referendum endorses European Union's Lisbon Treaty

அயர்லாந்து வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் உடன்படிக்கைக்கு ஒப்புதல் தருகிறது

By Steve James 
5 October 2009

Back to screen version

ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் உடன்பாடு அயர்லாந்து வாக்காளர்களால் வெள்ளியன்று 67-33 சதவிகிதம் என்ற பெரும்பான்மையில் வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தத்தில் 58 சதவிகித வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்தனர்.

80 சதவிகிதத்திற்கும் மேலான, மிக அதிகமான "வேண்டும்" என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் Dublin மற்றும் அருகில் இருக்கும் Dun Laoghaire ல் வாக்குப் பதிவு செய்தனர்; ஆனால் கிராமப்புற Donegal ஒன்றுதான் "வேண்டாம்" வாக்களித்தது. இந்த முடிவு கடந்த ஆண்டின் வாக்குப்பதிவை மாற்றுகிறது. அப்பொழுது 53-46 சதவிகிதம் என்ற விதத்தில் உடன்பாடு நிராகரிக்கப்பட்டது; இது உடன்பாட்டின் இறுதி ஒப்புதலை அருகில் கொண்டுவருகிறது.

லிஸ்பன் உடன்பாட்டின் ஜனநாயகமற்ற தன்மை பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் 490 மில்லியன் மக்களில் அயர்லாந்தின் மூன்று மில்லியன் தகுதி உடைய வாக்காளர்கள் மட்டுமே உடன்பாட்டின்மீது வாக்களிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து நன்கு புலனாகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஏகாதிபத்திய வணிக, இராஜதந்திர மற்றும் இராணுவ முகாமாகவும் அமெரிக்கா, சீனா ஆகியவற்றிற்குப் உலக போட்டியாளனாகவும் வலுப்படுத்த லிஸ்பன் உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2005 இல் பிரான்சிலும் நெதர்லாந்திலும் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்ட ஐரோப்பிய அரசியமைப்பு யாப்பினை இவ்வுடன்பாடு பிரதியீடு செய்கின்றது. அயர்லாந்தின் அரசியமைப்பு யாப்பு மீதான சர்வஜன வாக்கெடுப்பு மட்டும் ஐரோப்பிய உடன்பாட்டை நடைமுறைப்படுத்த தேவையாக இருந்தது.

2008TM Brian Cowen உடைய Fianna Fail/Green நிர்வாகத்திற்கு எதிர்ப்பை காட்டும்வகையில் உடன்பாட்டை ஒரு பகுதி வாக்காளர் நிராகரித்தனர். இதைத்தவிர உடன்பாட்டின் விதிகளின்மீதும் விரோதப் போக்கு இருந்தது. ஜனநாயக வழக்கங்களை எள்ளி நகையாடும் விதத்தில் 2008ல் அவமானப்படுத்தப்பட்ட பின், ஐரோப்பிய ஒன்றியமும் அயர்லாந்து அரசாங்கமும் ஒரு சிறந்த முறையிலான பிரச்சாரத்துடன் வந்து தாங்கள் விரும்பிய முடிவுகளை கூடுதல் பணம் செலவழித்து அடைந்தன.

லிஸ்பன் உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றம் முக்கியமாக அரசியல் மிரட்டல், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு இல்லாவிட்டால் மோசமாகிக் கொண்டிருக்கும் உலக மந்த நிலையால் இன்னும் அதிக பேரழிவு விளைவுகளை அயர்லாந்து ஏற்க நேரிடும் என்றவிதத்தில் மக்கள் அழுத்தங்களை திரித்த விதத்தில் வந்தது. நிராகரிக்கப்பட்டால் அயர்லாந்து தேசியரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு, அழிவுக்குள்ளாகி மற்றும் ஐரோப்பாவின் மூலைக்குள் தள்ளப்பட்டுவிடும் என அது கூறியது.

கடந்த ஆண்டு அயர்லாந்தின் பொருளாதாரம் உலக நிதிய நெருக்கிடியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவற்றுள் ஒன்றாகும். இந்த ஆண்டு இறுதிக்குகள் வேலையின்மை 13 சதவிகிதத்தை அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியான வரவு-செலவுத்திட்ட சுற்றுக்கள் சமூக நலச் செலவினங்கள் மற்றும் பொதுத்துறை ஊதியங்களின் அதிக வெட்டுக்களை ஏற்படுத்தியதுடன், தொடர்ந்தும் ஏற்படுத்துகின்றன. தனியார்துறை ஊதியங்களும் குறைக்கப்பட்டுவிட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)இப்பொழுது இந்த ஆண்டு 7.45 ஆக குறைந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Fianna Fail, பசுமைவாதிகளைக் கொண்ட இரு அரசாங்கக் கட்சிகள் மற்றும் அவற்றின் விரோதக் கட்சிகளான Fine Gael, Labourஆகியவை வேலைகள், சமூக நலன்கள் பற்றி உள்ள பரந்த அச்சத்தை ஆக்கிரோஷமாகத் தூண்டிய விதத்தில் "வேண்டும்" வாக்கிற்கான பிரச்சாரம் நடைபெற்றது. அதிக நிதி செலவழிக்கப்பட்ட பிரச்சாரம், முக்கிய பெருநிறுவனங்களான Microsoft, Intel, Ryanair, பல முதலாளிகள், தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புக்களும் முழு அயர்லாந்தின் செய்தி ஊடகமும் முதலாளிகள் கூட்டமைப்பான Ibec ன் சொற்களில் ஒரு "வேண்டும்" வாக்குதான் "பொருளாதார மீட்பு பாதைக்கு அடிப்படையான நடவடிக்கை" என்று தொழிலாளர்களை அச்சுறுத்தின.

இதைத்தவிர "வேண்டாம்'' என்ற பிரச்சாரத்தின் பிரிவுகளை நடுநிலையாக்கும் விதத்தில் ஐரோப்பிய ஆணைக்குழுவால் அயர்லாந்து அரசாங்கத்திற்கு கருக்கலைப்பு, முதலீடு சார்பு உடைய குறைந்த வரிகள் மற்றும் நாட்டின் முற்றிலும் பெயரளவு இராணுவ நடுநிலை ஆகியவை பற்றி சுயமாக முடிவுடுக்கலாம் என விருப்புரிமைகள் கொடுக்கப்பட்டன. வேலையின்மையை எதிர்பார்க்கும் Dell நிறுவன தொழிலாளர்களுக்கு ஒரு தடவையில் நிதி உதவிகளும் கொடுக்கப்பட்டது.

"வேண்டும்" என்ற பிரச்சாரகர்களின் இணைந்த முயற்சிகள் ஒரு ஏமாற்றுத்தனத்தை ஏற்படுத்தி விட்டன. வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை குறைப்பதற்கு இந்த முடிவு ஏதும் செய்யாது. "வேண்டும்" வாக்கு கேட்ட அதே செல்வந்தர் அடுக்கு சமூக நலன்களை செலவுகளில் குறைப்புக்கள் ஏற்படுத்தி, 400 பில்லியன் யூரோக்களை அயர்லாந்தின் முதலீட்டாளர்கள் மற்றும் NAMA எனப்படும் National Asset Management Agency க்கு அழிக்கப்பட்ட அயர்லாந்து வங்கிளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்தது. இன்னும் கூடுதலான தாராளமயமாக்கும் நடவடிக்கைகளுக்கு கதவுகளை திறந்து வைக்கும் விதத்தில், உடன்பாடு அயர்லாந்திலும் கண்டம் முழுவதும் அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் கூடுதலான தாக்குதல்களை நடத்த வழிவகுக்கும்.

ஆனால், பொருளாதார மிரட்டுதல் மட்டுமே ஏன் ஒரு ஆழ்ந்த அரசாங்கம், ஒரு பெரிய பொருளாதார நெருக்கடிக்கு நடுவே பெரும்பாலான மக்களுடைய நலன்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையை கொண்டுவர முடிந்தது என்பதை விளக்க முடியவில்லை. இந்த மாற்றத்தின் இரண்டாம் முக்கிய காரணி "வேண்டாம்" பிரச்சாரத்தின் அழுகிய அரசியல் தன்மை ஆகும்.

சின் பெயின் (Sinn Fein) தலைமையிலான கருக்கலைப்பிற்கு எதிர்ப்பாளர்கள், குறைந்த வரிக்காக பிரச்சாரம் நடத்தியவர்கள், சமாதான வாதிகள், பல போலி இடது குழுக்கள் கொண்ட ஒரு தளர்ந்த கூட்டணி உடன்பாட்டின் விதிகளுக்கு எதிராக அடிபப்டையில் தேசியவாத செயற்பட்டியலை முன்வைத்தனர்.

"நாம் நம்முடைய நிரந்த ஆணையரை இழந்து விடுவோம், மற்றும் குழுவில் வாக்கு வலிமை பாதியாகப் போய்விடும், பெரிய நாடுகள் தங்கள் வலிமையை இருமடங்காக்கிக் கொள்ளும்" என்று குறைகூறி அயர்லாந்திற்கு "ஒரு நல்ல உடன்பாடு" வேண்டும் என்று சின் பெயின் அழைப்பு விடுத்தது.

தொழில்வழங்குனரான Declan Ganley யின் Libertas ஒரு வலதுசாரி, தடையற்ற சந்தை செல்வாக்குக் குழு, "ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக சக்தி சோசலிசத்திற்கு ஒப்பானது" என்று கண்டித்தார்.

கருக்கலைப்பு எதிர்ப்பு  Coir, கருக்கலைப்புக்கள் சட்டவிரோதமாகத்தான் இருக்கும் என்பதை உறுதிப்படுத்த அயர்லாந்தின் "தேசிய இறைமை"யை முன்வைத்தது.

அயர்லாந்தின் கம்யூனிஸ்ட் கட்சி "வேண்டாம்" வாக்கு, "உண்மையான நாட்டுப்பற்று உடையவர்களின்" செயல் என்று வெற்றுத்தனமாக அறிவித்தது.

சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), சோசலிஸ்ட் கட்சி (SP)போன்ற குட்டி முதலாளித்துவக் குழுக்கள் பல வணிக சார்புடைய, கட்டுப்பாடுகள் தளர்த்தல்கள் போன்ற லிஸ்பன் உடன்படிக்கையின் பல உள்ளடங்கங்களை எதிர்த்தன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முதலாளித்துவ அமைப்பு என்பதற்கு அடிப்படை எதிர்ப்பை வெளிப்படுத்தாததுடன், மற்றும் தேசியவாத வலதின் அலங்காரச் சொற்களை எதிரொலிப்பதை தவிர வேறு அரசியல் மாற்றீடு எதுவும் தரவில்லை. உதாரணமாக, SWP யால் நடத்தப்பட்ட "வேண்டாம் வாக்கு" வலைத் தளம் "இந்த வாக்கடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பாக இருப்பது பற்றி இல்லை. நாம் வேண்டாம் என்று வாக்களித்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அகற்ற முடியாது" என்று வலியுறுத்தியது. இதன் பின் "ஒரு ஜனநாயகமற்ற ஐரோப்பிய அதியுயர் நாட்டை கட்டமைப்பதை நிறுத்துக" என்ற முடிவுரையை கூறியது.

இத்தகைய சந்தர்ப்பவாத பிதற்றல்கள் அயர்லாந்தின் பெருநிறுவன, அரசியல் உயரடுக்கை நிராகரிப்பதற்கான அடிப்படை உள்ளது என்று பெரும்பாலான தொழிலாளர்களை நம்பவைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை.

அயர்லாந்து முடிவு அதன் முக்கிய அரசியல்வாதிகளால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு ஒப்புதல் என்று பாராட்டப்பட்டது. ஐரோப்பிய குழுவின் தலைவர் ஜோஸ் மானுவல் பாரசோ இந்த வாக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அயர்லாந்து வாக்காளர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதற்கு ஒரு அடையாளம் ஆகும்" என்று கூறினார். அதிபர் அங்கேலா மேர்க்கெல், "ஜேர்மன் ஐக்கியமான நாளில், ஜேர்மனி மிக மகிழ்ச்சியாக உள்ளது" என்ற கருத்தைத் தெரிவித்தார். ஸ்வீடனின் வெளியுறவு மந்திரி கார்ல் பில்ட், "நமக்கு லிஸ்பன் உடன்பாடு கொடுக்கக்கூடிய சிறந்த ஐரோப்பிய ஒற்றுமைக்கான முயற்சிகளில் ஈடுபடலாம்" என்றார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன், "இங்கிலாந்திற்கும் ஐரோப்பாவிற்கும் உடன்பாடு சிறந்தது" என்றார்.

உடன்பாட்டிற்கான இறுதி இசைவு இப்பொழுது போலந்து மற்றும் செக் குடியரசின் அரசியல் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் இலஞ்சம் கொடுத்தல் ஆகியவற்றைப் பொறுத்து உள்ளது. போலந்தின் ஜனாதிபதி லேக் ஹசின்ஸ்கி அடுத்த சில நாட்களில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செக் ஜனாதிபதி வஸ்லாவ் கிளவுஸ் செக் அரசியலமைப்பு நீதிமன்றம் இதுபற்றி தீர்ப்புக் கூறும் வரை காத்திருக்கப் போவதில்லை என்றார்; ஆனால் செக் பிரதம மந்திரி ஜான் பிஷ்ஷர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்புதல் 2009 முடிவிற்குள் நடக்கும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார். இந்த முடிவுகள் இரண்டில் எதுவும் மக்கள் விருப்பத்தை கேட்க வேண்டியதில்லை.

உடன்பாட்டிற்கு இறுதி ஒப்புதல் கிடைத்த பின்னர், ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஜனவரி மாதம் பதவி ஏற்கும். ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் ஒரு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் மற்றும் வெளியுறவு மந்திரி பற்றி முடிவெடுப்பர். ஈராக் மீது 2003ல் படையெடுக்கப்பட்டபோது பதவியில் இருந்த பிரிட்டிஷ் முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயர் ஒரு வேட்பாளராக வரக்கூடும் என்று தெரிகிறது. அத்தோடு ஸ்பெயின் பிரதம மந்திரி பிலிப் கொன்ஸாலஸ் மற்றும் லக்சம்பேர்க்கின் ஜீன் கிளவுட ஜங்கர் ஆகியோர் மற்ற வேட்பாளர்களாக இருக்கலாம்.

பல ஐரோப்பிய நீதித்துறை, கல்வி, பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த உடன்பாட்டை இனி பெற வேண்டிய தேவையில்லை. இது முடிவெடுக்கும் வழிவகையை "சீராக்கும்", முக்கிய ஐரோப்பிய சக்திகளின் தொடர்ந்த மேலாதிக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு முழு உடன்பாடு தேவைப்படும்.

அப்படி இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உட்பிளவுகள் ஏதும் தீர்க்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடியின் அடுத்த திருப்பம் தவிர்க்க முடியாமல் தேசிய அழுத்தங்களை ஒரு புதிய தீவிர உச்சக்கட்டத்திற்கு கொண்டுவரும்.

அயர்லாந்து வாக்கு ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய நல்லிணக்க சகாப்தத்தைக் கொண்டுவந்துள்ளது என்று நினைக்கப்பட்ட ஒரு நாளைக்கு முன்பு, செய்தி ஊடகத் தகவல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மையமாக ஒரு புதிய பிரான்ஸ்-ஜேர்மனிய அச்சு தோற்றுவிக்கப்படும் என்று கூறியுள்ளன. டைம்ஸின் கருத்துப்படி, இரு அரசாங்கங்களுக்கும் இடையே ஒரு புதிய உடன்டிக்கை தயார் செய்யப்படுகிறது; அது பாதுகாப்பு, தொழில்துறை கொள்கை மற்றும் குடியேற்றங்கள் பற்றியவையாக இருக்கும்.

இந்த நடவடிக்கை பிரிட்டனைத் தனிமைப்படுத்தும் வெளிப்படையான முயற்சியும், ஐரோப்பிய ஒன்றிய தலைவராக பிளேயர் வேட்பாளராவதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உடனடி நோக்கம் கொண்டது. முன்னாள் ஜேர்மனிய வெளியுறவு மந்திரியான ஜொஸ்கா பிஷ்ஷர் ஒரு புதுப்பிக்கப்பட்ட பிரான்ஸ்-ஜேர்மனிய அச்சின் தேவைக்கு ஒப்புதல் கொடுக்கும் விதத்தில், "ஐரோப்பாவில் மத்திய புவியீர்ப்பு சக்தி பாரிஸ் மற்றும் பேர்லினாகத்தான் இருக்க முடியும். பிரிட்டன் ஓரத்தில் ஒதுங்கியிருக்க முடிவெடுத்துள்ளது. இத்தாலி....இத்தாலிதான். போலந்து இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும். ஸ்பெயின் ஆழ்ந்த நெருக்கடியில் புதைந்துள்ளது." என்றார்.

தன்னுடைய பங்கிற்கு அயர்லாந்து அரசாங்கம் வாக்கெடுப்பை பயன்படுத்தி புதிய 2010 வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கிறது; அது சமூகநலச் செலவுகளை இன்னும் குறைக்கும். அக்டோபர் 10ம் தேதி பல பில்லியன் NAMA பிணை எடுப்பின்போது வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதை Taoiseach Brian Cown பசுமைவாதிகளுடைய ஆதரவுடன் இயற்றிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் தொழிலாள வர்க்கம் அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளும் லிஸ்பனுக்கு ஆதரவு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கொண்டிருக்கும் முதலாளித்துவ, தேசியவாத சார்புடைய செற்பட்டியல்களுக்கு ஒரு தெளிவான சோசலிச மாற்றீட்டின் தேவையை எதிர்கொள்கிறது. கண்டம் ஒரு முற்போக்கான அவசியமான ஐக்கியத்தை கொண்டுவருதல், அதன் பரந்த பொருளாதார இருப்புக்களை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய திரட்டுவது என்பதற்கு தொழிலாள வர்க்கம் அதன் சொந்தக் கட்சியை அமைத்து ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசை தோற்றுவிப்பது என்பது முக்கியமாகும்.