WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France pledges to back action to crush Mali army revolt
மாலி இராணுவ எழுச்சியை
நசுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரான்சின் உறுதிமொழி
By
Antoine Lerougetel
5 April 2012
மார்ச் 22
அன்று ஜனாதிபதி
Amadou Toumani Touré
(ATT)
ஐக் கவிழ்த்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பினால் சீர்குலைந்த மாலியைப்
பற்றிக் கவலை கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் எழுச்சியை நசுக்குவதற்குத் தான் இராணுவ
நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் என்று அடையாளம் காட்டியுள்ளது.
மாலியின்
எழுச்சி,
லிபியாவிலிருந்து
மாலிக்குள் நுழையும் நன்கு ஆயுதம்தரித்த டௌரெக்
(Tuareg)
போராளிகள் மீது எதிர்த்து
நிற்க வேண்டும் என்பதில் மகிழ்ச்சியற்று இருந்த இளம் அதிகாரிகள், சிப்பாய்களிடையே
வளர்ச்சியுற்றது; டௌரெக் ஆனது முன்னாள் கேர்னல் முயம்மர் கடாபி ஆட்சிக்கு ஆதரவு
கொடுத்துப் போராடியிருந்தனர்.
BBC
கருத்துப்படி இராணுவ
ஆட்சிக் கவுழ்ப்பு தெற்கில் சற்று ஆதரவைக் கொண்டுள்ளது; அங்கு
“ஆட்சிக்
கவுழ்ப்புக் குறித்து அதிகக் கண்டனம் இருப்பதாகத் தெரியவில்லை.”
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஆணையம் மாலிக்கான வளர்ச்சித்
திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பதாக அறிவித்துள்ள்து.
பெல்ஜிய
பிராங்கோபோன் வானொலி-தொலைக்காட்சியானது (RTBF)
மாலியின் தலைநகரான
பமகோவில் ஆர்ப்பாட்டம் ஒன்றைக் குறித்துத் தகவல் கொடுத்துள்ளது; இது இராணுவ ஆட்சிக்
கவிழ்ப்பிற்கு ஆதரவைக் கொடுத்த ஆர்ப்பாட்டம் ஆகும்.
“ATT
ஒழிக”,
“பிரான்ஸ்
வீழ்க”,
“சரவதேச
சமூகம் வீழ்க”
என்ற அட்டைகளும் பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் நிறைந்திருந்தன.
மேற்கு
ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகத்திலுள்ள (ECOWAS)
நாடுகளின்
தலைவர்களுடைய உச்சிமாநாடு, ஏப்ரல் 1 அன்று நடைபெற்றது, ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி அலசானே
க்வட்டரா தலைமையில் மாலி பற்றிய நிகழ்வுகளை விவாதித்தது. கடந்த ஆண்டு ஜனாதிபதி
லோரென்ட் கபக்போவை
(Laurent Gbagbo)
வீழ்த்திய குறுகியகால
உள்நாட்டுப் போரின்போது பிரெஞ்சு இராணுவத்தின் உதவியுடன் உத்தாரா
(Ouattara)
அதிகாரத்தைக்
கைப்பற்றினார். எழுச்சிபெற்றுள்ள வீரர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்பிவிட
வேண்டும் என்று கோரிய உச்சிமாநாடு, அவ்வாறு அவர்கள் செய்யாவிடின்,
“முழு
முற்றுகை”
செயல்படுத்தப்படும், குறுக்கிடூ செய்வதற்காக 2,000 பேர் கொண்ட இராணுவத் தாக்குதல்
படை நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ECOWAS
தலைமையில் ஒரு “தேசிய
மாநாட்டிற்கு”
அழைப்புவிடப்படும்
என்னும் உறுதிமொழியை சானோகோ
(Sanogo)
கொடுத்துள்ளார்: இது மீண்டும் அரசியலமைப்பு முறையில் ஆட்சியை நிறுவும்.
உத்தாரா
திறந்து வைத்த உச்சிமாநாட்டில் பங்கு பெற்றவர்களில் பத்து நாடுகள் சிலவற்றின்
தலைவர்களும், ஐ.நா.பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளும் இருந்தனர்—குறிப்பாக
பெனின் நாட்டின் தலைவர் மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரான யாயி போனி, மேற்கு
ஆபிரிக்காவில் ஐ.நா.பிரதிநிதியான சையத் டிஜிநிட் மற்றும் பிரான்ஸின் வெளியுறவு
மந்திரி அலன் யூப்பே ஆகியோர்.
யூப்பே
அறிவித்தார்:
“நிலைமை
விரைவாகச் சரிந்து கொண்டிருக்கிறது.... தளவாடங்கள் அளித்தல், பயிற்சி கொடுத்தல்
என்று நாம் உதவ முடியும், ஆனால் மாலி மண்ணில் பிரெஞ்சு வீரர்களை அனுப்புவது
என்பதற்கு இடமில்லை.”
ECOWAS
“அனைத்து
வழிவகைகளையும் கையாண்டு எழுச்சியை அடக்கும், மாலிக்குத் தேவையானவற்றைச் செய்யும்,
அதன் நிலப்பகுதி இறைமையை மீட்கும். இது துணைப் பிராந்தியத்தில் ஒரு கடமையாகும்”
என்று உத்தாரா சேர்த்துக் கொண்டார்.
RTBFஎனப்படும்
பெல்ஜிய வானொலி/தொலைக்காட்சி அமைப்பு நேற்று கொடுத்த தகவல்:
“பிரான்ஸ்
ஐ.நா.பாதுகாப்பு சபையிடம் இது பற்றி சமர்ப்பித்துள்ளது....பிரிவினைவாத டௌரெக்
எழுச்சிக்குச் சலுகைகள் கொடுத்துள்ள நிலையில் அது நாட்டைப பிரிவினையில் இருந்து
எப்படித் தடுக்க முடியும், குறுக்கீடு செய்ய முடியும், இஸ்லாமியவாதிகளுடன் போரிட
முடியும், பமகோவில் உள்ள இராணுவக்குழுவைக் கீழ்ப்படுத்த முடியும்.”
அமெரிக்க
வெளியுறவுச் செயலகத்தின் செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நூலந்த் கூறினார்:
“மாலிக்கு
வடக்கே உள்ள அனைத்து ஆயுத எழுச்சியாளர்களும் மாலியின் நிலப்பகுதிக் கட்டுப்பாட்டைச்
சமரசத்திற்கு உட்படுத்தும் இராணுவச் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா
அவசரமாக அழைப்பு விடுகிறது.”
பிரான்ஸும்
அதன் மேற்கு ஆபிரிக்கப் பதிலிகளும் அப்பிராந்தியத்தில் தங்கள் இராணுவ நிலைப்பாட்டை
வலுப்படுத்தும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்துவது போல் தோன்றுகிறது. ஜூலை 2010ல்
பிரான்ஸ் ஒரு பிரெஞ்சு உதவிப் பணியாளர் இஸ்லாமிய மெகரெப் (AQIM)
பில் அல்குவேடாவால்
கொல்லப்பட்டது பற்றிய அறிக்கைகளைக் காரணமாகக் கொண்டு தன் முந்தைய காலனித்துவப்
பகுதிகளில், மேற்கு ஆபிரிக்க மூலோபாய சகெல் பிராந்தியத்தில் தன் இராணுவக்
குறுக்கீட்டை விரிவாக்கம் செய்தது.
(See: “France
steps up military intervention in Sahel”)
மார்ச் 22ம்
திகதி காப்டன் அமடௌ ஹயா சானோகோ தலைமையிலான ஆட்சி மாற்றம் டௌரெக் இராணுவத்
தாக்குதலுக்கு வழி செய்துள்ளது என்பது குறித்து பாரிஸ் குறிப்பாகக் கவலை
கொண்டுள்ளது; இத்தாக்குதலில் முழு மாலி வடக்குப்புறமும் எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளன. டௌரெக் பிரிவினைவாதச் சக்திகள், அல்குவேடாவுடன் பிணைந்துள்ள
போராளிகளுடன் மாலியின் வடக்குப் பாலைவனப் பகுதிகளில் பல சிறுநகரங்கள்மீது
கட்டுப்பாட்டைக் கொண்டு, இறுதியில் திங்கன்று 48 மணி நேர இராணுவ நடவடிக்கைக்குப்
பின் டிம்பக்டூவையும் கைப்பற்றியது. மாலியின் இராணுவத்திடம் இருந்து கிட்டத்தட்ட
எதிர்ப்பு எதையும் பிரான்ஸ் எதிர்கொள்ளவில்லை.
முக்கிய
டௌரெக் தேசியப் படையான
Azwas National
Liberation Movemenjt, MNLA,
AQIM
உடன் பிணைந்துள்ளதாகக் கூறப்படுவது, வடக்குச் சிறுநகரங்கள் மீது வெற்றி கொள்ளும்
எனக் கருதப்படுகிறது. ஆனால், இஸ்லிமாயவாதிகள் இப்பொழுது
MNLA
ஐ சில சிறுநகரங்களில் இருந்து வெளியேற்ற விரும்புகின்றனர், தன்னுடைய
கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பகுதிகளில் ஷரியச் சட்டங்களைச் சுமத்த
விரும்புகின்றனர்.
RTBF,
“பல
ஆதாரங்களின்படி அவர்கள் டிம்பக்டூவைக்
(Timbuktu)
கைப்பற்றிவிட்டனர்...
MNLA
மதச்சார்பற்றது,
சுதந்திரமான வடக்கு மாலியை விரும்புகிறது, ஒரு இஸ்லாமிய ஆட்சியை விரும்பவில்லை”
என்று தகவல் கொடுத்துள்ளது.
ஒரு
முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ பகுதியான மாலி, 1960ல் சுதந்திரம் பெற்றது; ஆனால்
பிரான்ஸ் சகேல் மீது தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்க முயல்கிறது. 1990களின்
தொடக்கத்தில் டௌரெக் பிரிவினைவாத எழுச்சி ஆரம்பமானது. டௌரெக்குகள் நாடோடி மக்கள்
ஆவர்; கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் உள்ளனர்; இவர்கள் சகேல் பிராந்தியத்தில்
வரலாற்றளவில் வசித்து வருபவர்கள், அல்ஜீரியா,பர்கினா பாசோ லிபியா, மாலி, மௌரிடானியா
மற்றும் நைஜரில் படர்ந்துள்ளவர்கள்.
செல்வ
அடிப்படையில் மாலி உலகில் 175து இடத்தில் உள்ளது; ஆனால் டௌரெக்குகள் வசிக்கும்
வடக்குப் பிராந்தியங்கள்,
மாலியின் தெற்கே அனுபவிக்கப்படும் குறைந்த வளர்ச்சிக்கு ஏதும்
உதவவில்லை. தெற்கில்தான் தலைநகர் பமாகோ உள்ளது.
இப்பிராந்தியத்தின் யுரேனியம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு மிகவும் முக்கியமானது
ஆகும். பிரான்ஸில் அணுசக்தித் தொழில்துறை—நாட்டிற்குத்
தேவையான மின்விசையில் 78% அளிப்பதற்கு உற்பத்தித் திறன் கொண்டுள்ளது,
குறைந்தப்படசம் 3 பில்லியன் யூரோக்களாவது ஆண்டு இலாபத்தைப் பெறுகிறது. இது நைஜரை
ஆண்டு ஒன்றிற்கு அது நுகரும் 12,400 டன்கள் யுரேனிய ஆக்சைடில் 25%க்கு
நம்பியுள்ளது.
பிரான்சின்
அரசுக்குச் சொந்தமான நிறுவனமான
Areva
இந்த
யுரேனிய இருப்புக்களை 40 ஆண்டுகளாகச் சுரண்டி வருகிறது. இது 1.2 பில்லியன்
யூரோக்களை ஐமௌரரென் இருப்புக்களில் முதலீடு செய்துள்ளது; அது 35 ஆண்டு காலத்திற்கு
ஆண்டிற்கு 5,000 மெட்ரிக் டன்களை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. |