சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

As unemployment soars, child labour returns to Europe

வேலையின்மை அதிகரிக்கையில், மீண்டும் சிறுவர் உழைப்பு நிலைக்கு ஐரோப்பா திரும்புகிறது

By Stefan Steinberg
4 April 2012

use this version to print | Send feedback

உத்தியோகபூர்வ ஐரோப்பிய ஒன்றியப் புள்ளிவிபர நிறுவனமான Eurostat வெளியிட்டுள்ள சமீபத்திய விபரங்கள் யூரோப் பகுதியில் வேலையின்மை தொடர்ந்து பத்தாவது மாதமாக பெப்ருவரியில் உயர்ந்துள்ளது என்றும், 17 மில்லியனை எட்டிவிட்டது என்றும், இது தொழிலாளர் தொகுப்பில் 10.8 சதவிகிதம் உள்ளதாக புலப்படுத்துகின்றன. உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் என்பது யூரோ 15 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிக உயர்ந்தது ஆகும்; இது ஓராண்டிற்கு முன் இருந்ததைவிடக் கூடுதலாக 1.5 மில்லியன் மக்கள் வேலையின்றி உள்ளனர் என்பதைப் பிரதிபலிக்கிறது.

மொத்தத்தில் 17.1 மில்லியன் பேர்கள் வேலையின்மையில் உள்ளனர் என்னும் மதிப்பீடு தனிப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே கணிசமான வேறுபாடுகளை மறைக்கிறது. மிக அதிக வேலையின்மை ஸ்பெயினில் 23.6% என்று பதிவாகியுள்ளது; அங்கு 25 வயதிற்கு உட்பட்டோரில் பாதிக்கும் மேலானவர்கள் வேலையின்மையில் உள்ளனர். பட்டியலின் கீழ் பல வட ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா 4% க்கு சற்றே அதிகம், ஜேர்மனி, உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 5.7% என்ற நிலையில் உள்ளன.

யூரோஸ்டாட்டின் புள்ளிவிபரங்கள் ஐரோப்பாவிலுள்ள உண்மையான வேலையின்மை பற்றிப் பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என நம்புவதற்குத் தக்க காரணங்கள் உள்ளன. ஜேர்மனியில் வேலையின்மை விகிதம் 5.7% என்று யூரோஸ்டாட் கொடுத்திருக்கையில், ஜேர்மனிய தொழில்துறை நிறுவனம் நாட்டில் வேலையின்மை 7.2% என்று மதிப்பிட்டுள்ளது. உத்தியோகபூர்வ ஜேர்மனிய எண்ணிக்கைக்கும் ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீட்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த வேலையின்மை எண்ணிக்கை 21 மில்லியனுக்கும் மேலாக இருக்கும்.

தேசிய அல்லது ஐரோப்பிய வேலையின்மை புள்ளிவிபரமோ, விரைவாக ஐரோப்பாவில் பெருகிவரும் பிரச்சினையான குறைந்த வேலையில் ஈடுபட்டுள்ளோரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதாவது, குறைந்த ஊதியம் கொண்ட, பகுதி நேர வேலைபார்க்கும், முறையான வேலை, போதுமான ஊதியங்களை நாடும் தொழிலாளர்கள் பற்றியதாகும். இந்தக் குறைந்த வேலைப் பிரச்சினை என்பது குறிப்பாக ஜேர்மனியில் அதிகம் உள்ளது; அங்கு 7.5 மில்லியன் மக்கள் தற்பொழுது மாதம் ஒன்றிற்கு நிரந்தரமாக 400 யூரோக்கள் ஊதியமுடைய வேலைகளில்தான் இருக்கின்றனர்.

இந்த மிகப் பெரிய குறைவூதிய வேலைச்சந்தையானது வேலையில்லாதவர்கள் மற்றும் மில்லியன் கணக்கான வேலையில் இருக்கும் ஜேர்மனியத் தொழிலாளர்களின் வறுமையை வியத்தகு அளவில் உயர்த்த வழிவகுத்துள்ளது. இதுதான் ஜேர்மனிய பொருளாதார மாதிரி என்று கூறப்படுவதின் இதயத்தானத்தில் உள்ளது. இதுதான் அரசியல்வாதிகளாலும் நிதிய நிறுவனங்களாலும் ஐரோப்பா முழுவதற்கும் முன்மாதிரி என்று பெரிதாகப் பேசப்படுகிறது.

வேலையின்மையில் சமீபத்திய அதிகரிப்பு கண்டம் முழுவதும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் சுமத்தப்பட்டும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவுதான். இவைகள் ஐரோப்பாவில் பரந்த பகுதிகளை மந்தநிலையில் மூழ்கடித்துள்ளன. அயர்லாந்து, கிரேக்கம், பெல்ஜியம், போர்த்துக்கல், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகியவைகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக மந்த நிலையில் உள்ளன. வளர்ச்சி என்பது மிகவும் குறைவாக பிரித்தானியாவில் உள்ளது, பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் சரிந்து வருகிறது.

மந்தநிலையை நோக்கிய போக்கு சமீபத்திய பொருட்களை வாங்கும் மேலாளர்களின் குறியீடு மூலம் (Puchasing managers’ index - PMI) உறுதியாகிறது; இது யூரோப் பகுதியில் பொருளாதார நடவடிக்கை குறித்த முக்கியமான நடவடிக்கை ஆகும். இது பெப்ருவரி மாதம் இருந்த 49.9 என்பதிலிருந்து மார்ச் மாதம் 47.7 எனக் குறைந்தது. 50 க்குக் கீழேயுள்ள எந்த எண்ணிக்கையும் மந்தநிலையின் குறிப்பிற்கு அடையாளம் ஆகும். இது கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 50 க்குக் கீழேதான் உள்ளது.

PMI குறியீடுகளை வெளியிடும் மார்க்கிட் (Markit) கருத்துப்படி, யூரோப் பகுதியில் உற்பத்தித்துறை வேலைவாய்ப்பு மார்ச் மாதம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வேகமாகச் சரிந்துள்ளது. பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு அசாதாரணமான நலிவுற்ற எண்ணிக்கைதான் உள்ளது. ஜேர்மனியிலும் பொருளாதாரச் செயல்பாடு குறைந்து வருகிறது. ஜேர்மனிய பொருட்களுக்கான தேவை ஐரோப்பாவில் மட்டும் இன்றி, ஆசியாவிலும் குறைந்துள்ளது; அங்கு சீனா தன்னுடைய சொந்தப் பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வருகிறது.

விலை உயர்தல் என்னும் பின்னணியில், வரவிருக்கும் மாதங்களில் இன்னும் கூடுதலான பொருளாதாரச் சரிவை மார்க்கிட் எதிர்பார்க்கிறது. ஐரோப்பிய உற்பத்தித்துறைச் சுருக்கம் இன்னும் வேலை இழப்புக்கள் என்னும் வடிவமைப்பில் எதிரொலிக்கும்.

சமீபத்திய புள்ளிவிபரங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ING Banking Group ன் பொருளாதார வல்லுனர் மார்ட்டின் வான் விலியட் PMI  அதிகரிப்பு பிராந்தியத்தின் வளர்ச்சி வாய்ப்புக்கள் குறித்து இருண்ட மேகத்தைத்தான் குறுக்கே கொண்டுள்ளதுஎன்று அறிவித்தார்: தெற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி மிகவும் கடுமையான சிக்கனத் திட்டங்கள் சுமத்தியுள்ள குறுகிய காலப் பொருளாதார வேதனையை பிரதிபலிக்கின்றன என்றும் அறிவித்தார்.

குறுகிய கால பொருளாதார வேதனையை விளைவிக்கிறது என்பதைவிட, வான் விலியன் குறிப்பிட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மில்லியன் கணக்கான ஐரோப்பியக் குடும்பங்களை வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு பெரும் வேதனையைத்தான் கொடுக்கும்.

 

எந்த அளவிற்கு தற்போதைய சிக்கனக் கொள்கைகள் ஐரோப்பாவில் வாழ்க்கைத் தரங்களை பேரழிவிற்கு உட்படுத்திவிட்டது என்பது கடந்த வாரம் பிரெஞ்சுச் செய்தித்தாள் Le Monde ல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறதுஇது கண்டத்தில் மீண்டும் சிறுவர் உழைப்பு வந்துவிட்டது பற்றி எழுதியுள்ளது.

சிறுவர் உழைப்பு நேபிள்ஸில் மீண்டும் வெளிப்படுகிறது என்ற தலைப்பில் இக்கட்டுரை எப்படி ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பள்ளிகளை விட்டு அகன்று, தங்கள் குடும்பங்களுக்கு உதவுவதற்கு வேலைதேடும் நிலையில் உள்ளனர் என்பதை விவரிக்கிறது. இக்கட்டுரை  ஒரு 2011 உள்ளூராட்சி அறிக்கையை மேற்கோளிடுகிறது; அதில் 54,000 சிறுவர்கள் காம்பானியா பகுதியில் 2005ல் இருந்து 2009க்குள்ளாகக் கல்வி முறையை விட்டு நீங்கினர் என்று கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இச்சிறார்களில் 38 சதவிகிதம் சிறுவர்கள் 13 க்கும் குறைந்த வயதினர் ஆவர்.

எப்படிச் சிறுவர் உழைப்பு தன்மை அப்பகுதியில் வாழ்வின் ஓர் உண்மையாகிவிட்டது, சிறு குழந்தைகள் பரந்த வேலைகளில் ஈடுபட நேர்ந்துள்ளது என்பது பற்றி கட்டுரை பதிவு செய்துள்ளது. நேபிள்ஸின் துணை மேயர், ஆம், இத்தாலியில் நாம் மிக வறிய பகுதியில் உள்ளோம். ஆனாலும் இதைப்போன்ற நிலைமையை இரண்டாம் உலகப் போருக்குப் பின் கண்டதில்லை.... 10 வயதில் இக்குழந்தைகள் ஏற்கனவே நாள் ஒன்றிற்கு 12 மணி நேரம் உழைக்கின்றன; இது அவர்கள் வளர்ச்சி பெறும் உரிமையைத் தெளிவாக மீறுவதுதான் என்று கூறியதாக கட்டுரை மேற்கோளிட்டுள்ளது.

Le Monde யில் வந்துள்ள கட்டுரை இப்பகுதியில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பெருந்திகைப்பான நிலைமை சிக்கன நடவடிக்கைகளின் நேரடி விளைவு, தொடர்ந்த இத்தாலிய அரசாங்கங்கள் அறிமுகப்படுத்திய நிதியச் சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவுதான் என்று சுட்டிக் காட்டியுள்ளது. இவைகள் கூட்டாட்சியின் பொதுநலன்கள் வேலையற்றோருக்கும் வறியவருக்கும் கிடைப்பதைக் குறைத்துவிட்டன அல்லது முற்றிலும் அகற்றிவிட்டன.

இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் முக்கிய ஆதரவு உள்ளூர் அமைப்புக்களால் அளிக்கப்படுகின்றன; ஆனால் இவைகள் பெருகிய முறையில் நிதிப் பற்றாக்குறையில் உள்ளன. இத்தகைய திட்டங்களில் காம்பானியாப் பகுதியில் ஈடுபட்டுள்ள 20,000 தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியங்களைப் பெறவில்லை என்றும் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

சிறுவர் உழைப்பு தொகுப்பு மீண்டும் வெளிப்பட்டுள்ளது ஒரு இத்தாலியப் பிரச்சினை மட்டும் இல்லை. இத்தகைய செயல்களின் விளைவைத் தெளிவாகச் சித்தரித்த புதின ஆசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் பிறந்து 200 ஆண்டுகளுக்குப் பின்னரும், சிறுவர் உழைப்பு என்பது இப்பொழுது ஐரோப்பா முழுவதும் முகங்கொடுக்கும் பிரச்சினை ஆகும். இது ஐரோப்பாவின் ஒருமித்த அரசியல் நிலை குறித்த பேரழிவு தரும் குற்றத்தன்மை ஆகும்; இதில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் சமூக ஜனநாயகக் கட்சிகளும்  தொழிற்சங்கங்களும் அடங்குகின்றன.