WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Spanish general strike and the political tasks before the working class
ஸ்பெயினின் பொது வேலை நிறுத்தமும் தொழிலாள வர்க்கத்தின் முன்னுள்ள அரசியல் பணிகளும்
Julie Hyland
3 April 2012
ஸ்பெயினில் கடந்த வியாழன் அன்று மக்கள் கட்சி
(Popular Party)
அரசாங்கம் மற்றும்
ஐரோப்பிய ஒன்றியம்
ஆகியவற்றின்
சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான
பொது
வேலைநிறுத்தம்,
தொழிலாள வர்க்கத்தின் சக்தியையும் போராட அது தயாராக இருப்பதையும் மீண்டுமொரு
முறை
நிரூபித்துள்ளது.
சீற்றமும், போர்க்குணமும்
பாய்ந்து வந்த நிலையில், மில்லியன் கணக்கானவர்கள் வேலையை நிறுத்தி
Popular Party இன்
தொழிலாளர் துறைச் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்புக்களில் சேர்ந்தனர்; அச்சட்டங்கள்
கூட்டுப்
பேரத்தை அகற்றியுள்ளதுடன், முதலாளிகள் ஊதியங்களை குறைக்கவும், விருப்பப்படி
தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும் அனுமதிக்கின்றன.
பொது வேலைநிறுத்தம் அதன் அளவு, ஆழம் மற்றும் அமைப்பு ஆகியவற்றில்
மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. ஆலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும்
இரயில் போக்குவரத்து ஆகியவை முடங்கிப் போயின. பொதுப் பணிகள் மிகவும் குறைந்த
அளவில்தான் நடைபெற்றது; கடைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன.
தொழிலாளர்கள்
மற்றும் மாணவர்கள் நாடுமுழுவதும் சிறுநகரங்கள் மற்றும் நகரங்களில் நடத்திய
ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான
மக்கள் சேர்ந்து கொண்டனர்—அவற்றுள்
வேலையில்லாதவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் அடங்குவர்; இந்த வாய்ப்பைப்
பயன்படுத்தி அவர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான தங்கள் குரலை
எழுப்பினர்.
இத்தகைய போர்க்குணத்தன்மை
வெளிப்பட்டுள்ளது ஸ்பெயினிலும், ஐரோப்பா, சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்திற்குப்
பெரும் திகைப்பைக் கொடுத்துள்ளது.
நடந்த
எதிர்ப்புக்களின்
அளவு குறித்து தொழிற்சங்கத் தலைவர்களைவிட எவரும் அதிகம் கவலைப்பட்டிருக்க
மாட்டார்கள். இரு முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களான,
PSOE
எனப்படும் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்த பொதுத் தொழிலாளர்கள் சங்கம் (Union
General de Trabajadores UGT),
PCE
எனப்படும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான
CC.OO
எனப்படும் தொழிலாளர்கள் பிரிவுகள் (Comisiones
Obreras)
நவம்பர் மாதம் பிரதம மந்திரி மரியானோ ராஜோய் பதவி
வகிக்க
தொடங்கியதில்
இருந்து அரசாங்கத்திற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுப்பதையும் தவிர்த்துள்ளன.
பல மாதங்களாக தொற்சங்கங்கள்
PP
உடனும் முதலாளிகளுடனும் முத்தரப்புப் பேச்சுக்களில் ஈடுபட்டு, சலுகைகளைக் கோரி
வருகின்றன. எவையும் கிடைக்கப்பெறாது
என்பது தெளிவானவுடன்தான் தொழிற்சங்கங்கள் தயக்கத்துடன் நடவடிக்கைக்கு ஒப்புக்
கொண்டன.
அப்படியும்கூட, வேலைநிறுத்தம் ஒரு பெயரளவு அடையாளச் செயல் என்றே
விரும்பப்பட்டது.
UGT
உடைய பொதுச் செயலர்
Candido Mendez,
“அரசாங்கத்துடன்
சமரசத்தைக் காண வேண்டும், அதையொட்டி நாம் அதே திசையில் செல்ல முடியும்”
என்று அறிவித்தார்.
வேலைநிறுத்தத்திற்கு வெகுஜன முகங்கொடுப்பு வரவிருக்கும் பெரிய,
இன்னும் வெடிப்புத் தன்மையுடைய போராட்டங்களுக்கு கட்டியம் கூறுவது போல் இருந்தது.
ஆனால்
இவை
ஒரு புதிய தலைமையும்
தொழிலாள வர்க்கத்திற்கான போராட்டத்திற்கு புதிய முன்னோக்கும்
அவசரமாகத் தேவை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தொழிற்சங்கத் தலைவர்களும் அவற்றை ஆதரிக்கும் மத்தியதர வர்க்கக்
குழுக்களும்
– IA
எனப்படும் பப்லோவாத
ஐக்கிய செயலகத்தின் முதலாளித்துவ எதிர்ப்பு இடது,
En Lucha (In Struggle) En Lucha (In Struggle)
எனப்படும் பிரிட்டிஷ் சோசலிச
தொழிலாளர்
கட்சியுடன் பிணைந்துள்ள ஸ்பெயினின் சங்கமும்—
ஒரே
நாள் நடவடிக்கைகள் மற்றும் அதே போன்ற எதிர்ப்புக்களும் முதலாளித்துவத்தின் கொள்கை
மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப் போதுமானவை என்று கூறின. இக்கூற்றுக்கள் பொது வேலை
நிறுத்தத்தன்று
PP
பொதுச் செலவுகளில்
27 பில்லியன்
யூரோக்கள்
குறைக்கப் போவதாக அறிவித்ததில் சிதறிப் போயின; ஏனெனில் இவை
ஜெனரல்
பிராங்கோவின் பாசிச சர்வாதிகார ஆட்சிக்காலத்திற்குப் பின் மிகக் கடுமையான
நடவடிக்கைகள் ஆகும்.
அரசாங்கத்தின் விடையிறுப்பு தொழிலாள வர்க்கத்தின் முன் வைக்கப்படும்
அடிப்படை அரசியல் பிரச்சினைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ராஜோய் ஸ்பெயினின் ஆளும் உயரடுக்கிற்காக மட்டும் பேசவில்லை, சர்வதேச
நிதிய மூலதனத்திற்காகவும் பேசுகிறார்; ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின்மீது தன்
பேரழிவுத் தாக்குதல்களைச் சுமத்தும் விருப்பத்தில் இருந்து ஒரு இம்மி
கூட அது விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அதன் நோக்கம் தொழிலாளர்களின் நிலைமைகளை
சீனா, பிரேசில் ஆகியவற்றில் இருப்பவற்றைப் போல் கீழிறக்கிவிட வேண்டும் என்பதுதான்.
இந்த சமூக எதிர்ப்புரட்சிக்கு கிரேக்கம்தான் சோதனைக் களமாக
இருக்கிறது; அங்கு தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதுதான் மற்ற இடங்களிலும்
செயல்படுத்தப்படுகிறது
–அயர்லாந்து,
இத்தாலியில் இருந்து பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும்.
இத்தாக்குதலின் உலகளாவிய தன்மை,
தொழிலாளர்கள் உலக
முதலாளித்துவ
அமைப்புமுறையின்
உடைவை
எதிர்கொள்கின்றனர் என்னும் உண்மைக்குத்தான் சான்றாக உள்ளது.
இந்த
அமைப்பு
முறையின் நெருக்கடியின்
தாக்கங்கள்
குறித்து தொழிலாள வர்க்கத்தை
நிராயுதபாணியாக
வைத்திருக்க
போலி இடது அமைப்புக்கள் முழு
நனவுடன்
உழைக்கின்றன.
எந்த அளவிற்கு அவர்கள் தாழ்ந்து போவர் என்பது
En Lucha
வினால் தெளிவாக்கப்பட்டது.
“ஸ்பெயினின்
தொழிலாளர்களுக்கான
மாதிரி நீடித்த போராட்டம்... மற்றும் ... கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் வெற்றி”
என்று கூறியது.
இந்த
“வெற்றி”
என்பது என்ன? ஐந்து ஆண்டுகளாக ஆழ்ந்த மந்த நிலையில் இருக்கும் கிரேக்கத்
தொழிலாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சிக்கன நடவடிக்கைச் சுற்றுக்களை எதிர்கொண்டு
இடருற்று வருகின்றனர்—முதலில்
PASOK
சமூக ஜனநாயக அரசாங்கத்தாலும் இப்பொழுது
PASOK
மற்றும் கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகக் கூட்டணியினாலும் செயல்படுத்தப்படுகிறது.
பல ஒரு நாள், இரு நாள் வேலைநிறுத்தங்கள் கிரேக்கத்
தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டவை, பல்லாயிரக்கணக்கான மக்களை,
கடந்த
வியாழன் அன்றும் ஸ்பெயினில் இருந்ததைப் போல் போராளித்தனத்தைக் காட்டி நடத்தப்பட்டவை
தொடர்ச்சியான சிக்கன
வரவு-செலவுத்
திட்டங்கள்
நடைமுறைக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. இந்த வாரம்தான் கிரேக்கப் பிரதம மந்திரி
லூகாஸ் பாப்படெமோஸ் மற்றொரு
“புதிய
பொருளாதாரத் திட்டத்தின்கீழ்”
12 பில்லியன் யூரோ
வெட்டுக்களை அறிவித்துள்ளார்.
இதன் விளைவு ஒரு பெரும் சமூகப் பேரழிவு ஆகும். உத்தியோகபூர்வ
வேலையின்மை ஏற்கனவே 23% என இருப்பது, இளம் தொழிலாளர்களுக்கு 50% க்கும் மேல் என
ஆகிவிட்டது. உதவியளிக்கும் அமைப்புக்கள்,
கிரேக்கத்தின் பகுதிகள் சிலவற்றை
“மனிதாபிமான
நெருக்கடியில்”
ஆழ்ந்துள்ளவை என்று விவரிக்கின்றன.
ஏதென்ஸிற்கு அருகே உள்ள பெரமா துறைமுக நகரத்தில் உலக அறக்கட்டளை
டாக்டர்கள் என்னும் அமைப்பு ஏராளமான நகரவாசிகள் மாதம் ஒன்றிற்கு
€200
($720) க்கும் குறைவான பணத்தில் வசிப்பதாகத் தெரிவித்துள்ளது.
“சில
குடும்பங்கள் மின்வசதி இன்றி ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரைகூட இருந்துள்ளன;
குளிர்காலத்தில் மரத்துண்டுகளை எரித்துச் சூடேற்றிக் கொள்ளுகின்றனர், அவர்களுடைய
குழந்தைகள் குப்பைகளில் உணவுகளைப் பொறுக்குகின்றன.”
என்று அமைப்பு எழுதுகிறது.
இதைத்தான்
“வெற்றி”
என்று
En Lucha
கருதினால், அதற்கு
PP
மற்றும் ஆளும் உயரடுக்கில் இருந்து வேறுபாடுகள் ஏதும் இல்லை; அவை இதேபோன்ற
“வெற்றியைத்தான்”
ஸ்பெயினிலும் கொண்டுவரும் நோக்கத்தை உடையவை. இத்தகைய இகழ்விற்கு உரிய அறிக்கை
இத்தகைய அமைப்புக்களை பொறுத்தவரை,
தொழிலாள வர்க்கம் வறிய நிலையில் வாடுவது என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான
புரட்சிகரத் திரட்டுதலை விட அதிகம் விரும்பத்தக்கது என்று உள்ளதைத்தான்
தெளிவாக்குகிறது.
ஐரோப்பா முழுவதிலும் இருப்பதைப் போலவே ஸ்பெயினிலும், தொழிலாள
வர்க்கம் முதலாளித்துவம் மற்றும் அதன் பிரதிநிதிகளுக்கு எதிரான அரசியல்
அதிகாரத்திற்கான போராட்டத்தை எதிர்கொள்கிறது—
இதில் தொழிற்சங்க அதிகாரத்துவம், அதற்காக வக்காலத்து
வாங்குபவர்களும் அடங்குவர். இதற்கு ஒரு புதிய அரசியல் கட்சி கட்டமைக்கப்படுவது
மிகவும் தேவையாகும்; அதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஸ்பெயின்
பிரிவு ஆகும்; அதுதான் தொழிலாளர் அரசாங்கம் ஒன்றை சோசலிசக் கொள்கையில்
நிறுவுவதற்கும் போராடும். |