WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
Spanish government unveils €27 billion in
budget cuts
ஸ்பெயின் அரசாங்கம் 27 பில்லியன்
யூரோக்களை
வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களில் வெளிப்படுத்துகிறது
By Alejandro López
3 April 2012
வெள்ளியன்று ஸ்பெயினின் மக்கள் கட்சி
(PP)
27.3 பில்லியன்
யூரோ
(36.4 பில்லியன் அமெரிக்க
டாலர்)
வெட்டுக்களை அறிவித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவ்வெட்டுக்கள்
2.5% என்ற நிலையில், இந்த வரவு-செலவுத் திட்டம்,
பாசிச
சர்வாதிகார
காலகட்டத்திற்குப்
பின் மிகவும் கடுமையான வரவு-செலவுத் திட்டமாகும்.
டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட 15 பில்லியன்
யூரோ
வெட்டையும்
அடக்கியுள்ள இந்த எண்ணிக்கை,
இன்று பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்பட உள்ளது.
முக்கூட்டான ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய
மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்,
EU,
ECB, IMF
ஆகியவை கோரியுள்ளபடி மொத்த உள்நாட்டு
உற்பத்தியிலுள்ள பற்றாக்குறையை 8.51% என்பதில் இருந்து 5.3%
எனக் குறைப்பதற்கு இந்நடவடிக்கைகள் தேவை என்று அரசாங்கம்
கூறுகிறது.
நிதி மந்திரி
கிறிஸ்டோபல் மோன்டோரோ நாட்டின் நிதிநிலைமை
“நெருக்கடியைத்
தருவதாக உள்ளது”
என்று
விவரித்தார்; அதே நேரத்தில் துணைப் பிரதம மந்திரி சோரயா
சாயேன்ஸ் சாந்தாமரியா
“பெரும்
திகைப்பைக் கொடுக்கும் நிலைமை”
குறித்துப் பேசினார்.
சமீபத்திய நடவடிக்கள் மே 2010ல் ஜோஸ்
சாப்பாத்தேரோவின்
ஸ்பானிய சோசலிச தொழிலாளர் சமூக ஜனநாயகக் கட்சி செயல்படுத்திய
15 பில்லியன்
யூரோ
வெட்டுக்களைத் தொடர்ந்து வருகின்றன.
இதன் பொருள் இரண்டு ஆண்டுகளில் 40 பில்லியன்
யூரோவுக்கும்
மேற்பட்ட தொகை செலவுகளில் இருந்து குறைக்கப்பட்டுவிடும்
என்பதாகும். இது மத்திய அரசாங்கத்தின்
“சரி
செய்யும்”
வரவு-செலவுத் திட்டத்தை
மட்டும் பொறுத்ததே
ஒழிய பிராந்திய மற்றும் வட்டார அரசாங்கங்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்ளவில்லை; அவை கிட்டத்தட்ட 14
பில்லியன்
யூரோ
முதல் 17
பில்லியன்
யூரோ
வரை வெட்டுக்களை செயல்படுத்துமாறு உத்திரவிடப்பட்டுள்ளன. இவை
தொழிலாளர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்;
குறிப்பாக இவை சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வித்துறையில்
செயல்படுத்தப்படுவதால்.
சமீபத்திய நடவடிக்கைகளில் கீழ்க்கண்டவை
அடங்கியுள்ளன:
* அமைச்சரகங்களின் செலவுக் குறைப்புக்கள்
சராசரியாக 17% என்று உள்ளன: அவற்றில் வெளியுறவுத் துறை
(54.4%), நீதித்துறை (34.6%), பாதுகாப்பு (31.9%), கல்வி,
பண்பாடு, விளையாட்டு (21.2%), விவசாயம் (7.4%), சுகாதாரம்
(4.3%), பொருளாதாரம்
(3.8%)
ஆகியவை அடங்கும். மிகப் பெரியக்குறைப்புக்கள் (594 மில்லியன்
யூரோ)
வெளிநாட்டுக்குக் கொடுக்கப்படும் உதவிப் பிரிவில் உள்ளன.
* ஆட்சிப்பணித்துறையில் ஊதியங்கள் தேக்கத்தில்
வைக்கப்படும். இது டிசம்பர் மாதம் அறிவித்த நடவடிக்கைகளை
தொடர்ந்து வருகிறது; அதில் வாரப் பணி நேரம் 35ல் இருந்து 37.5
மணியாகக் கூடுதல் ஊதியமின்றி உயர்த்தப்பட்டது, மற்றும் ஊதியக்
குறைப்புக்கள் மே 2010ல் கிட்டத்தட்ட 15% எனச்
செயல்படுத்தப்பட்டன.
*
“தீவிர
வேலை பற்றிய கொள்கைகளில்”
(தொழிலாளர் சந்தையில் சேர்வதற்கு, பணி பெறுவதற்கான பயிற்சி)
பொது முதலீடு 1.5 பில்லியன்
யூரோ
குறைக்கப்பட்டுவிடும்
ஞாயிறு முதல் மின்சாரம்
மற்றும் எரிவாயு விலைகளும் முறையே 7, 5 சதவிகிதம்
உயர்ந்துவிட்டன. சிகரெட் விலைகளும் உயரும்.
ஆனால் முதலாளித்துவத்தின் சில பிரிவுகளுக்கு,
வரிவிலக்கு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது; அதுவும்
உள்நாட்டில் வரி செலுத்தாமல் வெளிநாட்டில் கணக்குகளை
வைத்திருப்பவர்கள் மற்றும் கணக்கில் காட்டாமல் பணம்
பெறுபவர்களுக்கு. வரியைத் தவிர்ப்பவர்களுக்கு மூலதனத்தை
வெளிநாட்டில் இருந்து ஸ்பெயினுக்குக் கொண்டுவர அனுமதி
கொடுக்கப்படும். அவர்கள் பணத்தில் 10% வரி கொடுத்தால் போதும்.
குறிப்பாக ஸ்பெயினின்
மிக உயர்ந்த வரிவிதிப்பை
கணக்கில்
எடுத்தால்
43% என்று உள்ள நிலையில்,
இது ஒரு பேரமாகும்.
ஸ்பெயினின் பொருளாதாரம் கிரேக்கத்தில்
அனுபவிக்கப்பட்ட அதே தீய வட்டத்திற்குள்தான் மூழ்குகிறது;
அங்கு வெட்டுக்கள் மற்றும் வரி உயர்வுகள் வருவாய்களை குறைத்தன:
அவற்றைத் தொடர்ந்து இன்னும் கூடுதலான வெட்டுக்கள், வரி
உயர்வுகள் தேவை என்று கோரப்பட்டன. ஸ்பெயினும் இப்பொழுது 2009ல்
இருந்து அதன் இரண்டாம் மந்தநிலையில் நுழைந்துள்ளது.
ஒரு புதிய கணிப்பு ஸ்பெயினின் பொருளாதார
உற்பத்தி அளவு 1.7% இந்த ஆண்டு குறையும் எனக் கூறுகிறது: இது
சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கணித்த 1.0% விடக் கூடுதலாகும்.
ஏற்றுமதிகள் முந்தைய மூன்று மாத காலத்தை விட 1.6%
குறைந்துவிட்டன; நுகர்வோர் செலவுகள் ஆண்டிற்கு 1.1% எனக்
குறைந்தன. ஸ்பெயினில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை மிக அதிகமான
4.7 மில்லியன் என்று உயர்ந்துவிட்டது
—இது
மக்கள் தொகையில் 22.9 சதவிகிதம் என்பதுடன் ஐரோப்பிய
ஒன்றியத்திலேயே மிக அதிகமானதும் ஆகும். கிட்டத்தட்ட பாதி இளம்
ஸ்பானியர்கள் வேலையின்மையில் வாடுகின்றனர்;
ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு மாதமும் இப்பட்டியிலில் புதிதாக
இடம் பெறுகின்றனர்.
ஸ்பெயினின் நிதிநிலைமை மோசமாகச் சரிந்து
கொண்டிருக்கிறது; நாட்டின் கடன் வரலாற்றிலேயே அதிகமாக மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 68.5% என்று 2011 காலாண்டுக் கடைசியில்
உயர்ந்தது.
இதோடு நிற்காமல், ஸ்பெயினின் வங்கிகள் சொத்துப்
பிரிவுக் குமிழின் விளைவுகளையும் தொடர்ந்து முகங்கொடுக்கிறது.
El
Economista
கருத்துப்படி,
“கடன்களைத்
திருப்புவதில் ஏற்படும் இடர்கள் 18 ஆண்டுகளாக இல்லாத உயர்ந்த
அளவை எட்டியுள்ளன; இது சொத்து மதிப்புச் சரிவு வங்கிகளுக்கு
என்பதை முழுக்கடன் கணக்கில் மொத்தம் 1,8 டிரில்லியன்
யூரோ
($2.39 டிரில்லியன்) என்று ஆக்கிவிடும்.”
பெயர்கூற விரும்பாத அரசாங்க உயரதிகாரி ஒருவர்
பொருளாதாரச் சரிவு பற்றி
El
Pais
நாளேட்டிடம்,
“நாங்கள்
சரியாக விளக்கியுள்ளோமா என்பது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால்
நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது; ஐரோப்பிய மத்திய வங்கி
ECB
கொடுத்துள்ள தடையற்ற நீர்மை அளித்தல் என்னும் செயற்கைச்
சுவாசத்தினால்தான் நாம் பிழைத்துள்ளோம். அது கிடைக்காவிட்டால்
நாம் பெரும் வெடிப்பைக் கண்டிருப்போம்.”
என்றார். இது எளிய வட்டி நிதியான 1 டிரில்லியன்
யூரோ
என்று
ECB
டிசம்பர் மாதம் விடுத்த ஏலத்தைக் குறிக்கிறது; இது ஸ்பெயின்
வங்கிகளால் இந்த ஆண்டு கடன்பத்திரத் தீர்வுகள் உயர்விற்கு 130
பில்லின்
யூரோவை
அளிக்கவும், அரசாங்கத்தின் கடன்பத்திரங்களை வாங்கவும் வழி
செய்தது.
அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையை
பற்றிக் குறிப்பிட்ட,
Spiro Sovereign
Strategy
யின்
Nicholas
Spiro
ராய்ட்டர்ஸிடம் கூறினார்:
“இது
இயன்றளவு சிக்கன நடவடிக்கை ஆகும். அடுத்து இடர் குரல்
கொடுக்கும் வரை இது நிதியக் கொள்கையை இறுக்கிப் பிடிக்கும்.
ஸ்பெயினின் மிக அதிகமான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளைக்
குறைக்க அரசாங்கம் விரும்புவது குறித்துச் சந்தேகம் ஏதும்
இராது.”
ஆனால் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சந்தைகளைத்
திருப்தி செய்யப் போதுமானவை அல்ல; அவை தவிர்க்க முடியாமல்
இன்னும் அதிகமானவற்றைக் கோரும்.
HIS Global Insight
உடைய
பொருளாதார வல்லுனர்
Raj
Badiani
செய்தி
நிறுவனத்திடம்
“அரசாங்கம்
இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை
இந்த ஆண்டு பிற்பகுதியில்
எடுக்கும் கட்டாயத்திற்கு உட்படலாம்; இதையொட்டி
தொடர்ந்திருக்கும் பொருளாதாரச் சரிவு இன்னும் கூடுதலான வகையில்
ஏற்கனவே விளிம்பில் நிற்கும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை
குறைக்கும் திட்டங்களில்
இடர்களை ஏற்படுத்தக்கூடும்”
என்றார். |