World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Finance ministers increase European bailout fund

நிதி மந்திரிகள் ஐரோப்பிய பிணை எடுப்பு நிதியை அதிகப்படுத்துகின்றனர்

By Stefan Steinberg
2 April 2012
Back to screen version

மே 30-31 திகதிகளில் கோபென்ஹேகனில் நடைபெற்ற ஓர் இரு-நாள் கூட்டத்தில், ஐரோப்பிய நிதி மந்திரிகள் யூரோப் பகுதி பிணைஎடுப்புக் கருவிக்கான நிதியத்தை அதிகரிப்பது என்பதற்கு ஒப்புக் கொண்டனர். ஆனால் சனிக்கிழமைக் கூட்டத்தில் நிதி மந்திரிகள் நிதியச் செயற்பாடுகளின் மீது விதிக்கப்படவுள்ள ஐரோப்பிய வரி பற்றி ஓர் ஒருமித்த கருத்தை அடைவதில் தோல்வியுற்றனர்.

வெள்ளியன்று நிதி மந்திரிகள் அடைந்த உடன்பாடு, ஜேர்மனிய அரசாங்கம் முன்வைத்த திட்டத்தை ஒத்திருந்தது.  இதில் இக்கோடைக் காலத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் ஐரோப்பிய உறுதிப்பாட்டுக் கருவி (ESM) என்னும் நிரந்தர அமைப்பிற்கு 500 பில்லியன் ஈரோக்கள் திரட்ட வேண்டும் என்று உள்ளது; அதே நேரத்தில் ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு நிறுவனத்தின் (EFSF) தற்பொழுதுள்ள 440 பில்லியன் ஈரோக்கள் தவிர கூடுதல் அளிப்பது பற்றி முடிவு ஏதும் வரவில்லை.

கோபென்ஹேகன் மாநாட்டிற்கு முன்பு, ஜேர்மனியின் நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌபிள செய்தி ஊடகத்திடம் புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள நிதி மொத்தம் 800 பில்லியன் ஈரோக்கள் இருக்கலாம் என்றும் இது முதல் தொற்றிற்குப் பயன்படுத்தப்படும், யூரோப் பகுதியில் உறுதிப்பாட்டைக் காக்கும் என்றார்.

முன்னைய ஐரோப்பிய பிணை எடுப்புப் பொதிகளைப் போலவே, புதிய நிதிய உதவியும் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கும் அவற்றிலுள்ள மக்களுக்கும் உதவுதலுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மாறாக இது ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கிகளுக்கு புதிய நிதிகளை உட்செலுத்தும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

வங்கிகள் மற்றும் நிதியச் செய்தி ஊடகத்தின் கோபென்ஹேகன் உடன்பாடு குறித்த முழு எதிர்கொள்ளலும் மிகக் குறைந்த தன்மை உடையது, மிகவும் தாமதமாக வந்துள்ளது என்பதாகும்.

 

Wall Street Journal,  EFSF ல் இருக்கும் நிதியத்தில் அதிக அளவு ஏற்கனவே அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் கிரேக்கத்திற்கான பிணை எடுப்புப் பொதிகளுக்குச் சென்றுவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. கோபென்ஹேகன் முடிவு இருந்தாலும்கூட, ஐரோப்பியப் பிணை எடுப்புக்களுக்குக் கிடைக்கும் மொத்த நிதி 500 பில்லியன் ஈரோக்களுக்கு மிஞ்சாது என்று அது முடிவாகக் கூறியுள்ளது.

கடந்த செவ்வாயன்று  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD) பொதுச் செயலாளர் ஏஞ்சல் குரியா, சந்தைகளுடன் ஈடுபடும்போது நீங்கள் எதிர்பார்ப்புக்களையும் விட அதிகம் செயல்பட வேண்டும் என்று அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டப் பொருளாதார அதிகாரியான ஒல்லி ரெஹ்னன் அருகே இருக்கையில், OECD  தலைவர் 1 டிரில்லியன் ஈரோக்கள் மதிப்புடைய அனைத்து தீச்சுவருக்கும் தாய் போன்ற அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

1 டிரில்லியன் ஈரோக்கள் நிதியத்திற்கான அழைப்பிற்கு பிரெஞ்சு நிதி மந்திரி François Baroin ஆதரவு கொடுத்தார்; இன்னும் பல ஐரோப்பிய அதிகாரிகளும் ஆதரவு கொடுத்தனர். ஐரோப்பிய தீச்சுவரில் பெரும் நிதிப் பெருக்கத் தேவைக்கு ஐரோப்பிய ஆணையம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவும் இருந்தது.

ஜேர்மனி ஐரோப்பிய பிணை எடுப்பு நிதியை அதிகரிப்பதற்குக் காட்டும் எதிர்ப்பு (நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் ஆஸ்திரியா சேர்ந்து கொண்ட முறையில்), கொள்கையளவில் வங்கிளுக்கு வரையற்ற முறையில் பணம் அளிப்பது என்பது குறித்து அல்ல. மாறாக ஜேர்மனிய அரசாங்கம் மிக அதிகப் பிணை எடுப்பு நிதி அளித்தல் பேர்லின் கோரும் அதிக கடன்பட்டுள்ள நாடுகளைத் தேவையான கடுஞ்சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு ஊக்கம் கொடுக்காது என்பதினால்தான்.  ஒரு சமாதானக் காலத்தில், கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது மிகப் பெரிய வெட்டுக்களை சுமத்தியபின், ஐரோப்பாவின் நிதிய மற்றும் அரசியல் உயரடுக்கு தன் கவனத்தை இப்பொழுது இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றின் மீது செலுத்துகிறது.

ஸ்பெயினில் கடந்த வியாழனன்று நடந்த பொது வேலைநிறுத்தத்திற்கு முன் ஜேர்மனியின் நிதி மந்திரி ஷௌபிள ஸ்பெயினின் பிரதம மந்திரி மரியானோ ராஜோய்க்கு அவர்  பெருகும் மக்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் கட்டாயத்தில் உள்ளார் என்று எச்சரித்தார்.

வேலைநிறுத்தம் முடிந்த மறுநாள், ஸ்பெயினின்  நிதி மந்திரி Cristóbal Montoro “ஸ்பெயினின் ஜனநாயகத்திலேயே மிகவும் சிக்கனமான வரவு-செலவுத் திட்டம் என்று அவர் விவரித்ததின் விவரங்களை அளித்தார். மொத்தம் 27 பில்லியன் ஈரோக்கள் குறைப்புக்களைக் கொண்ட இந்தப் வரவு-செலவுத் திட்டம், ஒரு விமர்சகரால் ஒரு போர்க் காலப் பொருளாதார நிலை போன்றதற்குப் பாதை அமைக்கிறது என்று விவரிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள், இந்த வாரம் ஸ்பெயினின் பாராளுமன்றத்திற்கு அளிக்க இருப்பவற்றில், தொடர்ந்து அரசப் பணியாளர்களின் ஊதியத் தேக்கம், அரசாங்கத் துறைகளின் வரவு-செலவுத் திட்டத்தில் பாரிய வெட்டுக்கள், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றிற்கான செலவுகள் 5 முதல் 7 சதவிகிதம் வரை உயர்தல் ஆகியவை அடங்கியுள்ளன. இதைத்தவிர, அரசாங்கம் அதன் தற்போதைய வேலைத் திட்டத்தில் இருந்து 1.5 பில்லியன் ஈரோக்களை வெட்டத் திட்டமிட்டுள்ளது; இது மேற்கு ஐரோப்பாவிலேயே மிக அதிகம் என்று தற்போதுள்ள ஸ்பெயினின் வேலையின்மை 23 சதவிகிதம்  என இருந்தபோதிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

கோபன்ஹெகனில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பிணை எடுப்புப் பொதியின் அளவு பற்றி தங்கள் அதிருப்தியை பல ஐரோப்பிய அமைப்புக்கள் அறிவித்தாலும், அவைகள் ஸ்பெயினின் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை அவநம்பிக்கையுடன்தான் காண்கின்றன. புதிய வெட்டுக்களைக் கோடிட்டுக் காட்டியபின், சிந்தனைக் குழுவான Open Europe ஆனது  பட்டியலில் ஸ்பெயினின் அரசாங்கம் கூறாதவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளது: உதாரணமாக. VAT ல் அதிகரிப்பு, இருக்கும் சம்பளத்தை தேக்கம் ஏற்படுத்துவதற்குப் பதிலாக அரச பணியாளர்களின் சம்பள வெட்டு மற்றும் ஓய்வூதியங்கள், வேலையின்மை நலன்களில் குறைப்புக்கள்.

ஐரோப்பிய அரசியல் உயரடுக்குகள் ஒவ்வொரு நாட்டிலும் சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்துவது அவற்றின் பொருளாதாரங்களை மந்தநிலைக்குத் தள்ளுகிறது, அவற்றின் கடன் பிரச்சினைகளை அதிகரிக்கிறது என்பதை நன்கு அறியும். ஆயினும்கூட, அவை தங்கள் தாக்குதலை அதிகரிக்க உறுதி கொண்டுள்ளன; அதன் நோக்கம் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மற்றும் சமூகநலச் செலவுகளை சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் அளவிற்குக் கொண்டுவருதல் என்பதாகும்.

ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கை எந்த அளவிற்கு வங்கிகளின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு உள்ளது என்பது கோபன்ஹேகனில் இருந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த விடயம் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டுப்படுகிறதுஅதாவது நிதியச் செயற்பாடுகளில் ஒரு வரி அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்தகைய வரி கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வக் கொள்கை என்று அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் ஸ்ட்ராஸ்பேர்க்கில் நிகழ்த்திய உரை ஒன்றில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பாரோசோ ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றியம் தழுவிய நிதியச் செயற்பாடுகள் மீதான வரித் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டினார். பாரோசோ அறிவித்தார்:  கடந்த மூன்று ஆண்டுகளில் உறுப்பு நாடுகள்வரி செலுத்துவோர் என்று நான் கூறவேண்டும்நிதியத் துறைக்கு 4.6 டிரில்லியன் ஈரோக்கள் உத்தரவாதங்களைக் கொடுத்து, நிதியுதவியையும் செய்துள்ளன. அதன்பின் அவர் நிதியத் துறை, சமுதாயத்திற்கு நலன் அளிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

பாரோசாவின் உரைக்குப் பின், நிதியத் துறைக்கு அளிக்கப்படும் தொகை ஒரு டிரில்லியனுக்கும் மேல் என்று அதிகரித்துவிட்டது; கிட்டத்தட்ட வட்டி இல்லாத கடன்கள் என்ற வடிவமைப்பில் வங்கிகள் ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து பெறுகின்றன. சமீபத்திய ஐரோப்பிய பிணை எடுப்பில் வந்துள்ள அதிகரிப்பு, ஐரோப்பிய வரிசெலுத்துவோரிடம் இருந்து வங்கிகளுக்கு மாற்றப்படும் பணத்தின் மொத்தம், கிட்டத்தட்ட 6 டிரில்லியன் ஈரோக்கள் என்று ஆகிவிட்டது.

ஆனால் நிதியச் செயற்பாட்டு வரியைப் பெயரளவிற்குக் கூட செயல்படுத்த முடியாது; ஏனெனில் வங்கிகள் அரசியல் முறை மீது கொண்டுள்ள மேலாதிக்கம்தான் இதற்குக் காரணம்; அவைகள் பிடிவாதமாக இதை எதிர்க்கின்றன. ஐரோப்பிய ஆணையத்தின் கருத்துப்படி, நிதிய நடவடிக்கைகளின் மீதான வரி என்பது 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் உடன்பாடு காண்பதைத்தான் நம்பியுள்ளது. கிரேட் பிரிட்டனும் ஸ்வீடனும் அத்தகைய நடவடிக்கைக்குத் தாங்கள் உடன்படமாட்டோம் என்று தெளிவாக்கிவிட்டன; மற்ற நாடுகளும் தங்கள் எதிர்ப்புக்களை எழுப்பியுள்ளனர்; இதையொட்டி இந்த வரித் திட்டம் நீரில் மூழ்கிய தன்மையில்தான் உள்ளது.