WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Mohamed Merah’s family denies he was
Toulouse, France gunman
பிரான்ஸ் துலூஸ் துப்பாக்கிதாரி முஹமட்
மேராதான் என்பதை அவர் குடும்பம் மறுக்கிறது
By Antoine Lerougetel
31 March 2012
துலூஸிலும்
மொந்தபானிலும்
மார்ச் 11 முதல் 19 வரை தொடர் படுகொலைகளை முஹமட் மேராதான்
நடத்தினார் என்னும் பிரெஞ்சுப் பொலிசாரின் குற்றச்சாட்டுக்களை
அவருடைய குடும்பம் உறுதியாக மறுத்துள்ளது; அவர் ஒரு
பயங்கரவாதியும் அல்ல, இக்கொலைகளை செய்யவும் இல்லை என்று
கூறியுள்ளது. கடந்த வியாழயன்று மேரா உயரடுக்குப் பொலிஸ் பிரிவு
ஒன்றினால் அவருடைய வீடு 32 மணி நேரம் முற்றுகைக்கு
உட்பட்டபின்னர், கொலை செய்யப்பட்டார்.
அல்ஜீரியாவில் வசிக்கும் இவருடைய அரைச் சகோதரர்
ரஷித் மேரா,
FranceInfo
தொலைக்காட்சியிடம்:
“செய்தி
ஊடகமும் அரசியல்வாதிகளும் என்ன பேசுகின்றனர் என எனக்குப்
புரியவில்லை. அவர்கள் முஹமட் ஆப்கானிஸ்தான் மற்றும்
பாக்கிஸ்தானுக்குச் சென்றிருந்ததாகவும், அல் கெய்டாவுடன்
தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் நான் அதை
உறுதியாக மறுக்கிறேன். அல் கெய்டா அல்லது தாலிபன்
அல்லது
உலகில் எந்தப் பயங்கரவாத அமைப்புடனும் அவருக்குத் தொடர்பு
இருந்ததா என்று எனக்குச் சந்தேகம்தான். ஆனால் அவர்
நீதிமன்றத்தில் ஏதும் கூறுமுன் பிரான்ஸ் அவரைக் கொன்றுவிட்டது,
இதுதான் அதற்கு நிரூபணம், அவரை உயிருடன் பிடித்திருக்கலாம்”
என்றார்.
ரஷித் மேராவின் கருத்துக்கள், பொலிஸ்
வல்லுனர்களான தேசியப் பொலிஸ் தலையீட்டுக் குழுவின் (GIGN)
Claude Prouteau
போன்றோர் எழுப்பிய வினாக்களைப் போலவே உள்ளன; அவர் மேராவைக்
கொன்ற சிறப்புப் பொலிஸ் பிரிவு எளிதில் அவரைக்
கைப்பற்றியிருக்க முடியும் என்றார். மாறாக பொலிசார் மேராவின்
வீட்டைத் தாக்கி அவரை 300 துப்பாக்கி ரவைகளைப் பொழிந்து
கொன்றனர். இந்த முற்றுகையின்போது உள்துறை மந்திரி
Claude Guéant
மேராவை உயிருடன் பிடிக்க அனைத்து முயற்சிகளும்
மேற்கொள்ளப்படும், அதையொட்டி வழக்கை அவர் எதிர்கொள்ளமுடியும்
என்றார்.
மேராவின் வீட்டைப் பொலிசார் சுட்டபொழுது
கண்டதாகக் கூறுப்படும் ஆயுதங்கள் மற்றும் வீடியோக்கள் பற்றி
ரஷித் மேரா கருத்துத் தெரிவிக்கையில், பிரெஞ்சு உளவுத்துறையில்
மேரா ஒரு தகவல் கொடுப்பவராகச் செயல்பட்டு வந்தது குறித்து வந்த
நன்கு அறியப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டார்.
“ஆயுதங்களைப்
பொறுத்தவரை, பிரெஞ்சு இரகசியத் துறையினரால் அவர்
கையாளப்பட்டிருக்கலாம், அவர் மிக இளவயதுக்காரர், எளிதில்
செல்வாக்கிற்கு உட்படுத்தப்படலாம். அவர்கள் அவரை விலைக்குக்கூட
வாங்கியிருக்கலாம். அவரைப் பயன்படுத்திப் பின்னர் கொன்றிருக்க
வேண்டும். அனைத்துமே இயலக்கூடியவைதான். முகம்மது மேராதான்
வீடியோ (கொலைகளைப் பற்றி) காட்சிகளைத் தானே எடுத்தார் என்று
யார் நிரூபிக்க முடியும். அது வேறு யாராலும்
செய்யப்பட்டிருக்கலாம்.”
ரஷித் மேரா, மேலும் கூறினார்:
“என்ன
விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்வீர்கள். எங்கள்
குழந்தைகள் பாலஸ்தீனத்தில், ஆப்கானிஸ்தானில், ஈராக்கில்
அவர்களால் கொல்லப்பட்டனர். தங்கள் பொறுப்பை அவர்கள் அறிய
வேண்டும். உள்துறை மந்திரி,
முஹம்மட்டை ஓர் அரக்கன் என்று கூறியுள்ளார்....நான்
பதிலளிக்கிறேன் அவர்கள்தான் குழந்தைகளைக் கொன்ற அத்தகைய
அரக்கனை தோற்றுவித்தனர் என்று...”
ரஷித் மேராவின் கருத்துக்கள் இதேபோன்ற
அறிக்கைகள் முகம்மது மேராவின் தந்தை முஹம்மட் பெனலால் மேராவால்
கூறப்பட்ட பின்னர் வந்தன. அவர் கூறினார்:
“அவர்கள்
அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஒருவேளை
அவர் இந்த கொலையாளியாக இல்லாமலும் இருந்திருக்க முடியும்.
என்னுடைய மகனைக் கொன்றதின் மூலம் பிரெஞ்சுப் பாதுகாப்புப்
பிரிவினர் நிரூபணத்தை இழந்துவிட்டனர், நான் என் மகனை
இழந்துவிட்டேன்.”
நிகழ்வுகளைப் பற்றி அரசின்
உத்தியோகபூர்வ தரப்பு
இத்தகைய அறிக்கைகளை கூறியதை அடுத்து—மேரா
கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருந்தார், ஏனெனில்
“அவர்
ஒரு தீவிரத்தன தனி ஓநாய்”,
ஏழு பேரைப் படுகொலை செய்யும் வரை சாதாரணமாகத்தான் நடந்து
வந்தார் என்பவை-
ஒரு புனைகதை என்று அம்பலப்படுகிறது. மாறாக அவர்
பிரெஞ்சு உளவுத்துறையுடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டுவந்தார்,
ஒரு பிரிவுடன் நேரடியாக ஒத்துழைத்து வந்தார், ஒருவேளை பல
இன்னும் அடையாளம் காணப்படாத உடந்தையாளர்களுடன்
செயற்பட்டிருக்கலாம்.
மேராவைக் குற்றவாளியாக்க பயன்படுத்தப்படும்
முக்கிய சான்று, அவருடைய வீட்டில் காணப்பட்ட ஆயுதங்கள் மற்றும்
பொலிஸ் அவருடன் நடத்திய பேச்சுக்கள், தொலைபேசி அழைப்புக்களில்
குற்றத்தை ஒப்புக் கொண்டது எனக் கூறுவதும்தான். ஆனால், இந்தச்
சான்று பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை; மேரா உண்மையில்
கொலைகாரரா என்பது சந்தேக்கத்திற்கு இன்னமும் உரியதுதான்.
மொந்தபானில்
நேரில் பார்த்தவர் ஒருவருடைய சாட்சியத்தின்படி கொலைகாரன்
பருமனாகவும், கன்னத்தில் தழும்பு, பச்சை குத்தப்பட்டும்
இருந்தான். ஆனால் முஹம்கட் மேராவோ ஒல்லியான, மிருதுவான
முகத்தைப் பெற்றிருந்தார்.
இந்த வழக்கில் மற்றொரு கூறுபாடு ஒரு
“மூன்றாவது
நபர்”
உடைய
பங்குதான்; இதுகாறும் இவர் அடையாளம் காணப்படவில்லை. மேராவின்
சகோதரர்
அப்டெல்காதர்,
அவருக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர், பொலிசாரிடம்
தன் சகோதரர் ஒரு யமகா
T-Max
ஸ்கூட்டரை, கொலைகளைச் செய்யப்
பயன்படுத்தப்பட்டது, திருட உதவியாதகக் கூறியவர் காரில் மற்றொரு
நபர் இருந்ததாகவும் கூறினார்; அவருடைய அடையாளம் இன்னும்
வெளியிடப்படவில்லை. இன்னும் ஒரு நபர் முகம்மது மேரா
கொல்லப்பட்ட வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
பிரான்சின் உளவுத்துறைப் பிரிவான
DRCI
ன் தலைவரான பேர்னார்ட் ஸ்க்வார்சினி, பிரெஞ்சு
மற்றும் இத்தாலிய செய்தி ஊடகத்தில் தொடர்ச்சியாக வந்த
அறிக்கைகளான மேரா துலூஸில் இருந்த ஒரு முகவருக்குத் தகவல்
கொடுப்பவர், எனவேதான் அவர் கண்டுபிடிக்கப்படுவதில் இருந்து
தப்பிக்க முடிந்தது, மார்ச் 22 அன்று பொலிஸ் அவரைக்
கொல்லுவதற்கு முன்புவரை, என்று கூறப்பட்டதை மறுக்கும்
கட்டாயத்திற்கு உட்பட்டார்.
மேரா கொல்லப்பட்ட மறுதினம் பொலிஸ் தலைவர்
Le
Monde
இடம் கொலை செய்ததாகக் கூறப்படுபவர் முற்றுகையின்போது தன்
பிரிவில் இருந்த ஒரு துலூஸ் தளத்தையுடைய அதிகாரியுடன் பேச
வேண்டும் எனக் கூறியதின் உண்மையை அடுத்து ஸ்க்வார்சினியின்
மறுப்பு குறைமதிப்பிற்கு உட்படுகிறது. இந்த முகவர், வட
ஆபிரிக்க
வம்சாவளியை
சேர்ந்த
ஓர் இளம் பெண்,
நவம்பர் 2011ல் பாக்கிஸ்தானில்
இரண்டு மாத காலம் இருந்தபின் மேராவிடம் விபரங்களைக் கேட்டு
அறிந்தவர்.
பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தலைவர்
Yves Bonnet,
துலூஸ்
செய்தித்தாளான
La
Dépêche
du
Midi
இடம்,
மேரா ஒரு
DCRI
ன்
செயற்பாட்டாளர் என்பது
“குறிப்பிடத்தக்கது”
என்றார்.
“ஒரு
செயற்பாட்டாளரைக் கொல்லுவது என்பது—அது
ஒன்றும் நிரபராதச் செயல் அல்ல”
என்றார் அவர்.
மேரா ஒரு குறைந்த தரமுடைய
“தகவல்
அளிப்பவர்”
அந்தஸ்த்தில் இருந்தாலும், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்
பிரிவினர் அவரைக் கண்டுபிடிப்பதில் தாமதம் கொண்டதை அது விளக்க
முடியும்—அதாவது
அவர்கள் வேண்டுமென்றே காண மறுத்தனர்.
Le Canard Enchaîné
செய்தித்தாள் வியாழனன்று மேராவும் அவருடைய குடும்பமும் கடந்த
ஆண்டு மார்ச்சில் இருந்து நவம்பர் வரை பொலிசால்
கண்காணிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளது. அவர் நவம்பர் மாதம்
DCRI
முகவரைச் சந்தித்தபின் இந்தக் கண்காணிப்பு
திடீரென நின்று போயிற்று. ஆனால் பின்னர் கண்காணிப்பு பிரிவுகள்
நவம்பர் தாம் தொடங்கி பெப்ருவரியில் அது நின்றதற்குக் காரணம்,
அதில் முக்கியமாக ஏதும் தெரியவரவில்லை என்பதால்தான் என்றன. இது
கொலைகாரர் தன்னுடைய பெரும் அழிவுகளைத் தொடங்குவதற்கு சில
வாரங்கள் முன்புதான் கூறப்பட்டது.
இத்தகைய பெரும் சந்தேகத்திற்குரிய
சூழ்நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களுக்கு ஒரு சில
வாரங்களுக்கு முன்பு, தற்போதைய ஜனாதிபதியான நிக்கோலா
சார்க்கோசி இக்கொலைகளைப் பயன்படுத்தி சட்டம் மற்றும் ஒழுங்கு
பற்றிய தீவிர பேச்சை அதிகப்படுத்தி, செய்தி ஊடகத்தில்
முக்கியமான இடத்தைப் பற்றியுள்ளார்.
“பயங்கரவாத
சிந்தனைப்
போக்கை
பரப்பும்”
இணைய தளங்களை தண்டனைக்கு உள்ளாக்கும் புதிய
சட்டங்களை அவர் அறிவித்துள்ளார்: பொலிசார் நேற்று பிரான்சில்
இஸ்லாமியவாத இணையம் எனக் கருதப்பட்டதைத் தாக்கி 19 பேரைக் கைது
செய்தனர்.
இப்படி பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு
உட்குறிப்பான ஆதரவு
PS
ன் ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட்
மற்றும் ஹோலண்டின் போலி இடது நட்பு அமைப்புக்களால்
கொடுக்கப்பட்டுள்ளது; அவைகள் சார்க்கோசி தேர்தல் பந்தயத்தில்
இதைப் பற்றி எடுத்து முன்முயற்சியை எடுத்துக் கொள்ளவும்
அனுமதித்துள்ளன; இது திறமையுடன் ஆட்சி மாற்றம்செய்வதற்கு
ஒப்பானது. கருத்துக் கணிப்புக்கள் இப்பொழுது 30 சதவிகித வாக்கு
விருப்பம் என்று ஹோலந்தின் 28 சதவிகித விருப்பத்துடன் ஏப்ரல்
22 முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னணியில் நிறுத்துகின்றன. |