WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் துலூஸ் துப்பாக்கிச் சூடுகளுக்கு பொலிசிற்கு ஆதரவு கொடுக்கிறார்
By Antoine Lerougetel
29 March 2012
use
this version to print | Send
feedback
நேற்று
Europe 1
வானொலிப் பேட்டி ஒன்றில்,
சோசலிஸ்ட் கட்சியின்
(PS)
ஜனாதிபதி
வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட், துலூஸ் மற்றும் மொந்தபானில் முஹமட் மேராவினால்
நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளையொட்டி ஜனாதிபதி
நிக்கோலா சார்க்கோசி நடந்து கொள்ளும் விதம் குறித்த அரசியல் குறைகள் எதையும் கூற
மறுத்துவிட்டார்.
ஒன்பது
நாட்கள் அளவு இடைவெளியில் நடைபெற்ற இக்கொலைகள் மார்ச் 11 முதல் 19 வரை
நடத்தப்பட்டன; இதில் மூன்று யூதப் பள்ளிக் குழந்தைகள் உட்பட ஏழு பேர்
இறந்துவிட்டனர்.
உயர்மட்ட
உளவுத்துறை அதிகாரிகள் தீவிர வினாக்களை எழுப்பியுள்ளனர், மேரா ஒரு உளவுத்துறைச்
சொத்து என்பது பற்றிக் கூறியுள்ளனர் என்பதால் பொலிஸ் விசாரணைகளின் பல கூறுபாடுகள்
குறித்து பெயரளவு விமர்சனங்களை எழுப்பும் கட்டாயத்திற்கு ஹோலண்ட் உட்பட்டார்.
9/11 ஐ
நினைவுபடுத்துவதாக பாதுகாப்புப் பிரிவில் மிகவும் முறையற்ற செயலிழப்புக்கள்,
பாதுகாப்பு மற்றும்
பொலிஸ் துறைகளில் சார்க்கோசியின் நம்பிக்கைக்கு உரிய நியமனம் பெற்றவர்களால்
அனுமதிக்கப்பட்டது. பொலிசுடன் மேரா பலமுறை தொடர்புகள் கொண்டிருந்தும்கூட, அவர் கொலை
வெறியைத் தொடர்ந்து நடத்த—கண்டுபிடிக்கப்படாமல்
9 நாட்கள் நடத்துவதற்கு—அனுமதிக்கப்பட்டார்.
(பார்க்க,
துலூஸ் துப்பாக்கிதாரி ஒரு பிரெஞ்சு
உளவுத்துறைச் சேர்ந்தவர் என்று அறிக்கைகள் குறிப்புக் காட்டுகின்றன”).
இதையொட்டி
கீழ்க்கண்ட வினாக்கள் எழுகின்றன
கொலை செய்தவரை அடையாளம் கண்டுபிடித்துக் கைது செய்வதற்கு ஏன் இத்தனை
தாமதம் ஆயிற்று?
கடந்த வியாழன் அவருடைய வீட்டில் நடத்திய தாக்குதலில் பொலிசார் ஏன்
மேராவைக் கொன்றனர்?·
மேரா நீண்டகாலமாக பொலிஸ் உளவுத்துறைத் தலைவர்
Bernard
Squarcini
உடன் கொண்டிருந்த உறவின் முக்கியத்துவம் என்ன?
மேராவை
உயிருடன் பிடித்து அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றிருத்தல் சிறப்பாக
இருந்திருக்கும் என்று ஹோலண்ட் ஒப்புக் கொண்டார்.
ஆனால்
பேட்டியாளர்
Jean-Pierre Elkabbach,
மேராவைக் கொன்ற பொலிஸ் பிரிவிற்கு அவர் காட்டிய பகிரங்க மரியாதையைப் பற்றி
ஹோலண்டிடம் கேட்கப்பட்டது, ஹோலண்ட் மீண்டும் அவ்வாறுதான் செய்யமுடியும் என்றார்:
“பொலிசார்
தங்கள் பணியைச் செய்தனர். அவர்கள் பணிக்கு நான் பாராட்டைத் தெரிவிக்கிறேன்...
பொலிசார் தங்கள் வேலையைக் குறிப்பிடத்தக்க வகையில் நன்கு புரிந்தனர்.”
பொலிஸ்
நடவடிக்கைகள் குறித்து அரசியல் தலைமை மேற்பார்வை குறித்து ஹோலண்டின் கருத்தை அறிய
Elkabbach
விரும்பியபோது, ஹோலண்ட்
கோபத்துடன் கூறினார்:
“இன்று
அந்த விவாதத்தில் நான் ஈடுபடுவேன் என நீங்கள் உண்மையிலேயே நினைக்கறீர்களா? அதுவும்
விசாரணைகள் நடைபெற்று வரும்போது, [உள்துறை மந்திரி
Claude]
Guéant
பற்றி ஒரு தீர்ப்பை நான்
கூறுவேன் என எதிர்பார்க்கிறீர்களா?... என்னுடைய பொறுப்பு பிரான்ஸ்
பாதுகாப்பிற்குட்பட்டிருக்க வேண்டும் என்பதுதான்.”
Guéant,
செயற்பாடுகளை நெருக்கமாக மேற்பார்வையிட்டு, சார்க்கோசியுடனும்
நெருக்கமான தொடர்புகளில் இருந்தார்; எனவே மேராவின் வீட்டை முற்றுகையிட்டு அவரைக்
கொல்லும் முடிவிற்கு அவர்தான் நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளார். வல்லுனர்கள் கொலை
தேவையற்றது, அவர் உயிருடன் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
சார்க்கோசி
மற்றும் அவருடைய பொலிஸ் எடுபிடிகளை மூடிமறைப்பதற்கு
Guéant
தொடர்ந்து முயன்றுள்ளார்.
வழக்கை நடத்துவதில் போலிசார் தவறுகளைச் செய்தனர் என்று அவர் கருதுகிறாரா, என்ற
கேட்கப்பட்டதற்கு அவர்
“முழு
விவகாரமும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.....தேர்தல்களுக்குப் பின்”
என தான் கோரப்போவதாக
அவர் கூறினார். “இதில்
எனக்கு அவசரம் ஏதும் இல்லை”
என்றார்
சார்க்கோசி
நியமித்துள்ள பொலிஸ் தலைமை அதிகாரிகளை தான் பதவிக்கு வந்த பின் அகற்றப்போவதாக
முன்னதாக ஹோலண்ட் உறுதியளித்திருந்தார், மற்றும் தேசிய பொலிசின் தலைமை இயக்குனர்
Frédéric Péchenard
அகற்ற இருப்பதாகக்
கூறியது பற்றி ஹோலண்டிடம் இப்பொழுது
Elkabbach
நினைவுபடுத்தினார். அதற்கு
அவர் விடையிறுத்தார்:
“அவருக்குப்
பதிலாக வேறு ஒருவரை உடனே நியமிக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை.”
சார்க்கோசியின் 2007 தேர்தல் பிரச்சாரத்திற்கு சட்டவிரோத நிதி கொடுத்தது பற்றி
விசாரிக்கும் செய்தியாளர்களின் தொலைபேசி உரையாடல்களை சட்டவிரோதமாகக் கண்காணிப்பதாக
எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள பேர்னார்ட் ஸ்கார்சினி குறித்து அவர்
கூறினார்:
“அவருடைய
செயற்பாடு குறித்து நாங்கள் கவனிப்போம்.”
மக்கள் மீது
உளவு பார்த்தல், எதிர்த்தரப்பைக் குற்றவாளிகளாக்குதல் என்ற வகையில் பொலிஸ்
அதிகாரங்களில் ஏற்பட்டுள்ள பரந்த அதிகரிப்பைக் குறைகூறாமல், அவர் உறுதிபடக்
கூறினார்:
“நடவடிக்கையை
செய்தவர்களைப் பற்றி நான் ஏதும் தீர்ப்புக் கூற விரும்பவில்லை.... நம்முடைய
கண்காணிப்பு மற்றும் உளவுத்துறைப் பணிகள் இன்னும் திறமையுடன் செயல்பட வேண்டும்
என்பதுதான் முக்கியம்.”
சார்க்கோசியின் பொலிசாரையும் உளவாளிகளையும் முகஸ்துதி செய்தவகையில், சார்க்கோசி
இக்கொலைகளைப் பயன்படுத்தி தேர்தல்களுக்கு முன்பு அரசியல் செயற்பாடுகளில் ஆதாயத்தை
எடுத்துக் கொள்ள ஹோலண்ட் பச்சை விளக்கைக் காட்டியுள்ளார்; இவை கிட்டத்தட்ட சட்டம்
மற்றும் ஒழுங்கு வெறித்தனச் சூழலுக்கு நடுவே நடைபெறுகின்றன, சார்க்கோசிக்கு ஆதாயம்
கொடுக்கின்றன. சார்க்கோசியினால் திறமையான அரசியல் தந்திரம் எனக் கருதக்கூடிய
செயலுக்கு, ஹோலண்ட் சவால் விடாதது இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது; ஏனெனில்
துலூஸ் கொலைகளில் இருந்து வரும் விளைவுகள் தேர்தலில் ஹோலண்டின் நிலைமையைக்
குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
ஏற்கனவே இது
கருத்துக் கணிப்புக்களில் பிரதிபலிப்பாகிறது. டிசம்பர் மாதம் இரண்டாம் சுற்று
பற்றிய விருப்பங்களைக் குறித்த கருத்துக் கணிப்புக்கள் 60% ஹோலண்டிற்கும் 40%
சார்க்கோசிக்கும் ஆதரவு எனக்கூறின. நேற்று Le
Monde
இந்த முன்னணிநிலை ஹோலண்டிற்கு 53.5% எனக் குறைந்துவிட்டது,
சார்க்கோசிக்கு 46.5% என அதிகரித்துவிட்டது என்று தகவல் கொடுத்துள்ளது. ஆனால்
செய்தித்தாள் தேர்தலைப் பொறுத்தவரை கொலைகள் பாதிப்பு எதையும் கொண்டிருக்கவில்லை
என்று வினோதமான முறையில் கூறியுள்ளது.
சார்க்கோசியின் சட்டம் மற்றும் ஒழுங்குத் தாக்குதலைச் சவாலுக்கு உட்படுத்தும்
முயற்சிக்குப் பதிலாக, ஹோலண்ட் எந்த அளவிற்கு
PS
உம் பொலிசுக்கு விரிவான
அதிகாரங்களைக் கொடுக்கிறது என்பதைத்தான் வலியுறுத்த முற்பட்டார். 2001ம் ஆண்டு
PS
தலைமையிலான பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன்னுடைய பன்முக இடது அரசாங்கமானது அரசிற்கு
இணைத்தளப் பயன்பாட்டாளர்கள் குறித்து உளவு நடத்தும் உரிமையைக் கொடுத்தது; இதுதான்
மேராவைக் கண்டுபிடிப்பதில் மத்திய பங்கைக் கொண்டிருந்தது என்று ஹோலண்ட் தன்
பேட்டியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நினைவுபடுத்தினார்.
ஹோலண்டும்
பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனமும்
“இடதில்”
உள்ளவர்களும்,
சார்க்கோசி விழையும் சட்டம் மற்றும் ஒழுங்குக் கொள்கைகளில் மற்றும் அவருடைய
தொழிலாளர் எதிர்ப்பு கொண்டுள்ள சமூகநலச் செலவுகள் குறைப்பிலுமுள்ள ஜனநாயக விரோதத்
தன்மையில் ஆழ்ந்த முறையில் உடந்தையாகத்தான் இருக்கின்றனர். சார்க்கோசி மற்றும்
ஹோலண்ட் இருவருமே சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய வனப்புரை மற்றும் இகழ்வான அரசியல்
நிகழ்ச்சி நிரலான சமூக எதிர்ப்புக்கள்,போருக்கு எதிரான உணர்வை ஒட்டி வரும் வெகுஜன
எதிர்ப்பை நசுக்குவதற்கு அடக்குமுறை அதிகாரங்கள் பொலிசிற்குக் கொடுக்கப்பட வேணடும்
என்பதைத்தான் நம்பியுள்ளனர்; ஐரோப்பா முழுவதுமே சமூக ஜனநாயக
“இடது”
மற்றும் கன்சர்வேடிவ் வலது ஆகியவை இந்நிலைப்பாட்டைத்தான்
கொண்டுள்ளன. இது சார்க்கோசி மற்றும் அவருடைய எடுபிடிகளுக்கு ஹோலண்ட் கோழைத்தனமாக
சரணடைந்துள்ளதைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. |