சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

வீட்டு உரிமையை பாதுகாத்திடு!

சோ.ச.க./ஐ.எஸ்.எஸ்.ஈ. கொழும்பில் கூட்டம்

1 September 2011

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பிரதான நகரங்களிலும் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள குடியிருப்பாளர்களின் வீட்டு உரிமையை பாதுகாத்துக்கொள்ளக் கூடிய வேலைத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக பகிரங்க கூட்டமொன்றை இந்த மாதம் 2ம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளன.

அக்டோபர் 8 அன்று கொழும்பு மாநகர சபை உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கு நடக்கவுள்ள தேர்தலில், விசேடமாக கொழும்பு நகரின் வறிய குடியிருப்பாளர்களின் வீட்டு உரிமை பற்றிய பிரச்சினை தீர்க்கமானதாக முன்னிலைக்கு வந்துள்ளது. நகரில் வாழ்கின்ற குறைந்த வருமானம் பெறும் 70,000 குடும்பங்களை அகற்றுவது உட்பட ஒரு தொகை தாக்குதல்களை பற்றி ஒரு வருடத்துக்கு முன்னதாகவே அரசாங்கம் அறிவித்துவிட்டது. இவை கொழும்பு நகரை வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டங்களின் பாகமாகும். 

ஆயினும் அந்த திட்டத்துக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனது தேர்தல் பிரச்சாரத்தில், கொழும்பு நகரில் இருந்து எந்தவொரு குடும்பத்தையும் வெளியேற்றப்போவதில்லை என்றும், குடிசைவாசிகளுக்கு அதே இடத்தில் சிறந்த வீடுகளை கட்டிக்கொடுப்பதாகவும் போலி வாக்குறுதிகளை கூறிவருகின்றது. எப்படியாவது கொழும்பு நகரின் அதிகாரத்தை பற்றிக்கொண்டு, வறிய குடியிருப்பாளர்களை வெளியேற்றி, அந்த நிலங்களை வர்த்தகர்களுக்கு வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.

எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியிடமோ (யூ.என்.பீ.) மக்கள் விடுதலை முன்னணியிடமோ (ஜே.வி.பீ.) வேறு மாற்றீடுகள் கிடையாது. அவை மக்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்காக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. அவை இரண்டும் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் உடன்பாடு கொண்டுள்ளன. விசேடமாக கொழும்பு நகரை வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஆரம்ப சிருஷ்டிகர்த்தா யூ.என்.பீ.யே ஆகும். யூ.என்.பீ. ஆட்சியின் கீழ் கொழும்பு நகரில் இருந்து வறிய குடும்பங்கள் பல முறை வெளியேற்றப்பட்டுள்ளன.

இந்த நிலைமையின் கீழ், நவசமசமாஜக் கட்சியும் இதே போன்ற பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக செயற்படும் மக்களின் சுயாதீன போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவடைந்த உடனேயே, கொழும்பிலும் ஏனைய பிரதான நகரங்களிலும் வறிய குடியிருப்பாளர்களை விரட்டியடிக்கும் திட்டத்தை அமுல்படுத்துவது ஆரம்பமாகும். அதனால், அந்த தாக்குதல்களுக்கு எதிராக தமது வீட்டு உரிமையை பாதுகாப்பது எப்படி என்பது அந்த மக்கள் முன்னால் உள்ள தீர்க்கமான பிரச்சினையாக முன்வந்துள்ளது. சோ.../.எஸ்.எஸ்.. கூட்டத்தில், அதற்கான ஒரே உண்மையான வேலைத்திட்டமான சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடப்படும். கொழும்பில் குடியிருக்கும் வறியவர்கள் உட்பட தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் எங்களது கூட்டத்திற்கு வருகை தந்து அந்த அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

திகதியும் நேரமும்: அக்டோபர் 2, ஞாயிறு மாலை 3.00 மணி

இடம்: என்.எம். பெரேரா நினைவு நிலையம், கோடா ரோட், பொரலை