World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Wealth and poverty in America

அமெரிக்காவில் செல்வமும் வறுமையும்

Joseph Kishore
23 September 2011

Back to screen version

இந்த வாரம் வெளிவந்துள்ள இரு அறிக்கைகள் அமெரிக்காவில் அதிர்ச்சிதரும் வகையில் பெருகும் சமூக சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகின்றன. வரலாற்றில் முன்னோடி இல்லாத அளவிற்கு செல்வம் ஒரு சிலரின் கரங்களில் குவிந்திருப்பது, பெரு மந்தநிலைக்குப் பின் காணப்படாத பெரும்பான்மை மக்களின் வறுமை என்பதின் பின்விளைவாகும்.

புதன் அன்று போர்ப்ஸ் சஞ்சிகை ஒவ்வொரு ஆண்டும் அது வெளியிடும் 400 மிகப் பெரும் அமெரிக்கச் செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டது. இவர்களுடைய மொத்த சொத்துக்களின் நிகர மதிப்பு $1.53 டிரில்லியன் என உயர்ந்ததாகும். கடந்த ஆண்டை விட இது 12% உயர்ந்துள்ளது. இப்பட்டியலைத் தயாரிப்பதற்கு, குறைந்த பட்சம் $1.05 பில்லியன் செலவிடப்பட நேர்ந்தது. அதுவே ஒரு அமெரிக்க மத்தியதர இல்லத்தின் நிகர மதிப்பைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிகம் ஆகும்.

இப்பட்டியலின் உயரிடத்தில் சில வாடிக்கையான பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஊக வணிகர்கள் இருந்தனர். மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பில் கேட்ஸ் ($59 பில்லியன், கடந்த ஆண்டின் $54ல் இருந்து உயர்ந்துள்ளது); தனியார் முதலீட்டு நிதிய மேலாளர் வாரன் பஃபே ($39 பில்லியன்); ஓரேக்கிள் உயரதிகாரி லரி எல்லிசன் ($33 பில்லியன்); வால்மார்ட்டின் சொந்தக்காரர்களான வால்டன் குடும்பம் ($20.9 பில்லியனில் இருந்து $25 பில்லியன் வரை). மேலும் பலர் உள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க உண்மை பெரும்செல்வந்தர்கள் பட்டியலில் மிக அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ள துறை முதலீட்டாளர்கள், ஆகும்; அதாவது, நிதியச் சந்தைகளில் ஊகவணிகம் நடத்துவதை முதல் தொழிலாக கொண்ட தனிநபர்கள். இப்பட்டியலில் உற்பத்தித்துறையில் இருக்கும் எண்ணிக்கையான 4 என்பதுடன் ஒப்பிடுகையில் இவ்விதத்தில் ஈடுபட்டுள்ள 96 பேர் இருந்தனர்.

இச்சமூக அடுக்கின், சமூகம் முழுவதுடன் அது கொண்டுள்ள முற்றிலும் ஒட்டுண்ணித்தனத் தன்மைக்கு ஒரு மாதிரிதான் தனியார் முதலீட்டு நிதிய மேலாளர் ஜோன் போல்சன் ஆவார். பட்டியலில் 17வது இடத்தில் உள்ள இவருடைய சொத்து $15.5 பில்லியன் ஆகும். போல்சன் புதிர் பற்றி போர்ப்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளதுபௌல்சனுடைய சொந்தச் சொத்துக்கள் 25% அதிகம் ஆகிவிட்டன. ஆனால் அவர் செயல்படுத்தும் முக்கிய தனியார் முதலீட்டு நிதியின் சொந்து மதிப்பு 30% குறைந்துவிட்டது; அதிற்கு காரணம் பாங்க் ஆப் அமெரிக்கா இன்னும் பிற பங்குகளில் மோசமான பந்தயங்களைக் கட்டியது ஆகும். கடந்த ஆண்டு போல்சன் தனிப்பட்ட வருமானமான $4.9 பில்லியனைக் கொண்டிருந்தார்.

இந்த அடுக்கின் பெருகும் செல்வம் நிதிய அமைப்புமுறையில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் உட்செலுத்தப்பட்டதின் நேரடி விளைவுதான். இதற்கு ஒபாமா நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டது. பல தலைமுறைகளாகக் காணப்படாத மிகப் பெரிய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த அட்டூழியம் நிறைந்த ஊக வணிகம் நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஊக வணிகர்கள் முன் எப்பொழுதையும் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.

ஒருபுறம் பரந்த செல்வம் என்பது மறுபுறம் வெகுஜன வறிய நிலை என்பதுடன் இணைந்து வந்துள்ளது. வியாழன் அன்றே, அமெரிக்க குடிசனமதிப்பீட்டு அமைப்பு, அமெரிக்கச் சமூக அளவை என்னும் அதன் விரிவான அறிக்கையை வறுமை, வருமானம் மற்றும் நாட்டின் பல துறைகள் குறித்து வெளியிட்டது; முக்கிய நாடுகள், நகரங்கள் ஆகியவை பற்றிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன.

வியாழக்கிழமை வந்த அறிக்கை இம்மாதம் முன்னதாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை தொடர்கிறது. அதில் வறுமையில் வாழும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளது. வறுமை என்பது நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு $22,000 வருமானம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 46.2 மில்லியன் என்று இதுகாறும் இல்லாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. உத்தியோகபூர்வ வறுமைக்கோடு என்பது 15.1 சதவிகிதம் ஆகும். அதாவது ஆறு பேரில் ஒருவர் வறுமைக்கோட்டின்கீழ் உள்ளார். சிறுகுழந்தைகள் வறுமை விகிதம் 22 சதவிகிதம் ஆகும்.

நாட்டின் சில பிராந்தியங்களில் வறுமை வளர்ச்சி அத்துடன் சமத்துவமின்மையின் அளவு இன்னும் அதிர்ச்சிதரக்கூடிய வகையில் உள்ளதுவோல் ஸ்ட்ரீட்டின் தாயகமான நியூ யோர்க்கில், நாட்டின் பல பகுதிகளில் இருப்பதை விட வாழ்க்கைச் செலவுகள் மிக உயர்வாக இருக்கும் நகரில், உத்தியோகபூர்வ வறுமைவிகிதம் கடந்த ஆண்டு 20.1% உயர்ந்து, 30% என ஆயிற்று. இது மீட்பு தொடங்கிவிட்டது எனக் கூறப்படுவதற்கு ஓராண்டிற்குப் பின் ஆகும்.

போல்சனுடைய சொந்தச் சொத்து $15.5 பில்லியன் என்பது நியூயோர்க் நகரத்தின் பெருநகரப் பகுதியிலுள்ள கீழ்மட்ட 20% நிகர வருமானம் பெறுவோரின் மொத்த வருமானத்திற்கு ஒப்பாகும். அதாவது கிட்டத்தட்ட 1.6 மில்லியன் மக்களுடைய வருமானத்திற்கு ஒப்பாகும்.

அமெரிக்காவில் உற்பத்தித்துறைச் சரிவின் மையமான டெட்ரோயிட்டில், வறுமை விகிதம் 37.6 என உள்ளது. நகரத்தில் உள்ள குழந்தைகள் அனைவரிலும் பாதிப்பேருக்கு மேல்அல்லது 53.6%--வறுமையில் வாழ்கின்றனர். மிச்சிகன் மாநிலம் முழுவதிற்கும், வறுமை விகிதம் 16.8% உயர்ந்தது. நடுத்தர வருமானம் 19.3% சரிந்தது; அதாவது 2000ம் ஆண்டில் இருந்து ஐந்தில் ஒரு பங்கு என.

கலிபோர்னியாவில் 6 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழே 2010ல் வாழ்ந்தனர். இது 16.3% ஆகும். முந்தைய ஆண்டில் 15.3 என இருந்தது. இதே போன்ற புள்ளிவிவரங்கள்தான் அநேகமாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன.

அதிகரிக்கும் வறுமைக்கு, முன்னோடியில்லாத வேலை நெருக்கடி உந்துதல் கொடுக்கிறது. இதன் அளவு உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதமான 9.1% என்பதால் மூடி மறைக்கப்படுகிறது. வேலைக்கும் மக்கட்தொகைக்கும் இடையே உள்ள விகிதமும் கடந்த சில ஆண்டுகளில் சரிந்துவிட்டது. ஒரு உதாரணத்தை மேற்கோளிட வேண்டும் என்றால்: 16-29 வயதில் உள்ள இளைஞர்களில் 55% பேர்தான் கடந்த ஆண்டு வேலையில் இருந்தனர். இது 2000த்தில் இருந்த 67.3% என்பதில் இருந்து குறைந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது.

இம்மாதத்திற்கு மூன்று ஆண்டுகள் முன்னதாக லெஹ்மன் பிரதர்ஸ் முதலீட்டு வங்கிகளின் சரிவு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. அது உலகம் முழுவதையும் ஒரு புதிய மந்த நிலையில் தள்ளியது. அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தேர்ந்தெடுப்படுவதற்கு முன், உலக சோசலிச வலைத் தளம் நெருக்கடிக்கு சமூகத்தின்-நடுநிலையானபிரதிபலிப்பு ஏதும் இராது, அமெரிக்காவின் தலைமையில் உலக அரசாங்கங்களின் பதில் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் நலன்களினால் ஆணையிடப்பட்டு செயல்படுத்தப்படும், அவைதான் முழு அரசியல் முறையையும் கட்டுப்படுத்துகின்றன என விளக்கியது.

தற்போதைய நிலைமைகள் இந்நெருக்கடியை ஆளும் வர்க்கம் எதிர்கொண்ட முறையில் விளைவுகள்தாம். முழு அரசியல் நடைமுறையையும் இழிவாகக் கண்டனத்திற்கு இவை உட்படுத்துவதுடன் அது பாதுகாக்கும் முதலாளித்துவ முறையையும் கண்டனத்திற்கு உட்படுத்துகிறது.

இப்பொழுது, புதுப்பிக்கப்படும் பொருளாதாரச் சரிவு என்ற நிலைமையின்கீழ், உலகப் பொருளாதார வளர்ச்சி தாமதம் அடைகிறது. ஐரோப்பா ஒரு நிதியச் சரிவின் விளிம்பில் உள்ளது. ஆளும் வர்க்கம் இதை எதிர்கொள்ளும்விதம் கடும் சிக்கன நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறுவதுதான்.

அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் முன்னோடியில்லாத வகையில் சமுகநலத் திட்டங்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கிறது; இந்த வாரம் அரசாங்கச் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களைக் குறைக்கும் திட்டத்தை வெளியிட உள்ளது. அடுத்த இரு மாதங்களில் வாஷிங்டன் எந்த அளவிற்கு இது மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு இன்னும் பிற சமூகநலத் திட்டங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம், இறுதியில் தகர்க்கப்படாம் என்பது பற்றிய விவாதங்களைத்தான் ஏற்படுத்தும்.

வியாழன் அன்று நிதி மந்திரி டிமோதி கீத்னர், சந்தைகளில் கொந்தளிப்பு என்பதின் பொருள் இன்னும் கூடுதலான ஆற்றலுடன் இந்நடவடிக்கைகளை செயல்படுத்துவதின் தேவை என்பதாகும் என வலியுறுத்தினார். நீண்டகால சவால்களான வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் நிதிய நிலைப்பாட்டை தக்கவைத்தல்ஆகியவற்றை வாஷிங்டன் தீர்க்க முடியுமா என்றும் அவர் கவலை கொண்டுள்ளார்வேறுவிதமாகக் கூறினால், பெருநிறுவனங்களுக்கான விரிவிதிப்புக் குறைப்புக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு நலன்கள் கொடுக்கும் ஒவ்வொரு திட்டத்திலும் தீவிர குறைப்புக்கள் தேவை என்பதாகும்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடிக்குத் தன் சொந்த பதிலான வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். பரந்த போராட்டம் தவிர வேறு எதன் மூலமும் நலன் பெறப்பட முடியாது என்ற உணர்வுடன் இது தொடங்க வேண்டும். உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்தும், ஜனநாயகக் கட்சிக்கு அரசியல்ரீதியாக அடிபணிந்து நிற்றல் என்பவற்றில் இருந்து முறித்துக் கொள்ளுதல் தேவையாகும்.

பெருநிறுவன, நிதியப் பிரபுத்துவத்தின் செல்வம், அதிகாரம் ஆகியவற்றின் மீது தாக்குதலை தொடராத வகையில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு நெருக்கடிக்கு எத்தீர்வும் கிடையாது. இதற்கு Fortune 400 ன் பரந்த செல்வங்களை எடுத்துக் கொள்ளுதல், மற்றும் ஆளும் உயரடுக்கில் உள்ள பிறரின் சொத்துக்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நிதிய நிறுவனங்களும் அவை கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள பெருநிறுவனங்களும் சமூகத் தேவையின் நலனகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்பட வேண்டும்.

ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற தாக்குதலை எதிர்ப்பதற்கு, மிகக் குறைந்த சீர்திருத்தங்களை சாதிப்பதற்கான போராட்டத்திற்குக் கூட பின்வரும் புரட்சிகர கடமைகளை முன்வைக்கின்றது. வெகுஜனப் போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன, தொழில்துறை ரீதியான, அரசியல் ரீதியான அணிதிரட்டல் மற்றும் அரசியல் அதிகாரத்தை வெல்லும் நோக்கமும், பொருளாதார வாழ்வு சோசலிச முறைக்கு மாற்றப்படுதல் ஆகியவை தேவையாகும்.