WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும்
பெருகுகின்றன
By Christoph Dreier
27 September 2011
use
this version to print | Send
feedback
“இன்று
தெருக்களில் நாம் செல்வதுகூட பாதுகாப்பற்றுப் போய்விட்டது”
என்று கிரேக்க ஆளும் கட்சி
PASOK
இன்
அரசியல்வாதி
Frankfurter Rundschau
விடம் கூறினார்.
“நாம்
அரசாங்கம்தான்,
ஆனால் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம்.”
கிரேக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிரான பரந்த மக்கள் சீற்றம்
சமீபத்திய சுற்று சிக்கன நடவடிக்கைகளினால் இன்னும் தீவிரமடைந்துள்ளது.
சமூக ஜனநாயக
PASOK
மற்றும்
கன்சர்வேடிவ் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகம்
(ND)
ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் முட்டைகளாலும்,
சில நேரங்களில் கற்களாலும் அவர்கள் பொது இடங்களில் தோன்றும்போது அடிக்கப்படும்
நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன.
சீற்றமடைந்துள்ள கூட்டங்கள் பல முறையும் அரசியல்வாதிகளுடைய வீடுகளை முற்றுகையிட்டு
“திருடர்கள்”,
“திருடர்கள்”,
“பணத்தைத்
திருப்பிக் கொடுங்கள்”
என்று கூச்சலிடுகின்றன.
Eurobarometer
நடத்தியுள்ள கருத்துக் கணிப்புக்களின்படி,
கிரேக்கர்களில்
82
சதவீதமானோர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்,
83
சதவீதமானோர்கள் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
67
சதவீதமானோர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நம்பவில்லை.
மற்ற கருத்துக் கணிப்புக்கள்
PASOK
இன்று
மொத்த வாக்குகளில்
15.5
சதவிகிதத்தைதான் புதிய தேர்தல்களில் பெறும் என்று காட்டுகின்றன.
ஒருபுறம் உழைக்கும் மக்களுக்கும் மறுபுறம் அரசாங்கத்திற்கும் இடையே
இருக்கும் மிகப் பெரிய பிளவு ஞாயிறன்று ஏதென்ஸில் சின்டகமா சதுக்கத்தில் நடந்த
ஆர்ப்பாட்டத்தில் நன்கு வெளிப்பட்டது.
Eleftherotypia
நாளேட்டின்படி,
ஆயிரக்கணக்கான வீடற்ற மக்கள்,
குழந்தைகளுடன் இளம் தம்பதிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அமைதியான முறையில்
அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக்
கொண்டிருந்தனர்.
“முக்கூட்டான”
IMF, ECB
மற்றும்
ஐரோப்பிய ஆணையம் ஆகியவை இயற்றியுள்ள
“குறிப்பு”
பற்றி அவர்கள்
“உங்கள்
குறிப்பை எடுத்துக் கொண்டு இங்கிருந்து வெளியேறுங்கள்”
என்று உரக்கக் கூச்சலிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் துறைமுகத் தொழிலாளர்கள்,
வங்கி ஊழியர்கள்,
மின்சாரத் துறை ஊழியர்கள்
(DEI),
ஆசிரியர்கள் தங்கள் வேலைகளை இழந்து ஓய்வுதியங்கள்
40
சதவிகிதம் குறைக்கப்பட்டுவிட்ட முன்னாள் ஒலிம்பிக் ஏயர்லைன்ஸின் ஊழியர்கள் ஆகியோர்
இருந்தனர்.
முக்கூட்டின் பிரதிநிதிகள் கிரேக்க மக்களுக்கு காட்டும் இகழ்வு
மற்றும் திமிர்த்தனம் சனிக்கிழமை
கார்டியன்
செய்தித்தாளில் வந்துள்ள அறிக்கை ஒன்றில் நன்கு புலனாகிறது.
இக்கட்டுரை எப்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த வந்த தொழில்துறை வல்லுனர்கள்
தங்கள் பஸ்ஸில் இருந்து சின்டக்மா சதுக்கத்தில் ஞாயிறு ஆர்ப்பாட்டத்திற்கு சற்று
முன் தாங்கள் ஓட்டலுக்கு செல்லும் வழியில் இறங்கினர் என்று விவரிக்கிறது.
“அவர்கள்
சதுக்கத்திற்குச் சற்றுத் தள்ளி உள்ள நடைபாதைத் தெரு ஒன்றில் எர்முவிற்கு அருகே ஒரு
படுத்துக் கிடப்பது போல் கிடந்த ஒரு மனிதனைக் கடந்து நடந்தனர்.
பின் ஒரு கார்ட்போர்ட் அட்டையில் தலையைக் கைகளால் முட்டுக்கொடுத்துப்
படுத்துக்கிடந்த மற்றொரு மனிதனைப் பார்த்தனர்;
இதன் பின் தலைவிரி கோலமாக இருந்த குடியேறிய நபர் ஒருவர் இரு கைகளையும் உயர்த்தி,
“திருவாளர்,
திருவாளர்,
யூரோ,
திருவாளர்”
என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தவரையும் கண்டனர்.”
கிரேக்க மக்கள் படும் கஷ்டங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல்,
ஐரோப்பா முழுவதும் வர்க்கப் போர்க் கொள்கையைத் தொடர்வதில் ஈடுபட்டுள்ள வகையில்
முக்கூட்டின் வல்லுனர்கள் அனைவரும்
கார்டியன்
கருத்துப்படி,
“தளத்தில்,
நிலைமை இன்னும் மோசமாகிவிடும்”
என்று உடன்பட்டுச் சென்றனர்.
ஞாயிறு எதிர்ப்பில் அமைதித்தன்மை இருந்தபோதிலும்கூட,
பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டையும் பொலிஸ் கம்புகளையும் பயன்படுத்தி
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
11
குழந்தைகள் தாக்குதலுக்கு உட்பட்டன,
ஒரு பெண் மருத்துவமனையில் தீவிர காயத்துடன் அனுமதிக்கப்பட்டார்.
பொலிசைக் கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள்
“இராணுவ
ஆட்சி
1973ல்
முடியவில்லை”
என்று கூவினர்—இது
கிரேக்கத்தை
1967ல்
இருந்து
1974
வரை
ஆட்சி செய்த மிருகத்தனமான கேர்ணல்களின் சர்வாதிகாரத்தைக் குறித்தது.
“நாம்
அதிக அளவில் கூடினால்,
இவர்கள் நம்மைப் பயமுறுத்த முடியாது”
என்றார் ஒரு ஓய்வுதியம் பெறுபவர்.
அப்பெண்மணி தன் குழந்தைகளைப் பற்றிக் கூறினார்.
அவர்கள் தங்கள் படிப்பை நிறுத்திவிட்டு இப்பொழுது வேலையின்றி உள்ளனர்.
கிரேக்கம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
நாடு முழுவதும்
159
பள்ளிகள் கல்வி முறைக்கு கொடுக்கப்படும் நிதிகளில் ஏற்பட்டுள்ள வெட்டுக்களை
எதிர்த்து பள்ளிகளை ஆக்கிரமித்துள்ளனர்.
பட்ராஸ் நகரத்தில் மட்டும்
30
பள்ளிகள் எதிர்ப்பில் சேர்ந்துள்ளன.
இந்த வாரம் டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தம் செய்யத்
திட்டமிட்டுள்ளனர்.
திங்களன்று மெட்ரோ,
டிராம் மற்றும் நகர இரயில் போக்குவரத்து ஆகியவை
24
மணி
நேரம் பணியை நிறுத்தின.
சுகாதார அமைச்சரகத்தின் முன் துணை மருத்துவ ஊழியர்கள்,
பணியாளர்கள் மற்றும் போதை அடிமையை நீக்கும் சிகிச்சை மையத்திற்கு ஆதரவு தருபவர்கள்
ஆகியோர் நிதியுதவிகள்,
பணியாளர்களில் வெட்டுக்களுக்கு எதிராக மனிதச் சங்கிலி ஒன்றை அமைத்தனர்.
விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பல நாட்களாக ஒழுங்குமுறை விதிக்கு ஏற்ப வேலை
என்னும் செயலில் ஈடுபட்டுள்ளனர்;
இது பல தாமதங்களையும் பயண இரத்துக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்ப்புக்கள் கிரேக்கத் தொழிலாளர்களின் பெருகிய சீற்றம்
மற்றும் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு ஆகும்;
இவர்கள் ஏற்கனவே ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் இந்த ஆண்டு
30
சதவிகித
வெட்டைக் கண்டுள்ளனர்;
அதே நேரத்தில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள்
100
சதவிகிதிம் உயர்ந்துவிட்டன.
முக்கூட்டு
கிரேக்கம் கடன் கொடுக்க முடியாமற் போவதைத் தடுப்பதற்கு கொடுக்க இருக்கும்
நெருக்கடிக் கடன்களை அளிப்பதற்கு இந்த
“நிதிய
ஒருங்கிணைப்பை”
ஒரு முன்னிபந்தனையாகச் செய்துள்ளது.
ஆனால் சமூக நலச் செலவுக் குறைப்புக்கள் கணித்ததைவிடக் கூடுதலான
மந்தநிலையைத்தான் தோற்றுவித்துள்ளன.
வரிமூலம் கிடைக்கும் வருவாய்கள் சரிந்துவிட்டன,
கிரேக்கக் கடன் சுமை அதிகரித்துவிட்டது,
அரசாங்கம் முக்கூட்டு நிர்ணயித்துள்ள பற்றாக்குறை வரவு-செலவுத்
திட்டக் குறைப்பு இலக்குகளை நிறைவு செய்யத் தவறிவிட்டது.
IMF, EU
மற்றும்
ECB
ஆகியவற்றின் பிரதிநிதிகள்
8
பில்லியன் யூரோக்கள் தவணை பிணை எடுப்பு நிதிப் பொதியை கொடுப்பதற்கு முன்னிபந்தனையாக
கூடுதலான சிக்கன நடவடிக்கைகளைக் கோரியுள்ளனர்.
அந்த நிதி இல்லாவிட்டால் கிரேக்கம் அக்டோபர் நடுப்பகுதிக்குள் திவாலாகிவிடும்.
கடந்த வாரம் அரசாங்கம் இன்னும் கூடுதலான வெட்டுக்களை ஓய்வூதியங்கள்,
ஊதியங்கள் இவற்றில் அறிவித்து,
30,000
அரசப்
பணியாளர்களைப் பணிநீக்கமும் செய்தது.
இதைத்தவிர,
நுகர்வோர் வரிகளில் புதிய அதிகரிப்புக்கள் சுமத்தப்பட உள்ளன.
ஏற்கனவே கிரேக்கம் யூரோப் பகுதியில் மிகக் குறைந்த வருமானத் தரத்தை
உடைய நாடு ஆகும்
(சராசரியில்
51%).
தொழிலாளர்களில் கிட்டத்தட்ட
80
சதவீதமானோர்கள் மாதம்
1,500
யூரோக்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர்;
61
சதவீதமானோர்கள்
1,000
யூரோக்கும் குறைவான ஊதியத்தைப் பெறுகின்றனர்.
24
வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களில்
30
சதவீதமானோர்களுக்கு வேலைகள் இல்லை;
வேலை இல்லாதவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்தான் குறைந்த அரசாங்க ஆதரவான
454
யூரோ
மாதத்திற்கு எனப் பெறுகின்றனர்.
இந்த வெட்டுக்கள் ஐரோப்பா முழுவதும் ஆளும் உயரடுக்கினால் தொழிலாள
வர்க்கத்திற்கு எதிரான பொதுத்தாக்குதலில் ஒரு பகுதி ஆகும்.
இந்த நெருக்கடி ஒரு சமூக எதிர்ப்புரட்சியை நடத்த பயன்படுத்தப்படுகிறது;
அது தொழிலாள வர்க்கத்தின் கடந்த கால சமூக நலன்கள் அனைத்தையும் அழிக்கும்
நோக்கத்தைக் கொண்டது.
வெகுஜன வறுமை என்பது சமூகத்தின் ஒரு முனையில் பெருகிவருகிறது;
மற்றொரு முனையில் நிதிய-பெருநிறுவன
உயரடுக்கு தன் பரந்த செல்வத்திற்கு இன்னும் சேமிப்பைக் கொண்டுள்ளது.
2008ம்
ஆண்டு கிரேக்க அரசாங்கம்
106
பில்லியன் யூரோக்களை வங்கிகளுக்கு அவை சரிவில் இருந்து காப்பாற்றப்பட மாற்றியது.
கடந்த ஜூன் மாதம் செய்தி ஏடு
Der
Spiegel
கொடுத்துள்ள புள்ளிவிபரங்களின்படி,
இப்பணம் கிரேக்க மில்லியனர்கள்,
பில்லியனர்களால் சுவிஸ் வங்கிக் கணக்குகளில் ஒதுக்கப்பட்டுவிட்டன;
அவற்றின் மொத்தத் தொகை
600
பில்லியன் யூரோக்கள் ஆகும்.
இது கிரேக்க மொத்தப் பொதுக்கடனைப் போல் இரு மடங்கு ஆகும்.
ஆளும் உயரடுக்குகள் ஏற்கனவே தொழிலாளர்களின் எதிர்ப்பை மீறித்
தாங்கள் சிக்கன நடவடிக்கையைச் சுமத்த அனைத்தையும் செய்யத்தயார் என்பதைத்
தெளிவாக்கிவிட்டனர்.
முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகள் இந்த வாரம் தாங்கள் ஒரு முறையான திவாலுக்கு
ஏற்பாடு செய்தல் என்னும் கருத்தை ஒதுக்கிவிடவில்லை என்று வலியுறுத்தினர்;
இது கிரேக்கத் தொழிலாளர்களின் எஞ்சியுள்ள சமூகநல ஆதாயங்கள் அனைத்தையும் ஒரே
கணத்தில் அழித்துவிடும்.
அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை கிரேக்க ஆளும் உயரடுக்கு
சர்வாதிகார ஆட்சி வகைகளுக்கு ஒரு மாற்றத்திற்கான தயாரிப்பைச் செய்து வருகிறது
என்பதைக் காட்டுகிறது.
நிதிய உயரடுக்கு மற்றும் தொழிலாளர்களுக்கு இடையேயுள்ள மோதல் இன்னும்
தீவிரமடையும்.
இந்நிலையில்,
தொழிற்சங்கங்களும் அவற்றின் போலி இடது நட்பு அமைப்புக்களும் வெகுஜன தொழிற்துறை
நடவடிக்கை,
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கம் ஆகியவை
PASOK
அரசாங்கம்,
கிரேக்க ஆளும் வர்க்கம் ஆகியவற்றிற்கு எதிராக வருவதைத் தடுப்பதில் முக்கிய பங்கைக்
கொண்டுள்ளன.
தொழிற்சங்கங்கள் தம்மால் இயன்ற அளவு தொழிலாளர்களின் சீற்றத்தை
தீமைதராத எதிர்ப்பு வகைகளில் திருப்பிவிட்டு,
அரசாங்கம்,
ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்களுடன் தீவிர மோதல் வராமல் பார்த்துக் கொள்கின்றன.
இப்பொழுது இரு பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களான
ADEDY, GSEE
இரண்டும் அக்டோபர் வரை நாடுதழுவிய போராட்டங்கள் அனைத்தையும் ஒத்திவைத்துள்ளன.
அவை மீண்டும் ஒருநாள் வேலைநிறுத்தங்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் அக்டோபர்
5, 19
திகதிகளில் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இது கிரேக்க அரசாங்கத்திற்கு புதிய சமூகத் தாக்குதல்கள் பொதியை செயல்படுத்த
மூச்சுவாங்கும் அவகாசத்தை அளித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் இத்தகைய
“பொது
வேலைநிறுத்தங்கள்”
பலமுறையும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றன;
இவை போராளித்தன எதிர்ப்பைச் சிதைத்தல் மற்றும் தொழிலாளர்களுக்கு உளைச்சல் தரும்
தன்மையைத்தான் கொண்டவை.
தீவிர இடது,
ஜேர்மனிய இடது கட்சியுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டுள்ள
SYRIZA
ஆகியவற்றின் கூட்டணி தொழிலாளர்களை
PASOK
அரசாங்கத்துடன் பிணைக்கும் வகையில்
“அனைத்து
முற்போக்குச் சக்திகளின்”
கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்னும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
இதில்
PASOK,
கிரேக்கத்தின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி
(KKE)
ஆகியவையும் இருக்கும்.
அத்தகைய அரசாங்கம் எந்த வகையிலும்
“முற்போக்கானதாக”
இராது.
ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும்
“இடது”
அரசியல் கட்சிகளானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முக்கூட்டின் திட்டத்தைச்
செயல்படுத்தப் பயன்படுத்தும்.
|