WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சுக் கார்த் தொழிலாளர்கள் 23 விகித ஊதிய வெட்டிற்கு எதிராக வேலைநிறுத்தம்
By Antoine Lerougetel
24 September 2011
use
this version to print | Send
feedback
மத்திய பிரான்சில்
Poitiers
க்கு
அருகே
Ingrandes
ல் உள்ள
Fonderies due Poitou
ஆலையின்
400
தொழிலாளர்கள் செப்டம்பர்
2ம்
திகதியிலிருந்து ஊதியங்களில் அவர்கள்
23 %
குறைப்பை ஏற்க வேண்டும் என்னும் நிர்வாகத்தின் கோரிக்கைக்கு எதிராக வேலைநிறுத்தம்
செய்து வருகின்றனர்.
கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும்
Montupet
உடைய
“போட்டித்தன்மை
திட்டத்தின்”
ஒரு பகுதியாக அனைத்து உற்பத்திச் செலவுகளும்
15
முதல்
20%
குறைக்கப்படுவது இருக்கிறது.
பிரான்ஸ் மற்றும் உலகம் முழுவதும் கார்த் தொழில்துறையில் அதன்
தொழிலாளர் தொகுப்பை பெரிதும் சுரண்டுதல் அதையொட்டி செலவுகளைக் குறைத்தல் என்னும்
உந்துதலில் இப்பொழுது இயல்பாகக் காணப்படுகிறது.
இதில் குறிப்பாக ஐரோப்பிய,
வட அமெரிக்க கார்த் தொழில்கள் உலக கார் சந்தையின் கடுமையான நிலைமைகளில்
போட்டியிடும் வகையில் மறு சீரமைப்பு தேவைப்படுகிறது;
இது ஆழ்ந்து போகும் பொருளாதார நெருக்கடியினால் இன்னும் தீவிரமாகியுள்ளது.
இந்த ஆலையின் முழு உற்பத்தியான அலுமினிய சிலிண்டர் பாக அளிப்புக்கள்
இரு முக்கிய பிரெஞ்சுக் கார் நிறுவனங்களுக்கு செல்லுகின்றன:
85%
ரெனோல்ட்டிற்கும்
15% PSA Peugeot-Citroen
க்கும்.
ஆலையில் கார் இணைப்புப் பிரிவுகள் பூசல் ஏற்பட்டால் அந்த நேரத்தில் சமாளிப்பதற்காக
20
வாரங்களுக்கு தேவையான பாகங்களை சேமிப்பில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
1980ம்
ஆண்டு ரெனோல்ட்டினால் கட்டமைக்கப்பட்ட இந்த ஆலை அப்பொழுது முதல் பல முதலாளிகளைக்
கண்டுவிட்டது.
2009ல்
Montupet
இதை
எடுத்துக் கொண்டதில் இருந்து உற்பத்தித்திறன் தொழிலாளர் தொகுப்பை மிக அதிகம்
சுரண்டுவதின் மூலம்
30%
உயர்ந்துவிட்டது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான உடல் உழைப்பு மற்றும் சுகாதாரமற்ற சூழலால் அதிக நோயாளிப்பட்டியல்
ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தகவல்கள் கொடுத்துள்ளன.
இந்தப் பிராந்தியித்தின் தொழில்துறைத் தளம் கடந்த
10
ஆண்டுகளில் பேரழிவிற்கு உட்பட்டுவிட்டது.
2009ல்
New Fabris
தொழிலாளர்கள் ஓர் ஆலை மூடலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு தோல்வியுற்றதால்
பெரும் திகைப்புடன் அதை தகர்த்துவிடுதாகக் கூறிய அச்சுறுத்தல் பத்திரிகை
தலைப்புக்களை எங்கும் ஈர்த்தது.
இப்பிராந்தியித்தில் இன்னும் ஆலை முடல் என்பது ஒரு பெரும் சமூக பேராபத்தை
கொடுத்துவிடும்.
Montupet
குழுவின் இயக்குனர் குழு மார்ச்
31ம்
திகதி கொடுத்த அறிக்கை ஒன்றின்படி,
“நிறுவனத்தின்
தொழில்துறைச் சொத்துக்கள் இன்று மூன்று
“குறைந்த
செலவுகள் உடைய”
ஆலைகள்
(மெக்சிகோ,
இங்கிலாந்து மற்றும் பல்கேரியாவில் இருப்பவை)
மற்றும் சற்றுக் குறைந்த போட்டித்தன்மைகள் உடைய பிரான்ஸ்,
ஸ்பெயின் ஆலைகளால் நிறைவு செய்யப்படுகிறது.”
இங்கிலாந்தை குறைந்த செலவுகள் உடைய பட்டியலில் சேர்த்திருப்பது முன்னேற்றம்
அடைந்துள்ள பொருளாதாரங்களில் தொழிலாளர்களின் நிலைமையை அழிப்பதற்கு தற்பொழுது
நடைபெறும் வழிவகைகளை உயர்த்திக் காட்டுகிறது.
“வரவிருக்கும்
ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக,
மெக்சிகோ,
பல்கேரியா மற்றும் இங்கிலாந்தில்தான்
Montupet
அதன்
உற்பத்தித் திறனை அதிகரிக்கும்;
அதற்காக முக்கிய முதலீடுகள்
2013
வரை
செய்யப்படும்.
இது
…
குழுவின் இலாபத்தன்மையை அதிகரிக்க முக்கிய கூறுபாடுகளில் ஒன்றாக இருக்கும்”
என்று அறிக்கை முடிவுரையாகக் கூறியுள்ளது.
Founderies du Poitou
ஊதியக்
குறைப்புக்களை தொழிலாளர்கள் ஏற்காவிட்டால்,
ஏராளமானவர்கள் பணிநீக்கத்திற்கு உட்படுவர்,
ஆலை கூட மூடப்படலாம் என்று அச்சுறுத்தியுள்ளது.
Montupet
உடைய
நிர்வாகம் பொருளாதார நிலைமையினால் வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளன என்று
நியாப்படுத்தியுள்ளது;
ரெனோல்ட்டும் தன் ஆலைகளில் ஊதியங்களைக் குறைக்கும்.
“போட்டித்தன்மைத்
திட்டம்”
Fonderie du Poitou
ஊதியங்களை மற்ற இரு பிரெஞ்சு ஆலைகளில்
Indres, Oise
ல்
இருப்பதைப் போல் கொண்டுவரும்;
அங்கு தொழிலாளர்கள் சட்டபூர்வ மாதாந்திரக் குறைந்தபட்ச ஊதியமான
1,200
யூரோக்களை
($1,621)
மாதத்திற்கு பெறுகின்றனர்.
இந்த வெட்டு
300ல்
இருந்து
400
யூரோக்கள் ஆகும்.
செப்டம்பர் மாதம் பிராங்க்பேர்ட் கார்க் காட்சிப் பின்னணியில்
பேசுகையில்,
PSA Peugeot-Citroen
உடைய
தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் வின் கூறினார்:
“வேலை
வெட்டுக்கள் இல்லாமல் செலவுக் குறைப்புக்கள் இருக்க முடியாது.”
நிர்வாகத்தின் பாரிஸிற்கு வடக்கே இருக்கும்
Aulnay-sous-Bois
ஆலைகள்,
வடக்கு பிரான்சில்
Calais
க்கு
அருகே
Hordain
னில்
இருக்கும் கூட்டு நிறுவனமான
PSA/Fiat Sevel Nord
ஆலை
மற்றும் ஸ்பெயினில் மாட்ரிட்டில் இருக்கும்
Peugot
ஆகியவற்றில் ஏற்கனவே ஏராளமான பணிநீக்கங்கள்,
மூடல்கள் இருக்கும்.
(See: “Carmaker
Citroën-Peugeot to close plants in France and Spain”).
PSA
ன்
100,000
தற்காலிகத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட
10%
நீக்கப்படுவர்.
Varin
மேலும்
கூறினார்:
“2009ல்
செயற்பாட்டுத் திட்டத்தை நாங்கள் இயற்றியபோது ஐரோப்பியச் சந்தையில் வளர்ச்சி
இருக்கும் என்று கருதினோம்,
அது
2012லும்
தொடரும் என நினைத்தோம்;
உண்மையில் இந்த ஆண்டு நமக்கு முன்னேற்றம் ஏதும் இராது என்பதைக் காண்கிறோம்…எனவே
இன்னும் கடின நாட்களுக்குத்தான் தயாரிப்புக்களைக் கொள்ள வேண்டும்.”
ரெனோல்ட்டின் வணிகத் துறை இயக்குனரான
Jérôme Stoll,
ராய்ட்டர்ஸிடம்
“cash-for-clunkers”
திட்டத்தின் முடிவு மற்றும் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலையும் எச்சரிக்கைத்
தன்மையை ஏற்படுத்தியுள்ளன என்றார்.
“2012ஐப்
பொறுத்தவரை,
நாம் ஒரு கொந்தளிப்பான காலத்தில் இருப்பதால் எதையும் உறுதியாகக் கூறுவதற்கு இல்லை.”
அவருடைய கருத்துக்கள் பியட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான
Sergio Marchionne
னால்
எதிரொலிக்கப்பட்டன;
அவரைப் பொறுத்தவரை,
“2011
ஒரு
கடினாமான ஆண்டு,
2012
ஒன்றும்
அதைவிடச் சிறந்ததாக இருக்கப்போவதில்லை—நிதியச்
சந்தைகள் தொடர்ந்து உறுதியற்ற நிலையில் இருந்தலும்,
அமைப்புமுறை நம்பிக்கைத்தன்மையற்ற நிலையில் இருத்தலும் தொடரும்.”
தொழிலாள வர்க்கம் நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்னும்
இத்திட்டங்களுக்கு கூடுதலான அவசர நிலைப்பாடு வெள்ளியன்று நிதிய ஊடகத்தில் வந்துள்ள
தகவல்கள் கொடுக்கின்றன;
அவற்றின்படி உற்பத்தித் தொழில்துறையில் வணிக நம்பிக்கை
6
புள்ளிகள் செப்டம்பரில் குறைந்துவிட்டன.
எஃகு உற்பத்தியாளர்
Acelor-Mittal
தேவை
இல்லை எனக்கூறி வடகிழக்கு பிரான்சில்
Florange
ல் உள்ள
அதன் இரு வெடிப்பு உலைகளை மூடிவிட்டது;
இதையொட்டி
700
தொழிலாளர்கள் குறுகிய கால அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன் பெல்ஜியம்,
ஜேர்மனி ஆகியவற்றில் உள்ள எஃகு ஆலைகளும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன.
2009
மந்தநிலையின்போது,
நிறுவனம் அதன்
25
ஐரோப்பிய ஆலைகளில் பாதியை மூடிவிட்டது.
செப்டம்பர்
2009ல்
வோல்க்ஸ்வாகனின் முதலாளி
Martin Winterkorn
அமெரிக்க கார்த்தொழிலின் மறுசீரமைப்பு,
ஒபாமா அரசாங்க்தால் தொடக்கப்பட்டு ஐக்கிய கார்த்தொழிலாளர்கள் சங்கத்தின்
(UAW)
ஆதரவிற்கு உட்பட்டது,
GM
ஐ
செலவுக் குறைப்புக்கள் செய்ய உதவவும்,
அதையொட்டி போட்டித்தன்மை நலன் ஏற்பட்டுள்ளது என்றார்.
“இந்த
நிலை ஏற்படுமோ என நாங்கள் பெரிதும் கவலைப்படுகிறோம்
… Ford
ம்
GM
ம்
சந்தையில் இருந்து மறைந்து விடும் என்று நினைப்பவர்கள் தவறான கருத்தைக்
கொண்டுள்ளனர்”
என்றார்.
இவருடைய புத்திசாலித்தனமாக எதிர்பார்ப்பு அமெரிக்க கார்த்
தொழில்துறை பாதியாக ஒரு மணி நேரத்திற்கு
$14
எனக்
குறைத்ததில் சரியென ஆகியது.
உண்மையில் டெனெசியல்
Chattanooga
வில்
உள்ள வோக்ஸ்வாகனின் புதிய ஆலை அதன் முழு உற்பத்தித் தொழிலாளர் தொகுப்பிற்கும்,
புதிய அமெரிக்கக் கார்த்தொழிலாளர்களுக்குள் மிகக் குறைந்த ஆரம்ப ஊதியத்தைப் பெறும்
தொகுப்பை கொண்டுள்ளது என்ற நிலையை ஒட்டி தலைப்புக்களை பெற்றது—அதாவது
$14.50
ஒரு மணி
நேரத்திற்கு என.
ஆனால் இப்பொழுது இந்த ஆலை அனைத்துப் புதிய உற்பத்தித் தொழிலார்களுக்கும்
$12
தான்
மணிக்கு என்று கொண்டுள்ளது எனத் தொழிலாளர்கள் தகவல் கொடுத்துள்ளனர்;
இது கார்த்தொழிலாளர்கள் ஊதியங்களை இன்னும் குறைப்பதற்கு வகை செய்துவிட்டது.
இவை அனைத்தும்
UAW
வின்
உடந்தையுடன் நடைபெறுகின்றன.
ஸ்ராலினிச ஆதிக்கத்திற்குட்பட்ட
CGT (தொழிலாளர்
பொதுக் கூட்டமைப்பு)
உடைய செயலரான
Eric
Bailly,
ஒரு
கூட்டுத் தொழிற்சங்கக் குழுவின் செய்தித்தொடர்பாளரும் ஆவார்.
செய்தி ஊடகத்திடம் அவர்,
“எங்களை
மூழ்கடித்துவிட வேண்டும் என்றே உறுதியான நோக்கம் உள்ளது.”
எனக் கூறினார்.
Montupet
மற்றும்
பிரெஞ்சு கார் உற்பத்தியாளர்களுக்கும் எதிராக ஒற்றை ஆலை அடிப்படையில் போராடப்படுமா
என்று உலக சோசலிச வலைத் தளத்தால் கேட்கப்பட்டதற்கு
Bailly
ஒப்புக்
கொண்டது:
“அப்போராட்டம்
பொதுவாக்கப்பட வேண்டும்.”
தொழிற்சங்கங்கள் முழுத் தொழிலாளர் தொகுப்பையும் ஆலை மூடல்கள் அலைக்கு எதிராகத்
அணிதிரட்ட முடியாமல் தோல்வியுற்றதற்கு தொழிலாளர்களின் தனிப்பட்ட நிலைப்பாடுதான்
காரணம்.
“இது
தொழிற் சங்கங்களை வலுவிழக்கச் செய்துவிட்டது”
என்றார்.
2007ல்
CGT
தலைவர்
பேர்னார்ட் தீபோ ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் நெருக்கமாக கடுமையான சிக்கன
நடவடிக்கைகளைச் சுமத்துவதற்கு ஒத்துழைத்தார்,
மற்றும் குறிப்பாக தொழிற்சங்கக் கூட்டமைப்பு,
சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் பொலிஸ் அடக்குமுறை
பயன்படுத்தப்பட்டு அது
2010
ஓய்வூதியப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு உடந்தையாக இருந்தது என்று கூறப்பட்டதற்கு,
அவர் அதை மறுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
திரைக்குப்பின் தொழிற்சங்கத் தலைவர்கள் அனைத்து வகையான உடன்பாடுகளையும்
ஏற்பாடுகளையும் செய்தனர் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
“தொழிலாளர்கள்
இதை உணர்ந்துள்ளனர்.
எனவேதான் நாங்கள் எங்கள் நம்பகத் தன்மையை இழந்து வருகிறோம்.”
என்றார்.
ஆயினும்கூட,
Bailly
தலைமைதாங்கும் குழு சார்க்கோசிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது;
அதில் திட்டத்தை நிறுத்த அவருடைய செல்வாக்கை அவர் பயன்படுத்த வேண்டும் என்றும்
கூறப்பட்டுள்ளது;
மேலும் உள்ளூர் செனட்டரும் முன்னாள் கன்சர்வேடிவ் பிரதம மந்திரி
Jean-Pierre Raffarin
ஐ
அணுகவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.
சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு காட்டும் சோசலிஸ்ட் கட்சித் தலைவர்
Ségolène Royal,
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் வாய்ப்பு உடையவர் கூட்டங்களில்
“ஒற்றுமையைக்”
காட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதற்கும் சவால் ஏதும் இல்லை.
ஒவ்வொரு முக்கிய பிரெஞ்சு அரசியல்வாதியும்
6
பில்லியன் யூரோக்கள் கார்த் தொழில் பிணை எடுப்புப் பொதிக்கு
2009ல்
முழு ஆதரவைக் கொடுத்தனர்.
இதை ரெனோல்ட்டும்
PSA
யும்
உடனடியாகப் பயன்படுத்தி இலாபத்தை அதிகரித்து பணிநீக்கங்களுக்கு வகை செய்தன.
இருக்கும் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்வதின் மூலம்தான்
தொழிலாளர்கள் தங்கள் சமூக நலன்களைக் காத்து விரிவாக்கிக் கொள்ள முடியும்;
அதேபோல் அவர்கள் சார்க்கோசி அரசாங்கத்தை அகற்றி ஒரு தொழிலாளர் அரசாங்கத்தைத்
தோற்றுவிப்பதற்கு தேவையான அரசியல் முன்னோக்கு உடைய சுயாதீன நடவடிக்கை குழுக்களையும்
அமைக்க வேண்டும்.
அத்தகைய அரசாங்கம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியத்துடன்,
முதலாளித்துவ நிறுவனங்களையும்,
கார் நிறுவனங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றை பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களாக,
ஜனநாயக சோசலிச வகையில் பொருளாதார மறுசீரமைப்பின்கீழ் கொண்டுவர வேண்டும்.
|