WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
Egyptian elites demand end to strikes
எகிப்திய
உயரடுக்குகள் வேலைநிறுத்தங்களுக்கு
முடிவைக்
கோருகின்றன
By Johannes Stern
28 September 2011
Back to
screen version
கடந்த சில நாட்களாக அமெரிக்க ஆதரவுடைய எகிப்தின் இராணுவ ஆட்சிக்
குழுவும் அதன் உத்தியோகபூர்வக் கட்சிகள்,
தொழிற்சங்கங்களிலுள்ள ஆதரவாளர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ள வெகுஜன வேலைநிறுத்தங்கள்
மற்றும் எதிர்ப்புக்கள் என பொருளாதார,
நிதிய நெருக்கடியினால் தீவிரமடைந்துள்ளவற்றால் தூண்டப்பட்டவை குறித்துப் பெருகிய
கவலையைத் தெரிவித்துள்ளன.
முதலாளித்துவ அரசியல்வாதிகள்,
தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் செய்தியாளர்கள் வேலைநிறுத்தங்களுக்கு
முற்றுப்புள்ளி வேண்டும் எனக் கோரி
“மற்றொரு
புரட்சி”
அச்சுறுத்தல் குறித்தும் எச்சரித்துள்ளனர்.
ரமழான் முடிவுற்றதில் இருந்தே,
எகிப்து முழுவதும் வேலைநிறுத்த அலைகளால் மோதியுள்ளன
—இதில்
நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள்—
ஆசிரியர்கள்,
மருத்துவர்கள்,
ஜவுளித்துறைத் தொழிலாளர்கள் இன்னும் தொழில்துறையின் பிற பிரிவுத் தொழிலாளர்கள்
அடங்குவர்.
சமீபத்திய நாட்களில்
4,000
தொழிலாளர்கள் எகிப்தின் ஒரே தனியார்மய சூயஸ் கால்வாய் துறைமுகம்,
ஐன் சுகானாவில் இருப்பதை மூடினர்.
ஆயிரக்கணக்கான பொது பஸ் சாரதிகள்,
இயந்திர வல்லுனர்கள்,
டிக்கெட் வசூலிப்பவர்கள் ஆகியோரும் கெய்ரோவில் வெளிநடப்பு செய்து அதிக ஊதியம்,
நல்ல பணி நிலைகள்,
ஊழல் மிகுந்த பொதுப் போக்குவரத்து அதிகாரத்தின் தலைவர்களின் நீக்கம் ஆகியவற்றைக்
கோரியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மந்திரிசபைத்
தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி உடனடியாக தற்போதைய கல்வி மந்திரியான அஹ்மத்
கமல் எடின் மௌசா அகற்றப்பட வேண்டும் என்று கோரினர்.
ஆசிரியர்கள் பள்ளி ஆண்டுத் தொடக்கமான செப்டம்பர்
17ல்
இருந்து அதிக ஊதியம்,
நல்ல பணி நிலைமைகளைக் கோரி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
உறுதியளிக்கப்பட்ட
200
சதவிகித
ஊக்கத்தொகை,
கல்வித்துறைக்குக் கூடுதல் செலவு,
பாதுகாப்பான ஒப்பந்தங்கள் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதமாக அளிக்கப்பட
வேண்டும் என்பவற்றையும் அவர்கள் கோரியுள்ளனர்.
தற்பொழுது ஒரு ஆசிரியரின் நிகர ஊதியம்
EGP 287
ஐ
(48
அமெரிக்க டொலர்கள்)
தாண்டவில்லை.
செய்தி ஊடகத் தகவல்களின்படி,
எகிப்தின்
1.5
மில்லியன் ஆசிரியர்களில்
80
சதவிகிதம் வரை வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.
ஆசிரியர்கள் முதல் தடவையாக
1951க்குப்
பின்னர் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
இராணுவ ஆட்சிக்குழு இப்பொழுது பிரதம மந்திரி எசம் ஷரப்பின் இடைக்கால ஆட்சி மற்றும்
“சுதந்திர”
தொழிற்சங்கங்களுடன் ஒன்றுபட்டு ஆசிரியர் நடவடிக்கையை நிறுத்த முற்படுகிறது.
எகிப்திய நாளேடான அல்
அஹ்ரமின்படி சுதந்திர ஆசிரியர்கள் குழுவின்
(ITS)
தலைவர்
ஹசன் அஹ்மத் சனிக்கிழமையன்று மந்திரிசபைக்கு முன் வெகுஜன எதிர்ப்புக்களுக்குப்
பின்னர் ஆசிரியர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக
அறிவித்தார்.
இந்த நடவடிக்கையை முடிக்கும் முடிவை,
ஹசன் உள்ளிருப்பு தொடர வேண்டும் என்று விரும்பிய தொழிற்சங்க உறுப்பினர்களைக்
கேட்காமல் எடுத்தார் என்று கூறப்படுகிறது.
பின்னர்
ITS
கல்வி
அமைச்சரகம் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்ய ஒரு காலக்கெடுவை அளிக்கும் வரை
ஒருவார காலத்திற்கு முழு வேலைநிறுத்தங்களையும் நிறுத்தி வைக்கும் அதன் விருப்பத்தை
அறிவித்தது.
உண்மையில்,
இராணுவ ஆட்சிக்குழுவும் ஷரப் அரசாங்கமும் ஏற்கனவே எந்த சலுகைகளையும் கொடுப்பதில்லை
என்பதைத் தெளிவுபடுத்தி விட்டனர்.
மௌசா
Daily News Egypt
இடம்
“தற்பொழுதைய
வரவு-செலவுத்
திட்ட வரம்புகள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தடையாக உள்ளது”
என்று கூறிவிட்டார்.
செவ்வாயன்று சுதந்திர பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கமும்
தலைநகரில் வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதாக அறிவித்தனர்.
இது மனித சக்திப் பிரிவு மந்திரி தொழிலாளர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படும் என்று
உடன்பட்டதை அடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தங்கள் நிறுத்தப்பட்டதானது,
சுயாதீன தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படுபவை தொழிலாளர்கள் நலன்குறித்துக்
காட்டும் விரோதப் போக்கையும் அவர்களுடைய எதிர்ப் புரட்சிப் பங்கையும்
அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
இப்போராட்டங்களை நாசப்படுத்தியதின் மூலம் சுதந்திர தொழிற்சங்கங்கள்
—இவை
அமெரிக்க
AFL-CIO
தொழிற்சங்கங்களாலும் அமெரிக்க அரச அலுவலகத்தினதும் ஆதரவைப் பெறுகின்றன—
இராணுவ ஆட்சிக்குழுவின் இலக்கைத்தான் கொண்டுள்ளன:
அதாவது எகிப்தில் முதலாளித்துவ ஆட்சியை தொழிலாள வர்க்கத்தை அடக்குவதின் மூலம்
உறுதிப்படுத்தப்படுதல் என்பதை.
ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தின்போது,
இராணுவ ஆட்சிக்குழு மார்ச் மாதம் வெளிவந்த வேலைநிறுத்த எதிர்ப்பு,
ஆர்ப்பாட்ட எதிர்ப்புச் சட்டத்தை செயல்படுத்தத் தான் தயாராக இருப்பதைத்
தெளிவுபடுத்தியது.
அரசாங்க அதிகாரிகள் இச்சட்டத்தின் கீழ் பலமுறையும் ஆசிரியர்களைக் குறிப்பாக
பணிநீக்கம் செய்து சிறையில் அடைப்பதாக அச்சுறுத்தினர்.
சனிக்கிழமையன்று இராணுவப் படைகள் மந்திரிசபைக்கு முன் எதிர்ப்புத் தெரிவித்த
ஆசிரியர்களை அடித்தனர்.
தொழிற்சங்கம் மற்றும் ஆட்சிக்குழு ஆகியவை வேலைநிறுத்தத்தை முறிக்கும் முயற்சிகளில்
இணைந்து ஈடுபட்டாலும்,
பெனி சூயப்,
ஷர்கியா,
சூயன் மற்றும் கெய்ரோவின் பகுதிகளில் ஆசிரியர்கள் பல பள்ளிகளில் போராட்டங்களை
தொடர்கின்றனர்.
இராணுவ ஆட்சிக்குழுவும் சுதந்திரத் தொழிற்சங்கங்களும் பெருகிய
முறையில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போவது குறித்து கவலை கொண்டுள்ளனர்.
ஞாயிறன்று சுதந்திர பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைச் செயலர்
முகம்மத் அப்தல் சட்டர் அலி சுயாதீன நாளேடான அல்
மஸ்ரி
அல்
யௌமில்
அரசாங்கம் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும்
“தீர்வுகள்
காணவேண்டும்…
அதையொட்டி இது பேரழிவாகப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;
எகிப்தின் தொழிலாளர்கள் அனைவரும் தெருக்களுக்கு வந்துவிடாமல் பார்க்க வேண்டும்”
என்றார்.
இரு நாட்களுக்குப் பின் அவர் கெய்ரோவில் பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின்
வேலைநிறுத்த தீவிரம் குறைவதற்கு உத்தரவிட்டார்.
அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை அகற்றிய
ஜனவரி
25ல்
எகிப்தியப் புரட்சி தொடங்கிய எட்டு மாதங்களுக்கு பின்னர்,
நிலைமை மீண்டும் தொழிலாள வர்க்கத்தை வெகுஜனப் போராட்டங்களில் ஈடுபட வைத்துள்ளது.
தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஜனவரி
25க்குப்
பின்னர் அதிக நல்ல மாற்றங்கள் ஏற்படவில்லை.
எகிப்திய செய்தித்தாள் ஒன்றின் சமீபத்திய தலையங்கம்,
“பல
விதங்களில் செப்டம்பர்
24, 2011
ல்
எகிப்து ஜனவரி
24, 2011
ல்
இருந்த எகிப்தை விட மாறுபட்டிருக்கவில்லை”
என ஒப்புக் கொண்டுள்ளது.
இது முற்றிலும் உண்மையாகும்:
அதாவது பீல்ட் மார்சல் மஹ்மத் ஹுசைன் தன்தவியின் தலைமையிலுள்ள இராணுவ ஆட்சிக்குழு
—இவர்தான்
முபாரக்கின் கீழ்
20
ஆண்டுகள் பாதுகாப்பு மந்திரியாக இருந்தார்—
முபாரக் ஆட்சியின் கொள்கைகளைத்தான் கடைப்பிடித்து வருகிறது.
இப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தாழ்ந்து நடக்கும்
எடுபிடியாகத்தான் அது தொடர்கிறது;
முன்னாள் சர்வாதிகாரியைப் போலவே ஜனநாயக,
சமூக உரிமைகளுக்கு விரோதப் போக்கைக் காட்டுகிறது.
உண்மையில் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிலைமை மோசமாகிக்
கொண்டிருக்கிறது.
அரசாங்கத்திற்கு சொந்தமான அல்
டோஸ்டௌர் கருத்துப்படி,
உணவுப் பொருட்களின் விலைகள் ஜனவரி மாதத்தில் இருந்து
80
சதவிகிதம் உயர்ந்துவிட்டன;
பொருளாதார நெருக்கடி எகிப்திற்கு தீவிர பாதிப்பைக் கொடுத்துள்ளது.
ஞாயிறன்று எகிப்துப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீட்டு எண்
30
மாதம்
இல்லாத அளவிற்குக் குறைவாகப் போயிற்று;
பகுப்பாய்வாளர்கள் சர்வதேச நிதிய நெருக்கடி தீவிரமாகியுள்ளதையும் அதன் எகிப்தின்
மீதான பாதிப்பையும் இதற்குக் காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
அல்
அஹ்ரம்
கொடுத்துள்ள அறிக்கை ஒன்று
“குமிழும்
அரசியல் அழுத்தங்கள் மற்றும் பரந்த வேலைநிறுத்தங்கள் உலகச் சந்தைக் கொந்தளிப்புடன்
இணைந்து உள்ளூர் முதலீட்டாளர்களை பின்வாங்கச் செய்துள்ளது”
என்று கூறுகிறது.
நிதி மந்திரி ஹசிம் எல்-பெப்லவியின்
கருத்துப்படி,
“வெளிநாட்டு
முதலீடுகள் இந்த ஆண்டு பூஜ்யம்”
என ஆகிவிட்டது.
இந்தப் பின்னணியில்,
எகிப்திய ஆளும் உயரடுக்கு பெருகிய முறையில் பதட்டமடைந்துள்ளது.
செப்டம்பர்
25
அன்று
Daily News Egypt
ல்
“பொருளாதாரம்தான்
முதலில்”
என்ற கட்டுரை
“வேலைநிறுத்தங்கள்
தொடர்ந்தால்,
வளர்ச்சி எதிர்பார்ப்பதை விட சீக்கிரமே எதிர்மறையாகிவிடும்”
என்று எச்சரித்தது.
அக்கட்டுரை புரட்சிகரத் தொழிலாளர்கள்,
இளைஞர்கள் ஆகியோர் அரசாங்கத்தின் அனைத்து ஊழல் மிகுந்த அமைப்புக்களையும் அகற்ற
வேண்டும் என்று அழைப்புவிடுத்திருப்பதைத் தாக்கி இத்தகைய அணுகுமுறை
“நாட்டை
அழிக்கும் நோக்கம் கொண்ட திட்டத்தைவிட இது வேறுபட்டதில்லை”
என்று அறிவித்தது.
இதை எழுதிய ரஹிம் எல்கிஷ்கி,
கணினி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்,
போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்,
கெய்ரோவிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்,
எகிப்திய மக்கள் நாட்டின் இழிந்த பொலிஸ் சக்திகளிடம் கொண்டுள்ள விரோதப் போக்கையும்
எச்சரித்தார்.
பாதுகாப்புப் படைகளை அகற்றுதல் என்பது
—இதுதான்
புரட்சியின் வெகுஜன கோரிக்கை—
“பெரும்
குழப்பத்திற்கு”
வகை செய்யும்,
“முற்றிலும்
பொருளாதாரத்தைத் தகர்த்துவிடும்”
என்றார்.
எல்கிஷ்கி
“எகிப்தியர்களின்
மிகப் பெரும்பான்மையான
90
சதவிகிதத்தினர்,
மத்தியதர,
கீழ்மட்ட வகுப்புக்களில் இருப்பவர்கள் கஷ்டப்படுகின்றனர்”,
“40
சதவிகிதத்தினர் எகிப்தியர்கள் ஏற்கனவே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்”
என்பதை ஒப்புக் கொண்டார்.
அதன் பின் அவர் கேட்கிறார்:
“எத்தனை
நாட்கள்
40
சதவிகிதத்தினர் காத்திருப்பர்?
ஜனவரி
25
அவர்களுக்கு செய்வதற்கு வழிகாட்டியபின்,
பாதுகாப்புப் படைகளின் மீது கொண்டிருந்த அச்சம் அழிக்கப்பட்ட பின்னர்,
எத்தனை நாட்கள் அவர்கள் சொந்தப் பட்டினிப் புரட்சியைக் கொண்டிருப்பர்?
புதிதாக இழந்துவிட்ட,
வேலையற்றோர் இவர்களுடன் சேரமாட்டார்களா?”
இரண்டாம் புரட்சி பற்றிய அச்சம் இப்பொழுது எகிப்திய முதலாளித்துவப்
பிரதிநிதிகளிடையே பரந்து காணப்படுகிறது.
கெய்ரோவிலுள்ள
CI Capital
குழும
உறுப்பினரான கரிம் ஹெலலும்
“இந்த
அரசாங்கத்திற்கு மிகப் பெரிய சவால் உற்பத்தித்திறனுடைய வேலைகளைத் தோற்றுவித்தல்
ஆகும்;
இல்லாவிடில் நாம் பெரும் வெகுஜன வெடிப்பை எதிர்கொள்வோம்”
என்று எச்சரித்தார்.
“ஒவ்வொரு
ஆண்டும் நாம்
700,000
பட்டதாரிகளைப் பெறுகிறோம்.
அவர்களுக்கு வேலை இல்லை என்றால்,
நாம் அனைவரும் மற்றொரு புரட்சியைக் காண்போம்.
எழுச்சிபெற்று வரும் பொருளாதாரத்தில்,
பெருகிவரும் இளைஞர்கள் எண்ணிக்கையையும் அத்துடன் வேலையின்மை,
பணவீக்கமும் இணைந்தால்,
ஒரு வெடிகுண்டு உரிய நேரத்தில் வெடிக்கும் தன்மைக்கு அது ஒப்பாகும்”
என்றார்.
அல்
மஸ்ரி
அல்
யோவும்
தகவலின்படி,
ஞாயிறன்று நீதிக்கான சுதந்திர கட்சி
(Freedom of Justice Party),
இஸ்லாமியவாத முஸ்லிம் பிரதர்ஹுட்டின் அரசியல் பிரிவும் ஆளும் ஆயுதப்படைத் தலைமைக்
குழுவை
“பாராளுமன்ற
தேர்தல்களை ஒத்திப் போடுவது மற்றொரு புரட்சிக்கு வகை செய்யும்”
என எச்சரித்தது.
இந்த அச்சுறுத்தலை முகங்கொடுக்கும் இராணுவ ஆட்சிக்குழு
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறை அடக்குமுறைக்கான
தயாரிப்புக்களை முடுக்கிவிட்டுள்ளது.
எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்கள் சமீபத்தில் நெருக்கடி காலச் சட்டங்கள் விரிவாக்கலை
அறிவித்து வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டத்தை செயல்படுத்தவும் முற்படுகின்றனர்.
இராணுவ ஆட்சிக்குழு இராணுவ நீதிமன்றங்களின் விசாரணைக்காக மற்றும் ஒரு
40
எதிர்ப்பாளர்களை அனுப்பியுள்ளது;
இவர்கள் செப்டம்பர்
9ம்
திகதி இஸ்ரேலிய தூதரகத்தின் முன் எதிர்ப்பின் போது கைது செய்யப்பட்டவர்கள்.
அவர்களுடைய குடும்பங்கள்,
வக்கீல்கள் கருத்துப்படி அவர்களில் பெரும்பாலானவர்கள் எதேச்சையாக கண்டபடி கைது
செய்யப்பட்டவர்கள்,
இராணுவ,
பொலிஸ் படைகளால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அமெரிக்கா,
இந்த இராணுவ ஆட்சிக்குழுவை இப்பிராந்தியத்தின் அதன் ஏகாதிபத்திய நலன்களைக்
காப்பதற்கு முக்கிய சக்தியாகவும்,
எகிப்தில் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பதற்கு முக்கிய சக்தி என்றும் கருதுகிறது.
ஆட்சியானது தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அடக்குவதற்கு பயன்படுத்தும் மிருகத்தன
நடவடிக்கைகளுக்கு ஒபாமா நிர்வாகம் முழு ஆதரவைக் கொடுக்கிறது.
கடந்த வாரம்தான் அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ்
எகிப்தின் புதிய சர்வாதிகாரியான பீல்ட் மார்சல் தன்தவியையும் எகிப்திய இராணுவப்
படைகளின் தலைமைத் தளபதி சமி அன்னனையும் சந்தித்தார்.
செய்தி ஊடகத் தகவல்களின்படி,
மாட்டிஸ் எகிப்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயுள்ள வலுவான இராணுவ உறவின்
முக்கியத்துவத்தை வலியுறுத்தி,
எகிப்திய இராணுவம்
“சட்டம்
மற்றும் ஒழுங்கைக் காக்கும்”
முயற்சிகளுக்காக அதற்கு நன்றி தெரிவித்தார். |