WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
New York City police arrest scores at anti-Wall Street protest
நியூ யோர்க் நகரப் பொலிஸ் வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஏராளமானோரைக் கைது செய்கிறது
By Sandy English
26 September 2011
Back to
screen version
சனிக்கிழமை பிற்பகலில் நியூ யோர்க் பொலிஸ் துறை
(NYPD) 80க்கும்
மேற்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை கீழ் மன்ஹாட்டன் யூனியன் சதுக்கத்திற்கு
அருகே அவர்கள் வோல் ஸ்ட்ரீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கைது செய்தது.
செப்டம்பர்
17ம்
திகதியிலிருந்து வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரேயுள்ள ஜுக்கோட்டி பிளாசாவை
ஆக்கிரமித்துள்ள எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பொலிஸ் வன்முறை பெரிதும்
அதிகரித்துவிட்டதை இது குறிக்கிறது.
எதிர்ப்பாளர்கள் இதை விடுதலைச் சதுக்கம் என்று கெய்ரோவிலுள்ள தஹ்ரிர் சதுக்கத்தின்
மாதிரியில் மறு பெயர் இட்டுள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சதுக்கத்திலிருந்து வடக்கே ஒன்றியச்
சதுக்கத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்;
அங்கு போலிசார் அவர்களை ஆரஞ்சு வலைக்குள் அகப்பட வைத்து
85
பேருக்கும் மேல் கைதும் செய்தனர்.
பெரும்பாலானவர்கள் எத்தகைய தூண்டுதல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
சில பேர் வெறுமனே அணிவகுப்பைப் பார்த்தவர்கள்தான்.
பொலிஸ் தேவையில்லாமல் வன்முறையைப் பயன்படுத்தியது,
பல ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மிளகுப்பொடியைத் தூவியது.
எதிர்ப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கூற்றுப்படி,
60
பேர்
காத்திருந்த பஸ்களுக்குள் தள்ளப்பட்டு,
ஒழுங்கீனமான நடத்தை என்ற குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டனர்.
மற்றும் ஒரு
15
பேர்
ஒரு தானிய வண்டியில் மந்தை போல் ஏற்றப்பட்டனர்.
மருத்துவக் கவனம் தேவை என்னும் எதிர்ப்பாளர்களின் வேண்டுகோளை பொலிசார்
நிராகரித்தனர்.
உலக
சோசலிச
வலைத்
தளம் பல
உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளைக் கண்டது;
அவற்றுள் நியூ யோர்க் பொலிஸ் ஆணையர் ரே கெல்லியும் கைதுகள் செய்யப்பட்டபோது ஒன்றிய
சதுக்கத்தின் அருகே காணப்பட்டார்.
பின்னர் சனிக்கிழமை மாலை நூற்றுக்கணக்கான பொலிசாரும்
40
பொலிஸ்
வாகனங்களும் விடுதலை சதுக்கத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டன;
கைதுகள் ஏதும் செய்யப்படவில்லை,
அங்கு இருந்த முகாம் இக்கட்டுரை எழுதப்படும் வரை அப்படியே இருந்தது.
பொலிசார் கொடுக்கும் தொல்லை,
எதிர்ப்புத் தொடங்கியதில் இருந்தே வாடிக்கையாக உள்ளது.
டஜன் கணக்கான சீருடை மற்றும் சாதாரண உடை அணிந்த பொலிஸ் அதிகாரிகள் ஒப்புமையில்
குறைந்த எண்ணிக்கை உடைய எதிர்ப்பாளர்களை சூழ்ந்துள்ளனர்;
பிந்தையவர் முகாமில் உறங்குகின்றனர்.
பொலிஸ் வாகனங்கள் அடிக்கடி ஒளி விளக்குகளுடன் அங்கு சுற்றிவருகின்றன.
பொலிசார் அன்றாடம் இப்பகுதிக்குள் நுழைந்து தொல்லை கொடுப்பதுடன்
கைதும் செய்கின்றனர்.
NYPD
ஒரு மறக்கப்பட்டுவிட்ட
1845
சட்டத்தை மேற்கோளிட்டு பொது இடங்களின் முகமூடிகள் அணிபவர்களை கைது செய்யும்
உரிமையைக் காட்டி,
எதிர்ப்பாளர்கள் புதனன்று தங்கள் முகங்களைச் சுற்றி கைக்குட்டைகளால்
மூடியிருந்தபோது கைதுசெய்தனர்.
வேறு சில நேரங்களில் பொலிசார் எதிர்ப்பாளர்கள் பாதுகாப்பிற்காக மரத்தினால்
செருகியிருந்த மறைப்புக்களை அகற்ற வேண்டும் என்று கோரினர்.
எதிர்ப்பாளர்கள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதையும் பொலிசார் தடைக்கு
உட்படுத்தியுள்ளனர்.
இழிந்த
NYPD TARU
கண்காணிப்புப் பிரிவு வாடிக்கையாக ஆர்ப்பாட்டக்காரர்களின் செயல்களை திரைப்படம்
எடுத்து வருகிறது.
ஆனால் சனிக்கிழமை ஏராளமான பேர் கைது செய்யப்பட்டு,
உறங்குவதற்கான படுக்கைகள்,
முகாம் கருவிகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை விடுதலை சதுக்கத்தில் தடை செய்யப்பட்டபின்
காட்டுவது போல்,
நியூ யோர்க்கின் பில்லியனர் மேயர் மைக்கேல் ப்ளூம்பேர்க் மற்றும் நகரத்தின் நிதிய
உயரடுக்கினர் எதிர்ப்பை அகற்றிவிடுவது என்ற முடிவிற்கு வந்துவிட்டனர்.
இந்நடவடிக்கை சனிக்கிழமை,
செப்டம்பர்
17,
தொடங்கியது;
ஆயிரக்கணக்கான மக்கள்,
முக்கியமாக இளைஞர்கள்,
அப்பொழுது வோல் ஸ்ட்ரீட் அமெரிக்காவில் பொருளாதார,
அரசியல் வாழ்வில் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஆதிக்கம் செலுத்துவதை
எதிர்த்து ஆர்ப்பாட்ட அணிவகுப்பை நடத்தினர்.
கடந்த வாரம் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் விடுதலைச் சதுக்கத்தில் இரவைக்
கழித்துள்ளனர்.
நுகர்வோர் எதிர்ப்பு ஏடான
AdBusters
மற்றும் வலைத் தள செயற்பாட்டாளர் குழுவான
Anonymous
ஆகியவற்றின் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கினர்.
AdBusters
ல் மே மாதம் வந்த தலையங்கம் ஒன்று ஆக்கிரமிப்புக் கருத்தை முன்வைத்தது;
கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்க ஆக்கிரமிப்பு,
ஸ்பெயினில்
indiganados
ல்
நடந்தவை போன்ற வகையில்
ஒரு நடவடிக்கை வேண்டும் என்று அது அழைப்புக் கொடுத்தது.
அந்த அறிக்கையில்,
ஆக்கிரமிப்பின் நோக்கம்
“பராக்
ஒபாமா ஒரு ஜனாதிபதிக் குழுவை நியமிக்க வேண்டும்,
அது வாஷிங்டனில் நம் பிரதிநிதிகள் மீது செல்வத்தின் செல்வாக்கை முடிப்பதற்கு
வழிவகைகளை கூற வேண்டும்”
என்று கூறப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்பிற்கு சில வாரங்கள் முன்பிருந்தே வினியோகிக்கப்பட்ட
வீடியோ ஒன்றில்
Anonymous
வன்முறையற்ற ஆக்கிரமிப்பு தேவை என அழைப்பு விடுத்தது.
அந்த அமைப்பு அதன் கோரிக்கை ஒரு எளிமையானது என்றது:
“நமக்குச்
சுதந்திரம் தேவை…பெருநிறுவனங்கள்
மற்றும் வங்கிகள்,
அரசாங்கங்கள் ஆகியவை தவறாகச் செயல்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.”
ஆக்கிரமிப்பிற்கு ஏற்பாடு செய்தவர்கள்
“அரசியலை”
நிராகரிப்பதை முக்கியக் கருத்தாகக் கொண்டிருந்தனர்;
அது முதலாளித்துவ அமைப்பு முறை எதிர்ப்பின் மூலம் சீர்திருத்தப்படலாம் என்ற
முன்னோக்கிற்கு ஒரு மறைப்பை கொடுப்பதாகும்.
ஆக்கிரமிப்புத் தொடர்பான உத்தியோகபூர்வ வலைத் தளம் வேலைநிறுத்தங்கள் செய்து,
பணியிட ஆக்கிரமிப்புக்களும் தேவை என்று அழைப்புவிடுத்துள்ளபோது,
அவர்களுடைய துண்டுப் பிரசுரங்களிலோ ஆன்லைன் தகவல்களிலோ பெருநிறுவன ஜனநாயகக்
கட்சியைப் பற்றிக் குறைகூறலோ,
அல்லது ஒபாமா நிர்வாகம் பல டிரில்லியன் டாலர்களை வங்கிகளுக்கு மாபெரும் பிணை
எடுப்புக்களை சமூலநலத்திட்ட செலவுகளைக் குறைத்து அளித்தவற்றில் கொண்டிருந்த பங்கு
பற்றியோ ஏதும் கூறவில்லை.
பெருநிறுவனச் செய்தி ஊடகம் எதிர்ப்பு பற்றியச் செய்திகளை
இருட்டடிப்புச் செய்துவிட்டது;
மேலும் இதைப்பற்றி ஏதேனும் கூறினாலும்,
கேலியாகத்தான் எழுதியது.
நியூ யோர்க் நகரம் சமூக அழுத்தங்களின் பிடியில் உள்ளது.
டஜன் கணக்கான பில்லியனர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பல மில்லியன் உடையவர்களின்
தாயகமாக இது இருந்தபோதிலும்கூட பெரும்பாலான மக்கள் இங்கு சரிந்து கொண்டிருக்கும்
ஊதியங்கள்,
வேலையின்மை,
வறுமை ஆகியவற்றுடன்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.
நகரத்தின் உத்தியோகபூர்வ வேலையின்மை
8.7
சதவிகிதம் ஆகும்;
ஆனால் உண்மையில் தொழிலாளர் சந்தையில் இருந்து விலகியவர்கள் அல்லது வேறுவழியின்றிப்
பகுதி நேரம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இதைப்போல் இரு மடங்காக இருக்கலாம்.
சிறுபான்மை இளைஞர்கள் இடையே,
வேலையின்மை விகிதம்
25
முதல்
30
சதவிகிதம் என்று உள்ளது;
ஆபிரிக்க அமெரிக்க ஆண்கள்
16
முதல்
24
வயதிற்குள் இருப்பவர்கள் கிட்டத்தட்ட
75%
வேலையின்மையில் உள்ளனர்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் நகரத்து மக்களில்
20%க்கும்
மேற்பட்டவர்கள் கூட்டாட்சி அரசாங்கம் வரையறை செய்துள்ள வறுமையில் வாழ்கின்றனர்
என்பதைக் காட்டியுள்ளன.
செப்டம்பர்
16ம்
திகதி ஒரு வானொலிப் பேட்டியில் மேயர் ப்ளூம்பேர்க் சமூக நெருக்கடி தீவிரமாவது
பற்றிக் குறிப்பிட்டு எச்சரித்தார்:
“கல்லூரிப்
பட்டத்தை பெற்ற பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதைக் காண்கிறீர்கள்.
அதுதான் கெய்ரோவில் நடந்தது.
அதுதான் மாட்ரிட்டிலும் நடந்தது.
அத்தகைய கலவரங்களை நீங்களும் இங்கு விரும்பவில்லை.”
இச்சூழ்நிலையில்,
ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த வாரம் பல நேரமும் முகாம்களுக்குச் செல்லாமல் தடுத்து
நிறுத்தப்பட்டது,
எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவைக் காட்ட முடியாமற் செய்யப்பட்டது,
அல்லது என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் போனது வியப்பு அல்ல.
இத்துடன் உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளும்
எதிர்ப்பாளர்களுக்குப் பெரும் பரிவுணர்வைக் காட்டியுள்ளனர்.
பல இளைஞர்கள் எதிர்ப்பு அணியில் சேர்ந்துள்ளனர்;
பலருக்கு இது முதல் அனுபவம் ஆகும்;
சிலர் கிழக்குக் கடலோரப்பகுதி,
மத்திய மேற்குப் பகுதி ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ளனர்.
ஜோயலும் ஜென்னியும் ஒகையோ கொலம்பஸில் இருந்து ஆக்கிரமிப்பில் பங்கு
கொள்ள வந்துள்ளனர்.
ஜோயல் கூறினார்:
“முதலாளித்துவத்தின்
வீழ்ச்சிக்கு ஆதரவு கொடுக்க நான் இங்கு வந்துள்ளேன்;
இப்போராட்டத்திலுள்ள மற்றவர்களுக்கு ஒற்றுமையுணர்வு காட்டுவதற்கும் வந்துள்ளேன்.
உலகின் ஆதாரங்களில் பெரும்பகுதி ஒரு சிலரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.”
ஒபாமா நிர்வாகத்தின் பங்கு பற்றிக் கேட்கப்பட்டபோது,
அவர்
“ஒபாமா
மிகப் பெரிய சமரசவாதி,
அவர் உறுதியளித்த அனைத்தையும் கைவிட்டுவிட்டார்”
என்றார்.
ப்ரூக்லினிலிருந்து வந்துள்ள
Channing
தான்
சமீபத்தில் கல்லூரியில் இருந்து பட்டம் முடித்து வெளியே வந்துள்ளதாகவும்,
அத்துடன்
70,000
டொலர்கள் மாணவர் கடனையும் மருத்துவக்கடன்
16,000
டொலர்களையும் கொண்டுள்ளதாகக் கூறினார்.
“என்ன
நம்பிக்கை உள்ளது?”
என்று அவர் கேட்டார்.
நியூயோர்க் லாங் தீவிலுள்ள நாசௌ பிரிவில் இருக்கும் ஆடம் எங்களிடம்
கூறியது:
“நான்
கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த முதல் வெகுஜன ஆர்ப்பாட்டம் இது.
என்னுடைய ஒற்றுமையுணர்வை காட்ட வந்துள்ளேன்.
இதன் நிகழ்ச்சி நிரலை நான் நம்புகிறேன்;
ஆனால் குறிப்பிட்ட அளவு மக்கள் இதைச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு தேவை.”
என்ன நடக்க வேண்டும் என்று கேட்கப்பட்டதற்கு ஆடம்,
“இந்நாட்டில்
செல்வம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.
செல்வந்தர்களுக்கு உயர் வரிவிதிப்புக்கள் தேவை”
என்றார்.
சனிக்கிழமை பரிவுணர்வுடன் பார்வையாளர்களாக வந்த பல இளைஞர்களின்
நண்பர்கள் குழு ஒன்றிடம் நாங்கள் பேசினோம்;
அவர்கள் ஒவ்வொரு வாரமும் அமெரிக்காவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை மாற்ற
என்ன செய்யப்பட வேண்டும் என்று விவாதிக்கின்றனர்.
இந்த எதிர்ப்புக்களில் ஒரு பகுதியாகவா என்று டெரிக்கைக் கேட்டோம்.
“இன்னும்
இல்லை”
என்றார் அவர்.
“இத்தகவல்கள்
பெரும்பாலானவற்றுடன் எனக்கு உடன்பாடுதான்.
நம் கலாச்சார பொருளாதார முறையைப் பிரதிபலிக்கும் வகையில் ஏதோ தவறு உள்ளது.
ஏதேனும் செய்யப்பட வேண்டும்,
ஆனால் என்ன என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.”
குழுவின் மற்றொரு உறுப்பினர் மஹ்மத் கூறினார்:
“இதை
நான் சோதிக்க விரும்புகிறேன்.
சமூகத்தில் அடிப்படையில் ஏதோ தவறு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.”
தான் வேலையில் இல்லை என்றும் கடந்த சில ஆண்டுகளாக தற்காலி தொழிலாளியாக பிழைப்பு
நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
“நாம்
எதிர்ப்புக்களை காட்ட வேண்டும்.
பெருநிறுவனங்களின் பொருட்களைக் கூட ஒருவேளை புறக்கணிக்க வேண்டும்.”
ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியின் பங்கு பற்றி அவரைக் கேட்டதற்கு,
டெரிக் எங்களிடம்,
“அவர்
பெரும் ஏமாற்றம் கொடுத்துவிட்டார்,
அவருடைய செயற்பாடுகளில் உண்மைத் தோல்விதான் உள்ளது”
என்றார்.
வர்ஜீனியாவில் ஒரு பள்ளியில் பயிலுவதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து
வந்துள்ள ஒரு மாணவரான
Sam Prendergast
உலக
சோசலிச வலைத் தளத்திடம் தான் ஏன் முகாமின் ஒரு பகுதி என்பது பற்றிப் பேசினார்.
“நான்
அமெரிக்காவிற்கு வந்துள்ளேன்,
பல அநீதிகளை காண்கிறேன்,
சமத்துவமின்மையையும் காண்கிறேன்;
எனவே வோல் ஸ்ட்ரீட்டிற்கு வரவில்லை என்றால் அது முறையாகாது.
முகாம் நடத்துவது,
ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது ஆகியவை மாறும் திறனைப் பிரதிபலிப்பவை.
நான் ஒன்றும் ஒபாமா அல்லது அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக்
கட்சிக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர் அல்ல.”
“தொழிலாளர்கள்
உரிமைகள்
=
மனித
உரிமைகள்”
என்று கூறப்பட்டிருந்த ஒரு பதாகையை அவர் தாங்கியிருந்தார்.
அவர் விளக்கியதாவது:
“இதன்
பொருள் தொழிலாளர்களின் உரிமைகள் முன்னுரிமை பெறவேண்டும் என்பதாகும்.
ஊதியங்களில் சமத்துவம் இல்லாத ஒரு சமூகம் ஆழ்ந்த நியாயமற்ற சமூகம் ஆகும்.
உலகெங்கிலும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்குப் போதுமான எண்ணிக்கையை தொழிலாள வர்க்கம்
கொண்டிருக்கிறது”
என்றார் இப்பெண்மணி.
மற்றொரு இளம்பெண்,
எதிர்ப்பில் சேர்ந்தவர் ஜேசிகா மோலினா ஆவார்;
இவர் வேலையின்மையில் இருக்கும் ஒரு மாணவர்,
Medgar Evers College
என்று
ப்ரூக்லினில் உள்ள
CUNY
முறையில் பயில்கிறார்.
“திங்கள்,
செவ்வாயன்று நான் இங்கு வருவேன்,
பின்னர் வியாழன் அன்று வருவேன்.
இங்குத்தான் முகாமிட்டுள்ளேன் அப்பொழுதில் இருந்து”.
“பெருநிறுவன
அமெரிக்கா ஊழல் நிறைந்தது என்று நான் நம்புகிறேன்.
நம் குடி உரிமைகள்,
சுதந்திரங்களை தக்க வைத்துக் கொள்ள நம்மை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும்”
என்றார் அவர்.
“ஒபாமா
நாம் காண விரும்பிய மாற்றத்தைக் கொண்டுவருவதாக கூறினார்.
ஆனால் நாம் இப்பொழுது லிபியாவில்,
என்ன காரணங்களுக்கு என்று எனக்குத் தெரியாத நிலையில்,
உள்ளோம்.
ஆனால் லிபியப் போர் போன்றவற்றிற்கு நான் எதிராக இருப்பதற்குக் காரணம் அவை மக்களைக்
கொல்கின்றன.
லிபியாவில் அமெரிக்க,
நேட்டோ குண்டுத் தாக்குதல்களை நான் எதிர்க்கிறேன்.
ஒரு நாட்டின் மீது குண்டுபோடுவதில்
“மனிதாபிமானச்
செயல்”
ஏதும் இல்லை.
9/11
க்குப்
பின் ஒரு போர் உணர்வு இருந்திருக்கலாம்,
ஆனால் இப்பொழுது இல்லை.
மேலும் இது ஒரு பெரும் நிதியக் கரைப்பும் ஆகும்.
“ஒபாமா
மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துருப்புக்களை மீண்டும் தாயகத்திற்குத் திரும்பக் கொண்டுவருவதற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் இதில் எதையும் செய்யவில்லை.
அவர் மீது மட்டும் நான் குற்றம் கூற முடியாது;
ஆனால் நிலைமை மோசமாகிவிட்டது.
ஒரு வேலை கிடைத்தால் அதிருஷ்டம் என்ற நிலையிலுள்ள உழைக்கும் மக்கள்,
பெரும்பாலும் மிகக் குறைவான ஊதியத்திற்குத்தான் உழைக்கின்றனர்.
பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் ஒரு நாளில்,
பெரும்பாலான அமெரிக்கர்கள் ஓராண்டில் பெறும் ஊதியத்தைவிட அதிகமான ஊதியத்துடன் வீடு
திரும்புகின்றனர்.
இதன்பின் அவர்கள் வெரிசனில் நடந்தது போல் எல்லாவற்றையும் எடுத்துச்செல்ல
விரும்புகின்றனர்.
“நான்
ஓராண்டிற்கும் மேலாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.
கடந்த ஆண்டு இறுதியில் வேலை கிடைப்பது கடினம் என்று அறிந்தேன்;
எனவே மீண்டும் பள்ளிக்குச் சென்றேன்.
மருத்துவ,
உணவுவிடுதி வேலை அனுபவம் எனக்கு உண்டு.
அலுவலகங்களில் தற்காலிக வேலைகள் பார்த்துள்ளேன்.
இன்னும் பல வேலை அனுபவங்கள் உண்டு,
எங்கும் வேலைக்கு அலைந்து திரிந்தேன்.
நான் அனுப்பி வைக்கும்
50
அல்லது
75
விண்ணப்பங்களில் ஏதேனும் ஒன்றிற்குத்தான் அழைப்பு வருகிறது.
அந்த பதில்களிலும் பேட்டிக்கு கூப்பிடுவதில்லை இன்னும் பல கேள்விகள்
கேட்கப்படுகின்றன.
தகுதிகள் கோரப்படுகின்றன.
ஒரு பேட்டிகூடக் கிடைப்பதில்லை.
“தனிப்பயிற்சி
உதவிக்குச் செல்கிறேன்;
ஆனால் நான் வாழ்வதற்குரிய செலவுகளுக்கு வங்கியில் கடன்கள் வாங்க வேண்டியதாக உள்ளது.
செலவுகளைக் குறைப்பதற்காக,
என்னுடைய சகோதரியுடன் வசிக்கிறேன்.
கல்வித்துறையில் வெட்டுக்களை நான் விரும்பவில்லை.
மற்ற நாடுகளில் இருப்பது போல் கல்வி இலவசமாக இருக்க வேண்டும்;
ஏனெனில் அதுதான் சமூகத்தில் ஒரு நல்ல வருங்காலத்திற்கான தேவையாகும்.”
|