WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
World
stock markets slump as Europe moves into recession
ஐரோப்பா
பின்னடைவிற்குள் நகர்கின்ற நிலையில்,
உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைகின்றன
By
Stefan Steinberg
23 September 2011
Back to
screen version
"ஐரோப்பாவும்,
அமெரிக்காவும் பின்னடைவிற்குள் சரிகின்றன,
அத்தோடு ஆசிய சந்தைகளின் வளர்ச்சியும் வேகமாக மந்தமடைந்து வருகின்றன"
என்ற குறிப்புகளைக் காட்டும் அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து,
வியாழனன்று உலக பங்குச்சந்தைகள் கூர்மையாக வீழ்ச்சியடைந்தன.
அமெரிக்காவில்,
டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி அன்றைய நாள் முடிவில்
391.01
புள்ளிகள் அல்லது
3.51
சதவீத வீழ்ச்சியுற்றது.
பங்குகளின் விலைகள் கட்டுப்பாடற்ற வீழ்ச்சிக்குள் சென்றன.
S&P 500
சந்தை
3.19
சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
நாஸ்டாக் ஒட்டுமொத்தமாக
3.25
சதவீதம் சரிந்தது.
டோவ் ஜோன்ஸின் இரண்டு நாள் சரிவின் சராசரி,
2008
நிதியியல் நிலைகுலைவு ஏற்பட்டதற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக
அதிகப்படியான சரிவாகும்.
24
பண்டங்களின்
S&P GSCI
குறியீடு
4.9
சதவீத வீழ்ச்சி அடைந்தது,
அதனோடு பண்டங்களின் விலைகளும் கூர்மையாக வீழ்ச்சியடைந்தன.
எண்ணெய் விலை ஆறு வாரகாலத்தில் இல்லாதளவிற்கு குறைந்து,
80
டாலரை எட்டியது.
தேவையைப்
(Demand)
பொறுத்தவரையில் உலகளவில் சரிவு இருக்கும் என்ற கணிப்புகளாலும்,
குறிப்பாக சீனாவில் உற்பத்தி தொடர்ந்து மூன்றாவது மாதமாக
சுருங்கக்கூடும் என்ற அறிகுறிகளாலும் மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்தி
நிறுவனங்களின் பங்கு விலைகளின் வீழ்ச்சி உந்தப்பட்டிருந்தது.
இலண்டன்,
பிரான்க்பர்ட் மற்றும் பாரிசில் அதிகளவில் பங்குகள் விற்கப்பட்டதால்,
ஐரோப்பா முழுவதிலும் உள்ள பங்குச்சந்தைகள்
4.5-5.5
சதவீதத்திற்கு இடையில் இழப்பைச் சந்தித்தன.
பல பிரதான ஐரோப்பிய சந்தைகள் இரண்டாண்டுகளுக்கு முன்னர்
உச்சக்கட்டத்தில் இருந்த அவற்றின் மதிப்பிலிருந்து தற்போது சுமார்
20
சதவீதம் இழப்பைச் சந்தித்திள்ளன என்பதை இந்த சமீபத்திய வீழ்ச்சிகள்
குறிக்கின்றன.
Markit
Economics
குழுமத்தின் தகவலின்படி,
ஆகஸ்டில்
50.7
சதவீதத்தில் இருந்த ஐரோப்பிய மண்டல பொருளாதாரங்களின் முக்கிய
Purchasing Managersஇன்
குறியீட்டெண் செப்டம்பரில்
49.2
சதவீதமாக சரிந்தது.
50
சதவீதத்திற்கும் குறைவான வீழ்ச்சியென்பது,
ஐரோப்பிய மண்டலத்தின் வர்த்தக செயல்பாடுகள் ஜூலை
2009க்குப்
பின்னர் முதல்முறையாக தற்போது சுருங்கியுள்ளன என்பதைக் குறிக்கிறது.
“பின்னடைவு
முடிந்துவிட்டது,
நாம் இப்போது சுருங்கிக் கொண்டிருக்கிறோம்,”
என்று மார்கிட் சர்வேயின் ஆசிரியர் கிரிஸ் வில்லியம்சன் கருத்துத்
தெரிவித்தார்.
வரவிருக்கும் மாதங்களில் ஐரோப்பிய பொருளாதாரங்கள் தொடர்ந்து வீழ்ச்சியடையக்கூடும்
என்று குறிப்பிட்ட அதே அறிக்கை,
ஜூலை
2009க்குப்
பின்னர் இல்லாத அளவிற்கு யூரோமண்டல வியாபாரங்களின் புதிய ஆர்டர்கள் மிகவும்
செங்குத்தாக வீழ்ச்சியடைந்தன என்பதையும் குறிப்பிட்டது.
“வருகின்ற
மாதங்களில் விஷயங்கள் இன்னும் மோசமடையுமென்று,”
வில்லியம்சன் முடிவாக தெரிவித்தார்.
யூரோமண்டலத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனியில் பொருளாதார நடவடிக்கைகள்
வீழ்ச்சயடைவதே அப்பிராந்திய சரிவிற்கான முக்கிய காரணியாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் யூரோமண்டல நாடுகளின் பொருளாதார
செயல்பாடுகளில்
"மீட்சி"
வருகிறதென்று,
தனிப்பட்ட பொருளாதாரங்களுக்கு இடையிலுள்ள பெரும் மாற்றங்களை வைத்து
வழக்கமாக ஏமாற்றப்பட்டது.
பல யூரோ பொருளாதாரங்கள்,
மிகவும் குறிப்பாக கிரீஸ்,
உண்மையில் பின்னடைவில் இருக்கையில்,
போர்ச்சுக்கல்,
ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற ஏனையவை அந்தரத்தில் ஊசலாடிக்
கொண்டிருக்கின்றன.
யூரோமண்டலத்தில் பொருளாதார செயல்பாடுகளின் அளவுகள்,
முக்கியமாக அதன் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனியின் வளர்ச்சியால்
மேல்நோக்கி இழுக்கப்பட்டிருந்தன.
தற்போது
ஜேர்மனியும் பின்னடைவை நோக்கி சாய்ந்து கொண்டிருக்கிறது.
ஜேர்மனியின்
PMI
குறியீட்டெண் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததைவிட
(50.89
சதவீதம்)
அதன் குறைந்தபட்ச அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
உற்பத்தித்துறை மற்றும் சேவை தொழில்துறையின் புள்ளிவிபரங்களில் உள்ள
சரிவு,
ஜேர்மன் பொருளாதாரத்தில் தொடர்ந்து எட்டாவது மாதமாக
ஏற்பட்டிருக்கும் மந்தநிலையைக் குறித்துக் காட்டுகிறது.
மார்கிட் இதழின் டிம் மோரேயின் கருத்துப்படி:
“ஜேர்மனியின்
தனியார்துறை பொருளாதாரத்தின் மீட்சி விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதையே
செம்டம்பரின் உடனடி
PMI
புள்ளிவிபரங்கள் அறிவிக்கின்றன,”
என்றார்.
ஐரோப்பா
பின்னடைவிற்குள் சரிந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகளும்,
கூர்மையான பங்குச்சந்தை வீழ்ச்சிகளும்,
உலகின் ஏனைய பாகங்களும் கூட பின்னடைவின் பிடியில் அல்லது வேகமான
வளர்ச்சி தோய்விற்குள் உள்ளன என்ற பல எச்சரிக்கைகளின் அடியிலிருந்து வருகின்றன.
சர்வதேச
நாணய நிதியம் அதன் உலக பொருளாதார பார்வை எனும் அறிக்கையில்,
“உலக
பொருளாதாரம் ஓர் அபாயகரமான புதிய கட்டத்தில் உள்ளது"
என்று செவ்வாயன்று அறிவித்தது.
அமெரிக்காவிலும்,
ஐரோப்பாவிலும் ஓர் இரட்டை இலக்க பின்னடைவு இருக்குமென்றும் அது
எச்சரித்தது.
உலக வங்கி தலைவர் ரோபர்ட் ஜியோலிக்,
உலக பொருளாதாரம்
"ஓர்
அபாய மண்டலத்தில்"
உள்ளதாக கூறினார்.
அமெரிக்க
பொருளாதாரம்
"ஆழமான
சரிவின் அபாயங்களை"
எதிர்கொண்டிருப்பதாக புதனன்று அமெரிக்க மத்திய வங்கிகளின்
கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னான்கே அறிவித்தார்.
அமெரிக்க வங்கிகளுக்கு பரிமாற்ற அளவை
(liquidity)
அதிகரிக்க நேற்று பெர்னான்கேயால் அறிவிக்கப்பட்ட முறைமைகள்,
டாலர் மதிப்பைக் குறைக்கும் கொள்கையைத் தொடர்வதையே குறிக்கிறது.
அக்கொள்கை யூரோவின் மதிப்பை உயர்த்த நிர்பந்தித்துள்ளது;
அதனோடு சேர்ந்து அது ஐரோப்பிய ஏற்றுமதிகளின் விலைகளையும்
உயர்த்திவிட்டது;
அவ்விதத்தில் ஐரோப்பிய பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை இன்னும்
தலைகீழாக ஆக அது பங்களிக்கும்.
அதேநேரத்தில்,
அட்லாண்டிக்கின் இருதரப்பிலும் உள்ள சந்தைகள்,
பெடரலின் முறைமைகளால்,
"மத்தியவங்கி
ஓர் ஆழமான பொருளாதார சரிவைத் தடுத்து நிறுத்துவதற்கான கருவிகள் இல்லாமல் செயல்பட்டு
கொண்டிருக்கிறது"
என்ற அதிகரித்துவரும் நம்பிக்கையை எடுக்கின்றன.
பைனான்சியல்
டைம்ஸில் அடுத்தடுத்த பக்கங்களில் வெளியான ரோஜர் ஆல்ட்மேன் மற்றும் மொஹம்மத் எல்-ஏரைனின்
தலையங்கங்கள்,
நிதியியல் மேற்தட்டுகளுக்குள் அதிகரித்துவரும் தோல்வியுணர்வை
அடிகோடிட்டன.
ரோஜர் ஆல்ட்மேன் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின்கீழ் அமெரிக்க
துணை நிதிச்செயலாளராக இருந்தவர்;
மொஹம்மத் எல்-ஏரைன்
உலகின் மிகப்பெரிய பங்கு நிதி முதலீட்டு நிறுவனமான
Pacific Investment Management Company (PIMCO)இன்
செயல் நிர்வாகியாவார்.
“America and Europe are on the verge of disastrous recession” (அமெரிக்காவும்,
ஐரோப்பாவும் பேரழிவுமிக்க பின்னடைவின் விளிம்பில் நிற்கின்றன)
என்ற தலைப்பில் வெளியான ஆல்ட்மேனின் தலையங்கம் பின்வருமாறு
எச்சரித்தது:
“வேலைவாய்ப்பின்மை
ஏற்கனவே மிகவும் உயர்ந்திருக்கின்ற போது,
அமெரிக்க மற்றும் மேற்கத்திய பொருளாதாரங்கள் மீண்டும் வீழ்ச்சி
அடைவதென்பது நாசகரமாக இருக்கும்.
நுகர்வோரையும்,
வியாபாரங்களையும்,
நிதியியல் சந்தைகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
அச்சமூட்டும் விதத்தில்,
அவை இன்னும் கூடுதலாக ஆட்குறைப்பு செய்யும்,
அது பொருளாதார வீழ்ச்சியைத் தீவிரப்படுத்தும்.
ஏற்கனவே பற்றாக்குறை,
கடன் ஆகியவற்றால் வீங்கி புடைத்துப் போயிருக்கும் அரசாங்கங்களை,
பலவீனமான தொழிலாளர்கள் சந்தைகள் மேலும் மோசமாக்கும்.”
1937இன்
நிலைமைகளுக்கு ஒப்பிட்ட ஆல்ட்மேன்,
பெருமந்தநிலையின் கடுந்தாக்குதலைப் புதுப்பித்துக் காட்டினார்.
ஐரோப்பிய
வங்கியியல் அமைப்புமுறையை
"விரைவாக
பொசுங்கி கொண்டிருக்கும் பியூஸ்"
என்று வர்ணித்த எல்-ஏரைன்,
“ஐரோப்பா
மற்றொரு மூழ்கும் முனைக்கு வெகு அருகாமையில் நெருங்கி கொண்டிருக்கிறது,”
என்றார்.
அனைத்து அறிகுறிகளும்
“பிரெஞ்சு
வங்கிகள் மீது ஓர் நிறுவனரீதியிலான ஓட்டம் இருப்பதை"
குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
அது
"அரசு
கடன்சுமையைத் தீவிரப்படுத்தும்,
மற்றொரு பொருளாதார பின்னடைவை அளிக்கும் மற்றும் முக்கியமாக உலகளாவிய
பொருளாதாரத்தின் கண்ணோட்டத்தை மோசமாக்கும் முழுதும்-கருகிப்போன
ஒரு வங்கியியல் நெருக்கடிக்குள் ஐரோப்பாவைத் தூக்கியெறிவதைக் காணும்படிக்கு"
அச்சுறுத்துகிறது.
அட்லாண்டிக்கின் இருதரப்பும் பின்னடைவிற்குள் சரிவது,
யுத்தத்திற்குப் பிந்தைய பாரம்பரிய கூட்டாளிகளுக்கு இடையில்
பதட்டங்கள் அதிகரிப்பதை உட்கொண்டிருக்கிறது.
அந்த இருதரப்பிற்கு இடையில் இருக்கும் வளர்ந்துவரும் விரோத உறவு,
அமெரிக்க நிதித்துறை செயலாளர் திமோதி கெய்த்னர் ஐரோப்பிய நிதி
மந்திரிகளைக் கடந்தவாரம் போலாந்தில் ஒரு கூட்டத்தில் சந்திக்க சென்றதைத் தொடர்ந்து
மிகவும் வெளிப்படையாக வெளிப்பட்டது.
ஐரோப்பிற்கான ஒரு பொருளாதார மீட்புபொதி திட்ட முன்மொழிவை கெய்த்னர் மேலெழுப்பிய
போது,
ஐரோப்பிய பொருளாதார மந்திரிகளிடமிருந்து அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு
கிடைத்தது.
யூரோ குழும அரசுகளின் தலைவர் ஜோன் குளோட் யுங்கர் மற்றும் ஜேர்மன்
நிதியியல் மந்திரி
Wolfgang Schäuble
உட்பட பல
ஐரோப்பிய தலைவர்கள் கெய்த்னரின் திட்டத்தை உடனடியாக நிராகரித்தனர்.
அமெரிக்க
முன்மொழிவைக் குறித்த மற்றும் வாஷிங்டனின் ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையையும்
குறித்த தம்முடைய விமர்சனத்தில்,
ஆஸ்திரிய நிதியியல் மந்திரி மரியா பெக்டர் மிகவும் கடுமையாக
இருந்தார்.
அவர் பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது:
“யூரோ
பிராந்தியத்தை விட,
அமெரிக்கர்களே மிகவும் மோசமான அத்தியாவசிய புள்ளிவிபரங்களை
வைத்திருக்கும் நிலையில்,
அவர்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கூறுவது மிகவும் வினோதமாக
உள்ளது.
ஆனால் நாங்கள் ஒரு முன்மொழிவைக் கொண்டு வரும்போது…
அவர்கள் நேரடியாக
"முடியாது"
என்று கூறிவிடுகிறார்கள்,”
என்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தரமதிப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து ஐரோப்பிய வங்கிகள்
மீது வரும் தொடர்ச்சியான அழுத்தத்தால்,
அமெரிக்க-ஐரோப்பிய
உராய்வுகள் இன்னும் அதிகமாகியுள்ளன.
திங்களன்று,
Standard & Poor
தரமதிப்பீட்டு பட்டியலிடும் நிறுவனம் இத்தாலிய பொருளாதாரத்தின் கடன் மதிப்பைக்
குறைத்தது.
பின்னர் அதைத் தொடர்ந்து புதனன்று இத்தாலியின் பிரதான வங்கியான
UniCredit
உட்பட ஏழு இத்தாலிய வங்கிகளையும் அவ்வாறே மதிப்பீட்டில் தரத்தைக்
குறைத்தது.
ஏனைய
ஐரோப்பிய நாடுகளின் அரசு கடன்களில் எந்தளவிற்கு அதிகமாக வங்கிகள் பங்குபெற்றுள்ளன
என்பதை அது கணக்கில் எடுத்ததாக குறிப்பிட்டு அந்த மதிப்பீட்டு நிறுவனம் அதன் முடிவை
நியாயப்படுத்தியது.
S&P
மதிப்புக்குறைப்பில்,
அது பிரெஞ்சு வங்கி
BNP Pairbasஇன்
இத்தாலிய கிளையையும் உள்ளடங்கி இருந்தது.
இதனால் பிரெஞ்சு வங்கியியல் பிரிவிற்கு நிதியியல்
சந்தைகளிலிடமிருந்து அதிகளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
பிரெஞ்சு வங்கியியல் துறையின் ஒரு பொறிவு குறித்த அச்சத்தைப்
பிரதிபலிக்கும் விதமாக
French CAC 40
குறியீடு
வியாழனன்று மிகப்பெரிய இழப்புகளால்
(5.25
சதவீதம் வீழ்ச்சியால்)
அடித்துச் செல்லப்பட்டது.
தரமதிப்பீட்டு நிறுவனங்களை பகிரங்கமாக கண்டனஞ் செய்ததன் மூலமாக
S&Pஇன்
முடிவிற்கு இத்தாலிய பிரதம மந்திரி விடையிறுப்புக் காட்டினார்.
"இத்தகைய
தரமதிப்பீட்டு நிறுவனங்களின் மதிப்பீடுகள் எதார்த்தத்தைவிட அதிகப்படியாக
செய்தியிதழ்களின் கட்டுரைகளால் தீர்மானிக்கப்படுவதாக தோன்றுகிறது.
அவை அரசியல் காரணங்களால் கேடுகெட்டு போயிருப்பதாகவும் தோன்றுகிறது,”
என்றார்.
அட்லாண்டிக்
முழுவதிலும் பதட்டங்களும்,
குறுநலவாதமும் உயர்ந்துவரும் நிலையில்,
ஐரோப்பாவிற்குள் தேசிய பிளவுகளும் தீவிரமடைந்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டும் பின்னடைவிற்குள் நகர்வதென்பது,
தோற்றப்பாட்டளவில் வங்கிகளுக்கு கட்டுப்பாடில்லாமல் மூலதனம்
கிடைக்கும்படி செய்த அவற்றின் அந்தந்த அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட முடிவுகளின்
விளைவுகளாகும்.
அவ்வாறு அளிக்கப்பட்ட தொகைகள் பின்னர் பாரிய சமூகசெலவின வெட்டு
திட்டங்களின் வடிவத்தில் இரண்டு மடங்கிற்கு,
தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பிவிடப்பட்டன.
விளிம்பிலுள்ள பல ஐரோப்பிய நாடுகளில் ஒரு கடன் நெருக்கடியாக எது தொடங்கியதோ அது,
தற்போது வேகமாக ஐரோப்பாவின் மையப்பகுதிக்குள்ளும் பரவியுள்ளது.
அதேநேரத்தில்,
ஐரோப்பாவிலுள்ள பிரதான நாடுகள்
(முதன்மையாகவும்,
முக்கியமாகவும் ஜேர்மனி)
ஐரோப்பிய பெருநிலப்பரப்பில் சமூகநல செலவின வெட்டுக்களின் புரிகளை
இறுக்க நோக்கம் கொண்டுள்ளது.
இத்தாலியின் மதிப்பிறக்கத்தை வரவேற்றுள்ள ஆளும் ஜேர்மன்
கூட்டணியிலுள்ள கட்சிகளின் பிரதான உறுப்பினர்கள்,
கூடுதல் செலவின வெட்டுக்களுக்கும் அழுத்தம் அளித்துள்ளன.
கிறிஸ்துவ ஜனநாயக சங்கத்தின் பீட்டர் ஆல்ட்மெய்ர் இந்த வாரத்தின்
தொடக்கத்தில் தெரிவித்தது:
“நாம்
கிரீஸைக் குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கவில்லை என்பதை இத்தாலிய விவகாரம்
எடுத்துக்காட்டுகிறது,”
என்றார்.
ஐரோப்பாவை
ஒரு புதிய பின்னடைவுக்குள் மூழ்கடித்துவரும் ஜேர்மனியிலும்,
ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசியல் மேற்தட்டுக்கள் சமூகநல வெட்டு
கொள்கையை நடைமுறைப்படுத்த தீர்மானமாக உள்ளன.
மில்லியன் கணக்கான ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு தவிர்க்கமுடியாத
வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை என்பதையே இது குறிக்கிறது. |