WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama at the UN: The arrogant voice of imperialism
ஐ.நா.வில்
ஒபாமா: ஏகாதிபத்தியத்தின்
திமிர்பிடித்த குரல்
By
Bill Van Auken
22 September 2011
Back to
screen version
புதன் கிழமை
அன்று ஜனாதிபதி ஒபாமா ஒரு வெற்றுத்தன,
திமிர்பிடித்த உபதேச
உரையை ஐ.நா.வில்
வழங்கினார்.
இது வாஷிங்டனுடைய
கொள்ளை முறைக் கொள்கைகளை மூடிமறைக்கும் வடிவமைப்புடன்
“சமாதானம்”
என்பது பற்றிய வெற்றுக்கருத்துக்களுடன் இணைக்கப்பட்டிருந்தது.
கூடியிருந்த
அரச தலைவர்கள்,
வெளியுறவு
மந்திரிகள் மற்றும் ஐ.நா.பிரதிநிதிகளிடம்
இருந்து ஆர்வமற்ற பிரதிபலிப்பைத்தான் அமெரிக்க ஜனாதிபதி பெற்றார்.
அவருடைய உரையில் ஒரு
வரிகூடக் கரவொலியைப் பெறவில்லை.
ஒபாமா இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னால் முதல் தடவையாக ஐ.நாவில் புஷ்ஷிற்கு மாறாக பன்முகத்தன்மையின்
பிரதிநிதியாக காட்டிக்கொண்ட கருத்துக்களில் இருந்த புதுமை எப்பொழுதோ மறைந்தவிட்டது.
உலகம் விரைவில்
அறிந்தது போல்,
வெள்ளை மாளிகையில்
வேறு ஒருவர் வந்துள்ளது ஒன்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் எதையும்
கொண்டுவரவில்லை,
அல்லது அமெரிக்க
இராணுவவாதம் பரவுதைத் தடுக்கவும் இல்லை.
ஒபாமாவின்
47 நிமிட உரையின்
உடனடி நோக்கம்,
பாலஸ்தீனம் ஒரு
இறைமை பெற்ற உறுப்பு நாடு என்று அங்கீகரிக்கப்படுவதற்கான ஐ.நா.பாதுகாப்புக்
குழுவின் வாக்கை நாடும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் திட்டத்தை எதிர்த்து திரைக்கு
பின்னிருந்து உருட்டி மிரட்டும் நோக்கத்திற்கு துணையாக இருப்பது ஆகும்.
பாதுகாப்புக் குழுவிற்கு பாலஸ்தீனிய நாட்டின் அங்கீகாரம் குறித்து வாக்கெடுப்பு
முயற்சி ஏதேனும் வந்தால் வாஷிங்டன் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி அதை
நிறுத்திவிடுவதாக உறுதிகொண்டுள்ளது. அத்தகைய நடவடிக்கை அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கை
மத்திய கிழக்கில் கொண்டிருக்கும் உண்மைத் தன்மையையும் அதேபோல் அரபு வெகுஜன புரட்சி
எழுச்சிகளுடன் உடன்படுவது போல் கொண்டுள்ள பாசாங்குத்தனத்தையும்
எடுத்துக்காட்டுகிறது.
உரையும்
ஒபாமா தடுப்பதிகாரம் பயன்படுத்தப்படும் என்று விடுத்த அச்சுறுத்தலும் இதே நோக்கத்தை
அடைய உதவின. இது அமெரிக்க ஜனாதிபதி அரபு உலகில் கொண்டிருக்கும் செல்வாக்கை இன்னும்
குறைத்தது.
சமீபத்திய கருத்துக்
கணக்கின்படி,
இப்பிராந்தியத்தில்
அவருக்குச் சாதகமான வாக்குகளின் எண்ணிக்கை அவர் பதவிக்கு வந்த போது இருந்த
கிட்டத்தட்ட 50%
என்பதில் இருந்து
வெறும் 10%
க்குக்
குறைந்துவிட்டது;
இது ஜோர்ஜ் டபுள்யூ
புஷ்ஷின் இரண்டாம் வரைகாலத்தில் இருந்த ஆதரவை விட மிகக் குறைவு ஆகும்.
பொதுமன்ற
அரங்கின் மேடையில் இருந்து ஒபாமா பென்யமின் நெத்தென்யாகுவுடன் ஒரு கூட்டத்தில்
ஒன்றாக தோன்ற புறப்பட்டார்.
இஸ்ரேலிய பிரதமர்
ஒபாமாவின் கருத்துக்களுக்கு வரவேற்புக் கொடுத்து,
இருவரும் பாலஸ்தீனிய
அதிகாரத்தின் தலைவர் மஹ்முத் அப்பாசை நாட்டு அந்தஸ்து பெறும் முயற்சியைக் கைவிட
கூட்டுமூலோபாயம் பற்றி ஒன்றாக உழைக்கின்றனர் என்பதைத் தெளிவுபடுத்தினார்.
வியாழன் அன்று
பாலஸ்தீனிய பிரதிநிதிக்குழு அங்கீகாரத்திற்கான முழு அடையாள முயற்சியைத்தான்
மேற்கொள்ளும் என்றும் அமெரிக்கக் ஆதரவுடனான இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகள் முடியும்
வரை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படலாம் என்பதற்கு உடன்பட்டது எனக் கூறப்படுகிறது.
இத்தகைய
பேச்சுக்கள் இரு தசாப்தங்களாக நடக்கின்றன. இவற்றில் முடிவு ஏதும் வராததுடன் இஸ்ரேல்
இடைவிடாமல் சியோனிசக் குடியிருப்புக்களை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரை மற்றும்
ஜெருசலத்தில்
தொடர்கிறது. 1991
பேச்சுவார்த்தைகள்
தொடங்கியதில் இருந்து,
குடியேறியவர்களின்
எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாகிவிட்டது. அதே நேரத்தில் மேற்குக்கரை பல
குடியேற்றங்களால் உள்ளார்ந்தரீதியாக பிளவுபட்டுள்ளது. பாதுகாப்புச் சாலைகள்,
சோதனைச்சாவடிக்ள்,
மற்றும் இனவழிப்
பாகுபாட்டு பாதுகாப்புச் சுவர் ஆகியவை அதை இஸ்ரேலிடம் இருந்து பிரித்து வைத்துள்ளன.
ஐ.நா.
உரையில் ஒபாமாவின்
கருத்துக்கள் மே மாதம் பேச்சுக்கள் தொடர்வதற்கான அவருடைய திட்டத்துடன்
ஒப்பிடும்போது இன்னும் கூடுதலான வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவைக் காட்டியுள்ளன.
அப்பொழுது அது
1967க்கு முந்தைய
எல்லைகளின் அடிப்படையில்,
“இருதிறத்தாரும்
ஏற்றுக் கொள்ளும் வகையில் இடமாற்றங்களை செய்து கொள்ளலாம்”
என்று
கூறியிருந்தார்.
இஸ்ரேல் இருக்கும்
குடியேற்றங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்ததை உட்குறிப்பாக
ஏற்றிருந்த அந்த அறிக்கை கிளின்டன் நிர்வாகக் காலத்தில் இருந்து அமெரிக்க
அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ கொள்கையைத்தான் வலியுறுத்தியது.
ஆயினும்கூட,
எல்லைகளைப் பற்றிய
வெறும் குறிப்புக்கூட நெத்தென்யாகு,
இஸ்ரேலிய வலது
மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றிடம் இருந்து புயலென எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.
ஐ.நா.இல்
ஆற்றிய உரையில்,
ஒபாமா
1967 எல்லைகள்
பற்றியோ மேற்குகரையில் குடியேற்ற விரிவாக்கம் நடப்பதைத் தடுப்பது பற்றியோ ஏதும்
கூறவில்லை.
மாறாக அவர் திட்டமிட்டுள்ள
பேச்சுக்களுக்கு அவர் முன்வைத்த தளமாவது:
“இஸ்ரேலியர்கள் எந்த
உடன்பாட்டிலும் தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டும் என்பதை அறிய வேண்டும்.
பாலஸ்தீனியர்கள்
தங்கள் நாட்டின் பிராந்தியத்தின் அடித்தளத்தை அறியும் உரிமை உடையவர்கள்.”
ஜனாதிபதியின்
கருத்துக்களில் மற்றவை தெளிவாக்கியது போல்,
இந்த இரு
நிபந்தனைகளும் இஸ்ரேலினால் ஆணையிடப்பட்டவை.
திரைக்குப்
பின் அமெரிக்க அதிகாரிகள் பாலஸ்தீனிய அதிகாரத்தை அங்கீகாரத்திற்கான வேண்டுகோளை
தொடர்ந்தால் அமெரிக்க உதவி நிறுத்தப்படும் என்று அச்சுறுத்துவதாகக் கூறப்படுகையில்,
ஒபாமா தன்னுடைய
உரையில் ஐ.நா.வை
அணுகுவது எதையும் சாதிக்காத ஒரு
“குறுக்குவழி”
என்று விவரித்தார்.
தன்
கருத்துக்களின் தொடக்கத்தின் வனப்புரையுடன் பாராட்டிய அமைப்பின் பங்கை உதறிய
வகையில்,
ஒபாமா,
“ஐ.நா.அறிக்கைகள்,
தீர்மானங்கள் மூலம்
சமாதானம் ஏற்படாது—அவ்வளவு
எளிதாக வருமெனின்,
இது இதற்குள்ளாக
சாதிக்கப்பட்டிருக்கும்.”
என்றார்.
உண்மையில்
பாலஸ்தீனியத்தின் நிலைமை பற்றிய ஏராளமான ஐ.நா.தீர்மானங்கள்
இஸ்ரேல் மற்றும் வாஷிங்டன் ஆகிவற்றால் நிராகரிக்கப்பட்டு,
புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்
குழுவில் தன் தடுப்பதிகாரத்தை அமெரிக்கா இன்னும் ஏராளமான தீர்மானங்கள்
இயற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
“மே
மாதம் 1967
எல்லைக் கருத்துக்களைக்
கூறியதை ஒட்டி இஸ்ரேலை பஸ்ஸிற்குக் கீழ் தள்ளுவதாக குடியரசுக் கட்சி ஜனாதிபதி
வேட்பாளர்களாக வரக்கூடியவர்களின் வலதுசாரி குறைகூறலை வெளிப்படையாக எதிர்கொள்ளும்
வகையில்,
ஒபாமா அதிகப்படியாக சென்று
பாலஸ்தீனிய மக்களின் வரலாற்றுத் தன்மை நிறைந்த துன்பங்களை உதறித்தள்ளி இஸ்ரேலுடன்
நிபந்தனையற்ற முறையில் ஒன்றுபட்டுள்ளார்.
பாலஸ்தீனியர்கள்
“தங்கள் இறைமை பெற்ற
நாட்டைப் பெற தகுதி உடையவர்கள்”,
“இந்த நிலை
வருவதற்கு நீண்ட தாமதத்தைத்தான் கண்டுள்ளார்கள்”
என்று ஒபாமா
கூறினார்.
இதைத்தொடர்ந்து,
“அமெரிக்கா
இஸ்ரேலின் பாதுகாப்பிற்குக் கொண்டுள்ள உறுதிப்பாடு அசையாத் தன்மை உடையது,
இஸ்ரேலுடனான நம்
நட்புறவு ஆழ்ந்தது,
நீடித்த வகையானது”
என்ற அறிக்கையைக்
கொடுத்தார்.
இதன்பின் இஸ்ரேல்,
“பலமுறையும் அதற்கு
எதிரான போர்களை தொடுத்துள்ள அண்டை நாடுகளால் சூழப்பட்டுள்ளது,”
“அதன் குடிமக்கள்
தங்கள் வீடுகளின் மீது எறியப்படும் ராக்கெட்டுக்களால் கொல்லப்பட்டுள்ளனர்,
தங்கள் வீடுகளில்
தற்கொலைப் படைகளால் தாக்கப்பட்டு மடிந்துள்ளனர்”
என்றும் கூறினார்.
உலகில்
“இஸ்ரேல் ஒரு சிறிய
நாடு”, “இங்கு
பெரிய நாடுகளின் தலைவர்கள் அதை வரைபடத்தில் இருந்தே அகற்றவிடுவதாக
அச்சுறுத்துகின்றனர்”
என்றார்.
ஹொலோகோஸ்ட்டை
நினைவுகூர்ந்து தன் உரையை முடித்தார்.
“இந்த
உண்மைகள் மறுக்கப்பட முடியாதவை”
என்றார் அவர்.
கிட்டத்தட்ட
4 மில்லியன்
பாலஸ்தீனியர்கள் அடக்குமுறையின்கீழ் வாழ்கின்றனர்,
இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பின் இடைவிடா வன்முறையின் கீழ் வாழ்கின்றனர்,
மற்றும் ஒரு
5 மில்லியன் மக்கள்
அகதிகளாக தாய்நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த
“உண்மைகள்”
தேர்ந்தெடுக்கப்பட்டுக் கூறுவதில் இருந்து ஒருவர் எதையும் ஊகிப்பதற்கு இல்லை.
அப்படிப்பார்த்தால்,
“சிறிய இஸ்ரேல்”
இடைவிடாமல் அதன்
வளைந்து கொடுக்கும் எல்லையை ஒட்டி அதன் அண்டை நாடுகளுடன் நடத்திய போர்கள் பற்றியும்
ஏதும் அறிவதற்கில்லை.
இவற்றுள் மிகச்
சமீபத்தியவை 2006ல்
லெபனானுக்கு எதிராக நடந்த போர்,
இதில்
1,200 குடிமக்கள்
கொல்லப்பட்டனர்,
நாட்டின்
உள்கட்டுமானம் பேரழிவிற்கு உட்பட்டது. மற்றும்
2008 , மற்றும்
2008 “Operation Cast Land”
என காசாவிற்கு எதிராக
நடந்தது, 13
இஸ்ரேலியர்களுடன்
ஒப்பிடும்போது கிட்டத்தட்ட
1,500
பாலஸ்தீனியர்கள் இறந்தது ஆகியவை அடங்கும்.
எரிச்சலூட்டும் ஒலிக்குறிப்பில்,
ஒபாமா
“இந்த அரங்கில் உள்ள
பலருக்கு”
வாஷிங்டன் மனித உரிமைகள்
மற்றும் ஜனநாயகத்திற்குப் பாடுபடுவது என்னும் கூற்றிற்கு பாலஸ்தீனியப் பிரச்சினை
“ஒரு சோதனை”
போல் உள்ளது என்பதை
ஒப்புக் கொண்டார்.
ஆனால்
உண்மையில் உரையின் பிற பகுதிகள் உலகெங்கிலும் வாஷிங்டனுடைய கொள்கையைச் சுற்றியுள்ள
பாசாங்குத்தனம்,
ஏகாதிபத்திய நலன்களை
வெளிப்படுத்தும் வகையில்தான் இருந்தன.
ஒபாமா
உரையின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட பாசாங்குத்தனம் அமெரிக்க அரசாங்கம்
“ஒரு ஏகாதிபத்திய
உலகில் சமாதானத்தைத் தொடர்வதில் ஈடுபட்டுள்ளது”
என்பதுதான்.
இந்த உரையில்
“சமாதானம் கடினமானது”
என்ற வெற்றுப்
பல்லவி மூன்று முறைக்கு மேல் கூறப்பட்டு இருந்தது.
தன்னுடைய
கருத்துரையை விளக்குகையில்,
ஒபாமா ஈராக்கில்
எட்டரை ஆண்டுக் காலப் போர் மற்றும் ஆக்கிரமிப்பிற்குப் பின் ஈராக்கில் இருந்தும்
தசாப்தக் காலப் போருக்குப்பின் ஆப்கானிஸ்தானில் இருந்தும்
ஓரளவுப் படைகளை
பின்வாங்கியுள்ளதை சுட்டிக் கட்டினார்.
ஆண்டு இறுதிக்குகுள்
இப்போர்களில் 90,000
அமெரிக்கத்
துருப்புக்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படும் என்றும் பீற்றிக் கொண்டார்.
வாஷிங்டனுடைய நோக்கம் ஈராக்குடன் ஒரு
“சம பங்காளித்தனத்தை”
உருவாக்குதல்,
“ஈராக்கிற்கு நம்
ஆதரவு வலுப்படுத்தப்படும்—அதன்
அரசாங்கத்திற்கும்,
பாதுகாப்புப்
படைகளுக்கும்”,
மற்றும்
“ஆப்கானிஸ்தான்
மக்களுடன்” “நீடித்த
பங்காளித்துவம்”
இருக்கும் என்றும்
அவர் கூறினார்.
இம்மாற்றங்கள்
“போரின் அலைகள்
பின்னடைகின்றன”
என்பதை
நிரூபிக்கின்றன என்றார் அவர்.
ஆனால்
“பங்காளித்தனத்தை”
பற்றிய வனப்புரை
வெள்ளை மாளிகையிலும் பென்டகனிலும் அமெரிக்கத் துருப்புக்களை இருத்துதல்,
CIA செயலர்கள்
மற்றும் அமெரிக்க தளங்களை இரு நாடுகளிலும் அமெரிக்கா திரும்பப் போவதாக அறிவித்துள்ள
நாட்களுக்குப் பின்னும் வைத்திருத்தல் என்ற திட்டங்களைத்தான் குறிக்கிறது.
அமெரிக்க
ஏகாதிபத்தியம் காஸ்பியன் பகுதி மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதிகளின் மூலோபாய
எரிசக்தி இருப்புக்களின்மீது மேலாதிக்கக் கட்டுப்பாட்டை நிறுவும் என்று போர்களின்
தொடக்கத்தில் இருந்தே அடித்தளத்தில் இருந்த இலக்குகளைத் தொடரும் என்ற
உறுதிப்பாடுதான் உள்ளது.
இதன்பின்
ஒபாமா
“அரபு வசந்தம்”
பற்றிப் பெருமை
பேசிய வகையில் அறிவித்தார்.
“ஓராண்டிற்கு முன்
துனிசிய மக்கள் நசுக்கப்பட்டிருந்தனர்…
ஓராண்டிற்கு முன்
எகிப்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஒரு ஜனாதிபதியைத்தான் அறிந்திருந்தது.”
என்றார்.
எவருடைய
ஆதரவு பென் அலி,
முபாரக் போன்ற
சர்வாதிகாரிகள் நீடித்தகாலம் பதவியில் இருப்பதற்கு உதவியது என்பது பற்றி அமெரிக்க
ஜனாதிபதி குறிப்பு ஏதும் கொடுக்கவில்லை என்பதைக் கூறத்தேவையில்லை;
அதேபோல் தற்பொழுது
வாஷிங்டன் அவர்கள் தலைமை கொண்டிருந்த ஆட்சியை இயன்ற மட்டும் தொடர்ந்து
பதவியிலிருக்க காட்டும் அக்கறை மற்றும் அவர்களை அகற்றிய வெகுஜன இயக்கத்தை நசுக்கும்
முயற்சிகள் பற்றியும் ஏதும் கூறவில்லை.
அந்தக்
கட்டத்தில் இருந்து அவர் லிபியாவில் நேட்டோ நடத்திய போரைப் புகழத் தொடங்கி,
ஏகாதிபத்தியத்
தலையீட்டிற்கு இசைவு கொடுத்த வகையில்,
“ஐ.நா.
அதன் சாதனத்தின்
தன்மையை ஒட்டி நடந்துள்ளது”
என்று அறிவித்தார்.
உண்மையில்,
இப்போர்
இச்சாதனத்தின் அடிப்படைகளை மீறியது ஆகும்;
அனைத்து உறுப்பு
நாடுகளின் “இறைமைச்
சமத்துவத்தை”
அது வலியுறுத்தி,
அனைத்துப்
பூசல்களும் சமாதானமுறையில் தீர்க்கப்பட வேண்டும்,
உறுப்பு நாடுகள்
“சர்வதேச உறவுகளில்
அச்சுறுத்தலையோ நில ஒருங்கிணைப்பிற்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்துவதையோ,
எந்த நாட்டின்
அரசியல் சுதந்திரத்தில் வன்முறையைப் பயன்படுத்துவதில் இருந்து தடை செய்திருந்தது.”
லிபியாவைப்
பொறுத்தவரை,
அமெரிக்காவும் அநன்
நேட்டோ நட்பு நாடுகளும்,
பெங்காசியில்
தவிர்க்க முடியாத படுகொலை ஏற்படக்கூடும் என்ற அச்சுறுத்தலைப் பயன்படுத்தி,
“தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும்”
குடிமக்களை
பாதுகாக்க எடுக்கப்படலாம் என்ற தீர்மானம் மூலம் இசைவு பெற்றனர்.
இத்தீர்மானத்தை
ஆட்சிமாற்றத்திற்கான ஒரு மறைப்புப் போராகப் பயன்படுத்தின.
நேட்டோ சக்திகள்
ஆயிரக்கணக்கான வான்வழித்தாக்குதல்களை நடத்தியதுடன்,
எழுச்சிப்
படையினருக்கு பல ஆயிரக்கணக்கான லிபிய உயிர்களைப் பறித்த ஒரு போரில் சிறப்புப் படைத்
துருப்புக்களை அனுப்பி ஒழுங்குபடுத்தி,
பயிற்சி அளித்து,
ஆயுதங்களையும்
வழங்கின.
இப்போரின் நோக்கம்,
இதற்கு முன்பு
இருந்த ஆப்கானிய,
ஈராக் போர்களைப்
போலவே,
மூலோபாய எரிசக்தி
மூலவளங்கள்மீது ஆதிக்கம் செலுத்துவது மற்றும் மேலை இராணுவச் சக்தியை இப்பகுதிக்குள்
நுழைத்து இப்பிராந்தியத்தில் வந்துள்ள புரட்சிகரக் கொந்தளிப்பை எதிர்கொள்வது
என்றும் உள்ளது.
“இப்படித்தான்
சர்வதேச சமூகம் வேலை செய்யும்”
என்று ஒபாமா லிபிய
நடவடிக்கை குறித்து அறிவித்தார்:
இது ஐ.நா.வின்
முன்னோடி அமைப்பான அனைத்து நாடுகளின் கழகத்தை
(League of Nations),
லெனின்
”திருடர்களின்
சமையல் அறை”
என்று
விவரித்ததைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது.
இன்னும்
வரவிருக்கும் முடிவடையா விவகாரங்கள்,
ஏகாதிபத்திய
தலையீடுகள் திறனைக் கொண்டவை பற்றிக் குறிப்பிடுகையில்,
ஒபாமா ஈரானை
“தன் சொந்த மக்களின்
உரிமைகளை அங்கீகரிக்கத் தவறியதற்கு”
கண்டித்து,
ஐ.நா.
சிரியாவிற்கு
எதிராகவும் புதிய பொருளாதாரத் தடைகளைச் சுமத்த வேண்டும் என்று முறையிட்டார்.
“சிரிய மக்களுடன்
இணைந்து நிற்போமா அல்லது அவர்களை அடக்குபவர்களுடனா?”
என்றும் அவர்
கேட்டார்.
கடந்த
மூன்று நாட்களில்
100
குடிமக்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ள யேமனில் நடக்கும் குருதிகொட்டும்
நிகழ்வுகளைக் காணும்போது ஒபாமா அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஆதரவு உடைய
ஆட்சிகளுக்கு எதிராக நடக்கும் எழுச்சிகளை முற்றிலும் புறக்கணிக்க முடியாது.
ஆனால் யேமனில்
அடக்குமுறையாளர்களுக்கு எதிராக நிற்க வேண்டும் என்றுகோரப்படவில்லை,
“ஒரு அமைதியான
முறையில் மாற்றம் வருவதை அனுமதிக்கும் பாதை காணப்பட வேண்டும்”
என்ற அழைப்பு
மட்டும் விடப்பட்டது.
பஹ்ரைன்
பற்றிய அவருடைய குறிப்பு இன்னும் வெற்றுத்தனமானது;
அங்குத்தான்
அமெரிக்க கடற்படையின்
5ம் பிரிவின்
தலைமையகம் உள்ளது.
“அமெரிக்கா
பஹ்ரைனின் நெருக்கமான நட்பு நாடு”
என்று அவர்
அறிவித்தார்.
இங்கு
ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்,
சித்திரவதை
செய்யப்பட்டுள்ளனர்,
உதைக்கப்பட்டுள்ளனர்,
ஜனநாயக உரிமைகளை
கேட்டதற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அவர்
“அர்த்தமுள்ள
பேச்சுவார்த்தை தேவை”
என்று மட்டுமே
கூறியுள்ளார். அடக்குமுறையை நியாயப்படுத்தும் வகையில் பஹ்ரைன் மக்கள்
“தங்களைப்
பிரித்துவிடக்கூடிய குறுங்குழுவாத சக்திகளுக்கு முகங்கொடுக்கின்றனர்”
என்றார்.
உரையின்
எஞ்சிய பகுதி வாடிக்கையான உயர்கருத்துக்கள் என்ற வெற்றுத்தன,
அவநம்பிக்கை நிறைந்த
தன்மையில்தான் இருந்தன.
அணுவாயுதம்
அகற்றுதலும் இதில் அடங்கியிருந்தது;
வாஷிங்டன் உலகின்
மிகப் பெரிய அணுவாயுதக் கிடங்கைக் கொண்டுள்ளது,
அத்தகைய ஆயுதங்களை
உபயோகித்த ஒரே நாடு,
வடகொரியாவிற்கும்
ஈரானுக்கும் உபதேசிக்கிறது.
வறுமை மற்றும்
நோய்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த அவர்
“மாறும்
சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படக் கூடது”
என்றார்.
இதைத்தவிர மகளிரின்
உரிமை,
ஆண்,
பெண் ஓரினச்
சேர்க்கை குறித்த ஆதரவு ஆகியவையும் இருந்தன.
அமெரிக்கா
மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உழைக்கும் வர்க்க மக்கள் முகங்கொடுக்கும்
முக்கியமான பிரச்சினை குறித்து ஒபாமா பொருளாதார
“மீட்பு
நலிந்துள்ளது”
என்பதை ஒப்புக்
கொண்டார்;
மேலும்
“மிகப் பலர்
வேலையில் இல்லை”,
“மிகப் பலர்
வாழ்வதற்கு அவதியுற்றுள்ளனர்”
என்றார்.
வங்கிகளுக்கு பல
டிரில்லியன் டாலர்கள் பிணைஎடுப்பு கொடுக்கப்பட்டது பற்றி,
“நாங்கள் ஒன்றாக
இணைந்து 2009
ல் ஒரு மந்தநிலையைத்
தவிர்க்கச் செயல்பட்டோம்”
என்று பெருமை
அடித்துக் கொண்டார்;
மேலும்,
“மீண்டும் அவசரமான,
ஒருங்கிணைந்த
நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்”
என்றும்
வலியுறுத்தினார்.
ஆனால்
அவருடைய உரையில் எழுப்பப்பட்ட மற்ற பிரச்சினைகளைப் போலவே,
அமெரிக்க
ஜனாதிபதியிடம் “ஒருங்கிணைந்த
நடவடிக்கை”யோ,
திட்டமோ,
கொள்கையோ ஏதும்
முன்வைக்கப்படுவதற்கு இல்லை.
இறுதிப்
பகுப்பாய்வில் ஒபாமாவின் வெற்று வார்த்தைஜாலங்கள் அமெரிக்க முதலாளித்துவம் மற்றும்
அதன் ஆளும் உயரடுக்கு பொருளாதாரச் சரிவு மற்றும் புரட்சிகர எழுச்சியை
முகங்கொடுக்கையில் பீடிக்கப்பட்டிருக்கும் ஆழ்ந்த நெருக்கடியின் நேரடி
வெளிப்பாடாகத்தான் இருந்தது.
|