WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
கிரேக்கத் தொழிலாளர்கள் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக
வேலைநிறுத்தங்கள்,எதிர்ப்புக்களை நடத்துகின்றனர்
By David Walsh
23 September 2011
use
this version to print | Send
feedback
பல்லாயிரக் கணக்கான கிரேக்கப் பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள்,
ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகியோர்
வியாழனன்று நேற்று முன் தினம் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின்
PASOK
இன்
அரசாங்கம் அறிவித்த சமீபத்திய சுற்று மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வேலை
நிறுத்தம் செய்தனர்.
முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து இப்பொழுது வரவுள்ள மாபெரும் வேலைகள்,
ஓய்வூதியங்கள் ஆகியவற்றின் வெட்டுக்கள் கிரேக்க மக்களில் பரந்த பிரிவுகளுக்கு மிக
வறிய நிலைமையை அர்த்தப்படுத்துகிறது.
மிகவும் செல்வாக்கற்ற திட்டத்திற்குத் தொழிலாளர்கள்
வெடிப்புத்தன்மையைக் காட்டி விடையிறுத்துள்ளனர்.
ஏதென்ஸிலும் அதைச் சுற்றியும் பஸ்,
நிலத்தடி இரயில்,
டிராம்கள்,
மின்சார இரயில்கள் மற்றும் புறநகர் இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்;
இவற்றுடன் டாக்சி உரிமையாளர்களும் சேர்ந்து கொண்டனர்.
ஏதென்ஸின் போக்குவரத்து நிலைமையானது
“அனைத்து
முக்கிய தெருக்களிலும் தேங்கி நின்றுவிட்ட வியத்தகு நிலைமை”
என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் வர்ணித்தார்.
தேசிய இரயில் வலையமைப்பும் செயல்படவில்லை.
இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர்;
துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களைத் தொடர்ந்தனர்.
ஏதென்ஸில் நகரசபை தொழிலாளர்கள் நான்கு மணி நேரம் வேலையைப் புறக்கணித்தனர்;
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூன்று மணி நேர வேலைநிறுத்தம்
செய்தனர்.
சுகாதாரம்,
நிதி உட்பட பல அமைச்சரக ஊழியர்கள் புதனன்று அரசாங்கக் கட்டிடங்கள் பலவற்றில்
உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தினர்.
நிதி அமைச்சரக ஊழியர்கள் செப்டம்பர்
27-28
ல்
48
மணி நேர
வேலைநிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளனர்.
வரி வசூலிப்பு அதிகாரிகளும் சுங்க அதிகாரிகளும்,
போக்குவரத்துத் தொழிலாளர்கள்,
டாக்சி டிரைவர்களுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்,
ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாணவர்கள் பல இடது குழுக்களின் உறுப்பினர்களுடன்
மத்திய ஏதென்ஸிலும் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியேயும் வியாழனன்று
ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
செய்தி ஊடகத் தகவல்களின்படி,
ஏராளமான கலகப் பிரிவுப் பொலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
நிதி மந்திரி எவன்ஜிலோஸ் வெனிஜிலோஸ்,
கடுமையான
IMF,
ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி என்னும்
“முக்கூட்டின்”
அழுத்தத்தை ஒட்டி அறிவித்திருந்த நடவடிக்கைகளில்
1,200
யூரோக்களுக்கு அதிகமான மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்களில்
(1,636
டாலர்)
20%
வெட்டுக்களும் அடங்கியிருந்தன;
இதைத்தவிர
55
வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதியங்களில்
1,000
யூரோக்களுக்கு
(1,349
டாலர்)
மேலாக மாதம் ஒன்றிற்கு பெறுபவர்கள்
40
சதவிகிதம் இழப்பார்கள்.
கிட்டத்தட்ட
30,000
அரசாங்க
ஊழியர்கள்
12
மாத
காலத்திற்கு
“தொழிலாளர்
இருப்புப் பட்டியல்”
என அழைக்கப்படுவதில் இருத்தப்படுவர்.
அவர்களுடைய ஊதியங்கள் கிட்டத்தட்ட
40%
குறைக்கப்பட்டுவிடும்;
ஓராண்டிற்குப் பின் அவர்கள் வேலைகளை இழக்க நேரிடலாம்.
அரசாங்கம் வருமான வரி செலுத்தும் முதல் கட்டத்தை ஆண்டிற்கு
5,000
யூரோக்கள்
(6,800
டாலர்கள்)
ஆக
8,000
யூரோக்களில்
(11,000
டாலர்கள்)
இருந்து குறைத்துள்ளது;
இந்த நடவடிக்கை குறைவூதியக் குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு புதிய பிற்போக்குத்தன சொத்துவரித் திட்டத்தையும்
PASOK
அரசாங்கம் செயல்படுத்த உள்ளது;
இதை மின்சாரக் கட்டணங்கள் மூலம் தவிர்ப்பை அகற்றுவதற்காக அது வசூலிக்கும்
திட்டத்தைக் கொண்டுள்ளது.
பயன்பாட்டுப் பிரிவுத் தொழிலாளர்கள் சங்கம் இந்த வரியை வசூலிக்கத் தான் மறுக்கப்
போவதாக அறிவித்துள்ளது.
பொருளாதாரம்
2011
ல்
5.5%
சுருங்கும்,
2012ல்
2.5%
சுருங்கும் என்று கடந்த ஆண்டின்
4.4%
சரிவை
அடுத்து
IMF
கணித்துள்ளது.
வேலையின்மை விகிதம் உத்தியோகபூர்வமாக
16
சதவிகிதம் என்று உயர்ந்துவிட்டது,
இன்னும் உயர்ந்து கொண்டிருக்கிறது.
பல சுற்றுச் சிக்கன நடவடிக்கைகளின் கூட்டுப் பாதிப்பு மந்தநிலையை ஆழப்படுத்தும்,
வரி மூலம் கிடைக்கும் வருவாய்களை குறைக்கும் மற்றும் இன்னும் கடுமையான தாக்குதல்கள்
தேவைப்படும்.
இவை அனைத்தும் உலக வங்கியாளர்கள் மற்றும் பில்லியனர்
முதலீட்டாளர்களின் தீர்க்கமுடியாத கோரிக்கைகளைத் திருப்தி செய்வதற்கு
செயல்படுத்தப்படுகின்றன.
கிரேக்கத்தில் மக்கள் சீற்றம் மிகுந்துள்ளது.
ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கோட்பாட்டுப் பேராசிரியர் யானிஸ் வரோபகிஸ்
BBC
இடம்,
“அவர்கள்
கொழுப்பை மட்டும் வெட்டவில்லை,
சதையையும்தான்.
நோயாளியான கிரேக்கம் இக்காயங்களினால் மடிந்து கொண்டிருக்கிறது”
என்றார்.
மக்களுடைய சீற்றத்தின் மங்கிய பிரதிபலிப்பு,
ஏன் திகைப்புக்கூட,
செய்தி ஊடகத்திற்குள் நுழைந்து விட்டது.
ஓய்வூபெற்ற
Efthymios Gardikiotis
அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்:
“எனக்கு
73
வயது,
நான் ஒரு போரைத் தொடங்குவேன்.
அரசாங்கம் எப்படி ஒரு போரை விரும்புகிறதோ,
அதேபோல்.”
ஏதென்ஸின் தேசிய அரங்கில் வேலை பார்க்கும்
32
வயது
ஊழியர் கோஸ்டாஸ் அட்ரியானாபௌலஸ் ராய்ட்டர்ஸிடம் கூறினார்:
“எங்கள்
வேலைகள்,
வாழ்வுகளை இழந்துவிடுவோம் என்னும் அச்சத்தில் வாழ்கிறோம்.
இந்தப் வேலை நீக்கங்கள் தேவைதான் என்றாலும்,
நாங்கள் மனிதர்கள்போல் நடத்தப்படவில்லை.
அவர்கள் எங்கள் ஊதியங்கள்,
ஓய்வூதியங்களைக் குறைத்துவிட்டனர்;
அதை ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் இவற்றில் இன்னும் அதிகம் என்றால் அது நாட்டிற்கு நல்லது அல்ல.
எந்தக் காரணமும் இன்றி நாங்கள் தியாகத்திற்கு உட்படுத்தப்படுகிறோம்.
கடன்திருப்பிக் கொடுக்காமல் இருப்பதை நாங்கள் தவிர்க்க முடியாது.
எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.”
கிரேக்கத் தொழிற்சங்கத் தலைவர்களும் புதிய சிக்கன நடவடிக்கை பற்றிப்
புலம்பினர்.
கிரேக்கத் தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பின்
(GSEE)
தலைவரான
யானிஸ் பனகோபௌலஓஸ்,
“இந்தக்
கொள்கையை நாங்கள் பொறுக்க மாட்டோம்,
எங்களுக்கு விருப்பம் இல்லை.
நாங்கள் தொடர்ச்சியான,
முழுமையான,
நிரந்தரமான எதிர்ப்பை அதற்குக் கொண்டுள்ளோம்.”
கிரேக்கத் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள்,
தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் நிலைமைகள் ஆகியவற்றின் முந்தைய வெட்டுக்களைச்
செயல்படுத்த உதவியவை இப்பொழுது தங்களால் இயன்ற மட்டும் இயக்கத்தை ஒருநாள் அல்லது
குறுகியக் கால எதிர்ப்புக்களாகக் குறைக்க அனைத்தையும் செய்கின்றனர்.
ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடப்படும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை;
அரசாங்கத்தின் தோல்வி கிரேக்க மக்களிடையே சக்திவாய்ந்த எதிர்ப்பைக் காணும்.
GSEE
மற்றும்
அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு
(ADEDY)
ஆகியவை
வெறும் ஒருநாள் நாடுதழுவிய பொதுத்துறை வேலைநிறுத்தத்தை அக்டோபர்
5
அன்று
அறிவித்துள்ளன;
இப்பொழுதில் இருந்து அது இரு வாரங்கள் தள்ளி உள்ளது;
மேலும் ஒரு பொது வேலைநிறுத்தம் அக்டோபர்
19க்கும்,
ஒரு மாத காலத்திற்குப் பின்,
அறிவித்துள்ளது.
இந்த எதிர்ப்புக்களின் நோக்கம் தொழிலாளர்களின் கோபத்தைத் திசைதிருப்பி,
அதைச் சளைக்கச் செய்து,
வரம்பு கட்டி பயனற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி,
நடைமுறையில் மக்களை சர்வதேச வங்கியாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு மாற்றீடு ஏதும்
இல்லை என்று நம்ப வைப்பதாக உள்ளது.
சமூக ஜனநாயக
PASOK
அரசாங்கம் மற்றும் கிரேக்கப் பாராளுமன்றம் ஆகியவை மே
2010ல்
30
பில்லியன் யூரோக்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கும் இந்த ஜூன் மாதம் மற்றும்
28
பில்லியன் யூரோக்கள் நடவடிக்கைகளுக்கும் உடன்பட்டன.
இன்னும் ஒரு
50
பில்லியன் யூரோக்கள் பரந்த முறையில் தனியார்மயமாக்கும் திட்டங்கள் மூலம் எழுப்பப்பட
உள்ளன;
இது கிரேக்க மக்களின் இழப்பில் உலகப் பெருநிறுவனங்களுக்கு ஆதாயங்களை அளிக்கும்.
சுமத்தப்பட்ட நடவடிக்கைகள் கடுமையாக இல்லை,
அல்லது
IMF
மற்றும்
ஐரோப்பிய வங்கியாளர்கள் விரும்பிய வகையில் விரைவாக இல்லை.
PASOK
அரசாங்கம் மிகச் சமீபத்தில்
6
பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களை
“முக்கூட்டுடன்”
பேச்சுக்களை நடத்தியபின் அறிவித்துள்ளது.
பிந்தையது சமீபத்திய அவசரக்கால நெருக்கடி நிதி சர்வதேசக் கடன் கொடுப்போரிடம்
இருந்து
8
பில்லியன் என்று மொத்தம்
110
பில்லியன் யூரோக்களில் இருந்து,
பாப்பாண்ட்ரூ அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முழுமையாகச் செயல்படும் என்பதை
நிரூபிக்காவிட்டால் நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியுள்ளது.
இப்பணம் அக்டோபர் நடுப் பகுதிக்குள் கொடுக்கப்படாவிட்டால்,
கிரேக்க அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கும்,
ஓய்வு பெற்றவர்களுக்கும் ஊதியம் கொடுக்க முடியாது.
வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையும் தொடரும்.
புதன்கிழமை வந்த அறிவிப்பு
IMF
மற்றும்
ஐரோப்பிய அதிகாரிகளால் பொதுவான திருப்தியுடன் வரவேற்கப்பட்டன;
ஆனால் ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கிரேக்க அரசாங்கம் புதிய சிக்கனப்
பொதியின்
“முக்கிய
கூறுபாடுகளை”
தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
பல நிதிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் திட்டத்தின் விவரங்கள் முடிவு செய்யப்படும்
வரை ஏதென்ஸுக்குத் திரும்பிவர மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
இத்திட்டம் நிதியச் சந்தைகளையும் ஊகவணிகர்களையும் இசைய வைக்க
இயலவில்லை;
அவற்றில் பலரும் கிரேக்க திவால் பின்னர் என்பதை விட முன்கூட்டியே வரும் என்றுதான்
பந்தயம் கட்டுகின்றனர்.
Fitch Ratings
இந்த
வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அது கிரேக்கம் அதன் கடன்களைத் திருப்பித்தர
முடியாது என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.
அத்தகைய ஒரு நிலைமை குறித்த தன் திட்டம் பற்றி ஜேர்மனிய அரசாங்கம் தயாரித்து
வருகிறது.
அரசாங்கத்தின் புதிய நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் வகையில் நிதி
மந்திரி வெனிஜிலோஸ்,
“நிலைமை
மிக மோசமாக உள்ளது,
ஏன் ஆபத்தானது என்று கூட நான் கூறுவேன்.
யூரோப்பகுதி,
ஐரோப்பிய வங்கி முறை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பதட்ட நிலைமை உள்ளது”
என்று அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் அவர்,
“சந்தைகள்
நம்மை மிரட்டுகின்றன,
சூழ்நிலைமை நம்மை அவமானப்படுத்துகிறது”
என்றார்.
கிரேக்க மக்களுடைய
“கஷ்டங்கள்”
அப்படியும்கூட வெளிநாட்டு மேற்பார்வையின் கீழ் வந்துள்ள அதிருஷ்டத்தைக் கொண்டுள்ளன.
அத்தகைய மேற்பார்வை இல்லாவிடின்,
“நாம்
துரதிருஷ்ட வசமாக நேர்பாதையில் இருந்து விலகியிருப்போம்”
என்று திருந்திய குடிகாரன் போல் அவர் கூறினார்.
ஒரு இருண்ட குறிப்பை
வோல்
ஸ்ட்ரீட்
ஜேர்னல்
கொடுத்துள்ளது.
“ஐரோப்பிய
நிதியச் சந்தைகளில் வியாழனன்று ஒரு பீதி நிறைந்திருந்தது;
முடிவிலா மோசமான பொருளாதாரத் தகவல்கள் வந்துகொண்டிருந்தன எனத் தோன்றியது”;
இதில் செப்டம்பர் மாதம்
17
நாடுகள்
அடங்கிய யூரோ வலையப் பகுதியில் வணிக நடவடிக்கைச் சுருங்கியதும் அடங்கும்;
மேலும்
“எப்புறம்
பார்த்தாலும் நிலைமைகள் மோசமாக உள்ளன.”
உலகப் பங்குச் சந்தைகள் வியாழனன்று பெரிதும் சரிந்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் நிதித்துறை மந்திரியான
ஒல்லி ரெஹ்ன் வியாழனன்று வாஷிங்டனில் நடத்திய உரை ஒன்றில் கிரேக்கம் கடனைத்
திருப்பிக் கொடுக்க முடியாமற் போவது சாத்தியமே என்றார்.
ஐரோப்பிய நிறுவனங்களும் தலைவர்களும்
“ஒரு
கட்டுப்பாடு அற்ற திருப்பிக் கொடுக்கமுடியாத நிலையை அனுமதிக்க மாட்டார்கள்,
கிரேக்கத்தையும் யூரோப் பகுதியில் இருந்து அகற்ற அனுமதிக்கமாட்டார்கள்”
என்றார்.
“இது
பெரும் பொருளாதார,
சமூக சேதங்களைத் தோற்றுவிக்கும்;
கிரேக்கத்திற்கு மட்டும் இன்றி ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்குமே;
உலகப் பொருளாதாரத்திற்கும் இதில் இருந்து பல விளைவுகள் ஏற்படும்.”
IMF
கருத்துப்படி,
ஐரோப்பிய வங்கிகள்
410
பில்லியன் டொலர்கள் நிதிய இடரை எதிர்கொள்ளுகின்றன;
ஐரோப்பியக் கடன் நெருக்கடியை ஒட்டி இது வந்துள்ளது.
கிரேக்கத்தைத் தவிர,
போர்த்துக்கல்,
அயர்லாந்து,
ஸ்பெயின்,
இத்தாலி தவிர—இதைத்தவிர
பல ஐரோப்பாவின் பெரிய வங்கிகள் உள்ளன—ஆகியவையும்
உடனடியான ஆபத்துக்களை எதிர்கொள்கின்றன.
“இடர்கள்
உயர்ந்துவிட்டன,
உலக நிதிய முறையை அச்சுறுத்தும் ஆபத்தான நிலைமைகளைச் சமாளிப்பதற்கு அதிக நேரம்
இல்லை”
என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில்
IMF
எச்சரித்துள்ளது. |